என்னுடைய சமீபத்திய பதிவிற்கும் மறுமொழி திரட்டப்படவில்லை. இப்போது தவிர்க்கப்பட்ட வார்த்தைகள் முதல் மூன்று வரிகளில் வந்தால் அப்படி என்கிறார்கள் அவர்களது தமிழ்மண பதிவின் பின்னூட்டத்தில். இந்த விளக்கம் முதலில் பதிவிட்டபோது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வருவார்கள் போல :)
ஆனால் என்னுடைய பதிவு எழுதியவுடனேயே கவனித்தேன், கருவிப் பட்டையைக் காணவில்லையே என்று. பதிவு எழுதும்போதே அவர்களது மென்பொருளுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ !!
இன்று வேறு ஒரு பதிவரின் இடுகையின் பின்னூட்டம் திரட்டப்பட்டிருந்தது - அதிலும் என் கதைகளைப் போலவே தலைப்பு... மென்பொருள் என்ன ஆளுக்கு ஏற்றவாறு செயல்படுமா என்ன?
இப்படியெல்லாம் செய்வதற்கு பதில் வெளிப்படையாகவே சொல்லலாம், உன்னுடைய பதிவு திரட்டப்படாதென்று.. அப்படிச் சொன்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்? அவர்களுக்கு ஜனநாயகவாதி என்ற பெயரும் வேண்டும் அதே சமயத்தில் சர்வாதிகாரமாகச் செயல்படவும் வேண்டும்... நல்ல கதைதான்.. இதையே ஒரு கதைத் தொடராக எழுதலாமா என யோசிக்கிறேன் :))
பாருங்க மக்கா இந்தப் பதிவு முழுக்க அந்த ‘விலக்கப்பட்ட' வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை.. இனி அதைப்பற்றி கனவுகூட காண மாட்டேன் என உறுதி கூற ஆசைதான்... ஆனால் என்ன செய்ய, இன்னமும் எனக்குக் குறி இருக்கிறதே :(
கடைசிக் குறிப்பு : இதை எழுதிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் பார்த்தேன் - படுக்கையறைக் காட்சியில் பின்னியெடுத்த நடிகை என்ற தலைப்பில் ஒரு இடுகையின் பின்னூட்டங்கள் திரட்டப் படுகிறது!!! படங்களுடன் கூடிய அவ்விடுகை என் கதைகளைப் போன்று தமிழ்மணம் பற்றிய தவறான அடையாளத்தை நிச்சயம் தராது என நம்புகிறேன். ஏதோ செய்யுங்க எசமானர்களே, ஏழை எழுத்தாளன் உங்களைப் போன்றவர்களை நம்பித்தானே இருக்கான்.
என்னதான் இருந்தாலும் கொஞ்சம் கௌரவமான exit route கொடுக்கலாம் தமிழ்மணம். அதுதான் என்னைப் பெரிதும் சங்கடப் படுத்துகிறது.
கடைசிக் குறிப்பு : இதை எழுதிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் பார்த்தேன் - படுக்கையறைக் காட்சியில் பின்னியெடுத்த நடிகை என்ற தலைப்பில் ஒரு இடுகையின் பின்னூட்டங்கள் திரட்டப் படுகிறது!!! படங்களுடன் கூடிய அவ்விடுகை என் கதைகளைப் போன்று தமிழ்மணம் பற்றிய தவறான அடையாளத்தை நிச்சயம் தராது என நம்புகிறேன். ஏதோ செய்யுங்க எசமானர்களே, ஏழை எழுத்தாளன் உங்களைப் போன்றவர்களை நம்பித்தானே இருக்கான்.))))
ReplyDeleteஉங்களின் ஆதங்கம் புரிகிறது. ஆயினும் முழுக்க முழுக்க ஆபாசமாகவே பதிவெழுதும் சிலரை கண்டுகொள்ளாத தமிழ்மண நிர்வாகிகள் அனைத்து மறுமொழிகளையும் கொஞ்சம் படித்து பார்க்க வேண்டும். அது சரி நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன். வலைப்பக்கம் வாங்க.
//என்னதான் இருந்தாலும் கொஞ்சம் கௌரவமான exit route கொடுக்கலாம் தமிழ்மணம். அதுதான் என்னைப் பெரிதும் சங்கடப் படுத்துகிறது//
ReplyDeleteஇந்த விஷயத்தில் நானும் உங்களுடன் சங்கடப் படுகிறேன்!
