Tuesday, September 9, 2008

சி மணியின் பச்சையம் (அ) உடையாத பருப்புகள்

1

1. சொல்கிறார்கள்
எழுத்திலே கூடாதாம் ;
பாலுணர்ச்சி கூடினால்
பச்சையாம்

2. வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள்
இளமை கொடுக்கும் துணிவில்
இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில்
அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கியூர் கூட்டும் இவர்கள்
இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழவிட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்
எல்லாம் இவர்கள்தான் - வேறு யார்
சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையாம்

குறிப்பு :

காமக் கவிதை எழுத ஆசைப்பட்டேன். ஆனால் சி மணி, பிரமிள் எழுதாத என்ன எழவை நான் எழுதிவிட்டேன் என்ற கேள்வி வருமோ என பயம். அதனால் பேசாமல் சி மணியின் கவிதையையே பதிவிடத் துவங்கினேன்.

பருப்பு :

யார் யார் எதை எதை உடைத்துப் பருப்பைக் காட்டுகிறார்கள் எனப் பார்ப்பது என் வேலையில்லை. அதிகாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் நெம்புகோல் வேலையை என் கதைகளோ அல்லது கவிதைகளோ செய்வதில்லை.

அங்கலாய்ப்பு :

ஏன்யா எல்லாத்தையும் ஜி நாகராஜன் சொல்லிட்டான், சாரு சொல்லிட்டான், பிரமிள் சொல்லிட்டான் அப்படின்னா, நாங்க என்னதான்யா எழுதறது?? இந்த 38 வயதிற்குமேல் நான் யாரிடம் போய் எழுதக் கற்றுக் கொள்வது? முதியோர் இலக்கியக் கல்வித் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?!!

ஐயகோ, தட்டச்சும் வேலைதானா எனக்கு???

தெறிப்பு & முடிப்பு :

இப்போது மறுபடியும் சி மணியின் கவிதையிலிருந்து வேறொரு பகுதி :

3. 4. டிரைவர்கள் முன்னோடும்;
விழியோரம் பெண்ணாட
விழியோடும் பெண்ணோடு;
கரம்பூம்பூம் என்றாட்டும்.

வளைக்கரம் பிடித்து
கனல்விரம் எறுக்கி
உலறிதழ் நனைத்து
அவள்துடிப் பளப்பு.

தலைப்பு சரியவும்
முலைப்பு தெரியவும்
நாக்கிலே பாடம்
நோக்கிலே கூடல்.

பக்திக்கு முகம்காட்டி
சக்திக்கு மனம்நீட்டி
முக்திக்கு வழிகேட்டு
இச்சைக்கு வழிபாடு.

5. கவர்ச்சிக் கலப்பு
கடலில் உப்பு.

(இக்கவிதைப் பகுதிகள் சி மணியின் வரும் போகும் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. வெளியீடு : க்ரியா, வருடம் 1974).

23 comments:

  1. உங்கள் வயது 38 ஆ இல்லை 18 ஆ?

    ReplyDelete
  2. எவன் சொன்னான் காமத்த எழுத கூடாதுன்னு!
    நீங்க எழுதுங்க
    எவனாவது சொன்னா கேப்போம்
    நீ எப்படிடா புறந்தேன்னு

    ReplyDelete
  3. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா
    என் பின்னூட்டம் வரலையே

    ReplyDelete
  4. என்ன சுந்தர் திடீர் அங்கலாய்ப்பு... ஆனாலும் நல்லாத்தானிருக்கு...

    ReplyDelete
  5. வால்பையன், பின்னூட்டம் போட்டு அடுத்த ஆறாவது நிமிஷத்துலேயே ரிமைண்டரா??? :)

    ஃபோனில் பேசிக் கொண்டிருந்தேன்.. தவறாக எல்லாம் ஒன்றுமில்லை :))

    ReplyDelete
  6. அடிச்சு தூள் கிளப்புங்க. எழுதிட்டே இருங்க.

    சி. மணி கவிதைகள், நான் 1980 களில் எழுதிய பெங்காலி கவிதைகள் ஞாபகம் வருது. (காதல் இல்லாமல் காதல், ஒரு வெறுமை போன்றவை - எனது பிலாகில் முயல்கிறேன் தமிழ் படுத்த)

    அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நான் தான் அவசரப் பட்டு விட்டேன்,
    முதல் பின்னூட்டமாக முரளி கண்ணனின் பின்னூட்டம் வரவும்.
    நான் தான் முதலில் போட்டிருப்பேன் என்ற நம்பிக்கையில் அடுத்த பின்னோட்டம் போட்டுவிட்டேன்.

