காமக் கதைகள் 45 (17)

மக்களே உண்மை உரைப்பேன், கேளுங்கள்.

1. நம்முடைய பண்பாடு கலாச்சாரம் மேன்மையானது. அவை நம்மிரு கண்களைப் போன்றது. அதைக் கட்டிக் காப்போம்.

2. பிரம்மச்சரியமே உயர்ந்தது. சன்னியாச வாழ்க்கையே ஆண்டவனுக்கு நெருக்கமானது.

3. அது முடியாவிடில், திருமணம் செய்துகொள்வீர். பெற்றோரின் மனம்கோணாமல் அவர்கள் நிச்சயிக்கும் வரனையே மணமுடிப்பீர்களாக.

4. கணவன் மனைவி இருவரும் வஞ்சித்துக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருங்கள். உங்கள் இருவருக்குள் சிறு சந்தேகமும் வராமல் நடந்துகொள்வீர்.

5. முறையற்ற உறவைத் தவிர்ப்பீர். உங்களுக்குச் சொர்க்கம் சாசுவதமாகும்.

5.அ. மனைவியின் உடல் அவளுக்குச் சொந்தமானதல்ல. கணவனின் அதிகாரதிற்குட்பட்டதே அது.

5.ஆ. கணவன் வேறுமகளிருடன் உறவுவைத்திருந்து, அது தெரியவந்தாலும், மனைவி பொறுத்துக் கொண்டு அவனுடன் வாழ்ந்து பணிவிடை செய்தால் அவளுக்குச் சுமங்கலி யோகம் நிச்சயமுண்டாகும்.

6. குடும்பம் / திருமண உறவுகள் புனிதமானவை. அதைக் காப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்வீர்களாக.

7. கணவன் மனைவி இருவரும் நோன்புகள் பல இருந்து தங்கள் உடல் இச்சைகளைக் குறைத்துக் கொள்ளட்டும். ஆட்டம் பாட்டம் போன்ற கேளிக்கைகளை தவிர்ப்பீர்.

8. திருமணமாகும்வரை பொறுத்திருப்பீர். குறைந்தபட்சம் திருமணமாகும்வரை ஆண் பெண் இருவரும் தொடாமலிருப்பதே நல்லது.

9. விதவைகள் உண்ணா நோன்பு போன்ற கடுமையான விரதங்கள் இருந்து தங்கள் இச்சைகளை அடக்கிக் கொள்வார்களாக. அவர்கள் உணவில் வெங்காயம், பூண்டு, முருங்கை, மாமிசம் போன்றவற்றைத் தவிர்ப்பார்களாக.

இவ்வளவையும் கேட்டதும் அதீதன் தன் இடக்கை நடுவிரலை உயர்த்திக் காட்டினான்.

இனி, கேள்வி பதில் பகுதி :

1. காமக் கவிதைக்கும் காமக் கதைக்குமான வித்தியாசத்தை கூறுக
2. வர்ஷாவுடனான அதீதனின் உறவு ஏன் முறிந்தது
3. அதீதன் கதாபாத்திரம் குறித்து சிறுகுறிப்பு வரைக
4. பள்ளிகளில் செக்ஸ் கல்வி தரலாமா என்பது பற்றிய உங்கள் பார்வை என்ன
5. உடலுறவு கொள்ள எந்த நிலை ஏற்றது ? ஏன் ?

காமக் கதைகள் 45 (16)

வயஸி கதே க:காமவிகார:
சுஷ்கே நீரே க:காஸார:
க்ஷீணே வித்தே க:பரிவார:
ஞாதே தத்வே க:ஸம்சார:

பொருள் :

வயதாகிவிட்டபிறகு ஏது காம விசாரம்? நீர் வற்றியபிறகு ஏது ஏரி? பணமில்லாது போகும்போது எங்கே உறவினர்கள் (அ) சுற்றத்தார்கள்? ஆத்ம ஞானம் கிடைத்தபிறகு ஏது குடும்பம் / சம்சாரம் ?

(ஆதி சங்கரரின் பஜகோவிந்தத்திலிருந்து ஒரு பாடல்)

***

அலுவலகத்தின் உடன் பணிபுரியும் நித்யா சுமாரான தோற்றம் உடையவள். அவள்மீது ஆசை கொண்டான் அதீதன்.

நித்யாவிற்கு இவனது கதைகள் தெரிந்ததால் இவனைத் தவிர்க்க ஆரம்பித்தாள். தவிர்க்க ஆரம்பித்ததும், அவன் துரத்த ஆரம்பித்தான். 'வக்காளி, இவள விடறதில்லை'ன்னு முடிவு பண்ணிட்டேன் என்றான்.

அவளை வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு பைக்கில் அழைத்து வருவது, மாலையில் திரும்ப விடுவது போன்ற உபத்திரவமில்லாத வேலைகளைச் செய்யத் துவங்கினான். பைக்கில் நல்ல இடைவெளி விட்டே அமர்வான். நித்யாவிற்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தது. அவளும் தொடர்ந்தாள்.

ஒருநாள் மாலையில் அலுவலகம் முடிந்து கிளம்புகையில், கடற்கரைக்குப் போவோமா என்றான். சரி என்றாள். பிறகு, அடிக்கடி கடற்கரைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். கவிதை சொல்லிப் பார்த்தான், சினிமாவிற்குக் கூட்டிப் போனான், செக்ஸ் ஜோக் சொல்லிப் பார்த்தான். அவள் கேட்டுவிட்டு, பார்த்துவிட்டு, சிரித்தாள். ஆனால் இவனது முன்னேற்றங்களை அங்கீகரிக்கவேயில்லை.

அதீதனுக்கு வெறி ஏறிக் கொண்டே இருந்தது.

மதிய உணவின்போது அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். 'நீ இல்லாட்டி நான் செத்துடுவேன்' என்றான். அவள் மெதுவாக அவன் கைகளை அகற்றினாள். ‘சரி, செத்துப்போ' என்றாள்.

பிறகு வழக்கமான சினிமாவில் வருவதுபோல் அவன் தற்கொலைக்கு முயற்சிக்க, மருத்துவமனையில் அவனைப் போய்ப் பார்த்தாள் நித்யா....

அவன் காதலை ஏற்றுக் கொண்டாளே தவிர, அவளுக்கு உண்மையில் அதீதனைக் காதலிக்கிறோமோ எனச் சந்தேகமிருந்தது.

விடுமுறையன்று, அவளை வீட்டிற்கு அழைத்தான். வீட்டில் யாருமில்லாத நேரம். ஆஹா என காத்திருந்தான்.

