என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறீர்கள். அதற்குப் பணம் தேவைப் படுகிறது. கடனாக வாங்கினால் முழுப் பணத்திற்கும் வட்டி தரவேண்டும். அசலையும் திருப்பித் தந்து தொலைக்கவேண்டும்.

அதற்குப் பதிலாக பத்து ரூபாய் அடக்க விலையில் பங்குகளைவிட்டால், அதற்கு ப்ரீமியமாக 490 வைத்து 500 ரூபாய் ஒரு பங்கு என விற்கலாம். அதன்மூலம் கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் கொண்டு தொழில் செய்யலாம். மொத்த 500 ரூபாய்க்குமென இல்லாது அடக்கவிலையான 10 ரூபாய்க்கு மட்டும் டிவிடெண்ட் கொடுத்தால் போதும்.

அப்படி மக்களிடமிருந்து வாங்கிய பணத்தை தன்னுடைய மகன்களின் நிறுவனங்களை வாங்குகிறேன் எனச் சொல்லி சுருட்டிக் கொள்ளலாம்.

அடுத்தவன் பையிலிருந்து பணத்தை எடுத்தால் அதற்குப் பெயர் திருட்டு. மாட்டினால் தர்ம அடியும் சிறை தண்டனையும் உண்டு.

அதையே பெரிய அளவில் செய்தால்...

சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு முடிவெடுக்கிறது. சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேதாஸ் ப்ராபர்டீஸ் மற்றும் மேதாஸ் இன்ஃபிராவை வாங்குவாதாக. ப்ராபர்டீஸிற்கு 1.3 பில்லியன் டாலரும் இன்ஃபிராவிற்கு 0.3 பில்லியன் டாலரும் மதிப்பிடப்பட்டு அந்த விலையில் வாங்க முடிவெடுக்கிறார்கள். இதில் இன்ஃபிரா மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். ப்ராபர்டீஸ் தனியார் சொந்தம். (Satyamஐ தலைகீழாக எழுதினால் வருவதுதான் Maytas!).

மேதாஸ் ப்ராபர்டீஸும் மேதாஸ் இன்ஃபிராவும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மகன்களின் கம்பெனிகள். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ராஜூக்களின் பங்கு மதிப்பு 300 மில்லியன் டாலர்கள். 300 மில்லியன் முதலீட்டில் 1.6 பில்லியன் பணத்தை தன் மகன்களுக்குத் தர முடிவெடுக்கிறார் ராமலிங்க ராஜூ. இதற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் தேவையில்லை எனவும் முடிவெடுக்கிறார்.

இம்முடிவு செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை மூடும் நேரத்திற்குப் பிறகு எடுக்கப்படுகிறது. New York Exchangeல் சத்யம் பங்குகள் ரணகளப் படுகிறது. முதலீட்டாளர்கள் நெருக்குகிறார்கள். அடுத்த நாள் காலை மகன்களின் நிறுவனங்களை வாங்கும் முடிவை கைவிடுகிறார்கள். ஆனாலும் பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 30% வீழ்கின்றன.

இதில் இன்னமும் சில உள்குத்துகள் இருக்கின்றன.

மேதாஸ் ப்ராபர்டீஸ் நிறுவனத்தில் மதிப்பு 1.3 பில்லியன் டாலராக இருக்க முடியாதென்றும் அது தன் வசமிருக்கும் விவசாய நிலங்களை வணிக நிலங்களாகக் காட்டி அதன்மூலம் தங்கள் நிறுவன மதிப்பை 90% ஊதிப் பெரிதாக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதாவது விற்பது மகனென்றால், பத்து ரூபாய்ப் பொருளை 100 ரூபாய்க்கு வாங்குவது, அதுவும் அடுத்தவர் பணத்தில்!.

வேறு சிலர் இப்படி அறிவித்ததன்மூலம் சந்தையில் சத்யம் பங்குகளின் மதிப்பு விழும், அப்போது தன்னுடைய பினாமிகளின்மூலம் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கலாம் என்பது ராமலிங்க ராஜூவின் கணக்காக இருக்கலாம் என்கிறார்கள்.

அதாவது, யாரும் எதிர்க்கவில்லையென்றால், தன் மகன்களுக்கு 8000 கோடி ரூபாய் லாபம். எதிர்த்தால், பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கி பிறகு விற்றுக் கொள்ளை லாபம் அடையலாம்.

இதுதான் தலை விழுந்தால் நான் ஜெயித்தேன், பூ விழுந்தால் நீ தோற்றாய் என்பதோ??

பிற்சேர்க்கை : இது தொடர்ப்பான அடுத்த இடுகைகள் :

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_1051.html

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_14.html

37 comments:

சரவணகுமரன் said...

