கலாச்சாரக் காவலர்கள்

பாமகவின் மகளிரணியைச் சேர்ந்த சுமார் 20 பேர் கடந்த 31ம் தேதி இரவு சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் உள்ளே பாரில் நடக்கும் 'ஆபாச' நடனத்தை எதிர்த்து. பிறகு போலீஸ் அனுமதிக்க மூன்று பேர் உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நடனம் எதுவும் நடக்கவில்லை என்றதும் திருப்தியுடன் திரும்பியிருக்கின்றனர். போலவே வேறு சில விடுதிகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. யாரும் தராமல் இவர்களாகவே கலாச்சாரக் காவலர்கள் வேலையை கையில் எடுத்துக் கொள்கின்றனர்.

உங்களுக்குக் குடி கொண்டாட்டம், எங்களுக்கு அது பொருளாதாரம், உடல் நலம் சார்ந்த பிரச்சனை என பொதுமைப் படுத்திவிட்டு இதைத் தாண்டிச் செல்ல முடியாது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு குடிப்பதுகூடப் பிரச்சனையில்லையாம், நடனம்தான் கூடாதாம். காரணம் நமது கலாச்சாரம் கெட்டுவிடுமாம் ...

... சில மாதங்களுக்கு முன் என் வீட்டருகில் இரண்டு சிறுவர்கள் நடனப் பயிற்சி செய்து கொண்டிருந்தனர், ஏதாவது போட்டிக்காக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். விஜயும் அசினும் விரக தாபத்தில் நடித்திருந்த ‘டோலு டோலுதான் அடிக்கற' பாட்டு.

நான் உனக்குள் நுழைய
நீ எனக்குள் கரைய
நம் உலகம் உறைய

என்ற வரிகள் ஒலித்துக் கொண்டிருக்க, அருகிலிருந்த பெரியவர்கள் ஊக்குவிக்க, படத்தில் வரும் pelvic movementsஐ பிரதியெடுக்க அச்சிறுவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்...

இந்தச் சமூகச் சூழலில்தான் பாமகவினர் விடுதிகளில் வயதுக்கு வந்தவர்கள் ஆடும் நடனங்களை எதிர்க்கின்றனர். இவர்களது செல்வாக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாயிருக்கும் பட்சத்தில், தமிழகத்தின் சிவசேனாவாக மாறிவிடக்கூடும்.

இந்த அபத்த நாடகம் இத்துடன் முடிந்தது. அடுத்தது..? ஃபிப்ரவரி மாதம் காதலர் தினத்தின்போது பூங்காக்களிலும் கடற்கரையில் நடந்தேறும்.

29 comments:

நாமக்கல் சிபி said...

:))

மக்களுக்குத் தங்கள் இருப்பை நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்! வேறென்ன செய்ய முடியும் அவர்களால்?

கொண்டாட்டங்கள், திரைப்பட வெளியீடுகள், விழாக்கள் என்று வரிசையாக வந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு ஒரு வாய்ப்பாக!

ரமேஷ் வைத்யா said...

மதுபானத் தயாரிப்பையும் விநியோகத்தையும் (பழைய பெர்மிட் சிஸ்டம்) வரைமுறைப்படுத்த இந்த கல்ச்சுரல் போலீஸ் நிர்ப்பந்திக்கலாமே... யாரிடமோ பேரம் பேசும் முயற்சியாகவே சிகரெட் ஒழிப்பும் மதுக்கடைப் போராட்டங்களும் எனக்குத் தோன்றுகின்றன. மதுக்கடைப் போராட்டங்களில் மகளிர் அணியினர் பீர் அடித்தபடி ஆவேசமாகப் போராடியதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு வேளை வாங்கிக் குடித்து மதுவை ஒழிக்கச் சொல்கிறார்களோ என்னமோ...

Pot"tea" kadai said...

சண்டீகர் சென்றிருக்கிறீர்களா சுந்தர்?

புகையிலை ஒழிப்பு பற்றி அன்புமணியின் காப்பி வித் அனு வில் கண்டீர்களா?

****
பாமகவின் கலாச்சாரக் காவல் பற்றி சந்தி மட்டும் அல்ல இன்னபிற உடல் பாகங்களும் சிரிக்கும் வண்ணமே அவர்களின் செயல்பாடுகள் உள்ளன என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.
****
குழலி வந்து உரையாடலைத் தொடருவார் என்ற நம்பிக்கையுடன்...

:) :)

narsim said...

சாட்டை எடுத்த ஜி வாழ்க..

narsim said...