:(
எழுதுங்க அண்ணன் படிக்கிறதுக்கு நாங்கள் இருக்கோம்...
ReplyDelete:-(((
ReplyDeleteஎன்னால் முடிந்தது இந்த ஸ்மைலி மட்டும்தான் சுந்தர் , நானும் உங்களைப்போல ஏழை பதிவன்தான்
உங்கள் ஆதங்கம் புரிகிறது
(அப்படியே உங்க பதிவுல பின்னூட்டங்கள் திரட்டப்படுகிறதானு பார்க்கவும் இந்த பின்னூட்டம் )
அதிஷா
//இதை எழுதிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் பார்த்தேன் - படுக்கையறைக் காட்சியில் பின்னியெடுத்த நடிகை என்ற தலைப்பில் ஒரு இடுகையின் பின்னூட்டங்கள் திரட்டப் படுகிறது!!!//
ReplyDeleteசுந்தர் அது போன்ற பல தலைப்புகள் கடந்த சில நாட்களாக திரட்டப்பட்டிருக்கிறது.
//கிரிக்கெட் வீரர்களின் காமப்பசிக்கு தங்கையை விருந்தாக்கிய அக்கா நடிகை// இப்போ தான் தலைப்பு மட்டுறுத்தல்தான் வந்துடுச்சே. இனிமே இது மாதிரியான தலைப்புகள் வராதோன்னோ பார்த்தா அது மட்டும் வந்திட்டிருக்கு.
நம்ம ஊர்ல பாலியல் தொழிலாளர்களைப் பத்திப் பேசினா தப்புன்னுவாங்க. ஆனா வீட்டுக்குள்ள நடிகை பிகினியோடு ஆடுவதை குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துப் பார்ப்பார்கள்.
முத்தத்தை வைத்து சில காதல் கவிதைகள் எழுதலாம் என்றிருந்தேன். இப்போ அதை எல்லாம் தடை செய்வார்களோ என்று பயமாய் இருக்கிறது. :)
-------------
உணர்ச்சி வசப்படாமல் கொஞ்சம் பொறுமையாக யோசிக்கும் போது தமிழ்மணத்தின் பரிணாம வளார்ச்சி, அது செய்துள்ள பல முயற்சிகள், புரிந்துள்ள சாதனைகள் என்று பல விஷயங்கள் உள்ளனதான். தற்போதைய கோபத்தால் அதை மறந்து விட்டு பேசக்கூடாதே என்றும் ஓர் உணர்வு தோன்றுகிறது.
ஆனால் இத்தனை செய்துள்ள தமிழ்மணம் இது போன்ற செயல்களால் தனது நியாயத் தன்மையிலிருந்து நழுவவதோடு, சர்வாதிகாரத் தனமாய் நடந்து கொள்கிறதே என்ற எண்ணமும் அதைத் தாண்டி எழுகிறது.
சுந்தர், முக்காடு போட்டுக் கொண்டு சாராயம் குடிக்கப் போனவர் கதை தான்..
ReplyDeleteகுடிக்காமல் இருக்கவும் முடியாது..
குடித்தவர் இன்னார் என்றூ தெரிந்தால் மானம் போகும் என்ற பயம்...
ஒரே சிரிப்பத் தான் இருக்கு...
//என்னுடைய சமீபத்திய பதிவிற்கும் மறுமொழி தரட்டப்படவில்லை. இப்போது தவிர்க்கப்பட்ட வார்த்தைகள் முதல் மூன்று வரிகளில் வந்தால் அப்படி என்கிறார்கள் //
ReplyDeleteஅப்படியா? நான் காமராஜரைப் பத்தி ஒரு பதிவு எழுதலாம்னு இருந்தேன். தலைப்புல, முதல் 3 வரியில அவரோட பேரை சொல்லலாமான்னு யாராவது கேட்டு சொல்லுங்களேன்.
