சமீபத்தில் தமிழரசி என்பவரின் பதிவில் (பார்க்க : http://thenukegirl.blogspot.com/2008/07/blog-post_5800.html ) பெயரிலி ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார். அதைக் கீழே கொடுக்கிறேன்.
-/பெயரிலி. said...
இவ்வளவு ஜ்யோராம்சுந்தர் "ஏழைப்பதிவானாக"ப்பேசுகிறாரே, கருத்துச்சுதந்திரமறுப்புக்கு எதிராகப் பேசும் இவர் அவ்விடுகையிலேயே தமிழ்சசி தமிழ்மணம் தொழில்நுட்ப அளவிலே என்ன வகையிலே இம்முறை செயற்பட்டதென்றும் பதிவு ஏதும் நீக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இட்ட பின்னூட்டத்தை அமுக்கிவிட்டாரே? இதுவா கருத்துச்சுதந்திரம்? இரண்டு நாட்கள் முன்னால் வந்த இக்கருத்துப்பின்னோட்டத்தினை அவர் பதிவிலேயே இட்டிருந்தால், இன்னமும் காமம் என்ற சொல்லும் நட்சத்திரக்குறியாகவில்லை; "மாலைமுரசு" சொல்லும் காமக்கதை இடுகையும் நீக்கப்படவில்லை என்பது பல பின்னூடமுன்னோடிகளுக்குத் தெரிந்திருக்குமே? எதற்கு அனுமதிக்கவில்லை?
அது சரி; அனுமதித்திருந்தால், எதை வைத்து நான்கு நக்கலான பதிவுகளும் மூன்று போராட்ட வேங்கைப்பதிவுகளும் இந்த இடுகை போன்று மற்ற அதிகாயசூரவீரமார்த்தாண்டர்கள் இடமுடியும்? சுந்தர் விடாததும் சரிதான/
அப்படியான ஒரு பின்னூட்டம் எனக்கு வரவேயில்லை.! பிறகு எப்படி வெளியிட??? கிட்டத்தட்ட இதே கருத்தை கூறிய வேறு சில பின்னூட்டங்களை வெளியிட்டிருந்தேன். ஏதாவது காரணங்களுக்காக பின்னூட்டங்களை நிராகரித்தால், அதையும் அவ்விடுகையிலேயே பின்னூட்டத்தின் மூலமாகத் தெரிவித்துவிடுவேன்.
அவராக முடிவு செய்துகொண்டு எப்படியெல்லாம் அடித்து ஆடுகிறார் பாருங்கள். இதில் அடுத்தவர்களைப் பொய்யர்கள் என்று கூசாமல் சொல்கிறார்.
எவ்வளவு யோசித்தும் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.
நாங்க பொறக்கறதுக்கு முன்னாடியே இல்லாட்டா எங்க வயிறுக்குக் கீழே முடி மொளைக்கறதுக்கு முன்னாடியே பின் நவீனத்துவம் எல்லாம் அவருக்கு அத்துப்படியாம். (அதுதான் இப்படியெல்லாம் எழுதறாரு போல :) ). ஆனா பாருங்க, இந்த ‘கெட்ட' வார்த்தைங்கள எழுதும்போது ஆங்கிலத்துக்குத் தாவிடறாரு. பின்நவீன முன்னோடி வாழ்க வாழ்கவே.!
என் கதைகளை அவர் நக்கலடிப்பது ஒன்றும் பிரச்சனையில்லை. திரும்ப அவர் எழுத்தை நக்கலடிக்க எவ்வளவு நேரமாகும் (அதை நான் வேறு செய்யணுமா என்ன?)
அவர் பதிவில் எழுதுவது போல் ஜாங்கிரி எல்லாம் சுத்தாமல், புரியும்படியான மொழியில் அவர் சொல்லிய அபாண்டமான அவதூறைத் திரும்பப் பெற வேண்டும். இதுவே குறைந்தபட்ச நேர்மை. செய்வாரா பெயரிலி?
