Saturday, September 13, 2008

இருள் சூழ்ந்த புதர்

தலையில் பாதி வழுக்கையும்
தடித்த மூக்குக் கன்ணாடியுமாய் இருந்த
அவன் பெயர் பார்த்திபனாம்.
அவனும் நானும் ஆத்ம நண்பர்களாம்
எனக்கெதிர் வீட்டில் இருந்தானாம்
பன்னிரெண்டாவது வரை
ஒன்றாகப் படித்தோமாம்
என் ஞாபக அடுக்குகளில்
மறைந்துவிட்டதாய் நினைத்துக் கிளறப் பார்த்தான்
பள்ளி - மதிய உணவு
ஒன்றுக்கிருந்து வளர்த்த செடி
பட்டக்கல் எனப் பட்டப்பெயர் கொண்ட சங்கரை
இரண்டு ஃபில்டர் கோல்ட் பிளேக்,
இரண்டு கோல்ட் பிளேக் ஃபில்டர்
வாங்கிவரச் சொல்லிக் கலாய்த்தது
பேருந்தில் செல்லும் ராதிகாவை
சைக்கிளிலேயே மாதவரத்திலிருந்து மிண்ட்வரை தொடர்ந்தது
பட்டியலிட்டுக் கொண்டே வந்தான்
மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி
அவசரமாய் ரயிலேறிப் போனான்
இரவில் மனைவியிடம் தன் பால்யகால
நண்பனைச் சந்தித்ததை
அவன் விவரித்து மகிழக்கூடும்
என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்

(நண்பர் மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் வெளியானது)

16 comments:

  1. சுந்தர்,

    அழகு. இன்னொரு 'அழகு' எங்கே?

    அனுஜன்யா

    ReplyDelete
  2. இரவில் மனைவியிடம் தன் பால்யகால
    நண்பனைச் சந்தித்ததை
    அவன் விவரித்து மகிழக்கூடும்
    என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
    என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்

    அவன் பெயர் பார்திபனாம்= பார்த்திபன் ?


    :)

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாருக்குங்க - அழகான கவிதை!

    ReplyDelete
  4. பல அர்த்தங்கள் உள்ளடக்கிய கவிதை..

    மிக ஆழமான கவிதை

    நர்சிம்

    ReplyDelete
  5. சுந்தர் சார்,
    அது மோகன் கந்தசாமி, கோகன் அல்ல

    ReplyDelete
  6. Nice!

    Where is the blog address of him?

    Is this the urainadai style Karunanithi follows?

    ReplyDelete
  7. நன்றி, முரளி கண்ணன், மாற்றிவிட்டேன்.

    ReplyDelete
  8. நன்றி, கென். மாற்றிவிட்டேன் :)

    ReplyDelete
  9. அட..

    நல்ல கவிதை..

    ReplyDelete
  10. //என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
    என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்//
    என்னா ஒரு வில்லத்தனம்? :))

    ஆனாலும் கவிதையில் எதோ ஒரு அழகு.. :)

    ReplyDelete
  11. Dear Sir,
    why you stopped the kama kathigal I am eagerly waiting for that please continue.
    Ananda.B

    ReplyDelete
  12. அனுஜன்யா, கென், செல்வ கருப்பையா, நர்சிம் & ராம்.. நன்றி.

    மோகன் கந்தசாமியின் 50 பதிவிற்காக இரண்டு கவிதைகள் எழுதியிருந்தேன். அவரது வலைப்பூ முகவரி : http://mohankandasamy.blogspot.com

    ReplyDelete
  13. சரவண குமார், சஞ்சய் & ஆனந்த்... நன்றி.

    ReplyDelete
  14. நைஸ் செல்லம்... ஹேட்ஸ் ஆஃப்

    ReplyDelete
  15. நல்லா இருக்கு. கவிதைக்குப் பொருத்தமா ஒரு படமும் போட்டீங்கன்னா இன்னும் சந்தோசப்படுவோம்ல. அடுத்தமுறை அதையும் செய்வீங்கன்னு எதிர்பார்க்குறோம்.

    ReplyDelete
  16. நன்றி, பைத்தியக்காரன் & a blog for short films

    ReplyDelete