Monday, September 29, 2008

சொரூப நிலை

மழையில் நனைந்த
தார்ச்சாலையை
சொட்டச் சொட்ட
நடக்கும் இளம்பெண்ணை
அவளின் கால்தடத்தை
கன்னத்தின் ஈரத்தைத்
தொட்டுப் பார்க்கும் குழந்தையை
மரத்திலிருந்து சொட்டும் நீரின் சத்தத்தை
ரசிக்க எனக்கும் விருப்பம்தான்
இந்தப் பாழாய்ப்போன
மழை நிற்கட்டும்

(முதலில் செந்தூரம் ஏப்ரல் 1992ல் வெளியானது. நண்பர் நர்சிம்மின் வலைப்பூவில் அவருடைய ஐம்பதாவது இடுகையாக வெளியிடப்பட்டது).

16 comments:

  1. மழையை பிடிக்குமென்றாலும்
    பிடிக்கவில்லை - அது
    ஆங்கோர் சிறுமி போட்ட கோலத்தை அழிப்பதால்!

    இது நான் சும்மா சுத்திகிட்டு இருந்தப்போ கிறுக்கியது.

    அதுக்காக கவிதை எழுதரவங்கேல்லாம் சும்மா சுத்துறாங்கன்னு அர்த்தம் இல்ல

    உங்கள் கவிதை அருமை

    ReplyDelete
  2. கவிதை சூப்பர் சுந்தர் அண்ணா

    ReplyDelete
  3. வால்பையன், சென்ஷி & அதிஷா... நன்றி.

    ReplyDelete
  4. இந்தப் பாழாய்ப்போன
    மழை நிற்கட்டும்

    நல்லா இருக்குங்க மழையும் இடம் பொருள் பொறுத்தே நல்ல மழை கெட்ட மழையாகிறது :)

    ReplyDelete
  5. ரொம்பவே ரசிச்சேன் இந்த கவிதைய

    ReplyDelete
  6. கவிதை நல்லா இருக்குங்க
    நல்லாவும் புரியுது ;o)

    ReplyDelete
  7. ஹய்யா.. சுந்தர் சார் வலைப்பூவில் ஒரு கவிதை.. எனக்கும் புரியற மாதிரி.. :))

    ஓட்டு போட்டாச்சி :)

    ReplyDelete
  8. சரியான ப்ளேடு கவிதை

    ReplyDelete