Wednesday, November 5, 2008

இரு கவனக் குவிப்புகள்

சர்வதேச கச்சா எண்ணை விலை குறைப்பால் ATF எனப்படும் விமான எரிபொருள் விலையைக் குறைத்திருக்கிறார்கள். நல்லது. விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்துநாட்களுக்கு முன் எல்லா மாநில முதலமைச்சர்களையும் விமான எரிபொருளுக்கான விற்பனைவரியைக் குறைக்கச்சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார் (நம் தமிழகம் உட்பட). சில மாநிலங்கள் குறைத்தும் விட்டன.

இதற்கிடையில் போன வாரம் ATFற்கு சுங்க வரியான 5% லிருந்து முழு விலக்கு அளித்துள்ளார்கள். விமான நிறுவனங்களைக் காப்பாற்றாவாம். கோயல்களின் மல்லையாக்களின் நலன்தான் அரசின் கண்களுக்குத் தெரிகிறதுபோலும்.

போனமுறை பெட்ரோல் டீசல் விலை ஏற்றியபோது இருந்த கச்சா எண்ணையின் விலை இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது என்றாலும் உள்ளூரில் விலையைக் குறைக்கவில்லை என்பது ஒருபுறம். ஜெனரேட்டர்களுக்கு உபயோகிக்கப்படும் டீசல் விலை 50 ரூபாய் என்பது இன்னொரு புறம். இதெல்லாம் இருக்கட்டும்.

கச்சா எண்ணை விலை எவ்வளவு உயர்ந்தபோதும், எவ்வளவுதான் கேட்டும் சாமனியர்கள் உபயோகிக்கும் பெட்ரோல் டீசலுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு தரப்படவே இல்லை. ஆனால் விலை கணிசமாகக்குறைந்த பிறகும், விமான எரிபொருளுக்குத் தந்திருக்கிறார்கள்.

அடப் பாவிகளா!

***

உத்தபுரம் அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற தலித் வாலிபர் மரணம். சில நாட்களுக்கு முன்பு, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. ஊர்மக்கள் அறவழியிலேயே போராடியதாகத் தெரிவித்துள்ளார்கள்.

சுரேஷ் அப்போதுதான் வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார் - ஊரில் என்ன பிரச்சனை என்று பார்க்க. துப்பாக்கிக் குண்டு கழுத்தில் பாய்ந்திருக்கிறது.

இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் கோகுல் வண்ணன் எழுதும்போது, ‘தலித்களுக்கும் மற்ற சாதியினருக்கும் பிரச்சனை வந்தால், தாக்கப்படுவது எப்போதும் தலித்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் இன்னுமொரு உதாரணம்' என்கிறார்.

15 comments:

  1. அட.. இதுக்கு போய் சலிச்சிகிட்டு.. எலக்ஷன் செலவுக்கு பொது ஜனமா பணம் குடுக்குது.. கார்பரேட்ஸ்தான.. அதனால அவங்களுக்குதான் எல்லா சலுகையும்..

    ReplyDelete
  2. //ஆனால் விலை கணிசமாகக்குறைந்த பிறகும், விமான எரிபொருளுக்குத் தந்திருக்கிறார்கள்.

    அடப் பாவிகளா!//

    :(( ஆனால் விமான போக்குவரத்து துறைக்கு அரசு உதவியில்லாவிடில் லட்சகணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த விஷயத்தில் நரேஷ் கோயலின் செய்கை மிகவும் பாராட்டுகுரியது.

    //தலித்களுக்கும் மற்ற சாதியினருக்கும் பிரச்சனை வந்தால், தாக்கப்படுவது எப்போதும் தலித்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் இன்னுமொரு உதாரணம்//

    :(( இது ஆய்வுக்குட்படுத்தப் படவேண்டிய ஒரு விசயம்தான்.

    ReplyDelete
  3. சென்ற ஒரு மாதத்திற்க்குள் இந்தியாவின் பணவீக்கம் 12% திலிருந்து 10.8% ஆக குறைந்துள்ளது. பணவீக்கத்தின் காரணமான பெட்ரோல் விலையை குறைக்காமல் அது சாத்தியமில்லை.
    இதிலிருந்து இந்தியாவின் பணவீக்க கொள்கை ஒரு டுபாக்கூர் என்று தெரிகிறது

    ReplyDelete
  4. உத்தாபுரத்தை பொறுத்த வரை நிறைய விசயங்கள் இருட்டடிக்க படுகின்றன.
    வெளியே தெரிந்தால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படலாம், ஆட்சி கலைக்கபடலாம்.
    என்னை பொறுத்தவரை இந்த பிரச்சனையை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்.