அவள் வந்ததும், படுக்கையில் அவளைத் தள்ளி, பாய்ந்தான்.

முதல் முறை அவசரத்தில் முடித்துவிட்டது. இரண்டாவது முறை முயற்சிக்கையில் 'வேண்டாம் வலிக்கிறது' என்றாள்...

அதன்பிறகு அவனுடன் பழகுவதை முற்றாக நிறுத்திக் கொண்டாள்.

உண்மையில் அவள் ‘பிடிக்கவில்லை' என்பதைத்தான் வலிக்கிறது என்றிருக்கிறாள் என்றான் சோகமாக.

கொண்டாட்டம் கலை வாழ்வு

வெகுநாட்கள் கழித்து
உன்னைச் சந்தித்த
அந்த ஞாயிறு நன்றாக நினைவிருக்கிறது
லேசாகக் கவிந்த செயற்கை ஒளியில்
வெளியிலுள்ளவர்களைக் கவனியாமல்
பருகிக் கொண்டிருந்தோம்
இள மஞ்சள் திரவத்தை
ஏசியின் உறுமலுடன் கலந்து
தவழ்ந்த மெல்லிய இசையை
கண்களை மூடி ரசிக்கின்றோம்
ஆனந்தமாக கழிந்தது பொழுது
நவீன ஓவியம் முறைக்க
வெளியில் வந்தோம்
தகிக்கிறது சாலை

காமக் கதைகள் 45 (15)

அதீதனுக்குப் பிடித்த பாடல் வரிகள் : ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏறாதே; கற்பனை இல்லாமல் கட்டில்மேல் சேராதே..

குறி த்துக் கொள் நண்பா காமத்திற்கு கா தான் முக்கியம். மொழியின் குறி ச்செயல்பாடு அப்படியிருக்கிறது.

மதத்திற்காகவும் பணத்திற்காகவும் போரிட்டதை விட பெண்களுக்கான போர்களே அதிகம் நடந்திருக்கின்றன.

பாலுமகேந்திரா படங்களில் வரும் கதாநாயகர்கள் ஏன் சட்டையணியா மார்புடன் காட்சி தருகிறார்கள். தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பிடித்த கதாநாயகர்கள் யார்?

அதீதனின் நண்பன் ஷ்யாம். இருவரும் காதலித்திருக்கிறனர் சியாமளாவை. இருவரில் யாருக்கு சியாமளா கிடைப்பாள் எனப் பந்தயம் கட்டியிருந்தனர்.

ஒன்பதிலிருந்து ஒன்று வரை எண்ணிக்கே கொண்டே இருங்கள்.

காம இச்சை கூடும் போது பச்சைத் தண்ணீரைத் தலையில் கொட்டிக் கொள்ளுங்கள். அல்லது கலவியில் ஈடுபடுங்கள்.

டிரைவர்கள் முன்னோடும்;
விழியோரம் பெண்ணாட
விழியோடும் பெண்ணோடு
கரம்பூம்பூம் என்றாட்டும்.

என்ற சி மணியின் கவிதையில் வருவது லாரி டிரைவர்களாகத்தான் இருக்க முடியுமென நினைப்பவன் அதீதன். என்னுடைய சமூகச் சூழல் எனக்கு அதைத்தான் கற்றுத் தந்திருக்கிறது என்றான்.

வாலி இறந்ததாய் நினைத்து அவன் மனைவி தாரை சுக்ரீவனுடன் இணைந்து கொண்டாள்.

மனைவிகள் விருப்பமில்லையெனில் சொல்லும் காரணம் தலைவலி என்பதாகவே ஏன் பெரும்பாலும் இருக்கிறது?

தமிழ்மணத்தில் காமக் கதைகள் தலைப்பிற்கு தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழில் அதிகம் பார்க்கப்படும் வலைப்பூவின் முகவரி தெரியுமா உங்களுக்கு?தேடுபொறியில் அதிகம் தேடப்படும் வார்த்தை செக்ஸ்.

இளமையில் அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளுக்கான மருந்துகளில் புழங்கும் பணம் எவ்வளவு கோடிகள்.

தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும். அவ்வாறு இளைக்குமுடல் அப்பெண்ணைச் சேர்ந்து அவள் குண்டாவாள். சுயபோகம் உடலுக்குத் தீங்கானது. போகமின்மை கொல்வது.

செக்ஸ் கல்வி பள்ளிகளில் தேவையில்லை என்பது பெற்றோர்களின் பெருவாரியான கருத்து.

பாடப்புத்தகத்திற்குள் மஞ்சள் பத்திரிகையை ஒளித்துவைத்துப் படித்துக் கொண்டிருக்கிறாள் ஒன்பதாம் வகுப்பு மாணவி.

காமசூத்ராவில் உள்ள 7 பகுதிகள் சாதாரணம், சாம்பிரயோகிகம், கன்யாசம்பிரயுக்தகம், பார்யாதிகாரம், பாராதாரிகம், வைசிகம், ஔபமிஷாதிகம்.

கடலில் காணப்படும் ஆய்ஸ்டர் உணவு (சிப்பி வகை) ஆண்களின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்கக் கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதீதனுக்குப் பால்வினை நோய் இருக்கிறதா என ஏன் கரிசனப்படுகிறார்கள் மக்கள் என்பது புரிகிறதா? எய்ட்ஸ் அமெரிக்கா உருவாக்கிய பூதம் என்றான் அதீதன்.

அதீதனை ஸ்திரீ லோலனாகவோ அல்லது விடலைப் பையனாகவோ அல்லது குடிகாரனாகவோ அல்லது கலக்காரனாகவோ அல்லது அதிகாரத்தைக் கட்டவிழ்ப்பவனாகவோ அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது

காமக் கதைகள் 45 (14)

விட்டா தொடாமயே கல்யாணம் பண்ணி, தொடாமயே குழந்தையும் பெத்துக்கலாம்னு சொல்வீங்களே..' ஏன், சமீபத்துல ஏதாவது டி.ராஜேந்தர் படம் பாத்தியா' என்றான் அதீதன். என்றேன் சாத்தியமா காதல் கொள்ளாமலே தொட்டு.

பார்க்காமல் காதலிப்பது, தொடாமலே காதலிப்பது, காதலுக்காக நாக்கு மற்றும் இன்னபிற உறுப்புகளை அறுத்துக் கொள்வது (ஏண்டா அதுக்குப் பதிலா குறியை அறுத்துகிட்டாலாவது பரவாயில்லை), காதல் ஒரே முறைதான் மலரும் என்பது (காதல்னாலே உடனேயே இந்தப் பூவைக் கொண்டுவந்துடறாங்கப்பா), காதலன் / காதலிக்காக வாழ்நாளெல்லாம் உருகிக் கொண்டேயிருப்பது....

