தன்னிலை விளக்கம்

காமக் கதைகள் 45 என்ற கதைத் தொடரை எழுதி வருகிறேன். நேற்று மதியம் முன்னறிவிப்பு எதுவுமின்றி இவ்விடுகைகள் தமிழ்மண முகப்பிலிருந்து நீக்கப்பட்டன. நேற்று இரவு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், பதிலெதுவும் இல்லை அவர்களிடமிருந்து.

இது குறித்து தமிழ்மணம் ஒரு பதிவிட்டிருக்கிறார்கள். அதையும் வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு திரட்டியில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிகள் இருக்குமென்பது புரியாத அளவிற்கு நானொன்றும் மூடனோ அல்லது பொறுப்பற்றவனோ அல்ல. அதே நேரதில் நம் அளவுகோல்களை எவ்வளவுதான் அகலமாக வைத்துக் கொண்டாலும் அக்கைதைகள் ‘ஆபாசம்' என்ற வகைக்குள்ளோ அல்லது ‘பொது வெளியில் வாசிக்கப்படக்கூடாதவை' என்ற வகைக்குள்ளோ வராது என்பது அவற்றை வாசிப்பவர்கள் உணரலாம்.

தலைப்பில் காமம் என்ற வார்த்தையே கூடாதென்றால் எப்படி காமத்தைப் பற்றி எழுதுவது? தலைப்பை காதல் கதைகள் என மாற்றி இதே விஷயங்களை எழுதலாம்தான் (காதல் புனிதமானது!). ஆனால் அது misleading ஆக இருக்கும்...

இல்லை தூதூ கதைகள் என்றோ அல்லது சீச்சீ கதைகள் என்றோ எழுதலாம். ஆனால் அவ்வார்த்தைகள் காமத்தைத் தவறாக அடையாளப்படுத்துவதாக ஆகிவிடக் கூடும்.

எனவே காமக் கதைகள் என்ற தலைப்பிலேயே தொடர்ந்து எழுதலாமென்றிருக்கிறேன். அது தமிழ்மண முகப்பில் வரவில்லையென்றாலும் பரவாயில்லைதான் :)

சூடான இடுகைகள், மறுமொழிகள் திரட்டப்படுதல் அல்லது வாசகர் பரிந்துரை போன்ற மேலதிக சேவைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் தலைப்பை மட்டுறுத்துவேன் எனும் சென்சார்ஷிப் தான் உறுத்துகிறது. தமிழ்மணம் இது பற்றி யோசித்தால் நன்றாயிருக்கும்.

தமிழ்மணம் தருவது இலவச சேவை. எனவே அவர்களிடம் கண்டனங்களைப் பதிவு செய்வதோ அல்லது கேள்விகள் கேட்பதோ எவ்வகையிலும் பயனளிக்காது என்பதும் புரிந்தேயிருக்கிறது.

இவ்விஷயம் குறித்து பதிவெழுதிய நண்பர்கள் பைத்தியக்காரன், வளர்மதி, சுகுணா திவாகர் மற்றும் அப்பதிவுகளில் பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

13 comments:

லக்கிலுக் said...

இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் கூட மறுமொழியிடப்பட்ட இடுகைகளில் வராது. யாராவது பெட்டு கட்டறீங்களா? :-)

Anonymous said...

இத்தனையும் எழுதிய நீங்கள் மாலைமுரசிலே உங்கள் பதிவு நீக்கப்பட்டதாக வந்ததாக மக்கள் தமிழ்மணத்தினைப் போட்டு அடித்தார்களே அதை ஆவது இல்லை என்று சொல்லியிருக்கலாம். அல்லது தமிழ்மணம் நாய்கள் வாங்கிக்கட்டடும் என்று இருக்கின்றீர்களா?

போலி சல்மா தொடக்கம் போலி வாலிகள் வரைக்கும் சும்மா போட்ட ஒங்காத்தா ஒங்க ஆயி ஆப்பக்கட பதிவுகளுக்கும் தமிழ்மணமே வாங்கிக் கட்டியதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது தமிழ்மணம் நீக்கவில்லை என்று கூத்தாடி ஆசாமிகள் இப்போது எங்கே நின்று பேசுகின்றார்கள் என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.