பனிக்காலத் தனிமை - 02
4 days ago
29 comments:
thitnathaium pathivu akkitenga..neenga romba nallavarthaan..
இந்த மாதிரி வாலுள்ள பிறவிகளிடம் பூமாலை கிடைத்த கதையாய் தமிழர்களது மனம் தத்தளிக்கிறது.
From a technical perspective, both of you cannot prove "one way or other" that one party indeed "posted the comment" and the other party "never received the comment" conclusively.
a. Peyarili if at all, could only have taken a screenshot with the comment window or preview view. In either case it don't prove that the comment is submitted.
b. Sundar, if received the comment and deleted it already, cannot prove anything even if he shows the screenshots of all of his folders of his gmail account.
c. Unless, the admins of blogger/google step-in and revea the log files audit-trails (if at all they maintain) to each and every step for these incident, no one can prove anything for sure.
Only the conscience of both knows the fact. Other than that, it is a mere circus to entertain every one else.
Both of you, get over with it.
My 2 cents.
கடைசி அனானிக்கு,
நீங்கள் சொல்வது டெக்னிக்கலான விஷயம். ஆனால் அவர்கள் மனதிற்குத் தெரியாதா என்ன?
இன்னொரு கேள்வி - அவர்கள் முதலில் தெரிவிக்கவில்லை என்பதையே சில பதிவர்கள் முக்கிய பிரச்சனையாக எழுப்பியிருந்தார்கள். அங்கேயும் அந்த மாதிரியான பின்னூட்டம் இல்லையே. தமிழ்மணப் பதிவிலும் அவ்வாறு அவர்கள் எனக்கிட்ட பின்னூட்டம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே???!!
இன்னொன்று. கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொன்ன சிலரின் பின்னூட்டங்களை நான் வெளியிட்டிருக்கும்போது தமிழ்சசியின் பின்னூட்டத்தை மட்டும் ஏன் நிராகரிக்க வேண்டும்?? இதுவரை என் பதிவிற்கு பிளாக்கர் அக்கவுண்ட்டுன் வந்த பின்னூட்டங்கள் (ஒன்றைத்தவிர - அதுவும் காரணம் சொல்லப்பட்டே நான்கு மாதங்கள் முன்பு) எதுவுமே நிராகரிக்கப் பட்டதில்லை.
ஒரு பேச்சிற்கு அவர்கள் அனுப்பி எனக்குக் கிடைக்கவில்லை என வைத்துக் கொண்டாலும், பெயரிலி தமிழரசி பதிவிலே இரண்டிற்கும் மேற்பட்ட முறை ‘என் பின்னூட்டம் எங்கே' எனக் கேட்கிறார். அது மாதிரி ஏதாவது செய்தாரா? அல்லது குறைந்தபட்சம் எனக்கு எழுதிக் கேட்டாரா நான் ஏதாவது பின்னூட்டங்களை நிராகரித்தேனா என?
எதுவும் செய்யாமல் அவர் வேறொருவரின் பதிவில் சென்று இவ்வாறு எழுதுவது அவதூறில்லாமல் வேறென்ன??
பார்ப்போம் பெயரிலி தன்னுடைய அவதூறான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறாரா என்று.
/நாங்க பொறக்கறதுக்கு முன்னாடியே இல்லாட்டா எங்க வயிறுக்குக் கீழே முடி மொளைக்கறதுக்கு முன்னாடியே பின் நவீனத்துவம் எல்லாம் அவருக்கு அத்துப்படியாம். (அதுதான் இப்படியெல்லாம் எழுதறாரு போல src="http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/1.gif"> ). ஆனா பாருங்க, இந்த ‘கெட்ட' வார்த்தைங்கள எழுதும்போது ஆங்கிலத்துக்குத் தாவிடறாரு. பின்நவீன முன்னோடி வாழ்க வாழ்கவே.!/
அது சரி. இதுக்கெல்லாம் பொத்துக்கிட்டு வருதே. எடுத்ததுக்கெல்லாம் அதிகாரவர்க்கத்துக்கெதிரான கனமாக பதிவுகளாக நீங்களும் உங்கள் பின்னூட்ட ஜால்ராக்களும் அடிக்கும் "நாமேதான் தமிழிலே காமம் உடைத்தெறிய முதலிலே எழுதுகிறோம்" அலட்டலுக்கு அப்படியாகத்தான் பதில் எழுதமுடியும். ஜி. நாகராஜன் உடைக்காத யாதார்த்தத்தினையா நீங்கள் உடைத்துப் பருப்பினைக் காட்டிவிட்டீர்கள்?
