சத்யம் - இன்னொரு என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

மகன்களின் நிறுவனங்களை வாங்கத் திட்டமிட்டு பல களேபரங்கள் நடந்து 20 நாட்கள் கழித்து சத்யம் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மனசாட்சியின்படி செய்திருக்கிறாராம்!

வரவு செலவுக் கணக்கில் பொய்யாக 5,040 கோடி ரூபாய்கள் பண இருப்பு உள்ளதாகக் காட்டியிருக்கிறார்கள் (மொத்த தொகையே 5,400 கோடிதானாம், அதில் 5,040 கோடி பொய்!). தவிர வரவேண்டிய தொகையை ஒரு 500 கோடி அதிகப்படுத்திக் காண்பித்தது, கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு 1,200 கோடி குறைத்துக் காண்பித்தது, வட்டியில் ஒரு 400 கோடி என சகலத்திலும் விளையாடியிருக்கிறார் மனிதர். அதுவும் இத்தகைய தில்லுமுல்லுகளைச் சில பல வருடங்களாகத் தொடர்ந்து செய்துவருகிறாராம்.

கூத்து என்னவென்றால், உலகத்தில் பெரிய அக்கௌண்டிங் நிறுவனங்களுள் ஒன்றான Price Waterhousecoopers தான் இவர்களது ஆடிட்டர்கள்! அது எப்படி இவ்வளவு பெரிய கோல்மால் தெரியாமல் போகுமென்பது அவர்களுக்கும் ராஜூவுக்குமே வெளிச்சம். பன்னாட்டு நிறுவனங்களைப் பார்த்தாலே பயமாகத்தான் இருக்கிறது :))

இன்னொரு விஷயம். அவரது பங்குகளை ஏற்கனவே அவர் அடமானம் (அதிக விலையில் என்பதைச் சொல்லத் தேவையில்லை) வைத்துவிட்டார். இப்போது அவர்களும் அதில் பெரும்பாலான பங்குகளை விற்றுவிட்டார்கள். இதெல்லாம் முடிந்தபிறகே ராமலிங்க ராஜூ தன்னுடைய ஒப்புதல் கடிதத்தைத் தந்திருக்கிறார்.

சிலருக்குத் தோன்றலாம். வருமான வரியைக் குறைக்க வேண்டி அனைவரும் லாபத்தைக் குறைத்துத்தான் காண்பிப்பார்கள். ஏன் ஐடி நிறுவனங்கள் ஏற்றிக் காண்பிக்கின்றன என்று... பதில் எளிமையானது. இப்போது இந்தியாவில் பல வருடங்களாக stp / ehtp களுக்கு வருமான வரியே கிடையாது! லாபத்தைக் கூட்டிக் காண்பித்தால் சந்தையில் பங்குகளில் விலை கூடும், புதிய பங்குகளைவிடலாம் என ஒரு வட்டம் அது.

இன்னும் என்னென்ன விஷயங்கள் வெளியில் வராமல் அமுக்கப் பட்டிருக்கிறதோ தெரியவில்லை. இனி அரசின் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம். கடந்த கால வரலாற்றைப் பார்த்து அது எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஆனால், நிறைய லாபம் வருகிற நிறுவனம் என நம்பி சத்யம் பங்குகளை வாங்கியவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. அடிப்படையில் பங்குச் சந்தை ஒரு சூதாட்டம் என்பதை எவ்வளவு பேர் எவ்வளவுவிதமாகச் சொன்னாலும் புரியாதவர்களை என்ன செய்ய?

இது தொடர்பாய் என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்ற தலைப்பில் நான் எழுதிய இடுகையை இங்கே படிக்கலாம் :

www.jyovramsundar.blogspot.com/2008/12/blog-post_19.html

பிற்சேர்க்கை : இது தொடர்பாக எழுதிய அடுத்த இடுகை :

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_14.html

31 comments:

அக்னி பார்வை said...