    ReplyDelete
  5. //இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் கோகுல் வண்ணன் எழுதும்போது, ‘தலித்களுக்கும் மற்ற சாதியினருக்கும் பிரச்சனை வந்தால், தாக்கப்படுவது எப்போதும் தலித்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் இன்னுமொரு உதாரணம்' என்கிறார்.//

    பிற்படுத்தப்பட்டவர்களின் ஒடுக்கப்பட்டவர்களின் காவலனாக அறியப்பட்டிருக்கும் திமுக ஆட்சியிலும் இதுதான் நடக்கிறது என்பது ஆய்வுக்குட்படுத்த வேண்டிய விஷயம் :-(

    ReplyDelete
  6. வெண்பூ, நன்றி.

    நன்றி, ஸ்ரீதர் நாராயணன். பாத்தீங்களா!! ஏங்க விமானத்துறையில மட்டும்தான் மக்கள் வேலைசெய்யறாங்களா? நிஜமாவே நீங்க இதை நம்பறீங்களா?

    நன்றி, வால்பையன். பணவீக்கத்திற்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் மட்டுமே காரணமாயிருக்க முடியுமா என்ன?

    நன்றி, லக்கி லுக்.

    ReplyDelete
  7. I was travelling in a hired car from Madurai to Manamadurai with my family. The owner of the travels, a distant relative of my wife, happened to travel with us.

    On a sharp curve, the driver would've dashed the car on a cyclist but narrowly missed him.
    When myself & my wife opined that his life was saved, the owner responded that he wouldn't care if the driver had knocked him down. "I would be worried, if he was knocked down but survived. I will have to run from police station to hospital to get it sorted out. If he's dead, the driver can surrender in the nearest police station, pay Rs. 300 and then walk out! So simple, no Sir?"

    Fact remains that there is no value for human life in India, be it a dalit or any1 else!

    ReplyDelete
  8. //பணவீக்கத்திற்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் மட்டுமே காரணமாயிருக்க முடியுமா என்ன?//

    உற்பத்தி பொருள்களுக்கு இடமாற்றம் வெகு முக்கியம், அதற்கு தேவை. பெட்ரோலிய பொருள்கள்.
    அதன் விலை இறங்காமல் பணவீக்கம் குறைந்ததாகா சொல்வது,
    மக்களின் அத்தியாவிசய பொருள்களை இவர்களின் பணவீக்க கணக்கீட்டிற்க்கு எடுத்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது

    ReplyDelete
  9. நீங்க இனிமேல் பிளெனில போகதீங்க. அவனுகளுக்கு நட்டத்தை ஏற்படுத்துங்கோ.

    ReplyDelete
  10. அந்த அடப்பாவிகளா வ இடம் மாற்றி போட்டீங்களா? ஏன்னா.. மனித உயிரை பறிக்கறத விட பாவம் என்ன இருக்கு??

    நல்லா சொல்லி இருக்கீங்க நடப்ப.. இனி நடக்க கூடாதத..

    நர்சிம்

    ReplyDelete
  11. அவசியமான இரண்டு கவனக்குவிப்புகள்.

    பாராட்டுக்கள்.

    ஜமாலன்

    ReplyDelete
  12. அனானி, ஆட்காட்டி, நர்சிம், ஜமாலன்... நன்றி.

    ReplyDelete
  13. அவசியமான
    இரண்டு கவனக்குவிப்புகள்.

    பாராட்டுக்கள்.

    மங்களூர் சிவா

    ReplyDelete
  14. // கச்சா எண்ணை விலை எவ்வளவு உயர்ந்தபோதும், எவ்வளவுதான் கேட்டும் சாமனியர்கள் உபயோகிக்கும் பெட்ரோல் டீசலுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு தரப்படவே இல்லை.//

    வரி விலக்கெல்லாம் வேணாம்.பாதிக்கும் மேல கச்சா எண்ணெய் விலை இறங்கி இருக்கு.
    அதுக்குண்டான விலையை மட்டுமாவது இறக்கினால் போதும்.

    ReplyDelete
  15. மங்களூர் சிவா & கார்த்திக், நன்றி.

    update : நேற்று பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை மேலும் குறைத்துள்ளன - now the price is Rs 38,163.23 compared to Rs 71,028.26 per kl in August 2008.

    பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாது, ஏனெனில் மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயுவில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் - சில நாட்கள் முன்பு மன்மோகன் சிங் அறிவிப்பு. அப்படியெனில், why should atf be spared??

    ReplyDelete