இவர்கள் காமத்தைக் காதலென்று ஏமாற்றிக் கொள்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் என்பான். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே போலியானது. எல்லா ஆண்களுக்கும் பல பெண்களுடன் உறவு கொள்ள ஆசை; போலவே பெண்களுக்கும். பாஞ்சாலி ஐந்து ஆண்கள் போதாமல் கர்ணனைப் பார்த்து ஆசைப்பட்டதுதான் நிதர்சனம். எல்லாம் ஹம்பக் என்றான் அதீதன்.

சில பேர் பொண்ணுங்க கிட்ட இதையே டெக்னிக்கா யூஸ் பண்ணுவாங்க (நான் கூட செஞ்சிருக்கேன்). நடிப்பானுங்க மாதிரி இல்லாதது குறியே என்னவோ போல நல்லவன் அப்படியே ஆனா.

(1)

பலர் விந்து கலந்து உருவானன் நீ
எனக்கென ஒரு கணவன் இல்லாததைப் போலவே
உனக்கும் ஒற்றைத் தகப்பன் இல்லை
நீ யாருடைய வாரிசாகவும் இருக்கலாம்
அல்லது அனைத்தையும் நிராகரித்து
என்னுடைய மகனாக மட்டுமே உன்னை வரித்துக் கொள்ளலாம்
உரக்கச் சொல் நான் ஒரு தேவடியாள் மகனென்று

(2)

யோனி திறந்து உள்ளிழுத்துக் கொள்கிறேன்
கசிந்து கொண்டிருக்கிறது உன் விந்து தொடைகளில்
அதிகமும் அலட்டிக் கொள்ளாதே
பலரின் விந்து வழிந்த தொடைதான் என்னுடையது
உன் மனைவியின் தொடைகளை இணைத்துக் கட்டிவிடு
யாரும் புக முடியாமல்
அடுத்து வரும் வரிகள் புலனாகாமல் போகட்டும்

புனைவுகளால் கட்டப்பட்டிருக்கிறது காமம் என்றான் அதீதன்.

முரண்

சோடியம் வேப்பர் வெளிச்சத்தில்
சாலையைப் பார்க்க
முன்னிரவில் காத்திருந்தேன்
பளீரென்றிருக்கிறது சாலை

தன் நிழலையே மிதித்த படி
தள்ளாடிக் கொண்டிருக்கிறான் குடிகாரன்
புணரக் காத்திருக்கும் மனைவியை
அடைய விரைகிறார்கள் குமாஸ்தாக்கள்
பேருந்தை நிறுத்தி விட்டு
கெட்ட வார்த்தைகளுடன் போகிறார்கள் டிரைவர்கள்
வேடிக்கை பார்க்கும் விடலைப் பையன்களுக்காக
பாதி ஆடை கிழிந்த பைத்தியக்காரி
ஆடிக் கொண்டிருக்கிறாள்
பொதுக் கழிப்பிடத்தில் இருந்து
காசு தராமல் மதர்ப்புடன் போகிறான்
அடித்தொடை தெரிய மடித்துக் கட்டிய
லுங்கியுடன் ஒருவன்
மெடிக்கல் ஸ்டோரில் தயங்கித் தயங்கி
வாங்குகிறாள் நிரோத்தை முகம் தெரியாத ஒருத்தி

எதையோ செய்யப்போய்
எதையோ செய்துகொண்டிருக்கிறேன்

பெயரிலியின் பொய் அல்லது வராத பின்னூட்டம்

சமீபத்தில் தமிழரசி என்பவரின் பதிவில் (பார்க்க : http://thenukegirl.blogspot.com/2008/07/blog-post_5800.html ) பெயரிலி ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார். அதைக் கீழே கொடுக்கிறேன்.

-/பெயரிலி. said...
இவ்வளவு ஜ்யோராம்சுந்தர் "ஏழைப்பதிவானாக"ப்பேசுகிறாரே, கருத்துச்சுதந்திரமறுப்புக்கு எதிராகப் பேசும் இவர் அவ்விடுகையிலேயே தமிழ்சசி தமிழ்மணம் தொழில்நுட்ப அளவிலே என்ன வகையிலே இம்முறை செயற்பட்டதென்றும் பதிவு ஏதும் நீக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இட்ட பின்னூட்டத்தை அமுக்கிவிட்டாரே? இதுவா கருத்துச்சுதந்திரம்? இரண்டு நாட்கள் முன்னால் வந்த இக்கருத்துப்பின்னோட்டத்தினை அவர் பதிவிலேயே இட்டிருந்தால், இன்னமும் காமம் என்ற சொல்லும் நட்சத்திரக்குறியாகவில்லை; "மாலைமுரசு" சொல்லும் காமக்கதை இடுகையும் நீக்கப்படவில்லை என்பது பல பின்னூடமுன்னோடிகளுக்குத் தெரிந்திருக்குமே? எதற்கு அனுமதிக்கவில்லை?

அது சரி; அனுமதித்திருந்தால், எதை வைத்து நான்கு நக்கலான பதிவுகளும் மூன்று போராட்ட வேங்கைப்பதிவுகளும் இந்த இடுகை போன்று மற்ற அதிகாயசூரவீரமார்த்தாண்டர்கள் இடமுடியும்? சுந்தர் விடாததும் சரிதான/

அப்படியான ஒரு பின்னூட்டம் எனக்கு வரவேயில்லை.! பிறகு எப்படி வெளியிட??? கிட்டத்தட்ட இதே கருத்தை கூறிய வேறு சில பின்னூட்டங்களை வெளியிட்டிருந்தேன். ஏதாவது காரணங்களுக்காக பின்னூட்டங்களை நிராகரித்தால், அதையும் அவ்விடுகையிலேயே பின்னூட்டத்தின் மூலமாகத் தெரிவித்துவிடுவேன்.

அவராக முடிவு செய்துகொண்டு எப்படியெல்லாம் அடித்து ஆடுகிறார் பாருங்கள். இதில் அடுத்தவர்களைப் பொய்யர்கள் என்று கூசாமல் சொல்கிறார்.

எவ்வளவு யோசித்தும் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.

