Monday, October 6, 2008

பரவலாக அறியப்படாத சிறுபத்திரிகைகள்

வாசகர்களிடம் பரவலாகப் போய்ச்சேராத சிறுபத்திரிகைகளைப் பற்றி எழுதலாம் என்ற ஒரு எண்ணம் கொஞ்ச நாட்களாகவே இருந்துவருகிறது.

1990லிருந்து சிறுபத்திரிகைகளை வாசித்து, சேமித்து வருகிறேன். அவற்றிலிருந்து சில சுவாரசியாமன இதழ்களைப் பற்றிய சிறு குறிப்புகள், அதில் வெளியான கவிதைகள் அல்லது சுருக்கப்பட்ட கட்டுரைக் குறிப்புகள் மாதிரியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாலாமென நினைக்கிறேன். இதற்காக மீண்டுமொருமுறை பழைய பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பும் அதுகுறித்த சிறுஅசைபோடல்களும் கூடுதலாகக் கிடைக்கிறது.

கவிதை அழகியலுக்கான சிற்றிதழ் என்ற அறிவிப்போடு ‘பிரதி' என்ற சிறுபத்திரிகை வந்துகொண்டிருந்தது. ஆசிரியர் ஆலன் திலக். தனி இதழ் விலை ரூ 3. அட்டைகள் இல்லாத 'ழ' மாதிரியான மிகச் சிறிய இதழ்!

'பிரதி' ஜனவரி 1993ல் வெளிவந்த இதழில், எஸ் சண்முகத்தின் இரண்டு கவிதைத் தொகுதிகளைப்பற்றிய நாகார்ஜூனனின் கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இந்த இதழில் வந்த தமிழவனின் கவிதையொன்றைத் தருகிறேன் :

ரொம்பப் புரிகிற ஒரு கவிதை

அவனுக்குப் பாதையில் போகவேண்டும்
இதன்பின்பு கொஞ்சம் யோசிக்கவேண்டும்
அதன்பின்பு உணவு அருந்தவேண்டும்
அவனுக்குப் பூக்களை தரிசிக்கவேண்டும்
அவனுக்குத் திரும்பி வரவேண்டும்
அதன்பின்பு குளித்து பூஜை செய்யவேண்டும்
ஒளிக்கற்றைகளை விரலில் பிடித்து விளையாடவேண்டும்
கண்ணாடியில் படிந்த தூசை போக்கவேண்டும்
பாதையில் புகைநடுவே மூக்கடைத்து நடக்கவேண்டும்
அங்கு போகிறவனை ஓரக்கண்ணால் பார்க்கவேண்டும்
தினமும் பேப்பர் படித்துவிட வேண்டும்
ஓரத்தில் ஒருநூலில் குறிப்பெடுக்க வேண்டும்
ஒருஎலி செத்துக்கிடப்பதை புகைப்படம் எடுக்கவேண்டும்
நூலகத்தில் மூலையில் தனியாய் ஒருபெண் செத்துக்கிடப்பதையும்
எதையோ நினைத்தபடி இருப்பதைப்பற்றி அவனும்
ஒருநாள் நினைக்க வேண்டும்

கவிதையைவிட அதன் தலைப்பு மிகப் பிடித்திருந்தது எனக்கு!

21 comments:

  1. நல்ல காரியம் செய்யுங்கள். பிரபலத்தின் வெளிச்சம் படாததால் இம்மாதிரியான் சிறு பத்திரிக்கைகளில் வெளியாகும் நல்ல கவிதை, நல்ல சிறுகதை மற்றும் விஷயம் நிறைந்த கட்டுரைகள், கவனம் பெறாமலேயே போய்விடுகிறது; யாரும் பார்க்காமலேயே பூத்துக் கருகும் காட்டு மலர்கள் போல்.

    ReplyDelete
  2. அருமையான பணி சுந்தர்ஜி!!!!

    ReplyDelete
  3. நல்ல முயற்சி! தொடருங்கள்...

    ReplyDelete
  4. சுந்தர்,

    நல்ல முயற்சி. உங்களைக் கவர்ந்த கவிதை/கதை/கட்டுரைகளுடன் அவற்றின் மீதான உங்கள் கருத்தையும் (முக்கியமாக கவிதைகளில்) முன்வைத்தால் உங்கள் வாசிப்பனுபவம் எங்களுக்கும் பகிரப்படும்.

    அனுஜன்யா

    ReplyDelete
  5. ஏ... சூப்பருப்பா

    ReplyDelete
  6. சுந்தர் நல்ல முயற்சி...தேடினாலும் கிடைக்காத பொக்கிஷங்கள் இவை, தங்களைப்போன்றவர்கள் தொகுத்து தந்தால் அது மிகவும் உபயோகமானதாய் இருக்கும்.