வேண்டுமானால், மேலே எழுதியது, பின்நவீனத்துவத்தினைப் -/பெயரிலி. தன் அதிகாரமையப்படுத்தும் வேலை என்று வைத்துக்கொள்ளுங்கள். அடாவடித்தனம் பண்ணுவதென்பது உங்களுக்கும் உங்கள் பருப்புகளுக்கும் மட்டுமா சொந்தம்?
ஜாங்கிரி எழுத்தானால் ஒன்றும் குறையவில்லை; அதுவாச்சும் சொந்தமான ஜாங்கிரி; would be saru, would be ramesh-prem கூத்துகளுக்கு அதுவே பரவாயில்லை.
/அவர் பதிவில் எழுதுவது போல் ஜாங்கிரி எல்லாம் சுத்தாமல், புரியும்படியான மொழியில் அவர் சொல்லிய அபாண்டமான அவதூறைத் திரும்பப் பெற வேண்டும். இதுவே குறைந்தபட்ச நேர்மை. செய்வாரா பெயரிலி?/
எதற்கு? முடியவே முடியாது. தொழில்நுட்பம் குறித்து சசி இட்ட பின்னூட்டத்துக்கு அவரே விளக்கம் தருவதே சிறப்பு. அவர் இவ்வாரம் ந்தியாவிலிருந்து அமெரிக்கா வருவதால், ஓரிருநாள் பதில் தாமதமாகலாம் என்ரு நம்புகிறேன். வேண்டுமானால், அவர் தனிப்பட அனுப்பிய அஞ்சலின் ஒரு குறிப்பினைக் கீழே தருகிறேன்.
"
http://jyovramsundar.blogspot.com/2008/07/blog-post_1830.html
ஜ்யோவ்ராம் சுந்தரின் இந்தப் பதிவில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன். உங்கள் அனைத்து இடுகையிலும் தமிழ்மணத்தின் பதிவுப்பட்டை தெரிகிறது. இதில் இருந்தே உங்கள் எந்த இடுகையும் நீக்கப்படவில்லை என்பது தமிழ்மணத்தின் டெக்னிக்ல் விஷயம் என கூறியிருந்தேன்.
ஆனால் அந்த பின்னூட்டம் இது வரையில் வெளியாக வில்லை...."
இதை என் ஏதாவது ஒரு பதிவின் கீழும் போட்டால் போச்சு; நான் அநாமதேயமாகப் போட்ட பின்னூட்டத்தையே விடாமல், போடவில்லை என்று சொல்லும் உங்களையெல்லாம் நம்பிப் பின்னூட்டத்தைவிட்டால், அவ்வளவுதான். உங்களிலே ஒரு குறைந்த பட்ச நம்பிக்கையாவது இருந்தது. அதையும் வேண்டாம் என்று சொல்லாமலே சொல்லியிருக்கின்றீர்கள். உன் நம்பிக்கைபிசாத்து யாருக்கு வேண்டும் என்று உங்களிடமிருந்துவரக்கூடிய நியாயத்தையும் ஒத்துக்கொள்கிறேன்.
இன்னும் தமிழரசி என்ற பம்மாத்து எதுக்கு? அவரேதான் நான்தான் இரைச்சல் செல்லா என்று வெளியே வந்து விட்டாரே? இதுவும் நீங்கள் புரிந்துகொண்டபடி பின்நவீனத்துவமோ?
அவ்வளவுதான் பிஸ்தா சொல்லுவேன்; இனி பிய்த்துப் பிடுங்குவதெல்லாம் உங்கள் தனி ஆட்டம்.