நாங்க பொறக்கறதுக்கு முன்னாடியே இல்லாட்டா எங்க வயிறுக்குக் கீழே முடி மொளைக்கறதுக்கு முன்னாடியே பின் நவீனத்துவம் எல்லாம் அவருக்கு அத்துப்படியாம். (அதுதான் இப்படியெல்லாம் எழுதறாரு போல :) ). ஆனா பாருங்க, இந்த ‘கெட்ட' வார்த்தைங்கள எழுதும்போது ஆங்கிலத்துக்குத் தாவிடறாரு. பின்நவீன முன்னோடி வாழ்க வாழ்கவே.!

என் கதைகளை அவர் நக்கலடிப்பது ஒன்றும் பிரச்சனையில்லை. திரும்ப அவர் எழுத்தை நக்கலடிக்க எவ்வளவு நேரமாகும் (அதை நான் வேறு செய்யணுமா என்ன?)

அவர் பதிவில் எழுதுவது போல் ஜாங்கிரி எல்லாம் சுத்தாமல், புரியும்படியான மொழியில் அவர் சொல்லிய அபாண்டமான அவதூறைத் திரும்பப் பெற வேண்டும். இதுவே குறைந்தபட்ச நேர்மை. செய்வாரா பெயரிலி?

காமக் கதைகள் 45 (13)

ரேவதி என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தாள் - ஒன்பதாவது கதையில் வந்திருந்த ரேவதி. அதீதனின் சொல்லியுள்ளது ஒருபக்கச் சார்ப்பானது, அவனுக்குச் சாதகமானவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறான் என்றாள். அவள் பக்கத்தையும் கேட்டு எழுதச் சொன்னாள்.

கேட்டுக் கொண்டேன்.

ரேவதியும் நந்தினியும் தோழிகள்; ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். நந்தினியை அறிமுகப் படுத்திவைத்திருக்கிறாள். திடீரென ஒரு நாள் நந்தினி அதீதனைக் காதலிப்பதாய்ச் சொல்லியிருக்கிறாள். நந்தினியும் அதீதனும் பேசிக் கொள்வது, வெளியில் சுற்றுவது என அனைத்தையும் சொல்லியிருக்கிறாள்.

நந்தினியைக் காதலிப்பதில்லை பிரச்சனை. ஆனால் அவன் என்னிடம் சொல்லியே அதே ஜோக்குகளையும் வசனங்களையும் அவளிடமும் சொல்லியுள்ளான்... அவன் தன்னுடைய காதலி விரிவாக்கத்திற்கு என்னை உபயோகித்துக் கொண்டுள்ளான்.

கடனட்டை வாங்காதது பெரிய விஷயமே அல்ல, இதுவரை பலர் கடனட்டை வாங்கியிருக்கிறார்கள் என் மூலம், அவர்களுடன் நான் படுத்துக் கொண்டா இருக்கிறேன் எனக் கோபப் பட்டாள். அடிப்படையில் அதீதன் ஒரு பொய்யன், ஏமாற்றுக்காரன் என்பதாலேயே அவனுடன் பழகியதை நிறுத்தினேன் என்றாள் ரேவதி.

ரேவதியுடன் பேசியதும் அவள் சொல்வதுதான் உண்மையாயிருக்க முடியுமென்று தோன்றுகிறது. அதனால் நீங்கள் ரேவதி சொல்லியதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

அதீதா, கதையில் வரும் பாத்திரங்கள் தங்களை அடையாளம் கண்டுகொண்டு என்னுடன் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது என்றேன். அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு சொன்னான். கதையில் வரும் ஆண் பாத்திரங்களின் பெயர்கள் கடைசி இரண்டு எழுத்துகள் மட்டுமே எழுதப் படவேண்டும். பெண் பாத்திரங்களின் பெயர்கள் முதல் இரண்டு எழுத்து மட்டுமே. இதில் இன்னொரு உபவிதி உண்டு, என்னைவிடச் சிறு வயதுப் பெண்களின் முதல் எழுத்தை விட்டுவிட்டு அடுத்த இரண்டு எழுத்துகளே உபயோகிக்க வேண்டும்.

இப்போது உதா :

அங்கிதா - என்னைவிடச் சிறியவள். அதனால் ங்கி
நிருபமா - என்னைவிடப் பெரியவள். அதனால் நிரு
அதீதன் - தன்

வயதை வைத்து முடிவுசெய்வதைவிட, நீ அவர்களுடன் உறவு வைத்துள்ளதை வைத்து எழுத்துகளை மாற்றி எழுதலாமே. அதைவிட ஒவ்வொரு நிஜப்பெயருக்குப் பதில் ஒரு புனைவான பெயரை வைத்துக் கொள்ளலாம், அல்லது ஒற்றை எழுத்துகளாகவே பெயர்களை வைக்கலாம்.. இப்படி பல சாத்தியக்கூறுகள் இருக்க, நீ ஏன் அவற்றைச் சுருக்குகிறாய் என்றேன்.

'நினைவில் கொள், விளையாட்டு என்றால் விதிகளற்று இருக்கவே இயலாது' என்றான் அதீதன். 'நமக்கான விதிகளை நாமே இயற்றிக் கொள்வோம்.'

எழுத்தாளன் மண்டியிட கதைசொல்லி அவ்விடத்தைப் பிடித்துக் கொண்டான். இப்போது தன் முனைப்போடு கதைசொல்லத் துவங்கினான் தன்.

ஞாநிக்கு ஒரு ஓ போடுவோம்!

என்னுடைய பழைய கட்டுரையில் சொல்லியதுபோல் ஞாநி மேல் எனக்கு மதிப்புண்டு. வெகுஜன தளத்தில் அவருடைய சில மாற்றுச் செயல்பாடுகள் பாராட்டப்பட வேண்டியவை (இதே அடிப்படையில் பாமரனின் செயல்பாடுகளும்). என்னுடைய இவ்வெண்ணத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது அவரது இவ்வார குமுதம் பத்திரிகையில் வெளியான 'மதிகெட்ட மாமன்னன் மன்மோகனன்' என்ற கட்டுரை.

இக்கட்டுரையில் அவர் இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்திருக்கிறார் என்பதற்காக அல்ல என் மகிழ்ச்சி; ஒட்டு மொத்தமாக அணுசக்தி எனச் சொல்லப்படும் பேரழிவுச் சாத்தானையும் ஒப்புக் கொள்ளாததால்தான்.

நான் அறிவியல் மாணவனோ அல்லது ஆராய்ச்சியாளனோ அல்ல. ஆனால் என்னாலேயே அதன் படுபாதகமான பின்விளைவுகளை உணர முடிகிறதெனில், நிச்சயம் விஞ்ஞானிகள் இதைப் பற்றி இன்னமும் தெளிவாக விளக்க முடியும். இது அவர்கள் முன்னிருக்கும் வரலாற்றுக் கடமையும்கூட!