ஐடி கம்பனியில் இதெல்லாம் சகஜம்பா..

மாதவராஜ் said...

சுந்தர்!

//அடிப்படையில் பங்குச் சந்தை ஒரு சூதாட்டம் என்பதை எவ்வளவு பேர் எவ்வளவுவிதமாகச் சொன்னாலும் புரியாதவர்களை என்ன செய்ய?//

தேசத்தில் பற்றும் தீ, தன் சட்டைப் பையில் பற்றாத வரை இங்கு யாருக்கும் உறைக்காது என்று வைரமுத்து எழுதிய கவிதை வரிகளே இப்போது எனக்கு உறைக்கிறது.

வால்பையன் said...

இது போல் இன்னும் எத்தனை ஊழல் வெளிவரப்போகிறதோ!

முதலீட்டாளர்கள் டவசர இறுக்கமா புடிச்சிகிட்டு நிக்கிறாங்க

:(

நானானி said...

பங்குச் சந்தையும் சூதாட்டமென்றால், மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்?

tamil cinema said...

நெல்லைத்தமிழ் டாட் காம் சார்பில் புதிய திரட்டி...
சோதனை ஓட்டத்திற்கு பின்வரும் முகவரியை சொடுக்குங்கள்.

http://india.nellaitamil.com/

கூட்ஸ் வண்டி said...

/*ஒரு சூதாட்டம் என்பதை எவ்வளவு பேர் எவ்வளவுவிதமாகச் சொன்னாலும் புரியாதவர்களை என்ன செய்ய?*/

உழைக்காமல் காசு வர வேண்டும் என்று நினைக்கிறவன் வாயிலே இப்படி தான் மண் விழும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சுந்தர் ஸார்..

இதனை இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதக் கூடாதா..?

ராஜூவின் ராஜினாமா கடிதத்தை நானும் படித்துப் பார்த்தேன். சரிவரப் புரியவில்லை.

எப்படி அவர் கணக்குகளை குறைத்துக் காட்ட முடியும்? இல்லாத பணத்தை இருப்பதாக காட்ட முடியும்..? செபியில் இருப்பவர்களும், வங்கியாளர்களும், தணிக்கையாளர்களும் என்ன முட்டாள்களா..?

ஒண்ணும் புரியல ஸார்..

புருனோ Bruno said...

பெரிய அளவு வேலைகளை செய்வதற்காக கூடுதல் சொத்துக்களை :( :( இதையே பேரூந்து நிலையத்தில் மிதிவண்டி நிலைய் ஓப்பந்த புள்ளிகாரர் செய்தால் (இல்லாத சொத்துக்களை இருப்பதாக காட்டினால்) கூப்பாடு போடும் ஊடகங்கள் தற்பொழுது என்ன செய்வார்கள் என்று பார்க்க ஆவல்.

கோடி ரூபாய் கேள்வி (எவ்வளவு நாள் தான் மில்லியன் டாலர் என்று கூற) இதை சத்யம் மட்டுமே செய்துள்ளார்கள் என்றும் இந்தியாவில் இருக்கும் பிற நிறுவனங்கள் அனைத்துமே கணக்கு ஒழுங்காக வைத்துள்ளார்கள் என்று நம்பலாமா.

Anonymous said...

/*
/*ஒரு சூதாட்டம் என்பதை எவ்வளவு பேர் எவ்வளவுவிதமாகச் சொன்னாலும் புரியாதவர்களை என்ன செய்ய?*/

உழைக்காமல் காசு வர வேண்டும் என்று நினைக்கிறவன் வாயிலே இப்படி தான் மண் விழும்.
*/
Do you really think that investing in stock market does not take any work? if it was invested with out any upfront work, you are right that they should be losing money.