ஆஹா பெயரிலி,
நீங்க தமிழ்சசி எழுதியதா சொல்ற பின்னூட்ட வரிகள் :
/ஜ்யோவ்ராம் சுந்தரின் இந்தப் பதிவில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன். உங்கள் அனைத்து இடுகையிலும் தமிழ்மணத்தின் பதிவுப்பட்டை தெரிகிறது. இதில் இருந்தே உங்கள் எந்த இடுகையும் நீக்கப்படவில்லை என்பது தமிழ்மணத்தின் டெக்னிக்ல் விஷயம் என கூறியிருந்தேன்./
கிட்டத்தட்ட இதே வரிகளில் ஒரு அனானி பின்னூட்டம் வந்து வெளியிட்டிருக்கிறேன். அது கீழே தரப்படுகிறது :
/ஜூலை 11, 2008 11:59 PM
Anonymous said...
நான் தமிழ்மணத்தின் மூத்தப் பதிவர் என்ற வகையில் எனக்கு தெரிந்த டெக்னிக்கல் டிப்ஸ்
- உங்கள் எல்லாப் பதிவுகளிலும் தமிழ்மணம் பட்டை தெரிகிறது. எனவே உங்கள் பதிவை அவர்கள் நீக்கவில்லை. ஒரு இடுகையை கூட நீக்க வில்லை என தெரிகிறது
... /
ஐயா, இப்ப என்னய்யா சொல்றீங்க? அனானி பின்னூட்டத்தை வெளியிட்ட நான் அதே வரிகள் இருக்கும் தமிழ்சசியின் பின்னூட்டத்தை மட்டும் நிராகரிப்பேனா? சரியா அவர்கிட்ட கேளுங்க, அவர் இந்தப் பின்னூட்டத்தைச் சொல்லியிருக்கப் போகிறார் (சில சமயம் அனானியாகக் கூடப் போட்டிருக்கலாம்).
அந்தப் பதிவிற்கு வந்த எந்தப் பின்னூட்டமும் நிராகரிக்கப் படவில்லை.
சரி... இப்பவாவது உங்க அவதூறைத் திரும்பப் பெறுவீர்களா?
அந்த அநாநி தமிழ்சசி என்றால், விபரத்தினை முழுமையாக அறிந்து கொள்ளாமலே கருத்தினைத் தெரிவித்தேன் என்ற அளவிலே எனக்கு எவ்வித மறுப்புமில்லை; மன்னிப்பினைக் கேட்பதிலும் (இதற்காக மட்டும்) எவ்விதத்தயக்கமுமில்லை. ஆனால், அவர் வந்து அவர் பதிலளிக்கும்வரை பொறுத்திருப்பேன்.
பெயரிலி அண்ணையோடு கும்மியடித்தால் இதுபோல நிகழ்வுகள் அவ்வப்போது சகஜமாக நடந்தேறும். அனுபவசாலி சொல்கிறேன். பார்த்துக்கங்க. அண்ணை அப்புறம் கொண்டோடியாவோ, கொழுவியாவோ பரதநாட்டியம் ஆடினார் என்றால் தாங்கமாட்டீர்கள், சொல்லிட்டேன்.
பெயரிலி,
சரி, காத்திருக்கிறேன். நீங்கள் விவரம் அறிந்தவுடன், முழுவதுமாக உங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதே சரியாயிருக்கும்.
மற்றபடி உங்களுடைய முதல் பின்னூட்டத்தைப் பற்றி... பிறகு எழுதுகிறேன்.
நன்றி, லக்கி லுக்.
இதுவரை நான் பெயரிலியைப் பற்றி பாதகமாக எங்கும் எதுவும் எழுதியதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு ஸ்காலர் எனக் கேள்விப் பட்டு மதிப்பு வைத்திருக்கிறேன்.
அவருக்கு யாரிடமாவது பிரச்சனை என்றால் அதற்கு நம்மை இழுத்துப் போட்டு குளிர் காயலாமா என்ற ஆதங்கத்தில் எழுதியதே இப்பதிவு.