முடிவில் முதலீட்டார்கள் பாவம்...

வால்பையன் said...

//சிங்கம் விழுந்தால் நான் ஜெயித்தேன், பூ விழுந்தால் நீ தோற்றாய் என்பதோ??//


நல்லாயிருக்குதே!

வால்பையன் said...

இம்மாதிரியான தகிடுதத்தங்களில் பெயர் போனவர்கள் கும்பானி பிரதர்ஸ் தான்!

Anonymous said...

பொதுத்துறை நிறுவனமான வி.எஸ்.என்.எல் ஐ அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கிய டாடா அந்நிறுவனத்தின் பணத்தை வைத்து டாடா இன்டிகாமின் பங்குகளை வாங்கி நட்டத்தை தூக்கி நிறுத்தியது. இதையே அம்பானி உட்பட பல முதலாளிகள் மோசடியாக செய்கின்றனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நடுத்தர வர்க்க அசடுகள் இருக்கும்வரை இவர்களை என்ன செய்ய முடியும்?

நட்புடன்
வினவு

ரிஷி (கடைசி பக்கம்) said...

Oh!!

I never think other side.

thanks sundar.

Anonymous said...

சுந்தர்,

இதுக்கெல்லாம் முன்னோடி நம்ம அனில்தாங்க.

Voice on Wings said...

//நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறீர்கள். அதற்குப் பணம் தேவைப் படுகிறது. கடனாக வாங்கினால் முழுப் பணத்திற்கும் வட்டி தரவேண்டும். அசலையும் திருப்பித் தந்து தொலைக்கவேண்டும்.

அதற்குப் பதிலாக பத்து ரூபாய் அடக்க விலையில் பங்குகளைவிட்டால், அதற்கு ப்ரீமியமாக 490 வைத்து 500 ரூபாய் ஒரு பங்கு என விற்கலாம். அதன்மூலம் கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் கொண்டு தொழில் செய்யலாம். மொத்த 500 ரூபாய்க்குமென இல்லாது அடக்கவிலையான 10 ரூபாய்க்கு மட்டும் டிவிடெண்ட் கொடுத்தால் போதும்.//

பதிவின் பேசுபொருளைவிட, அடிப்படைகளைக் கேள்விக்குட்படுத்தும் இந்த வரிகள் சிந்திக்க வைக்கின்றன.

anujanya said...

சுந்தர்,

நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்கள் எல்லாமே சரி. என்னுடைய எண்ணங்கள்:

'தலை விழுந்தால் நான் வென்றேன்' சரி. 'பூ விழுந்தால்' சற்று கற்பனை வளம் மிக்க (Pink sheets) செய்திப் பத்திரிகைகளின் விளையாட்டு எனலாம். இந்த விஷயம் பெரிதாகி, பங்குகள் சரிந்தால், அதன் மூலம் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கலாம் என்பது கத்தி மேல் நடப்பது போல. பெரும்பாலான முதலாளிகள் செய்யும் தகிடு தத்தம் தான் எனினும், இந்த முறை ராஜு இதை மனதில் கொண்டு செய்திருப்பார் என்று தோன்றவில்லை. இப்போது கம்பெனியே அவர்கள் கையை விட்டுப் போகும் நிலையில் உள்ளது. Corporate Governance என்ற தளத்தில் அவர்கள் மிக மிக சரிவான நிலையை எட்டியதால், நிரந்தர சேதம் ஏராளம். தற்கால, எதிர்கால வாடிக்கையாளர்கள் போட்டி கம்பெனிகளான Infosys, TCS க்கு போவது பற்றி பேசத் துவங்கி விட்டார்கள்.

நீங்கள் குறிப்பிடாத ஒரு விஷயம் Investor activism. Institutional investors like FIIs/Mutual Funds, Insurance Companies, Banks have all condemned this move in unequivocal language which made the promoters retrace the steps immediately. Accountability has been underlined in no uncertain terms. அது ஒரு நல்ல விதயம்.

தல, எங்களுக்கு கொஞ்சம் topics விட்டு வையுங்களேன் :)

அனுஜன்யா

Unknown said...

சுந்தர்,

கார்பரேட் ரவுடிகள்? வைட் காலர் க்ரைம்?

Anonymous said...

Don't forget... A meeting is scheduled on December 29th to duscuss the same subject. So the acquisition is not given up YET...!!!

SP.VR. SUBBIAH said...

