சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்கள் காட்டி வரும் வன்முறைச் சம்பவங்களைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் (போலவே சில வலைப்பதிவர்களும்). ஒரு சாரார் நடத்திய வன்முறையைப் பதிவு செய்யாமல் - அல்லது விமர்சிக்காமல் - இன்னொரு சாராரின் எதிர்வினையை மட்டும் தொடர்ந்து காட்டி வருவதன் பின்னுள்ள அரசியல் சிலருக்காவது புரிந்திருக்கும்.
சன் தொலைக்காட்சிக்கு ஒரு அரசியல், ஜெயா தொலைக்காட்சிக்கு இன்னொரு அரசியல். அவரவர்க்கான அரசியல் அவரவர்க்கு. பிர்த்தியூ போன்றவர்களின் துணையில்லாமலேயே தொலைக்காட்சி ஊடகங்களின் வன்முறை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்படிக் காட்டப்படுவதனால் தொடர்ச்சியாக என்ன நடக்குமென எதிர்ப்பார்க்கப்பட்டதோ அவை நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் நிலைமை மோசமாகலாம் என்ற என்னுடைய ஆருடம் பலிக்காமல் போக வேண்டும்.
நேற்று முன் தினம் சில சுவரொட்டிகள் அக்கல்லூரியின் சுற்றுப்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றன (அடிபட்டவர்களைச் சிங்கங்கள் என்றும் அடித்தவர்களை ஜாதிவெறியர்கள் என்றும், முக்கியமாக அம்பேத்கர் பெயரை ஒதுக்கி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன). நேற்று பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ராஜப்பா தாக்கப்பட்டிருக்கிறார். சில மாணவர்கள் இன்னொரு பிஎஸ்பி கவுன்சிலரான ஆர்ம்ஸ்டாராங்கைக் கைது செய்யவேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மாநிலமெங்கும் கல்லூரிகளிலும் சில பள்ளிகளிலும் ஆர்ப்பாட்டம் கலவரம் என நடந்து கொண்டிருக்கின்றன. உசிலம்பட்டியிலும் அதன் அருகிலுள்ள ஊர்களிலும் சில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. கல்லூரியின் பெயரிலுள்ள அம்பேத்கரை நீக்கப்படவேண்டுமென வேறு சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இதைவிட மோசமான கோரிக்கையாக சட்டக்கல்லூரி விடுதியே மூடப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்திருப்பதாக அறிகிறேன்.
ஊடகங்களுக்கென்று எந்தத் தார்மீகக் கடமையும் கிடையாது போலிருக்கிறது. The New Indian Expressல் கோகுல் வண்ணன் (இவர் எழுதியதை ஏற்கனவே என்னுடைய இரு கவனக் குவிப்புகளில் குறிப்பிட்டுள்ளேன்) என்பவர் மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களின் குரலைத் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார். வேறு யாராவது எழுதியிருந்தால் பின்னூட்டம் மூலமாகத் தெரிவிக்கவும்.
நான் பார்த்தவரையில் வினவும் ஓரளவிற்கு டிபிசிடியும் இதுகுறித்து மாறுபட்ட பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். பலர் இதை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகவே அணுகியிருக்கிறார்கள். இன்னும் சிலர் தாக்கியவர்களை மிருகங்கள், படிக்கவே லாயக்கில்லாதவர்கள் என்றெல்லாம் தீர்ப்பெழுதியிருக்கிறார்கள். ஒரு அனானி பின்னூட்டத்தில் குருகுலக் கல்வி முறையே சிறந்தது எனப் பரிந்துரைக்கிறார்!
எனக்கு அவ்வளவாக அரசியல் தெரியாதென்றபோதும் இச்சம்பவங்களின் பின்னுள்ள அரசியல் ஓரளிவிற்குப் புரிகிறது.
இந்நிலையில், இந்தப் பிரச்சனையின் ஊற்றுக் கண்களைக் குறித்து அங்கு களப்பணி செய்துள்ள வளர்மதியை விரிவாக எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இவர் இப்போது திரட்டிகளில் இல்லாததால் பரவலான கவனிப்பு பெறாமல் போகக்கூடும். பரவாயில்லை, நானோ அல்லது லக்கி லுக் போன்ற பரந்த வாசகர்களைப் பெற்ற வேறு நண்பர்களோ மறுபதிவு செய்துகொள்ளலாம்.
தொடர்ந்து ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவும் தலித்களுக்கு ஆதரவாகும் குரல் கொடுக்கும் சுகுணா திவாகரும் இது குறித்து எழுதவேண்டும். நேரம் கிடைத்தால் ரோசா வசந்தும் எழுத வேண்டும் என்பது என்னுடைய அசை. சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். ஆனாலும் இவர்கள் இதைச் செய்யவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நேற்று நடந்த பதிவர் சந்திப்பில் மழை காரணமாக இப்பிரச்சனை குறித்து விரிவாக உரையாட இயலவில்லை. அச்சந்திப்பு குறித்து வந்த சில பதிவுகளைப் படித்தேன். பேசப்பட்டவற்றை முழுமையாக வேறு யாராவது பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
மாற்று ஊடகம் என அறியப்பட்ட இணையத்திலாவது குறைந்தபட்சம் மாற்றுச் சிந்தனைகள் பதிவாகட்டுமே.