அண்ணை அப்புறம் கொண்டோடியாவோ, கொழுவியாவோ பரதநாட்டியம் ஆடினார் என்றால் தாங்கமாட்டீர்கள், சொல்லிட்டேன்.//
பெயரிலியை எம்மோடு ஒப்பிடுவது பெருமையாக இருக்கிறது. நன்றி லக்கிலுக்..
இந்த ஊரு இன்னுமாடா எங்களை நம்புது என்னுதான் கேட்கத் தோணுது :(
அரை தமிழ் தெரிஞ்ச எனக்கே இவளவு கோபம் வருதுன்னா , சுந்தருக்கு எவொளோவு வரும்.
சாரு Nivedita அளவு கப்சா exaggeration இல்லேனாலும் , இவர் டோப்லே இருக்கார். புரியுது! நான் பெங்காளிலே படிச்சா பங்கிம் சாடேர்ஜி அளவு இருக்கு! (என் தமிழ் என் பொண்டாட்டி உபயம்!)
என்ன வேலை ஒன்னு இருக்கு, முதலாளிக்கு வஞ்சம் செயாம்மா பார்திட்டு, தமிழ் சேவை பண்றார்!
சோம் அணோனி ஹஸ் written மலம் ஷிட் பதில...
நீங்க கும்மி அடிங்கண்ணா!
ஜியோவ்ராம் சுந்தர்,
/இதுவரை நான் பெயரிலியைப் பற்றி பாதகமாக எங்கும் எதுவும் எழுதியதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு ஸ்காலர் எனக் கேள்விப் பட்டு மதிப்பு வைத்திருக்கிறேன்/
இதற்கு மற்றவர்களைப் போல என்னை "ஈழத்துத்தட்டுக்கழுவி நாயே" என்று கூப்பிட்டிருந்தால் நன்றாகவிருக்கும்.
செல்வராஜ் மிகவும் தெளிவாக ஓர் இடுகையைப் போட்டிருக்கின்றார். அதைத் தவிர, இங்கே மேலும் எனக்குச் சொல்ல ஏதுமில்லை - நான் தொடங்கிய இரண்டு விடயங்களைத் தவிர.
1. உங்களின் பின்னூட்டம் அனுமதித்தது தொடர்பானதிலே என்ன நடந்தது என்பதினை முழுமையாக அறிந்து, என் மீது தவறென்றால், முழுமையாக அறியாது நான் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்பது
2. ஓசை பதிவினை நடத்தும் செல்லா, தமிழ்மணத்தின் தீர்மானத்தின்படி நீக்கப்பட்டாரேயொழிய, அவரின் வேண்டுகோளுக்காக அல்ல என்பதை நிரூபிக்க
மீதிப்படி, தெளிவுபடுத்தும் மனநிலை எனக்கு இல்லை; பதியும் இன்னொரு வலைப்பதிவர் வார இறுதியிலே வளர்மதி+ஜ்யோவ்ராம் சுந்தர் குறித்து எனக்கு எழுதிய அஞ்சலுக்குப் பதிலாக எழுதிய அஞ்சல்களை அப்படியே தருகின்றேன் - நண்பரின் பெயரை மட்டும் விலக்கியிருக்கிறேன்.
ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்; இங்கே நீங்களும் வளர்மதியும் (அய்யனாருங்கூட) எதற்காகப் பேசுகின்றீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியும்; அதேபோல, இங்கே உங்கள் மூவரைத் தவிர்த்துப்பேசும் பலரின் நோக்கங்கள் அவையல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
---
1.