நான் தமிழ்மணத்தின் மூத்தப் பதிவர் என்ற வகையில் எனக்கு தெரிந்த டெக்னிக்கல் டிப்ஸ்
ReplyDelete- உங்கள் எல்லாப் பதிவுகளிலும் தமிழ்மணம் பட்டை தெரிகிறது. எனவே உங்கள் பதிவை அவர்கள் நீக்கவில்லை. ஒரு இடுகையை கூட நீக்க வில்லை என தெரிகிறது
- இந்த பின்னூட்ட எண்ணிக்கை தமிழ்மணத்தில் தெரிந்தால் அவர்கள் சொல்லும் விளக்கம் சரி என்று பொருள்.
எங்கே இந்த பின்னூட்டத்தை வெளியிடுங்கள், தமிழ்மணம் முகப்பில் வருகிறதா என பார்ப்போம்
ஒரு குறிப்பிட்ட பதிவர் என்று இன்றி எல்லாருக்கும் இந்த நிரலி செயல்படுகிறது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபார்க்கவும் - தமிழ்மண சொல் மட்டுறுத்தல் நிரலிச் சோதனை
//இன்று வேறு ஒரு பதிவரின் இடுகையின் பின்னூட்டம் திரட்டப்பட்டிருந்தது - அதிலும் என் கதைகளைப் போலவே தலைப்பு... மென்பொருள் என்ன ஆளுக்கு ஏற்றவாறு செயல்படுமா என்ன?
ReplyDelete//
நாங்க தில்லா மொக்கைன்னு லேபிள் குத்தியிருந்தோமே தலைவா. நீங்க கவனிக்கலையா :))
தமிழ்மணத்தில் உங்கள் பதிவு திரட்டப்படுகிறது. மற்றும் பைத்தியக்காரனின் பதிவு வழக்கம்போல் சூடான இடுகையில் வருகிறது. என்சாய் மேடி :))
உங்கள் நற்பணியைத் தொடருங்கள் :) செய்தியோடை மூலமாகப் படித்துக் கொள்கிறோம்.
ReplyDeleteஇது போன்ற கட்டற்ற எழுத்துகளுக்கு திரட்டிகளைச் சாராமல், ஒரு பொது குறிச்சொல் கொண்டு அவற்றை வெளியிட்டால், அக்குறிச்சொல் வாயிலாகவே அத்தகைய எழுத்துகளின் தொகுப்பைப் படிக்கும் வாய்ப்புள்ளது. காண்க: மூன்று வருடங்களுக்கு முன் இது குறித்து நான் எழுதிய பதிவு, இன்றைய சூழலுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது.
//இனி அதைப்பற்றி கனவுகூட காண மாட்டேன் என உறுதி கூற ஆசைதான்... ஆனால் என்ன செய்ய, இன்னமும் எனக்குக் குறி இருக்கிறதே//
ReplyDeleteஇது வருத்தத்துக்குரிய நிகழ்வு. உங்களுடைய பதிவுகளை படித்து, தமிழர்களிடமும் பாலியல் பற்றிய முற்போக்கு சிந்தனைகள் ஏற்பட்டிருக்கிறது என்று ரொம்ப மகிழ்ந்தேன். கடைசியில் இப்படி ஆகிவிட்டது.
//படுக்கையறைக் காட்சியில் பின்னியெடுத்த நடிகை என்ற தலைப்பில் ஒரு இடுகையின் பின்னூட்டங்கள் திரட்டப் படுகிறது!!! படங்களுடன் கூடிய அவ்விடுகை //
ReplyDeleteஎன்ன கொடுமைங்க இது? உரல் கொடுக்காம என்ன பழக்கம் இது? :)
உங்களின் 45(12) கதை புரியாததால், சிலர் செய்த பழிவாங்கல் முயற்சி இந்த **** போடுதல் என்று நம்பத்தகுந்த வட்டத்திலிருந்து நம்ப முடியாத வண்ணம் செய்திகள் கசிந்து வருகின்றது.
இது பற்றிய தன்னிலை விளக்கம் எதுவும் அவசியமற்றது சுந்தர். நீங்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருங்கள். இது வாசிக்கத் தக்கவை, இது பொது வெளியில் வைக்க இயலாதது என்ற எந்த தீர்மானமும் யாராலும் இயற்றப் பட முடியாது. காலத்தில் உதிர்பவை உதிரும். துளிர்ப்பவை துளிர்க்கும். உங்களுக்கு என் முழு ஆதரவு உண்டு.
ReplyDeleteசுந்தர் இதைப் படியுங்கள்.