இதைச் சொல்கிறீர்களே சுந்தர். இதைவிட அதிகமான கொடுமைகள் எல்லாம் முன்பு அரங்கேறியுள்ளன.
1990 முதல் 1995 வரை சுமார் 6,000 புதுக்கம்பெனிகள் தங்கள் பங்குகளை வெளியிட்டு மொத்தம் ரூ.30,000 கோடிகளைத்திரட்டின. இப்போது அந்தக் கம்பெனிகள் எல்லாம் இல்லை. சுமார் 30 லட்சம் (அப்போது பங்கு மார்கெட்
பாய்ச்சலில் இருந்த்தால்) புது முதலீட்டளர்கள் அவற்றை வாங்கினார்கள்

அந்தக் கம்பெமிகளில் ஒன்று கூட இப்போது இல்லை. மக்களின் பனத்தை சுவாகா பண்ணிவிட்டு அவர்கள் ஓடிவிட்டார்கள்
செபி இதுவரை நடவடிக்கை ஒன்ரையும் எடுக்கவில்லை.

எங்கே போய் முட்டிக் கொள்வது?

அந்த 30 லட்சம் பங்குதாரர்களும், வெறுத்துப்போய் வெளியேறிவிட்டார்கள். இப்போது அவர்களை அழைத்தால் பட்டதே போதுமென்பார்கள்.

உதாரணத்திற்கு இரண்டு

Denmur fax
Rishyashringa Jewellers
இரண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்பெனிகள்

ambi said...

ரொம்ப எளிமையா புரியும்படி எழுதி இருக்கீங்க சுந்தர்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சரவணகுமரன்.

நன்றி, வால்பையன். ஆமாம் அவங்க ரூல்ஸெல்லாம் அப்படித்தான் வச்சுப்பாங்க.

நன்றி, வினவு. பங்குச் சந்தை என்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒரு சூதாட்டம் எனத் தெரிந்தும் போய்விழும் நடுத்தர வர்க்க அசடுகளை என்ன செய்ய?? :(

நன்றி, கடைசி பக்கம்.

நன்றி, வடகரை வேலன்.

அக்னி பார்வை said...

ஐயோ ராமா!.. ஒன்னுமே புரியலே

குடுகுடுப்பை said...

முதலாளித்துவத்தில் இந்த ஊழல்களை ஒழிக்க நல்ல சட்டங்கள் வேண்டும்.

குடுகுடுப்பை said...

vinavu said...

பொதுத்துறை நிறுவனமான வி.எஸ்.என்.எல் ஐ அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கிய டாடா அந்நிறுவனத்தின் பணத்தை வைத்து டாடா இன்டிகாமின் பங்குகளை வாங்கி நட்டத்தை தூக்கி நிறுத்தியது. இதையே அம்பானி உட்பட பல முதலாளிகள் மோசடியாக செய்கின்றனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நடுத்தர வர்க்க அசடுகள் இருக்கும்வரை இவர்களை என்ன செய்ய முடியும்?

நட்புடன்
வினவு//

முதலீடு செய்வது தவறு அல்ல, ஆனால் ஊழல்களை ஒழிக்க சரியான சட்டங்கள் தேவை, தனிப்பட்ட முறையில் நான் தகுதிக்கு மீறி இழந்தவனே ஆனாலும் ஊழல்கள் களையப்படவேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

ரவி said...

என்னடா தமிழ் வலைப்பதிவில் யாரும் இதை தொடவில்லை என்று பார்த்தேன்...

நன்றி சுந்தர்...

வாத்தியார் அய்யா சொன்ன முப்பது லட்சம் பேரில் என்னுடைய சித்தப்பாவும் ஒருவர்..

IGGI ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தில் தன்னுடையை இருபது வருட சேமிப்பை முதலீடு செய்தார்...

அப்புறம் கடனை உடனை வாங்கி எங்கயோ தேக்கு மரம் வளர்க்கப்போறோம் என்று சொன்ன ஒரு கம்பெனியில் போட்டார்..

தேக்கு மரம் கருகிய தகவல் கூட தெரிவிக்காமல் கம்பெனிகள் மாயமாய் மறைந்துவிட்டன...

கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி பணம் தரகர்களாலும் போலி நிறுவனங்களாலும் ஸ்வாகா செய்யப்பட்டது...

இதுவரை ஒரு நடவடிக்கை கூட இல்லை...

அர்ஷத் மேத்தா என்றார்கள் , அந்தாளுக்கு எயிட்ஸு என்றார்கள், ஆனால் உருப்படியான ஒரு நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை...!!!

கயல்விழி said...

ரொம்ப தெளிவான கட்டுரை, இந்தியா ஒரு மினி அமரிக்கா என்பதற்கு இதெல்லாம் நல்ல உதாரணம்.

Sanjai Gandhi said...

நான் கூட இதை பற்றி விரிவாக எங்காவது படிக்க முடியுமா என நினைத்தேன்.. சபாஷ் சுந்தர்ஜி..

என்னா ஒரு மொள்ளமாறித் தனம்டா சாமி? :(

Anonymous said...