But there is a host of investors who sincerely go through the financial statements to determine the future prospects of the company. It is totally not the fault of the investor if that investments go belly up because the financial statements, based on which investment was made, were fruadulant. These crooks (raju, price waterhouse) are to be brought to books.
There is nothing wrong in investments on stock!!!


--anvarsha

குடுகுடுப்பை said...

அந்த இல்லாத பணத்தை வெச்சி இல்லாத இன்னோரு கம்பெனிய வாங்குர மாதிரி காமிச்சு கணக்கு நேர் பண்ண பாத்திருக்காரு. மாட்டிக்கிட்டாரு அதுனால இருக்கிரத எடுத்துட்டு தப்பிக்கிறார். இந்த கம்பெனியினால் ஒட்டு மொத்த இந்திய கம்பெனிகள் மேல் நம்பகத்தன்மை குறையும்.

மணிகண்டன் said...
This comment has been removed by the author.
மணிகண்டன் said...

****** எப்படி அவர் கணக்குகளை குறைத்துக் காட்ட முடியும்? இல்லாத பணத்தை இருப்பதாக காட்ட முடியும்..? செபியில் இருப்பவர்களும், வங்கியாளர்களும், தணிக்கையாளர்களும் என்ன முட்டாள்களா..? *******

Balance sheet எல்லாம் work of art அப்படின்னு announce பண்ணினா தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும். அப்பதான் அனாவசியமான இந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு எல்லாம் நம்ப கிட்ட இருக்காது !

ஒன்னு மட்டும் உண்மை... அவனுங்க எவனும் முட்டாள் கிடையாது !

Anonymous said...

This really shows on how much you know about the issue...Completely immatured article. Pls don't try to show you know EVERYTHING...Stupid

'என்னத்த' கண்ணப்பன் said...

Next Reliance

Anonymous said...

Investing in stock is alway risk so invest like Warren Buffet(Invest in business what you understand and avoid herd mentality).It is as much as starting your own business. Higher the risk ,higher the return.

People has to be smart about their risk level.Anyone invests in stock should NOT need that money for five years.

But what happened in Satyam is a tragedy.

பாரி.அரசு said...

சுந்தர்,

அமுக்கப்பட்ட பல செய்திகள் உள்ளன...

State Bank of India உள்பட பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் இணைய சேவைகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏன் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் க்கு வழங்கப்பட்டது? இதன் பின்னணி என்ன?

பிஜேபி ஆட்சிக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துக்குமான தொடர்பு!

கிளற வேண்டியவை நிறைய இருக்கு!

பத்திரிக்கை துறையில் இருக்கிற நண்பர்கள்... கிளறினால் வெளி வர வாய்ப்பு இருக்கு!

நன்றி

தமிழ் சசி / Tamil SASI said...

இவ்வாறான தில்லுமுல்லுகள் எப்பொழுதுமே பங்குச்சந்தையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சத்யம் என்ற பெரிய நிறுவனம் இதைச் செய்து இருப்பதால் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் எவ்வாறு பங்குச்சந்தையில் ஊழல் செய்கின்றன என்பது குறித்து வணிகப்பத்திரிக்கையாளர் சுசித்தா தலால் அவருடைய கணவருடன் இணைந்து ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார் (FACE VALUE - Creation and Destruction of Shareholder value in India - இதை இன்னும் ஏன் தமிழில் எவரும் மொழிபெயர்க்கவில்லை :))