ReplyDeletehttp://madippakkam.blogspot.com/2008/07/5.html
இதைவிட யாரும் அதிகாரத்தை நக்கல் பண்ணமுடியாது. அப்புறம் உங்களுக்கு ஒரு யோசனை. தமிழ்மணம 'சூடான இடுகைகள்'ன்னு தலைப்பு வச்சிருக்கிற மாதிரி, நீங்க 'சூடான கதைகள்'ன்னு தலைப்பை மாத்திடுங்க. த.ம ஒண்ணும் கேட்கமுடியாது. ((-
சுந்தர் இந்த பொது மற்றும் தனி அரசியல் விளையாட்டுக்களில் ஒரு படைப்பாளியின் திறமைகள் அடக்கப்படுவதில்லை. திரட்டி சாரா எத்தனையோ பதிவுகள் இன்னமும் நல்ல ஹிட் லிஸ்ட்டில் இருக்கிற உண்மை உங்களுக்கும் தெரியும் தானே... திறக்காத கதவுகளையும், தட்டியபின் தாழ்போடும் கதவுகளையும் அடையாளாம் காட்டுவதற்காக மட்டுமே தட்டுங்கள் மற்றபடி வாயில் திறக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புக்கள் ஏதும் வேண்டாம். தொடர்ந்து செல்லுங்கள்.
ReplyDeleteதற்போதைய நிகழ்வுகள் குறித்த எனது பதிவு.
ReplyDelete.
.
ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகத்தில்...
அப்படி நிகழ்ந்ததில் எனக்கு வருத்தம் தான்.....
ReplyDeleteகொஞ்ச நாள் நான் உடல் நிலை சரி இல்லாம போய் ஊரில் இல்லாமல் போனதால் வந்த பிரச்சினை இது எல்லாம்:))) திரும்பி வந்துட்டேன் இனி ஒரு கை பார்த்துவிடலாம் வாங்க.
ஆமாம் அந்த ஏழை எழுத்தாளன் யாருங்க?:))
வெண்பூ கேட்டது மிக நியாயமான கேள்வி.!
ReplyDeleteகிருத்திகாவின் பின்னூட்டம்.. ரிப்பீட்டே..!
தனி மனிதர்களின் (சமூக காவலர்கள்) முடிவுகளாலோ, திட்டமிட்ட செயல்களாலோ இது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் . ( ஆனாலும் காமம் என்ற வார்த்தைக்காக நடவடிக்கை என்பது கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது.!) அவர்களைத் திருத்துவது கடினம், அதே நேரம் நிறுவனத்தை சாடுவதும் யோசித்து செய்யவேண்டிய விஷயமே.! இதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதை விடுத்து அடுத்த பதிவுகளில் கவனம் செலுத்துங்கள் சுந்தர்.! ப்ளீஸ்..
சுந்தர்,
ReplyDeleteஎதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் பரிசோதனை முயற்சிகளை தொடருங்கள்... வாசகர்களின் ஆதரவு தான் உங்களுக்கு தேவை...
உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்
உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் நண்பரே. கி.ரா எழுதினார் கதைகள். அத்தனையும் பட்டிக்காட்டு இலக்கியம். அவை தமிழ் இலக்கியத்திற்குத் தவறான முகத்தையா தந்து விட்டன?
ReplyDeleteஎப்படி ஒரு விஷயத்தைச் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது நாகரீகம். உயிரியல் பாடம் படிக்கையில் ஒவ்வொரு உடலுறுப்புகளையும் பேரைச் சொல்லித்தான் படிக்க வேண்டும். காமம் என்ற சொல்லில் பிரச்சனையென்றால் காமத்துப் பால் பற்றி வள்ளுவரும் வலைப்பூ தொடங்க முடியாது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள சினிமா பதிவுகளில் இருந்த ஆபாசம் உங்கள் பதிவுகளில் இருக்கவில்லை என்பது என் கருத்து.
தமிழ்மணத்தின் இந்த முடிவு வருத்தமளிக்கிறது. நல்ல வேளை... என் கொங்கை நின் அன்பர் என்று நான் கதை எழுதிய பொழுது இந்த மட்டுறுத்தல் இல்லை.