நிச்சயமாக தமிழச்சியையும் ஜ்யோராம் சுந்தரினையும் ஒன்றாக நான் நினைக்கவில்லை. அவரின் படைப்புகள் குறித்து எனக்கு நிச்சயமாக் மதிப்புண்டு; ஆனால், காமக்கதைகள் erotica ஆகவும் தேறவில்லை; ஒரு சமூகப்பார்வையிலே கட்டுடைக்கும் படைப்பாகவும் தேறவில்லை (இப்படித்தான் கடைசியாக voice on wings பதிவிலே பின்னூட்டியிருக்கிறேன்). I have no respect left to suguNA Diwakar any more. In my PoV, he is one of the most double standard holding hpocritic who thinks of himself above the anyone. அய்யனாரின் படைப்புகள் முன்னர் நிறையக் கவர்ந்தன; இப்போதெல்லாம், கைதட்டலுக்கு எழுதும் ஆளாகப் போய்விட்டதிலே வருத்தம். சில விடயங்களை இங்கே எவரும் கண்டுகொள்ளவில்லை.
1. ஜ்யோராம் சுந்தரின் பதிவு/இடுகை எதுவுமே நீக்கப்படவில்லை என்பதை; காமம் என்ற சொல் தடுக்கப்படவில்லை.
2. எதற்காக இப்படியான முகப்பிலே காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் என்று தோன்றும் நிலையைத் தவிர்க்கவேண்டியிருக்கின்றதென்பதை; இவர்கள் மக்கள் மக்கள், மக்களுக்குத் தேவையான பாலியற்சுதந்திரம் என்று பேசுகிறார்கள்; அதே நேரத்திலே அதே மக்களைப் பதிவுப்பக்கத்தினை நோக்கித் திருப்புகையிலே, இப்படியாகத் தொங்கினால், எவருக்கு இவர்கள் இவர்களின் கதைகளூடும் சுதந்திரம் ஊட்டமுடியும்/ ஒருவரும் பதிவுப்பக்கதுக்கே வரமாட்டார்கள். தமிழகச்சஞ்சிகைகளுக்கு இவர்களே பதிவுகளெல்லாம் நிறைகாமம் செப்பும் தும்பிகள் என்ற செய்தியை உருவாக்கிக்கொடுப்பார்கள
3. தனிப்பட, இவர்களின் படைப்புகளெதுவுமே எனக்குப் புரட்சியாகத் தெரியவில்லை. இவற்றைப் பெருவிரல்-சுட்டுவிரல் இடுக்கிலே சுண்டித்தள்ளும் பாவனை பேசாத இயல்பான படைப்புகளைத்தான் தேடுகிறேன்; கண்டிருக்கிறேன். ஜி. நாகராஜன் அப்போது சொல்லாத என்ன இழவை இப்போது இவர் சொல்லியிருக்கின்றார்?
4. தமிழ்மணத்தின் செயற்பாட்டிலே இருக்கும் நடைமுறைச்சிக்கலையும் (புதியபதிவர்களை ஊக்குவிக்கும் தேவை) தமிழ்மணத்திலேயுள்ள எங்களைப் போன்றவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடுகளையும் வேறாகப் பார்ப்பதில்லை; இவரிடம் profession - personal life என்று பிரித்துப்பார்க்கும் தன்மை இருப்பதேயில்லை. போர்னோ குறித்த என்னுடைய நிலைப்பாடு தொடக்கம் என்னவென்று இவர்களுக்குத் தெரியுமா? என்ன உரிமை இவர்களுக்குத் தாம் ஏனோ முற்போக்குப்பின்நவீனத்துவ (sic) கொம்புகள், மீதித்தமிழ்மணத்திலேயிருப்பவர்களெல்லாம் கழுதைவால்கொண்ட கட்டுப்பெட்டிகள் என்று திட்ட இடம் கொடுக்கிறது? தமிழச்சி என்னைப் பாப்பான் என்று திட்டக் கேட்டிருந்த விந்தைக்கு இது பெரிதில்லை என்றாலும், சில சமயங்களிலே ஈகோ திரும்ப உதைக்கவே உந்துகிறது. பொழுதும் நிலமையும் இடம் தந்தால், சுகுணா திவாகர்,ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார் போல பாவனை பண்ணிப் படைப்பது அவ்வளவு சிக்கலான காரியமில்லை. என்ன புரட்சிக்கு உந்தப்பட்ட நிலையிலே உதைப்பதற்கு வசதியான தமிழ்மணம் மாதிரியான ஒரு நொண்டிக்கழுதையை அதிகாரபீடமாக எண்ணிக்கொண்டு காலைத் தூக்கவேண்டும். ;-)