நண்பரே நீங்களும் உங்கள் நண்பர்களும் மிகவும் தந்திரசாலிகள். வசதியான "விளிம்புநிலை"ப்பின்நவீனப்போராளிகளாக வலையிலே உட்கார்ந்து கொண்டு, சொற்களை நகர்த்திக்கொண்டிருப்பீர்கள். அதிகாரங்களை அடித்து நொருக்கும் அதிகாரத்தினை முற்றாகக் குத்தகை எடுத்துக்கொண்ட பாவனை பேசலன்றி வேறெதனை நீங்கள் சாதித்தீர்கள் என்பதை அறிய ஆவல். இதே கதையை இன்னொருவர் எழுதியிருந்தால், பெண்ணியம் தொடக்கம் மண்ணியம் வரைக்கும் பேசிப் புண்ணியம் சமூகத்திடம் பெற்றுக்கொண்டு போவீர்கள். அவ்வளவுதான். வளர்மதியே moron களுக்குக் குருபீடத்திலே இருந்து கருத்துச் சொல்லித் தன் உள்ளத்திரையைக் கிழித்துவிட்டபின்னாலே, உங்களைப் போன்றோரிடமெல்லாம் ஒரு சமுதாயமாற்றத்துக்கான சிந்தனையை எதிர்பார்ப்பது அவசியமற்றது. சொற்களை மேலும் விதையுங்கள். உங்களின் தலைச்சுற்று ஒளிவட்டத்தினையேனும் காப்பாற்றிக்கொள்ளலாம்.

ஒரு காசு said...

காமக் கதைகள் தலைப்பு குறித்த தங்களின் முடிவை வரவேற்கிறேன்.

குரு said...

//அதே நேரதில் நம் அளவுகோல்களை எவ்வளவுதான் அகலமாக வைத்துக் கொண்டாலும் அக்கைதைகள் ‘ஆபாசம்' என்ற வகைக்குள்ளோ அல்லது ‘பொது வெளியில் வாசிக்கப்படக்கூடாதவை' என்ற வகைக்குள்ளோ வராது என்பது அவற்றை வாசிப்பவர்கள் உணரலாம்.//

கீழ்வருவது உங்கள் தொடரின் 6வது பதிவில்:-

***அதீதன் இல்லை, இவ்வளவுதான் முடியுமென தீர்மானமாகச் சொல்ல ‘என்ன ஓக்கும் போது கணக்காடா போட்டே' என்றிருக்கிறாள்.***

இது எந்தவகை சாமி? பொதுவில் வாசிக்கபட வேண்டியவையா?

//தலைப்பில் காமம் என்ற வார்த்தையே கூடாதென்றால் எப்படி காமத்தைப் பற்றி எழுதுவது?//

ஒருநாள் வரும் கதையா இது? தலைப்பால் இடுகை சூடாகி ஒருமாதமாக காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் 1,2,3,.... என தமிழ்மணமுகப்பில் இருந்தால் இத்தளத்தைப்பற்றி எப்படியான எண்ணம் ஏற்படும்? காமலோகம்.காம் தளத்திற்கு போட்டியா என எங்களைப்போன்ற புதுவாசகர்களுக்கு தோன்றும்தானே!

//தலைப்பை காதல் கதைகள் என மாற்றி இதே விஷயங்களை எழுதலாம்தான் (காதல் புனிதமானது!). ஆனால் அது misleading ஆக இருக்கும்...
இல்லை தூதூ கதைகள் என்றோ அல்லது சீச்சீ கதைகள் என்றோ எழுதலாம். ஆனால் அவ்வார்த்தைகள் காமத்தைத் தவறாக அடையாளப்படுத்துவதாக ஆகிவிடக் கூடும்.//

நீங்களே இதை தூதூ, சீச்சீ என வகைப்படுத்தம்போது எப்படிப்பட்டதான 'பொதுத்தள கதைகள்' இவைகள். அதீதன் கதைகள் என தலைப்பிட்டால் என்ன இழப்பு? ஒரு தனிமனிதனின் கதைதானே!

