Tuesday, November 25, 2008

பாம்பும் தவளையும்

அலறல் சத்தம் கேட்டு
திடுக்கிட்டு எழுந்தவன்
தேடத் துவங்கினேன்
மழைக்கால இரவில்
அறையில் படுத்திருந்தவன் பார்த்திருந்த
மொழ மொழவென
தரையில் வழுக்கிச் செல்லும் பாம்பை

அதைப் பார்க்கும் ஆவலில்
கதைவைத் திறந்தவன்
பார்வையில் படும்

ஈர மணலில்
தாவிச் செல்லும்
தவளையின் கால்பாதம்

14 comments:

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........நல்லாயிருக்கு

    ReplyDelete
  2. காலே இல்லாத பாம்புக்கு தவளை பயப்படுதுன்னு சொல்ல வர்ரிங்களா?

    ReplyDelete
  3. பாம்பு தவளைய புடிக்க வந்திருக்கு!
    நீ எண்டா கத்தி எழுப்பினேன்னு நண்பனுக்கு எழுதியதா?

    ReplyDelete
  4. இந்த கவிதை மூன்றாம் மனிதன் சொல்வது போல் இருக்கிறதே
    அப்படியானால் அலறியது நீங்களா
    இல்லை பாம்பு தான் நீங்களா
    ஒரு வேலை வெளியே தாவும்....

    ReplyDelete
  5. போன கவிதை புரிஞ்சிருச்சுன்னு சொன்னதுக்கு இப்படி டவுசர அவுக்குறதா?

    ReplyDelete
  6. ஈர மணலில்
    தாவிச் செல்லும்
    தவளையின் கால்பாதம் :)


    இந்த கவிதை எனக்கு வேற எதையோ சொல்லுது .

    ReplyDelete
  7. சுந்தர்,
    ரொம்ப நல்லாருக்குங்க.

    ReplyDelete
  8. ஏதோ கில்மா கவிதைனு வந்தா ... மெய்யாலுமே பாம்பும் தவளையும்தானா..

    நான் கூட பாம்பு புத்துல தவளை பூந்துருச்சுனு ஏதாவது இருக்கும்னு நெனச்சேன்

    ReplyDelete
  9. அத்திரி, வால்பையன், கென், முபாரக், அதிஷா, நர்சிம்... நன்றி.

    ReplyDelete
  10. நிச்சயமா எனக்கு நல்லாப் புரிஞ்சிடுச்சி.நல்லா இருக்கு.

    ReplyDelete
  11. க‌விதை முடிவை வாச‌க‌ர் கைக்கே விட்டிருக்கும் யுத்தி மிக‌ அருமை.

    ReplyDelete
  12. ayyo shame shame!

    அப்படியே என்னோட கவிதையையும் வந்து படிங்க பாஸ்!

    ReplyDelete
  13. முத்துவேல், மின்னல், ராஜி... நன்றி.

    ReplyDelete