//ஒரு வேளை வாங்கிக் குடித்து மதுவை ஒழிக்கச் சொல்கிறார்களோ என்னமோ...
//

வணக்கம் ரமேஷ் வைத்யாண்ணா.. கலக்கல்

thirudan said...

கொஞ்சம் கொஞ்சமாக பத்தி எழுத்தாளராக @ கருத்து கந்தசாமியாக மாறி வருகிறீர்களோ என்று தோன்றுகிறது சுந்தர்...

மொழி விளையாட்டுக்கு கருத்து அவசியமா?

KARTHIK said...

// இந்த அபத்த நாடகம் இத்துடன் முடிந்தது. அடுத்தது..? ஃபிப்ரவரி மாதம் காதலர் தினத்தின்போது பூங்காக்களிலும் கடற்கரையில் நடந்தேறும்.//

தேர்தல் வரப்போற சமையம் அப்படித்தான் தங்கள் இருப்பை காட்டிக்குவாங்க

மாதவராஜ் said...

இந்தக் கலாச்சாரக் காவலர்கள்தான் முன்பு குஷ்புவின் கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் குறித்த விமர்சனத்தையோ, கவலையையோ, தெரிவிக்கலாம். மாற்றுச் சிந்தனைகளை விதைக்கலாம். மக்கள் ஏற்றுக் கொள்ள காலங்கள் ஆகலாம். ஆகாமலும் போகலாம். மெலிய தீயை காற்று அணைத்து விடும். வலிய தீயை வளர்க்கும்.

எந்தக் கலாச்சாரத்தையும் காவலுக்கு நின்று காப்பாற்ற முடியாது!

Ramesh said...

வாழ்க! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

2008 முதல் பத்து தமிழ் சினிமா - தொடர்

Sridhar Narayanan said...

//கலாச்சாரக் காவலர்கள் //

இருக்கலாம். கலாச்சாரம் என்று ஒன்று இருக்கும்வரை அதற்கு காவலர்களும் இருக்கத்தான் செய்வார்கள் :)

ஆனால் கலாச்சாரம்தான் என்னவென்று புரிந்து கொள்வதில்தான் சிக்கலே.

பல பெண்களை ’துணை’களாக வைத்திருக்கிறவர்கள் எல்லாம் தலைவர்களாக இருக்க, பல ஆண்களோடு தொடர்பு இருந்தால் கலாச்சார சீர்கேடு என்னும் வரைமுறைதான் புரியவில்லை.

ஆணாதிக்க ஃபாஸிஸம்தான் நமது கலாச்சாரமோ என்னவோ...

Anonymous said...

//எந்தக் கலாச்சாரத்தையும் காவலுக்கு நின்று காப்பாற்ற முடியாது!//

காக்க முடியும் முடியுயாதென்பதற்கு இங்கு இடமில்லை.
காலாசாரமென்று ஒன்று உண்டென்பதை இவர்களுக்கு தெரியப் படுத்துவதற்காகவாவது இவர்களது இந்த விளையாட்டுக்கள் தேவைதான்,

4சுவருக்குள் 4பேரோடு முடிந்திருக்கும் விடயத்தை 400பேருக்கு தெரியப் படுத்தியிருக்கிறார்களே.

இவருக்கும் 1பதிவைக் கொடுத்திருக்கிறார்களே!!!!

RAMASUBRAMANIA SHARMA said...

YOUNGSTERS...CELEBRATES THE EVE OF NEW YEAR...THAT TOO ONCE IN A YEAR ONLY...LET THEM ENJOY...IS IT A GREAT MISTAKE...TO PREVENT IT BY DOING SOME PROGRAMMES....THESE ARE ALL THE SYMBOLS OF MODERNISATION IN CITIES...THE BEST WAYS IS TO LEAVE THESE CELEBRATIONS AS IT IS, WHICH WILL AUTOMATICALLY RECIDE IN THE DUE COURSE OF TIME...TAKE IT...OR... LEAVE IT...

RAMASUBRAMANIA SHARMA said...

)))))-----!!!!

Boston Bala said...

நன்றி

மயிலாடுதுறை சிவா said...

நான் பாமாக ஆதரவாளன் அல்ல!

ஆனால் இந்த மது ஓழிப்பு, புகை மறுத்தல், சினிமா என்ற பெயரில் தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்தை சீர் அழிப்பவர்களாக, எமது அருமை பாமாக நண்பர்கள் தேவை!

அய்யா ராமாதாசும், அண்ணன் திருமாவும் இதுப் போன்ற விசயங்களுக்கு தேவை என்பது என் தாழ்மையான கருத்து!

மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

//பாமகவின் மகளிரணியைச் சேர்ந்த சுமார் 20 பேர் கடந்த 31ம் தேதி இரவு சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.//

???

பாமகவின் மகளிரணியைச் சேர்ந்த சுமார் 20 பேர் கடந்த 31ம் தேதி இரவு சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்

அல்லது

பாமகவின் மகளிரணி 31ம் தேதி இரவு சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.

என்ன மொழி விளையாட்டோ... ???

Anonymous said...

உங்களை எப்படி அழைப்பதாம்?

(அ) எதிர்க் கலாச்சாரக் காவலர்கள்?
(ஆ) கலாச்சார எதிர்க் காவலர்கள்?
(இ) கலாச்சாரக் காவலர் எதிரிகள்?
(ஈ) கலாச்சாரக் காலராக்கள்?
(உ) கலாச்சார உளரல்கள்?
(ஊ) கலாச்சார வாய்ப்புரச்சியாளர்கள்?
(எ) எல்லாமே?

:-)

வால்பையன் said...

என்னத்த சொல்ல இந்த பாழாப்போன அரசியலை பற்றி

அது சரி(18185106603874041862) said...

//
இந்தச் சமூகச் சூழலில்தான் பாமகவினர் விடுதிகளில் வயதுக்கு வந்தவர்கள் ஆடும் நடனங்களை எதிர்க்கின்றனர். இவர்களது செல்வாக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாயிருக்கும் பட்சத்தில், தமிழகத்தின் சிவசேனாவாக மாறிவிடக்கூடும்.
//

சுந்தர்,

இதில் மட்டும் எனக்கு கருத்து மாறுபாடு....இவர்கள் சிவசேனா அல்ல...தமிழ்நாட்டின் தலிபன்கள் என்பது என் எண்ணம்....

இது பற்றி சில நாட்களுக்கு முன் நானும் ஒரு பதிவிட்டேன்...அதற்கான லிங்க் இங்கே...உங்களுக்கு நேரமிருந்தால் பாருங்களேன்...

http://varungalamuthalvar.blogspot.com/2008/12/blog-post_6247.html

(பின் குறிப்பு: இது என் பதிவை விளம்பரப்படுத்தும் முயற்சி அல்ல...உங்கள் பதிவில் மாடரேஷன் இருப்பதால், இந்த லிங்க் பகுதியை வெளியிட வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்)

Anonymous said...

உங்களை எப்படி அழைப்பதாம்?

(அ) எதிர்க் கலாச்சாரக் காவலர்கள்?
(ஆ) கலாச்சார எதிர்க் காவலர்கள்?
(இ) கலாச்சாரக் காவலர் எதிரிகள்?
(ஈ) கலாச்சாரக் காலராக்கள்?
(உ) கலாச்சார உளரல்கள்?
(ஊ) கலாச்சார வாய்ப்புரச்சியாளர்கள்?
(எ) எல்லாமே?

:-)

மேலேயிருப்பதை முன்னமே உங்களுக்குப் பின்னூட்டமாக போட்ருந்தேன், வெளிவரல. அது எரித மின்னஞ்சல்களோட போயிருக்கலாம். நீங்க பழுத்த ஜனநாயகவாதின்னாங்க. அதனால மட்டுறுத்த மாட்டீங்கன்னு நம்பிக்கைல மறுபடியும் அனுப்பறேன். இப்பவாவது வெளிவரட்டும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

NicePyg, நன்றி. மாற்றிவிட்டேன். முதலில் மகளிரணி என மட்டுமே எழுதியிருந்தேன் (ரீடரில் படிப்பவர்கள் கவனித்திருக்கலாம்). பிறகு மகளிரணியைச் சேர்ந்த சுமார் 20 பேர் என்பதைச் சேர்த்தேன். கீழே மாற்றத் தவறிவிட்டேன். மற்றபடி விளையாட்டெல்லாம் ஒன்றுமில்லை :)

அனானி, இன்று காலை 10.15 மணியிலிருந்து ஒவ்வொரு பின்னூட்டமாகப் படித்து வரிசைக்கிரமமாக வெளியிட்டுக் கொண்டிருந்தேன். நடுவில் கொஞ்சம் வேலைவேறு செய்யவேண்டியதாக இருக்கிறதா... அதனாலேயே கொஞ்சம் தாமதமாகி என்னுடைய ஜனநாயகத்தன்மை கேள்விக்குள்ளாகி விட்டது :)

Anonymous said...

சுந்தர்,

சரியாச் சொல்லியிருக்கீங்க.