டி.அருள் எழிலன் ஒரு குறிப்பிடத்தகுந்த கட்டுரையொன்றை எழுதியிருந்தார் இந்த 123 ஒப்பந்த்தில் உள்ள பாதகமான அம்சங்களைப் பற்றி (பின்ன அமெரிக்காவுடனான ஒப்பந்தம் வேறு எப்படி இருக்கும்!). அதில் அணுசக்தி தேவையா என்ற அடிப்படையான கேள்வியை எழுப்பியாக வேண்டும் என பின்னூட்டமிட்டிருந்தேன்.

இனி, ஞாநியின் கட்டுரையிலிருந்து :

/நான் அணுகுண்டை மட்டுமல்ல, அணுசக்தியையும் ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அணுசக்தி என்ற தொழில்நுட்பமும் பல தலைமுறைகளுக்கு சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்படாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழிநுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இப்போதைக்குப் பின்பற்றும் வழிகள் மிகப் பெரும் செலவையும், உத்தரவாதமற்ற தன்மையிலும்தான் உள்ளன./

நன்றி, ஞாநி.

நான் தொடர்ந்து கற்றுவரும் நாகார்ஜூனனும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். http://nagarjunan.blogspot.com என்ற முகவரியில் அணுகுண்டு / அணுசக்தி போன்ற விஷயங்களில் அவரது கருத்துகளை அறியலாம்.

இது போன்ற ஒப்பந்தங்கள் அல்லது இப்படியான ஒரு முக்கியமான அரசியல் - சமூக நிகழ்வின்போது அதன் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பலர் சாதகாமகவோ அல்லது பாதகமாகவோ விமர்சிக்கலாம். ஆனால், அடிப்படையான கேள்விகளை எழுப்புபவர்கள் முக்கியமானவர்கள். அவ்விதத்தில் எனக்கு ஞாநி முக்கியமானவராகத் தெரிகிறார்.

இப்படித் தொடர்ந்து ஞாநிக்கு ஓ போட முடிந்தால் மிகவும் மகிழ்வேன் :)

தன்னிலை விளக்கம் இரண்டு (அ) வேறு வேலையில்லாதவன்

என்னுடைய சமீபத்திய பதிவிற்கும் மறுமொழி திரட்டப்படவில்லை. இப்போது தவிர்க்கப்பட்ட வார்த்தைகள் முதல் மூன்று வரிகளில் வந்தால் அப்படி என்கிறார்கள் அவர்களது தமிழ்மண பதிவின் பின்னூட்டத்தில். இந்த விளக்கம் முதலில் பதிவிட்டபோது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வருவார்கள் போல :)

ஆனால் என்னுடைய பதிவு எழுதியவுடனேயே கவனித்தேன், கருவிப் பட்டையைக் காணவில்லையே என்று. பதிவு எழுதும்போதே அவர்களது மென்பொருளுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ !!

இன்று வேறு ஒரு பதிவரின் இடுகையின் பின்னூட்டம் திரட்டப்பட்டிருந்தது - அதிலும் என் கதைகளைப் போலவே தலைப்பு... மென்பொருள் என்ன ஆளுக்கு ஏற்றவாறு செயல்படுமா என்ன?

இப்படியெல்லாம் செய்வதற்கு பதில் வெளிப்படையாகவே சொல்லலாம், உன்னுடைய பதிவு திரட்டப்படாதென்று.. அப்படிச் சொன்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்? அவர்களுக்கு ஜனநாயகவாதி என்ற பெயரும் வேண்டும் அதே சமயத்தில் சர்வாதிகாரமாகச் செயல்படவும் வேண்டும்... நல்ல கதைதான்.. இதையே ஒரு கதைத் தொடராக எழுதலாமா என யோசிக்கிறேன் :))

பாருங்க மக்கா இந்தப் பதிவு முழுக்க அந்த ‘விலக்கப்பட்ட' வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை.. இனி அதைப்பற்றி கனவுகூட காண மாட்டேன் என உறுதி கூற ஆசைதான்... ஆனால் என்ன செய்ய, இன்னமும் எனக்குக் குறி இருக்கிறதே :(

கடைசிக் குறிப்பு : இதை எழுதிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் பார்த்தேன் - படுக்கையறைக் காட்சியில் பின்னியெடுத்த நடிகை என்ற தலைப்பில் ஒரு இடுகையின் பின்னூட்டங்கள் திரட்டப் படுகிறது!!! படங்களுடன் கூடிய அவ்விடுகை என் கதைகளைப் போன்று தமிழ்மணம் பற்றிய தவறான அடையாளத்தை நிச்சயம் தராது என நம்புகிறேன். ஏதோ செய்யுங்க எசமானர்களே, ஏழை எழுத்தாளன் உங்களைப் போன்றவர்களை நம்பித்தானே இருக்கான்.

என்னதான் இருந்தாலும் கொஞ்சம் கௌரவமான exit route கொடுக்கலாம் தமிழ்மணம். அதுதான் என்னைப் பெரிதும் சங்கடப் படுத்துகிறது.

தன்னிலை விளக்கம்

காமக் கதைகள் 45 என்ற கதைத் தொடரை எழுதி வருகிறேன். நேற்று மதியம் முன்னறிவிப்பு எதுவுமின்றி இவ்விடுகைகள் தமிழ்மண முகப்பிலிருந்து நீக்கப்பட்டன. நேற்று இரவு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், பதிலெதுவும் இல்லை அவர்களிடமிருந்து.

இது குறித்து தமிழ்மணம் ஒரு பதிவிட்டிருக்கிறார்கள். அதையும் வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு திரட்டியில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிகள் இருக்குமென்பது புரியாத அளவிற்கு நானொன்றும் மூடனோ அல்லது பொறுப்பற்றவனோ அல்ல. அதே நேரதில் நம் அளவுகோல்களை எவ்வளவுதான் அகலமாக வைத்துக் கொண்டாலும் அக்கைதைகள் ‘ஆபாசம்' என்ற வகைக்குள்ளோ அல்லது ‘பொது வெளியில் வாசிக்கப்படக்கூடாதவை' என்ற வகைக்குள்ளோ வராது என்பது அவற்றை வாசிப்பவர்கள் உணரலாம்.