அட.. வேலைய பாருங்க தல.. இப்போ தமிழ்மணம் பாக்கிறவங்க பட்டியல் ரொம்ப குறைஞ்சி போச்சி.. எல்லாரும் ஃபீட் ரீடர்ல தான் படிக்கிறோம்...
ReplyDeleteநீங்க எழுதறது தமிழ்மணத்துக்கா? இல்லை உங்கள் மற்றும் உங்களை படிக்கும் எங்களின் திருப்திக்கா? முதல்ல இதுல ஒரு முடிவுக்கு வாங்க.. அப்புறம் இதை தொடர்வதா வேண்டாமா என்பதை யோசிக்கலாம்.
//அட.. வேலைய பாருங்க தல.. இப்போ தமிழ்மணம் பாக்கிறவங்க பட்டியல் ரொம்ப குறைஞ்சி போச்சி.. எல்லாரும் ஃபீட் ரீடர்ல தான் படிக்கிறோம்...
ReplyDeleteநீங்க எழுதறது தமிழ்மணத்துக்கா? இல்லை உங்கள் மற்றும் உங்களை படிக்கும் எங்களின் திருப்திக்கா? முதல்ல இதுல ஒரு முடிவுக்கு வாங்க.. அப்புறம் இதை தொடர்வதா வேண்டாமா என்பதை யோசிக்கலாம்.//
சபாஷ்!
நன்றி, தமிழ்சினிமா.
ReplyDeleteநன்றி, நாமக்கல் சிபி. நானும் போட்டுக் கொள்கிறேன் ஒரு :(
நன்றி, தமிழன்.
நன்றி, அதிஷா.
நன்றி, நந்தா. தமிழ்மணத்தின் பங்களிப்பை நான் மறுக்கவில்லை. முற்றிலும் என்னை நீக்கியிருந்தாலும் இதுகாறும் அவர்கள் என் பதிவுகளைத் திரட்டியதற்கு நன்றியுடவனாகத்தானிருப்பேன்.
நன்றி, டிபிசிடி.
நன்றி, வெண்பூ.
ReplyDeleteநன்றி, அனானி. இல்லை. என்னுடைய தன்னிலை விளக்கம் பதிவில் இப்போதும் கருவிப் பட்டையைக் காணவில்லை. ஒரு வேளை தொழில்நுட்பக் கோளாறாயிருக்கலாம் :)
நன்றி, ரவிசங்கர். உங்கள் பதிவைப் படித்தேன். உங்கள் பதிவுகள் மூலமாக தொழில்நுட்ப விஷயங்கள் பலவற்றைத் தெரிந்து கொள்கிறேன்.
நன்றி, சென்ஷி.
நன்றி, VoW. இது பற்றி நாம் உங்கள் பதிவிலும் பேசிவிட்டோம் :)
நன்றி, கயல்விழி.
ReplyDeleteநன்றி, சர்வேசன்.
நன்றி, வா மணிகண்டன்.
நன்றி, சுகுணா திவாகர். தலைப்பையெல்லாம் மாற்றுவதாயில்லை :)
நன்றி, கிருத்திகா.
//என்னுடைய தன்னிலை விளக்கம் பதிவில் இப்போதும் கருவிப் பட்டையைக் காணவில்லை. ஒரு வேளை தொழில்நுட்பக் கோளாறாயிருக்கலாம்//
ReplyDeleteஇது கோளாறில்லை. வடிவமைப்பே அப்படித் தான். மட்டுறுத்தப்படும் இடுகைகளில் மட்டும் கருவிப்பட்டை தோன்றுவதில்லை. மற்ற இடுகைகளில் தெரியும். கருவிப்பட்டை மூலமே அண்மைய மறுமொழிகள், வாசகர் பரிந்துரை போன்றவை செயல்படுவதால் இந்த ஏற்பாடு புரிந்து கொள்ளத்தக்கது.
வெண்பூ, குசும்பன், தாமிரா, மாயன், ஜி ராகவன், சஞ்சய், பரிசல்காரன்.. நன்றி.
ReplyDeleteநன்றி, ரவிசங்கர். இல்லை, நீங்கள் சொல்லுவது தவறென்று தோன்றுகிறது. ஏனெனில் மறுமொழிகள் திரட்டப்படாத காமக் கதைகள் 45 (13)ற்கு கருவிப் பட்டை தெரிகிறதே...