எனவே சத்யம் ஒரு ஆரம்பம் தான். அரசு எல்லா நிறுவனங்களின் கணக்குகளையும் ஆராய்ந்தால் இன்னும் பல நிறுவனங்கள் சிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு புது ஊழல் பங்குச்சந்தையில் வெளியாகி கொண்டே இருக்கும். ஹர்ஷத் மேத்தா தொடங்கி வைத்த இந்தியப் பங்குச்சந்தை ஊழல் ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் ஒவ்வொரு வடிவத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் நடுவண் அரசு அவ்வப்பொழுது சிறு மாறுதல்களை செய்கிறது. ஆனால் சரியான Corporate Governance இல்லை. இத்தனைக்கும் சிறந்த Corporate Governance விருதினை சத்யம் கடந்த மாதம் பெற்றது தான் இதிலே வேடிக்கையானது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சட்டங்களை சரியாக பின்பற்றுவதில்லை என்ற உண்மை ஹர்ஷத் மேத்தா ஊழல் விடயத்திலேயே வெளியானது. இப்பொழுது சத்யம் நிறுவனத்தை ஆடிட் செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த ஊழலில் எவ்வாறு பங்குவகித்தன என்ற உண்மையும் வெளிவரும் என நம்புகிறேன்.

மொத்தத்தில் உலகின் முதலாளித்துவத்தின் அசுர வளர்ச்சியாக கருதப்பட்ட கடந்த ஐந்தாண்டுகள் தற்பொழுது முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறி தான் அமெரிக்காவில் தொடங்கி இந்தியா வரை நடக்கும் நிகழ்வுகள் வெளிப்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு வில்லன் இந்தியப் பங்குச்சந்தையில் முளைத்துக் கொண்டிருப்பது தான் கொடுமையானது. ஹர்ஷத் மேத்தாவின் ஊழலை விட ராமலிங்க ராஜூவின் வில்லத்தனம் பிரமிக்கவைக்கிறது. இது பங்குச்சந்தை என்றில்லாமல் ஒரு நிறுவனம் இந்தியாவில் செயல்படும் விதத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.இது எந்தளவுக்கு அவுட்சோர்சிங் போன்றவற்றை பாதிக்கும் என்ற கேள்விகள் தற்பொழுது எழுந்துள்ளது. சத்யம் நிறுவனத்தின் அக்கவுண்டை அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்கள் நீக்கும் என்ற வதந்தி இங்கே உலாவிக் கொண்டு இருக்கிறது. சத்யம் என்றில்லாமல் பல ஐடி நிறுவனங்களை இது பாதிக்கும்.


ஹர்ஷத் மேத்தா ஊழல் குறித்து நான் எழுதிய தொடரை இங்கே படிக்கலாம்


நன்றி...

Namakkal Shibi said...

//But there is a host of investors who sincerely go through the financial statements to determine the future prospects of the company. It is totally not the fault of the investor if that investments go belly up because the financial statements, based on which investment was made, were fruadulant. These crooks (raju, price waterhouse) are to be brought to books.
There is nothing wrong in investments on stock!!! //

If the Financial statements shown are found being wrong, on which basis the investors can determine the financial positions of the companies, and how can they make decisions on the stocks.

On going forward how canthey trust the financial statements of other companies?

அத்திரி said...

//கூப்பாடு போடும் ஊடகங்கள் தற்பொழுது என்ன செய்வார்கள் என்று பார்க்க ஆவல்.//

)))))))))))))))))))

ஒன்னுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..

SurveySan said...

வருமான வரி காட்டும்போது, அங்க இங்க இடுக்கி ஒரு $1000 கம்மியா காட்டப் பாப்போம்.

ராஜூ அவர் லெவலுக்கு சில ஆயிரம் கோடிகளை கூட்டிக் கொரச்சு காட்டறாரு.

வியாதி என்னமோ நமக்கும் அந்தாளுக்கும் ஒண்ணுதான்.

ஸைசுக்கு ஏத்த மாதிரி கூட கொறச்சு இருக்கு.

என்ன கொடுமைங்க இதெல்லாம்? :(

SHANMUGHAPRIYAN said...

I HAVE READ SO MANY PAPERS AND WATCHED SO MANY CHANNELS.BUT I GOT CLEAR UNDERSTANDING OF WHAT HAPPENED IN SATHYAM BY READING YOUR BLOG ONLY.
THANK YOU VERY MUCH MR.SUNDAR

SHANMUGHAPRIYAN said...