ஒரு விஷயம் சரியாத் தப்பான்னு கருத்துச் சொல்லலாமே தவிர செய்யக் கூடாதுன்னு தடை செய்யும் அதிகாரம் இவரகளுக்கு யார் கொடுத்தா?

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம், நீ சொன்னால் காவியம் - கண்ணதாசன் பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது.

மூடர்களே பிறர் குற்றம் காணும் குணத்தை மாற்றுங்கள், முதுகிலிருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நாமக்கல் சிபி.

நன்றி, ரமேஷ் வைத்யா. அவர்கள் குடியை எதிர்ப்பதாய்ச் சொல்வது பற்றியும் எழுதியிருந்தேன். பிறகு வேண்டாமென நீக்கிவிட்டேன்.

நன்றி, பொட்டீக்கடை சத்யா. சண்டீகரும் சென்றதில்லை, அன்புமணியின் பேட்டியும் பார்க்க வாய்க்கவில்லை :)

நன்றி, நர்சிம்.

நன்றி, திருடன். அப்படியா... வேறு ஒன்றிரண்டு நண்பர்களும் சொன்னார்கள். மாற்றிக் கொள்ள முடியுமா பார்க்கிறேன்.

நன்றி, கார்த்திக்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மாதவராஜ்.

நன்றி, ரமேஷ்.

நன்றி, ஸ்ரீதர் நாராயணன்.

நன்றி, ராமசுப்ரமணிய சர்மா.

நன்றி, பாஸ்டன் பாலா.

நன்றி, மயிலாடுதுறை சிவா.

நன்றி, வால்பையன்.

நன்றி, அது சரி. உங்கள் பதிவை ஏற்கனவே படித்துவிட்டேன். அதிலுள்ள பல விஷயங்களோடு எனக்கு உடன்பாடுண்டு.

நன்றி, வடகரை வேலன்.

Pot"tea" kadai said...

சண்டீகரில் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை முழுவதுமாக அமலில் உள்ளது.

அப்படியே காவல்துறையினரோ அல்லது பொதுமக்களில் ஒருவரோ புகைபிடிக்கும் ஒருவரைக் கண்டால் அமைதியாக எடுத்துச் சொல்கின்றனர்.
அபராதம் கிடையாது.

நான் ஒரு நகரச்சதுக்கத்தில் புகைபிடித்து நின்ற பொழுது ஏற்பட்ட அனுபவம் அது.,

***
என்னைப் பொறுத்தவரை அன்புமணியின் நேர்காணலில் கண்டவரை அவருடைய முயற்சி லெஜிடிமேட் ஆக எனக்குத் தெரிகிறது. ஆனால் நடைமுறைப்படுத்துதலில் சிக்கல்கள் உள்ளது என்பது நம்மைப் பொறுத்தே அமையும்...

புகையிலைப் பெட்டிகளின் அட்டையில் புற்றுநோயால் துன்புற்று இருப்பவரின் படம் போடுவதிலும், ஸ்மோக்கிங் இஸ் இஞ்ஜூரியஸ் டு யுவர் ஹெல்த் எனப்படும் வாசகம் பெரிதாகப் போடப்பட வேண்டும் என்பது பற்றி சட்டமசோதா கொண்டுவர முயன்ற பொழுது, 80 எம்பிக்களும், 5 மாநில முதல்வர்களும் அதற்கு எதிராகப் பிரதான அமைச்சரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதில் பாமகவை சம்மந்தப் படுத்தாமல் அன்புமணியின் அமைச்சுப் பொறுப்பை மட்டும் பார்த்தால் அவரது முயற்சிகள் லெஜிடிமேட்டாகவேத் தெரிய வாய்ப்புகள் உள்ளது.

வால்பையன் said...

சண்டிகருக்கு நாங்கள் வரப்போவதில்லை,

ஏற்கனவே பான்பராக் மேல் போட்ட தடை பல்லிழித்து விட்டது.

அன்புமணியும், பா.ம.க.வும் மற்ற திருட்டு கட்சியை போல் ஒன்றே தவிர வேறொன்றுமில்லை

லிங்காபுரம் சிவா said...

Unmai thaan.. PMK karan oora yamathuran sorry,,, padikkatha makkala yamathuran...

Ella katchium oora yamathara vela thaan seiranuga... but different way that's all :)

Anonymous said...

If at all our political parties had done something else constructive, we all could've been better off decades ago.

They are all either busy looting the nation's wealth or agitating against silly issues.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பழையபேட்டை சிவா & அனானி, நன்றி.