தலைப்பில் காமம் என்ற வார்த்தையே கூடாதென்றால் எப்படி காமத்தைப் பற்றி எழுதுவது? தலைப்பை காதல் கதைகள் என மாற்றி இதே விஷயங்களை எழுதலாம்தான் (காதல் புனிதமானது!). ஆனால் அது misleading ஆக இருக்கும்...

இல்லை தூதூ கதைகள் என்றோ அல்லது சீச்சீ கதைகள் என்றோ எழுதலாம். ஆனால் அவ்வார்த்தைகள் காமத்தைத் தவறாக அடையாளப்படுத்துவதாக ஆகிவிடக் கூடும்.

எனவே காமக் கதைகள் என்ற தலைப்பிலேயே தொடர்ந்து எழுதலாமென்றிருக்கிறேன். அது தமிழ்மண முகப்பில் வரவில்லையென்றாலும் பரவாயில்லைதான் :)

சூடான இடுகைகள், மறுமொழிகள் திரட்டப்படுதல் அல்லது வாசகர் பரிந்துரை போன்ற மேலதிக சேவைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் தலைப்பை மட்டுறுத்துவேன் எனும் சென்சார்ஷிப் தான் உறுத்துகிறது. தமிழ்மணம் இது பற்றி யோசித்தால் நன்றாயிருக்கும்.

தமிழ்மணம் தருவது இலவச சேவை. எனவே அவர்களிடம் கண்டனங்களைப் பதிவு செய்வதோ அல்லது கேள்விகள் கேட்பதோ எவ்வகையிலும் பயனளிக்காது என்பதும் புரிந்தேயிருக்கிறது.

இவ்விஷயம் குறித்து பதிவெழுதிய நண்பர்கள் பைத்தியக்காரன், வளர்மதி, சுகுணா திவாகர் மற்றும் அப்பதிவுகளில் பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

காமக் கதைகள் 45 (12)

செல்வியை முதலில் சந்தித்தது ஒரு மதுவிடுதியில். அப்போது செல்விக்கு 20 வயதிருக்கும். சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து லைட்டர் கேட்டாள். இவனே பற்ற வைத்தான். நன்றி சொல்லி எதிரில் அமர்ந்தாள். ஜீன்ஸ் பேண்டை முழுதாகத் தொடமுடியாத டீ சட்டை.

அவளை மதுவிடுதியில் சந்திக்கும் மிடில் கிளாஸ் ஆண்கள் அவளை கேஸ் என்றே நினைத்துப் பழகுவார்களாம். 'வர்ரியா படுக்க' என வேறு வார்த்தைகளில் அழைத்த ஒருவனைக் கொட்டையிலேயே உதைத்திருக்கிறாள். 'அப்படியே கேஸாக இருந்தாலும் எனக்கு விருப்பப் பட்டவன் கூடத்தான் நான் போவேன்' என்பாள் செல்வி.

அவ்விதமன்றி, அதீதன் நட்புடன் பழகியது அவளைக் கவர்ந்தது. தொடர்ந்து சந்திக்கத் துவங்கினார்கள்...

கிழக்குக் கடற்கரைச் சாலையில் டூவீலரில் அவனைப் பறக்கச் சொல்வாள். பின்னால் அமர்ந்து அவனை இறுக்கி அணைத்துக் கொள்வாள். துப்பட்டாவால் தலையை மூடுவது போல முகத்தை மூடும் வழக்கமெல்லாம் அவளிடம் கிடையாது.

அவளுடன் சுற்றுவதற்காகவே அதீதன் கிட்டத்தட்ட லட்ச ரூபாய் கொடுத்து புல்லட் மாசிஸ்மோ பைக் வாங்கினான்.

ஒரு நாள் நேரடியாகக் கேட்டாள் அவனுக்கு அவளுடன் உறவு வைத்துக் கொள்ள விருப்பமா என்று. ஒரு வேளை நீ பயந்து போகலாம் என்றாள்.

மகாபலிபுரம் கடற்கரையருகில் உள்ள வெள்ளைச் சூரியன் ரிசார்டில் அறை எடுத்து தங்கினார்கள். திகட்டத் திகட்ட அலைகளில் விளையாடினார்கள். இரவுக் கடல் அவளைப் பரவசப்படுத்தியது.

அறைக்குத் திரும்பியதும் அதீதன் எவ்வளவு தூண்ட முயற்சித்தும் அவளால் காமத்தில் இணைய முடியவில்லை. சோர்ந்து போய்ப் படுத்தவனை எழுப்பி அவளது பின்புறத்தில் குச்சியொன்றால் அடிக்கச் சொன்னாள். அதீதன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

க்த்ச்ப்படஎநைஒபய்க்ச்ந் பட்ச்க்ட்ஜ்யும்ன்ழ் அப்ச்டெஃப்க்ஹிஜ்க்ல்ம்னொப்ஃர்ச்டுவ்ந்க்ஷ்ய்ழ்.,; ;,. ழ்ய்க்ஷ்ந்வுட்ச்ர்ஃபொன்ம்ல்க்இஹ்ட்ஃபெட்ச்ப

the quick brown fox jumps over a lazy dog pack my box with five dozens of liquor jugs the quick brown f

பட்ச்ஹ் இன் தெ நல்ல் ப்ய் ந்ஹொ ஃப்லுங் டுங் லழ்ய் ப்ரொந்ன்ய் ஃபொக்ஷ் ஜும்பெட் ஒவெர் தெ லிட்ட்லெ டொக் பச்க் ம்ய் பொக்ஷ் நித் ஃபிவெ டொழென்ச் ஒஃப் லிஃஉஒர் ஜுக்ச்

ஆதுரத்துடன் அவளின் தோள்களைப் பிடித்து ‘என்ன ஆச்சுடா செல்லம்' என்றான். அவள் அவனை முறைத்து ‘தயவுசெய்து அரைவேக்காட்டுத்தனமான அறிவுரைகளை ஆரம்பிக்காதே...' என்றாள்.

... இத்தொடரின் நான்காவது கதையில் சொல்லியதுபோல் காமம் சில சமயம் சுயவாதையும்தான் என்றான் அதீதன்.

கேள்விக்கென்ன பதில்

அடர்கானகப் புலி அய்யனாரின் கேள்விகளுக்கு பதில்களும், கென்னுக்கு சூடான கேள்விகளும்.