I have read so many newspapers and watched so many channels.But I got a complete understanding of SATYAM fraud only by reading your blog.
Thank you very much Mr.Sundar.

SHANMUGHAPRIYAN said...

Excellent report of Satyam corruption..Thank you very much Mr.Sundar.

கூட்ஸ் வண்டி said...

/*
/*ஒரு சூதாட்டம் என்பதை எவ்வளவு பேர் எவ்வளவுவிதமாகச் சொன்னாலும் புரியாதவர்களை என்ன செய்ய?*/

உழைக்காமல் காசு வர வேண்டும் என்று நினைக்கிறவன் வாயிலே இப்படி தான் மண் விழும்.
*/
Do you really think that investing in stock market does not take any work? if it was invested with out any upfront work, you are right that they should be losing money.

But there is a host of investors who sincerely go through the financial statements to determine the future prospects of the company. It is totally not the fault of the investor if that investments go belly up because the financial statements, based on which investment was made, were fruadulant. These crooks (raju, price waterhouse) are to be brought to books.
There is nothing wrong in investments on stock!!!


--anvarsha
திரு அண்வர்சா அவர்களே.....

இப்படி உழைப்பே இல்லாமல், அவர்கள் காட்டும் எண்களின் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்து காசு பார்க்க நினைப்பது எந்த வகை புத்தி சாலித்தனம் என்று எனக்கு புரியவில்லை.

100 ஆண்டு பாரம்பரியம் மிக்கது தான் லீ மேன் பிரதர்ஸ் வாங்கி... திவால் ஆனது ஏன்?

ஹர்ஷத் மேத்தா ஏன் உருவானான்?

இப்படி ஆண்டு வரவு செலவை-காகிதத்தை நம்பி முதலீடு செய்து சம்பாதிப்பது புத்தி சாலித்தனம் என்று நீங்கள் மெச்சுவீர்கலேயானால், உங்கள் புத்திசாலித்தனத்தையும் மீறி உங்களை எய்த்து சம்பாதிப்பவரின் புத்திசாலித்தானத்தையும் மெச்சிகொள்ளுங்கள் வசை பாடாதீர்கள்

நன்றி

SUREஷ் said...

கடவுள் அமைத்து வைத்த மேடை...

KaveriGanesh said...

அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......


அன்புடன்

காவேரி கணேஷ்

kaveriganesh.blogspot.com

karthik said...

Sundar,
your reviews and the comments from few members are really good.especially you explained the basiscs of the stock and other finacial matters.As per your statement if stock market is gambling play then why goverment is running the stock markets? I will ask more questions based on your reply.

வால்பையன் said...

//வருமான வரி காட்டும்போது, அங்க இங்க இடுக்கி ஒரு $1000 கம்மியா காட்டப் பாப்போம்.
ராஜூ அவர் லெவலுக்கு சில ஆயிரம் கோடிகளை கூட்டிக் கொரச்சு காட்டறாரு.//

குறைச்சு இல்லைங்க கூட்டி காட்டியிருக்காரு
இவரால் 800 கோடி கூடுதல் வரி வருமானம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அக்னி பார்வை, மாதவராஜ், வால்பையன், நானானி, தமிழ் சினிமா, கூட்ஸ் வண்டி, உண்மைத் தமிழன், ப்ரூனோ, அன்வர்ஷா, குடுகுடுப்பை, மணிகண்டன், என்னத்த கண்ணப்பன், பாரி அரசு, தமிழ் சசி, நாமக்கல் சிபி, அத்திரி, சர்வேசன், ஷண்முகப்ரியன், சுரேஷ், காவேரி கணேஷ், கார்த்திக், அனானிகள்... நன்றி.

Wahe Guru said...

சுந்தர் உனக்கு இவ்வளவு தெரியுமா?---ஆச்சர்யதில் ராம்ஜி குரு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ராம்ஜி குரு.