தேவர், பிள்ளை, வன்னியர், கவுண்டர் ஆகிய சாதியினர் எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே செயல் படுகிறார்கள். மத்திய அரசு, 27 % இடஒதிக்கீடு சட்டம் கொன்டு வந்தபோது,அய்யன், அய்யங்காரன் மற்றும் பல உயர் சாதி மானவர்கள் அதை எதிர்த்து மிக பெறிய போராட்டம் நடத்தினார்கள். அப்போழுது, இந்த (தேவர், பிள்ளை, வன்னியர், கவுண்டர் ஆகிய) சாதியின மானவர்கள் அவர்களுக்கு எதிரா ஒரு ம..ரும் (மண்ணிகவும்) பிடுங்க முடியல அல்லது பிடுங்கல. இவனுங்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயபடவே விரும்புகிறார்கள் போல! அல்லது அய்யன், அய்யங்காரன் மற்றும் பல உயர் சாதியாணை எதிர்க்க முடியாதொ/பயபடரான்கலோ! ஏற்கனவே, தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு செத்த பாம்பு போல நடத்தப்படரான். இவனுங்க அந்த செத்த பாம்பையே அடிக்க குறியா இருக்கானுங்கள். அதல மகிழ்ச்சியும் அடையரானுங்கள்.
ReplyDelete27 % இடஒதிக்கீடு சட்டத்தை எதிற்த கேடுகெட்டவர்கள்கூட, போராட்டத்தின் போது, தாழ்த்தப்பட்ட மக்களின் தொழிலையே செய்து (செருப்பு தைத்தல், தெரு கூட்டள், மற்றும் பல...) போராடினார்கள். ஏன், ஒபிசி க்கு என்று தனியே தொழில் இல்ல போல!!!!!!
என்று தேவர், பிள்ளை, வன்னியர், கவுண்டர் ஆகிய சாதியின மக்கள், தாங்களும், பிறரால் (அய்யன், அய்யங்காரன்) தாழ்த்தப்படவனாக நடத்தப்படுகிரோம்னு உன்றுகிரானோ அன்றைக்குதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்கலாம்.
என் கூற்று என்ன எனில், அம்பேத்க்கார் பெயரை போட உனக்கு எவ்வளவு மதிப்பு குறைச்சலக தெறியுதொ (அல்லது, தேவர் பூஜை கொண்டாடுவது எவ்வளவு கௌரவமாக தெறியுதொ), அதே அளவு மதிப்பு மற்றவனுக்கு 'அம்பேத்க்கார்' மேல இருக்கு. நீ சேரும்பொதே, இக்கல்லூரி 'அம்பேத்க்கார் சட்டக் கல்லூரி' என்று தான் இருந்தது, அப்போவே, இந்த கல்லுரியின் பெயரில் 'அம்பேத்க்கார்' இருக்கார், நான், இக்கல்லூரியில் சேரமாட்டேன் என்று வேற எங்கயாவது போக வேண்டியதுதானே? சேர்ந்து, என்ன கலவரம் பன்னவா இக்கல்லூரிக்கு வந்தாய்???
அம்பேத்கர் பெயர் போட கூச்சப்படும் (அ)சிங்கங்கள் என்ன மயிருக்கு அம்பேத்கர் எழுதிய சட்டத்தை படிக்க (அம்பேத்கர்) சட்டக்கல்லூரிக்கு வருகிறார்கள் .
ReplyDeleteநான் இப்போதுதான் கவனித்து விட்டு வருகிறேன். சென்னை அரசு மருத்தவமனையில் அடிப்பட்டு கிடக்கும் (அ )சிங்கங்களுக்கு ஆறுதல் சொல்ல முட்டாள் முன்னேற்ற கழகத்தினர் மஞ்சள் கொடிகளை தலையில் கட்டியவாறு கூச்சலிட்டபடி மருத்துவமனையிலிருந்து போகிறார்கள்.
ReplyDeleteஅரசு மருத்துவமனை பொதுமக்களுக்கானது, நோயாளிகளை தொந்தரவு செய்வது எத்தனை குரூரம் என்பது கூட அறியாத முட்டாள்கள் கத்தியபடி போவதை சிக்னல் மீறி 10 இரு சக்கர வாகனங்களில் போவதை கண்டும் காணாமல் இருக்கிறார்கள் காவல் துறையினர். இது ஒரு ஆரம்பம்தான் இவன்கள் திருந்தவே மாட்டார்கள் மீண்டும் குற்ற பரம்பரை சட்டம் தேவை இவர்களை ஒடுக்க
வாங்கினது பத்தாது இவனுங்களுக்கு
நன்றி சுந்தர். விரைவில் எழுதுகிறேன்.