    ReplyDelete
  7. நிச்சயமாக தமிழ்கூறும் நல்லுலகம் நன்றி கூறும் சுந்தர்ஜி..

    தொடருங்கள்..

    அடுத்த அறிமுக பதிவிற்காக காத்திருக்கும்...

    நர்சிம்

    ReplyDelete
  8. வடகரை வேலை, நன்றி.

    பரிசல்காரன், நன்றி.

    லக்கி லுக், நன்றி.

    அனுஜன்யா நன்றி. ஏனோ கவிதைகளைப் பற்றி மிக விரிவாக எழுதுவது கொஞ்சம் சள்ளை பிடித்த வேலையோ எனத் தோன்றும்.. பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. இதைப் படித்து விட்டு நான் தொடர்ந்து எழுதலாமா என்று சொல்லுங்கள்..

    http://www.karkibava.com/2008/10/blog-post_06.html

    மின்னஞ்சல் முகவரி தெரியாததால் இப்படி செய்கிறேன்.. இதை இங்கே கேட்க கூடாதென்று தெரியும்ஜி..

    உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
    iamkarki@gmail.com

    ReplyDelete
  10. அட.. கொஞ்ச நேரம் முன்னாடி தானே சிறு பத்திரிக்கைகள் பத்தி பேசினோம்.. இந்த பதிவு பத்தி சொல்லவே இல்லையே..நல்ல முயற்சி.. தொடருங்கள்.. :)

    ReplyDelete
  11. ஒ, அதுதான் தலைப்பா!
    அது நீங்க சொன்னதுன்னு நினச்சிட்டேன்!

    உண்மையில் கவிதை புரிகிறது
    ஆனால் எப்படி புரிகிறது என புரியவில்லை
    ஒருவேளை புரியவில்லை என்பது
    புரிந்து விட்டதா!
    புரியாத புரிதல் தான் புரிதல்களின் நீட்சியோ

    ReplyDelete
  12. நல்ல பணி!

    தொடர்ந்து பதியுங்கள்!

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  13. தேவையான விசயம்,

    நல்ல முயற்சி!

    நன்றி அண்ணன்...

    ReplyDelete
  14. நன்றி, அதிஷா.

    நன்றி, கிருத்திகா.

    நன்றி, நர்சிம்.

    நன்றி, கார்க்கி. படித்துவிட்டு தனிமடல் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  15. You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

    Let's show your thoughts to the whole world! - http://www.valaipookkal.com

    ReplyDelete
  16. சுந்தர்

    இந்த ஆண்டு சென்னை சென்றபோது பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழவன், எஸ். சண்முகம், ஜமாலன் ஆகியோரைச் சந்தித்துப் பேச முடிந்தது... எஸ். சண்முகம் தம்முடைய கட்டுரைத்தொகுதி வருகிறது என்று கூறினார். அப்போதுகூட அவர் கவிதைத்தொகுதிகளுக்கு நான் எழுதிய விமர்சனக்கட்டுரை பற்றி எனக்கு நினைவில்லாமல் போய்விட்டது! (பிரதி நடத்திய ஆலன் திலக் -நஞ்சுண்டன் - காலச்சுவடு இதழில் ஐக்கியமாகிவிட்டார்... அவருக்கு நினைவிருக்கலாம்)... பிரதி இதழுக்குப்பிறகே வித்யாசம் இதழ் கொண்டுவந்தோம்.

    மறத்தல் என்பது வரலாற்றின் இயல்பாகிவிட்ட நிலையில் அதற்குமுன் நினைவு என்பது ஒரு கற்பனா-ஜீவி - எப்போதும் உயிரைவிடத் தயாராகக் காத்திருக்கிறது.

    பிரதி இதழில் என்னதான் எழுதியிருக்கிறேன் என்று நீங்கள்தான் கூற வேண்டும்.

    நாகார்ஜுனன்

    ReplyDelete
  17. நாகார்ஜூனன், நன்றி.

    இப்போது தேடிப்பார்த்தேன், இதழ் கிடைக்கவில்லை. மறுபடியும் தேடி எடுத்து, கட்டுரையை தட்டச்சி உங்களுக்குத் தனிமடலில் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  18. ரொம்ப நல்ல பணி , வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. பொடியன், நன்றி.

    வால்பையன், நன்றி.

    மயிலாடுதுறை சிவா, நன்றி.

    சிவசின்னப்பொடி, நன்றி.

    டாக்டர் ருத்ரன், நன்றி.

    ராப், நன்றி.

    ReplyDelete