தலைப்பு வைப்பது உங்கள் விருப்பம் உரிமை. அதுபோல வாசகர்களுக்கு தங்கள் தளத்தை எப்படி அளிப்பது என்பது தமிழ்மணத்தின் விருப்பம் உரிமை என நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

தமிழ்மண நிர்வாகிகளுக்கு புதுவாசகர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் !!!!!

jackiesekar said...

கமலும் நிருவும் தேனிலவுக்கு சிம்லா போனார்கள். தேனிலவு சாப்டர் எழுத வேண்டாம். நானும் தமிழ்படங்களில் தம்பதிகள் பால் சாப்பிட்டு பிறகு அவர்களை காட்டாமல் கேமரா குழந்தை படத்தை காண்பிக்குமே, அதே போல் விட்டு விடுவோம் மீறி நான் தேனிலவு சாப்டர் எழுதினால் சாருநிவேகிதா போல் எழுதிகிறேன் என்பார்கள் எதற்க்கு வம்பு...? அல்லது தமிழ் மணத்தில் வார்த்தை பிரயோகம் தவறு என்பார்கள்.
நானும் நிறைய காமம் என்ற வார்த்தை பயண்படுத்தி இருக்கிறேன்....காமத்தை ரசித்தபடியே காமத்தை எதிர்க்கும் நம்மவர்களிடம் இருந்து, நான் தப்பிக்க வேண்டும் அவ்வளவே...

சுந்தர் உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள்.லக்கி ,வளர்மதி போன்றோர் கருத்தை நான் வழி மொழிகிறேன்

வால்பையன் said...

//தமிழ்மண முகப்பில் வரவில்லையென்றாலும் பரவாயில்லைதான்//

பூவிற்கு முகவரி தேவையில்லை
வண்டுகள் எங்கிருந்தாலும் தேடி வரும்

வால்பையன்

வால்பையன் said...

//லக்கிலுக் said...
இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் கூட மறுமொழியிடப்பட்ட இடுகைகளில் வராது. யாராவது பெட்டு கட்டறீங்களா? :-)//

எனக்கெனவோ இதெல்லாம் லக்கி வேலை தானான்னு சந்தேகமா இருக்கு

வால்பையன்

சென்ஷி said...

//லக்கிலுக் said...
இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் கூட மறுமொழியிடப்பட்ட இடுகைகளில் வராது. யாராவது பெட்டு கட்டறீங்களா? :-)
//

சோதனை எண் 1..

(இதுதான் இவருக்கு நான் போடற மொதோ பின்னூட்டம்ன்னு நான் சொன்னா நீங்க எல்லோரும் நம்பணும்)

வெண்பூ said...

//எனவே காமக் கதைகள் என்ற தலைப்பிலேயே தொடர்ந்து எழுதலாமென்றிருக்கிறேன். அது தமிழ்மண முகப்பில் வரவில்லையென்றாலும் பரவாயில்லைதான்//

நீங்கள் செய்வதுதான் சரி. தமிழ்மணத்தை நம்பி நீங்களோ அல்லது உங்களை நம்பி தமிழ்மணமோ இல்லை. மீதி 33 கதைகளையும் நான் படிக்கத்தான் போகிறேன், தமிழ்மணத்தில் வந்தாலும் வராவிட்டாலும்....

ஸ்ரீதர் நாராயணன் said...

உங்கள் வாசகன் என்ற முறையில் உங்களின் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்.

இந்தப் பிரச்சினையின் உங்கள் புரிந்துணர்வும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

சுண்டக்கஞ்சி said...

//விளிம்புநிலை"ப்பின்நவீனப்போராளிகளாக//

//உள்ளத்திரையைக்கிழித்துவிட்டபின்னாலே//

பெயரிலி அண்ணை(அட அனானிமஸ் தாம்பா) கொண்டை அப்பட்டமாகத் தெரிகிறது. மாற்றிக் கொண்டு கோதாவில் இறங்கவும்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, லக்கி லுக், அனானி, ஒரு காசு, குரு, ஜேக்கிசேகர், வால்பையன், சென்ஷி, ஸ்ரீதர் நாராயணன் & சுண்டக்கஞ்சி.

Joe said...

I don't care if tamilmanam doesn't support sundar's blog.

I will continue to read his stories.articles.

Goodluck to you, Sundar!