ReplyDeleteசுந்தர் சட்டக் கல்லூரி விவகாரம் தொடர்பாக மிக மோசமான சாதி வெறி மனோபாவத்தில் எழுதிய பதிவுகளைப் பார்த்தேன். இம்மாதிரி மார்றுக் கருத்துக்களை நாம் தான் எழுத வேண்டும்.இன்று நீங்கள் எழுதியமைக்காக உங்களை மிகவும் பாராட்டுகிறேன். நாளை நான் ஒரு பதிவிடுகிறேன். ஊட்கங்களைப் பார்த்து ஒன்றே ஒன்றுதான் கேட்கத் தோன்றுகிறது. சட்டக் கல்லூரியில் தாக்கப்பட்ட மாணவர்கள் மீது காட்டப் பட்ட அக்கறையை ஏன் ஊடகங்கள் காயர்லாஞ்சியிலும், சுண்டூரிலிலும், ஏன் திண்ணியத்திலும்,கொடியங்குளத்திலும் காட்டவில்லை. அரசு,போலீஸ் நிர்வாகம் மட்டுமல்ல ஊடகங்களில் ஆதிக்க சக்திகளாக இருப்பதும் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். வாழ்துக்கள் சுந்தர்,
ReplyDeleteமுதலில் அவன் அடித்தான்,ஆகவே நான் அடித்தேன்,ஆகவே அவன் தோழர்கள் அடித்தார்கள்,ஆகவே என்
ReplyDeleteதோழர்கள் அடிக்கிறார்கள்...
இப்படி தொடர்ந்தால் முடிவுண்டா.
கண்ணுக்குக் கண் என்று பழிதீர்த்தால்
உலகில் மக்களில் பாதி குருடர்களாக இருப்பர் என்று காந்தி சரியாகச் சொன்னார்.
'மீண்டும் குற்ற பரம்பரை சட்டம் தேவை இவர்களை ஒடுக்க'
இப்படியெல்லமா எழுதுவீர்கள்.
அந்தச் சட்டம் எப்படிப்பட்டது
என்று தெரியுமா.ஒரு நாள்
இரவை போலிஸ் லாக்கப்பில்
கழித்துவிட்டு வாருங்கள்.பின்
உங்கள் விரல் இப்படி எழுதுகிறதா
என்று பர்க்கலாம்.பசும்பொன் முத்துராமலிங்கம் அந்தச் சட்டத்தை எதிர்த்து போராடினார்.
தேவேந்திர குல வெள்ளாளர்கள் (தலித்துக்கள்) மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவர்களும் வன்முறைக்கு வன்முறை தான் தீர்வு என்று இறங்குவது தான் தவறு.
ReplyDeleteஇது இன்று நேற்று அல்ல, முன்பும் நடந்து இருக்கிறது. தலித்த் களுக்குள் ஒற்றுமை வளர வேண்டும். புதிய தமிழ்கம் கிருஷ்ணசாமி ஒரு புறம், தொல் திருமா ஒரு புறம், இப்போது செல்வா பெருந்தகை வேறு, ஆம்ச்டராங், பூவை மூர்த்தியார், பசுபதி பாண்டியன்.
வேறு ஒரு நண்பர் எழுதியுள்ளது போல பார்ப்பனர் அலலாத ஜாதியினர் இன்றும் தலித்துக்களை சரி சமமாக நடத்துவது இல்லை.
செட்டியாரோ, நாடாரோ, வன்னியரோ, கவுண்டரோ, பிள்ளைமாரோ தங்கள் வீட்டு கல்யாணம், காது குத்து, கோயில் கோடை விழாக்களை ஒரு தலித் பூசாரியை கொண்டு நடத்த இன்னமும் தயங்குகின்றனர். ஏன் கோயில் தேர் வடம் பிடிக்கவே அனுமதிப்பதில்லை.
இது எல்லா மதத்திலும் இருக்கிறது.
குப்பன்_யாஹூ
இந்தப் பதிவையும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் :
ReplyDeletehttp://vinavu.wordpress.com/2008/11/17/law2/
The only article that is objective about this issue is found in the following site:
ReplyDeletehttp://www.tamilhindu.com/2008/11/towards-a-casteless-society/
இதையும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் :
ReplyDeletehttp://athirai.blogspot.com/2008/11/blog-post.html
அந்த வீடியோ காட்சிகளை பார்த்த பின்பும் கொடூர வன்முறை செயல்களில் இறங்கியவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கு பதிலாக "நானும் காட்டுமிராண்டி தான்" என்று எழுதி விட்டு போகலாம். அடிபட்டு மயக்க நிலையில் இருப்பவனை அடிப்பதில் தான் உங்கள் வீரத்தை காட்ட முடியும்..
ReplyDeleteL L D a s u, வளர்மதி, ஆதிரை, குப்பன் யாஹூ, அனானிகள்... நன்றி.
ReplyDelete