    மேலும் இன்று நான் ஒரு பெரிய பதிவருக்கு எழுதிய பின்னோட்டத்தை அவர், கெஞ்சினாலும் வெளியிட்ட மறுக்கிறார், அந்த நினைப்பிலேயே இருந்ததால் மறு பின்னூட்டம் வந்து விட்டது

    மன்னிக்கவும்

    ReplyDelete
  8. சுந்தர்,

    என்ன ஆச்சு? காமக்கவிதைகள் எழுதினாலென்ன?

    //அதிகாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் நெம்புகோல் வேலையை என் கதைகளோ அல்லது கவிதைகளோ செய்வதில்லை//
    இது என் இன்றைய பதிவுக்கு இல்லையே?

    ஜி.நா., பிரமிள், சாரு என்று பின்னால் உங்கள் பெயரையும் போட்டுக்கொள்கிறோம். சும்மா எழுதுங்க தலைவா.

    சி.மணி என்னவோ செய்கிறார்.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. நன்றி, முரளிகண்ணன். என்னைப் பார்த்தால் அவ்வளவு சின்னப் பையனாகத் தெரிகிறதா என்ன? :)

    நன்றி, வால்பையன்.

    நன்றி, கிருத்திகா. இது ரொம்ப நாள் அங்கலாய்ப்புதான் :)

    ReplyDelete
  10. நன்றி, ராம். எழுதுங்க...

    நன்றி, அனுஜன்யா.

    ReplyDelete
  11. கவிதை எழுதிட்டேங்க!

    http://pathivubothai.blogspot.com/search/label/கவிதை

    ReplyDelete
  12. சுந்தர்,

    எனது கையில் ஜி. நாகராஜனின் படைப்புகள் புத்தகம்.. உங்கள் இந்த படைப்பு வலையில்.. எதோ ஒற்றுமை..

    நர்சிம்

    ReplyDelete
  13. எல்லாவற்றையும் ஏற்கெனவே எழுதி வைத்து விட்டார்கள் :-) என்ன செய்ய?

    //ஐயகோ, தட்டச்சும் வேலைதானா எனக்கு???//

    அதையும் நீங்கள் செய்துவிடுவீர்கள். நாங்கள் என்ன செய்ய? :-))

    ReplyDelete
  14. நர்சிம் & ஸ்ரீதர் நாராயணன்... நன்றி.

    ReplyDelete
  15. as usual unusual..

    அடுத்த பதிவு நூறாவது பதிவு.. சிறப்பாய் ஏதாவ்து????

    ReplyDelete
  16. மொழி விளையாட்டு ஜ்யோவ்ராம் சுந்தரின் நூறாவது பதிப்பு, அடுத்ததாக போட போகிறார்.

    வாழ்த்துக்கள்!

    இதுவரை வாசகர்கள் போட்ட நல்ல பின்னூட்டங்களை தொகுத்து வழங்குக. நன்றி.

    ReplyDelete
  17. pachaiyam was awesome!

    ReplyDelete
  18. காமம் என்பது ஒரு கடல் என்றால் , பிரமீளும், சாருவும் ,மணியும் அதில் பயணித்த ஒரு சில சிறப்பான மாலுமிகள். இன்னும் ஆயிரகணக்கான, ஏன் லட்சகணக்கான மாலுமிகள், வந்து பயணித்து கவிதையும், இலக்கியமும் செய்து போனாலும் சொல்லி தீராது அந்தக் கடல்.

    இவர்களில் தாங்களும் ஒரு சிறப்பான மாலுமி.
    தயங்காமல் எழுதுங்கள் ...

    கரை ஓரம் நின்று கதை கேட்க்க தயாராய் இருக்கிறோம் நாங்கள் ;)

    ReplyDelete
  19. கார்க்கி & ராம்.. நன்றி. 100வது பதிவு எப்பவோ பதிவிட்டாச்சு. மேலே தெரியும் 99 என்பது இவ்வருடத்திய எண்ணிக்கை.

    அனானி, நன்றி.

    நாடோடி, நன்றி.

    ReplyDelete
  20. பிரமாதம், பிரமாதம்!

    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  21. பிரமாதம், பிரமாதம்!

    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்

    ReplyDelete
  22. //ஏன்யா எல்லாத்தையும் ஜி நாகராஜன் சொல்லிட்டான், சாரு சொல்லிட்டான், பிரமிள் சொல்லிட்டான் அப்படின்னா, நாங்க என்னதான்யா எழுதறது?? இந்த 38 வயதிற்குமேல் நான் யாரிடம் போய் எழுதக் கற்றுக் கொள்வது? முதியோர் இலக்கியக் கல்வித் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?!!

    ஐயகோ, தட்டச்சும் வேலைதானா எனக்கு???//

    உங்கள் அங்கலாய்ப்பு அபாரம் :-)

    ReplyDelete
  23. ஜோ, ஒட்டக்கூத்தர் & லக்கி லுக்... நன்றி.

    ReplyDelete