காலச் சக்கரத்தில்
பெயர் பொறிக்கவென
உன் இச்செயல்கள்
அர்த்தமற்றதில்லையா
ஆயுள் நீடிக்குமென்ற
உன் சப்பைக் கட்டு
எவ்வளவு சோகமானது
இது வரை கோடிக் கோடிக் கணக்கான
மனிதர்கள் இச்செயல்களைப் புரிந்திருந்தாலும்
விரும்பியவர்களைத் தான்
தனக்குள் வைத்திருக்கிறது வரலாறு
மற்றவர்கள்
தங்கள் செயல்களின்
காரணமின்மையை உணர்ந்திருப்பார்களா
எல்லாம் போக
பதித்துத் தான் என்ன ஆகப் போகிறது
'சும்மா இருக்க இயலவில்லை
விளைவே இச்செயல்கள்'
நல்லது
கார்காலக் குறிப்புகள் - 60
12 hours ago
11 comments:
உங்க கவிதையை நான் இப்படி புரிஞ்சிட்டேன் சரியான்னு சொல்லுங்க
சூடான இடுகைகளில்
பெயர் பொறிக்கவென
உன் இச்செயல்கள்
அர்த்தமற்றதில்லையா
ஸ்டார் அந்தஸ்து கிடைக்குமென்ற
உன் சப்பைக் கட்டு
எவ்வளவு சோகமானது
இது வரை கோடிக் கோடிக் கணக்கான
மனிதர்கள் பின்னூட்டம் இட்டிருந்தாலும்
விரும்பியவர்களைத் தான்
தனக்குள் வைத்திருக்கிறது தமிழ்மணம்
மற்றவர்கள்
தங்கள் "ரிப்பீட்டேய்"களின்
காரணமின்மையை உணர்ந்திருப்பார்களா
எல்லாம் போக பின்னூட்டம்
பதித்துத் தான் என்ன ஆகப் போகிறது
'சும்மா Benchல்
இருக்க இயலவில்லை
விளைவே இந்த இடுகைகள்'
நல்லது
//பதித்துத் தான் என்ன ஆகப் போகிறது//
இதைப் புரியாமல்
தெரியாமல் இருக்கும்
நம் மனித்தக் கூட்டத்தின்
அறியாமைதான் என்னே
கிடைத்த வாய்ப்பு
ஆட்சிக்கோ மாட்சிக்கோ
அல்ல
மீட்சிக்கு என்பதே
என் கட்சி
நன்றி, வெண்பூ & அனானி.
This is a cool kavithai Sundar! Nice and keep posting it..!
இருத்தலியலின் நிதர்சனமான உண்மை இதுவாய்த்தான் இருக்க முடியும். வாழ்ட்த்துக்கள் சுந்தர்
மிக மிக அழகான, ஆழமான, அர்த்தமுள்ள கவிதை..வாழ்த்துக்கள் சுந்தர்...!
மிகச்சரியான புரிதலுக்கு பாராட்டுகள் வெண்பூ...
அன்பு சுந்தர்,
வெண்பூ மற்றும் அனானியின் பின்னூட்டங்கள் பாதகமற்றவை எனினும் அசட்டுத்தனம் வழிபவை. அவரவர் புரிதல்களுக்கு யாரும் பொறுப்பேற்க முடியாதெனினும் இது போன்ற moron - களின் கமெண்டுகள் சமயத்தில் சலிப்பை வரவழைத்துவிடுகின்றன :(
எதில்தான் ஜல்லியடிப்பது என்று ஒரு வரம்பில்லயா?!
சுட்டிக்காட்டினால் 'மனம் புண்பட்டுவிடுகிறார்கள்'.
கிருத்திகாவின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.
வாழ்வு, ”வரலாற்றில் தம் பெயரைப் பொறித்துக் கொள்ளும் ஆசை” மனிதர்களை எப்படியெல்லாம் விரட்டுகிறது என்ற நோக்கில் இருத்தலியல் ரீதியிலான ஒரு கவிதை இது.
இதுபோன்ற ஒன்றை பல வருடங்களுக்கு முன் நானும் எழுதிவைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களே ... ஹிஹி ...
அன்புடன்
வளர் ...
????????
மணிவண்ணன், கிருத்திகா, ஈர வெங்காயம், வளர்மதி & கிங்... நன்றி.
That was a good poem, Sundar.
Can some1 help me in typing comments in Tamil? Should I install any software (specific IME?)
நல்ல கவிதை சுந்தர். கொஞ்ச நாட்களுக்குப்பின் கவிதையும் எழுதியதற்கு நன்றி.
வெண்பூ! வளர்மதியின் பின்னூட்டம் உண்மையில் நம் போன்றவர்களின் மேம்போக்கு ரசனையை மேலும் ஆழமாக்கி உயரச்செய்யும் முயற்சியே. அதனால் அவர் கூறுவதுபோல் மனம் புண்படாமல், lets take it in the right spirit.
அனுஜன்யா
Post a Comment