Hi,

Can't believe it. Thought provoking post.

We've to think about it. what about the investors ?!?

:-)
Insurance Agent

புருனோ Bruno said...

//பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நடுத்தர வர்க்க அசடுகள் இருக்கும்வரை இவர்களை என்ன செய்ய முடியும்?//

பங்கு சந்தை என்பதே ஒரு சிலர் பணம் பண்ணுவதற்கானது என்று நம் மக்களுக்கு என்று தான் புரியுமோ

--

Anonymous said...

Greed. Rich's greeds feeds on poor's greed. It is all nothing but greed :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

VoW, அனுஜன்யா, ரவிஷங்கர், கல்யாண், சுப்பையா சார், அம்பி, அக்னிப் பார்வை, குடுகுடுப்பை, செந்தழல் ரவி, கயல்விழி, பொடியன், Bendz, டாக்டர், சுகுமார்... நன்றி.

Anonymous said...

Please read the article below about this issue posted in Hindu newspaper.

http://www.thehindubusinessline.com/2008/12/20/stories/2008122050010800.htm

The news article writer is a well read IIM business professor, quotes Mahabarata, sanskirit etc..Uses buzz words maximization, signaling etc..

But he does not tell what the problem was? And inspite of his education and language, if you persevere to understand what he says-He does have a few good points..And compare this to the simple writing of Jyovramsundar in tamil..

Hope I never have to listen to this professor talk!

manjoorraja said...

மிகவும் எளிய முறையில் சத்யம் பற்றி விளக்கியுள்ளீர்கள்

நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

Ronin & மஞ்சூர் ராசா... நன்றி.

Anonymous said...

Attagaasamaana thittamaa irukkudhae.

லிங்காபுரம் சிவா said...

Ur 100% Right

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனானி & பழையபேட்டை சிவா, நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இது தொடர்பாக பல ‘திடுக்கிடும்' தகவல்கள் இன்று (7/1/2009)வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

anujanya said...

எனக்கு உங்க மேலேயே ஒரு சந்தேகம் வருது இப்போ. நீங்கள் ராஜுவுக்கு ஏதாவது நட்பு/உறவுமுறையா? :))

நடக்கும் விடயங்கள் மிகக் கேவலமாக இருக்கு :(

அனுஜன்யா

Sanjai Gandhi said...

// அனுஜன்யா said...

எனக்கு உங்க மேலேயே ஒரு சந்தேகம் வருது இப்போ. நீங்கள் ராஜுவுக்கு ஏதாவது நட்பு/உறவுமுறையா? :))

நடக்கும் விடயங்கள் மிகக் கேவலமாக இருக்கு :(

அனுஜன்யா//

என்ன கொடுமை அனுஜன்யா அண்ணாச்சி இது? நடக்கும் விஷயங்கள் கேவலமா இருக்கிற ஒரே காரணத்துகாக அவங்க நம்ம சுந்தர்ஜி உறவுக்காரங்கன்னு முடிவு பண்ணிடுவிங்களா? :))

( ஹய்யா.. இன்னைக்கு கடமை ஓவர்.. )

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பணம் பண்றது இவ்ளோ சுலபான வழியா... தெரியாமப் போச்சே...

Anonymous said...

Kadai thengai eduthu vali pillaiyarukku odachittu, atha sappittu eappan vidavum ninaikirangappa.

nagarajan said...

ayya! eppadi tamizhil post seivadu enru theriavillai. sollikodunga. padithathu azhagai purindadu. Aasai, Perasai. Kuyikthiyana ennangal, palanal thirudan, orunal eppadiyum agappaduvan. ellaraiyum, ellanalum emarra(spelling thappu) mudiyadu. nanri. eppadi thamizhil post seivadu enpadai sollavum. nagarajan, chennai.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனுஜன்யா, நன்றி.

சஞ்சய் காந்தி, நன்றி. எவ்வளவு நாள் திட்டமிது :)

சுரேஷ், நன்றி.

அனானி, நன்றி.

நாகராஜன், நன்றி. நீங்கள் NHM Writer உபயோகிக்கலாம்.

சுழியம் said...

1. People who invest without proper analysis have higher chance of getting doomed.

To avoid that, any business venture and investment is only done with a lot of speculations that should be based on facts and figures.

But the greed of people make them avoid doing any proper analysis. When they do not do that they doom.

2. Any business has its risks. Life is in itself full of risks. In other words, living itself is a risky affair.

3. So, simply ridiculing multinational companies for their journey in a risky market is sheer foolishness.

4. If we do not take this risk, and want communism to take over our life's dealings, then we only will ooz out our own blood under slavery; and the government capitalism (aka) communism, will invest the profit earned out of our blood in the sharemarkets. Worse, we don't get the profits.