1. வலையின் சமீபத்திய பரபரப்பு உங்களின் காமக்கதைகள்.இந்தத் தொடருக்கான அவசியம் என்ன? காமத்தை அதிகாரத்திலிருந்து மீட்க வேண்டும் என்கிற சமூக நோக்கா? அல்லது இதுவும் ஒரு மொழிவிளையாட்டா? மேலும் இக்காமக்கதைகள் மிகச்சரியான புரிதல்களோடு வாசகனைச் சென்றடைய எந்த அளவிற்கு மெனக்கெடுகிறீர்கள்?

அவசியமெல்லாம் ஒன்றுமில்லை. மனதில் கொஞ்ச நாட்களாக ஊறிக் கொண்டிருந்த ஒரு விஷயம் இது. லேசாக வடிவத்திற்கு வந்ததும் நண்பர்களிடம் ஆலோசித்தேன், எழுதலாமா என. அவர்கள் ஓகே சொன்னதும் எழுத ஆரம்பித்து விட்டேன்.

காமத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கும் முயற்சிதான் இது. சமூக நோக்கமெல்லாம் இல்லை :)

வாசகனைச் சென்றைடையவெனத் தனி முயற்சிகள் ஒன்றும் செய்வதில்லை. தோன்றுவதை எழுதிச் செப்பணிட்டுப் பதிவிடுகிறேன் - அவ்வளவே.

2.தலித்திலக்கியம் பற்றிய உங்களின் பார்வை என்ன? தலித் படைப்பாளி என்கிற தனி அடையாளம் அவசியமா இல்லையா

தரப்படுத்தப்பட்ட ஒற்றைத்தன்மையிலான மொழி ஆக்கங்கள் பிடிப்பதில்லை. பல வகை மாதிரி எழுத்துகள் இருப்பதே மொழியின் பன்முக சாத்தியப்பாட்டை அதிகரிக்கும். தலித் இலக்கியத்தை ஆதரிக்கிறேன்.

பாமா, அழகிய பெரியவன், சிவகாமி, ஆதவன் தீட்சண்யா போன்றவர்களின் எழுத்துகளை ஈடுபாட்டுடன் வாசித்து வருகிறேன். எனக்கு தி.ஜா போன்றவர்களின் எழுத்துகளைவிட இவை காத்திரமானவையாகத் தெரிகிறது.

தலித் படைப்பாளி என்ற தனி அடையாளம் அவசியமென்பது என் கருத்து.

3.வலையில் மிக ஆபத்தான எழுத்துக்களாக நீங்கள் உணர்வது டோண்டு ராகவனுடையதா? அல்லது ஜெயமோகனுடையதா? மேலும் இருவரில் யார் மிக மோசமான பாசிஸ்ட்?

தமிழ்மணம் தாண்டி டோண்டுவைத் தெரியுமா எனத் தெரியவில்லை. ஜெமோ அப்படியில்லை. அதனால் வலையுலகம் என மொத்தமாக எடுத்துக் கொண்டால் ஜெயமோகனின் எழுத்துகளே எனக்கு ஆபத்தானவையாகத் தெரிகின்றன. அதுவும் ஜெமோ கோணங்கி, நாகார்ஜூனன், ஜான் அப்ரஹாம் பற்றி எழுதியதெல்லாம் மிகப்பெரிய வன்முறை!

ஃபாசிஸ்ட் போன்ற வார்த்தைகளை உபயோகிக்க விருப்பமில்லை. நம் வலையுலகில் ஃபாசிஸ்ட், அடிவருடி, தோழர் போன்ற நேர்மறை மற்றும் எதிர்மறையான சொற்களை, அவற்றின் வீர்யத்தை உணராமலேயே பெரும்பாலும் உபயோகிக்கப்படுவதாய் வருத்தமுண்டு. ஒரு வார்த்தையை ஜனநாயகப் படுத்துவதென்பது வேறு; மலினப் படுத்துவதென்பது வேறு.

சற்றும் ஒவ்வாத எழுத்து என மாற்றி வரையறை செய்து கொண்டால், டோண்டு ராகவனின் எழுத்துகளே.

4.உங்களுக்கு பிடித்த ஐந்து தமிழ் நாவல்களைப் பரிந்துரைங்களேன்?

நிறைய நாவல்கள் பிடிக்கும். ஐந்து மட்டுமென்றால், கொஞ்சம் கஷ்டம் தான்... சட்டென நினைவில் வரும் எனக்குப் பிடித்த நாவல்களின் பட்டியல் :

சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி
நகுலனின் வாக்குமூலம்
சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள்
வண்ணநிலவனின் ரெய்னீஸ் அய்யர் தெரு
தோப்பில் முகம்மது மீரானின் சாய்வு நாற்காலி
ஜெயமோகனின் ஏழாம் உலகம்
சிவகாமியின் ஆனந்தாயி
ஆ மாதவனின் கிருஷ்ணப் பருந்து
நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும்
கி ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்
கநாசுவின் பொய்த்தேவு
ஜி நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே
ஆதவனின் என் பெயர் ராமசேஷன்
தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்
ஷோபா சக்தியின் ம்

அடுத்து கென்னிற்கான என் கேள்விகள் :

1. சாரு நிவேதிதாவின் எழுத்து நடை, ஜெயமோகனின் எழுத்து நடை - இரண்டில் எது பிடிக்கும்? ஏன்?
2. இதுவரை எத்தனைப் பெண்களைக் காதலித்திருக்கிறீர்கள்? அதிக வருடங்கள் நீடித்த காதல் எது, குறைந்த நாட்களில் முறிந்து போன காதல் எது? சென்னையில் உங்களுக்குப் பிடித்த dating spot எது?
3. அ. உங்களுடைய எழுத்துகளின் அரசியல் நிலைப்பாடு என்ன? ஆ. தேர்தல் - அரசியலில் ஈடுபடும் கட்சிகளில் யாருக்கு உங்களுடைய ஆதரவு ?
4. வலையில் யாருடைய எழுத்துகளை விரும்பிப் படிப்பீர்கள்? யாராவது ஒருவருக்கு 1 கோடி ரூபாய் பரிசளிக்க விரும்பினால் அவர்களில் யாருக்கு அளிப்பீர்கள்?

இறந்தபின் வாழும் ஆசை

காலச் சக்கரத்தில்
பெயர் பொறிக்கவென
உன் இச்செயல்கள்
அர்த்தமற்றதில்லையா
ஆயுள் நீடிக்குமென்ற
உன் சப்பைக் கட்டு
எவ்வளவு சோகமானது
இது வரை கோடிக் கோடிக் கணக்கான
மனிதர்கள் இச்செயல்களைப் புரிந்திருந்தாலும்
விரும்பியவர்களைத் தான்
தனக்குள் வைத்திருக்கிறது வரலாறு
மற்றவர்கள்
தங்கள் செயல்களின்
காரணமின்மையை உணர்ந்திருப்பார்களா
எல்லாம் போக
பதித்துத் தான் என்ன ஆகப் போகிறது
'சும்மா இருக்க இயலவில்லை
விளைவே இச்செயல்கள்'
நல்லது

காமக் கதைகள் 45 (11)

'முன் வழுக்கை, இளந் தொந்தி; இதுதான் செக்ஸ் அப்பீல்' என்றேன். 'இல்லை, கட்டான உடலும் ஒடுங்கிய வயறும்தான்' என்றான். நான் மறுத்தேன். ‘எனக்குத் தெரியுமா உனக்குத் தெரியுமா' எனக் கிண்டலாகக் கேட்டான். ‘நீ 45 பேரைக் காதலித்தது அல்ல விஷயம், அவர்களில் பலர் உன்னைப் பிரிந்தார்களே அதுதான் விஷயம்' என்றேன்.

அதீதனின் மூர்க்கம் பிடிக்காமல் வேறொருவனைக் காதலிக்கத் துவங்கினாள் வரலட்சுமி.

மல்லிகாவுடனான அவனது உறவு முறிந்ததற்குக் காரணம் அவளிடமிருந்து வீசிய துர்நாற்றம்தான் என்றான்.

சரபோஜினியுடனான காதலை அவள் முறித்துவிட்டாள், இவனது குடித் தொல்லை தாள முடியாமல். ஓல்ட் மாங்க் நாற்றம் தாங்கவில்லை அவளுக்கு. 'இத்தனைக்கும் அவளைச் சம்போகத்தின்போது முத்தமிட்டதுகூட இல்லை' என்றான் அதீதன்.

மேகலாவிற்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டதால் அவளுடனான காதல் அறுந்தது. அவள் அமெரிக்காவில் இப்போது இருக்கிறாள் என ஒரு நாள் போதையில் சொன்னான் அதீதன்.

இவனது ஆதிக்க குணத்தை வெறுத்தாள் ரேணுகா. இவன் திமிரை அடக்க ஒரு நாள் இவன் இயங்க இயங்க சிரித்துக் கொண்டேயிருந்தாள். பயந்து போனவனைக் காறி உமிழ்ந்த்து விலக்கினாள்.

நப்பின்னையினடான காதல் இருவருக்கும் போரடித்ததால் நின்றுபோனது.

ஒன்பதே நாட்களில் இவனை விரட்டிவிட்டாள் திவ்யா.

காதலிப்பதாய் நடித்து ஏமாற்றினான் தீபா அருளை.

அதீதனின் கோழைத்தனத்தைக் கண்டு விலகிப் போனாள் மானசா.

டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்லையென வர்ஷாவுடன் பழகுவதை நிறுத்தினான் (பேர மட்டும் நல்லா மாடர்னா வச்சுகறாங்கப்பா!).

அதீதனுக்குப் புதுமையான சிந்தனைகளே இல்லை என ஒதுக்கினாள் பிரேமா.

காமத்தில் பல நுணுக்கங்கள் தெரியவில்லை அதீதனுக்கு எனக் குற்றஞ்சாட்டினாள் ஸ்வேதா. மமதையில் எடுத்தெறிந்து பேசினான் அதீதன். பிறகு என்னிடம் வந்து அவள் உறவை இழந்ததற்கு புலம்பினான். ஏஞ்சலினாவும் அதே காரணம் கொண்டு அவனோடு பழகுவதை நிறுத்தினாள்.

காரணமேயில்லாமல் முறிந்து போனது அபிநயாவுடனான உறவு.

அதீதன் பர்ஸையே திறப்பதில்லையென வெறுத்தாள் அங்கிதா. (அவ பணக்காரி, எவ்வளவு முடியுமா தேத்தலாம்னு பாத்தேன்).

இவனின் நாணயமின்மை காரணமாக விலகினாள் பல்லவி.

அதீதன் எப்படி இவ்வளவு பெண்களின் பெயர்களையும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறான் என வியந்தேன். 'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்' என்றான் அதீதன்.

காமக் கதைகள் 45 (10)

வந்தனாவை அழைத்துக் கொண்டு பங்களூர் சென்றிருந்தான் அதீதன். இரண்டாம் வகுப்பில் பெர்த் கிடைக்காமல் பக்கவாட்டு இருக்கைகள் மட்டுமே இருவருக்கும் கிடைத்தது.

எதிரெதிரில் படுத்தபடி பயணம் செய்தார்கள். இரவில் விளக்குகள் அணைந்ததும், அடர்ந்த இருட்டில் லேசாக அவளைச் சீண்டினான். அவளும் முனகியபடி திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தாள். சீண்டல்களில் கழிந்தது இரவு நேரப் பயணம்.

முன்கூட்டியே பதிவு செய்யாததுகூட நல்லதுதான் என நினைத்துக் கொண்டான்..

பங்களூரில் காவேரி காண்டினெண்டல் ஹோட்டலில் விஸ்தாரமான அறை. கணவன் மனைவியென்றே பதிவு செய்திருந்தார்கள். அறையை அடைந்ததும், ரூம் பாயிடம் பிரிந்திருந்த இரண்டு கட்டில்களையும் ஒன்று சேர்த்து போடச் சொன்னாள் வந்தனா. அதீதனுக்கு லஜ்ஜையாக இருந்தது. ரூம் பாய் சென்றவுடன், 'நாமே இழுத்துப் போட்டிருக்கலாமே.' என்றான்.

இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்கள் பங்களூரில். லால்பாக் பார்க்க வேண்டுமெனச் சொல்லிருந்தாள். ஆனால், ஊர் சுற்றிப் பார்க்கக் கூட வெளியில் செல்லாமல் பகல் முழுதும் அறையிலேயே அடைந்து கிடந்தார்கள் இருவரும். இரவுக் குளிரில் இடுப்பை அணைத்தபடி நடந்தனர் சாலைகளில்.

சொர்க்கமா இருந்ததுடா அந்த ரெண்டு நாட்களும் என்றான் அதீதன்.

திரும்பி வரும்போது வந்தனாவிடம் வருத்ததுடன் கேட்டான் அதீதன்.. ‘நாம் நேத்து செய்யும்போது நீ ஃபேக் தானே பண்ணினே...' வந்தனா, ‘உன்கூட இருக்கும்போது இப்பல்லாம் எது ஃபேக் எது நிஜம்னு எனக்கே தெரியறது இல்லைடா...' என்றாள்.