5. தமிழ்மணத்திலேயிருந்தாலுங்கூட கடந்த சில மாதங்கள் எதையுமே நான் செய்ததில்லை; இப்போதுங்கூட, அறிவிப்பு எழுதி வந்ததிலேதான், வாசித்து -அதன் தேவை அறிந்து- சம்மதித்தேன். பாதிப்பேர் திட்டுவதைப் பார்த்தால், இது -/பெயரிலி.யின் வேலை (தன்னுடைய மூன்று வயதுக்குழந்தையிடம் கொடுத்து எழுதிப் போட்டது; 24 வரிகள் கொண்ட வசனம்...... ;-)) என்று தீர்மானித்து உதைப்பதே அவர்களுக்கு முக்கியமாகிறத
6. இவர்களுக்கு அதிகாரபீடம் எதுவெனத் தீர்மானித்து உதைக்கும் அதிகாரபீடம் எப்படியாகக் கிட்டியதென்று அந்த அல்லாவுக்கும் அரனுக்கும் அய்யனாருக்குமே வெளிச்சம் ;-) என்ன இத்தனையிலும் ஒரு நல்ல விடயம்; வளர்மதி பற்றிய தெளிவும் கிட்டியது. did you notice that every middle class madhavan wants to pretend him as a postmodernist maadaasamy with a foucoult-marxist mind?
Shit certainly happens. ;-)
2.
நீங்கள் சொல்வதிலுள்ள சில உண்மைகளை ஒத்துக்கொள்கிறேன். வளர்மதி எழுதுவதை 1997 இலிருந்து ஆறாம்திணையிலிருந்து அங்குமிங்குமாக வாசித்திருக்கின்றேன். அவர் இணையத்தினைச் சிற்றிதழ் நீட்சியாக எண்ணுவதிலும் தனிப்பட எனக்கு முழுமையான ஒப்புதலேஎ; சிற்றிதழ் எனும்போது, ஒரு நடைமுறைக்கான தேவையைக் கருதி, ஒத்த கருத்துள்ளோர் ஓர் எழுத்து முயற்சியினைக் கொண்டிருத்தல் என்பதாகவே இங்கே நான் சொல்லவருகிறேன். ஆனால், அவர் ஒரு குருபீடத்தட்டிலே ஏறி இருந்து கொண்டு மிடில்க்ளாஸ் மாதவன்களைப் பற்றிப் பேசும்போது, கிட்டத்தட்ட முன்னுக்கிருப்பவனுக்கு ஒன்றுமே தெரியாது என்ற தொனிதான் எகிறியது. இதிலே voice on wings போன்ற நிதானமானவர்களே கொஞ்சம் நிதானமிழந்து பின்னூட்டிப் பதிவுமிட்டார்கள். வேறு யாரும் இதே குரலிலே பேசியிருந்தால், போகட்டுமென்று தோன்றியிருக்கும். ஆனால், வளர்மதியிடமிருந்து வரும்போது கொஞ்சம் உதைத்தது. அண்மைக்காலத்திலே என்னை உள்ளிட்ட பலரின் ஒரு நிலையைக் கவனித்தேன்; முற்றாக, மிடில் கிளாஸ் என்பதை மறுதலிக்கவும் அல்லது அதனை ஒரு தவறான மறைநிலையாகச் சொல்லவுமே பயன்படுத்துகிறோம். அந்த மிடில்கிளாஸின் மாங்காய்ச்சிந்தையை மாற்றுவதை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொள்ளாமல், விலகி நின்று வீயாக்கியானம் பேசுகிறோம். இதுவும் ஒரு மிடில்கிளாஸ் மெண்டாலிட்டிதான். சமூகத்திலே தன்னிருப்பினையும் இடத்தினையும் ஒத்துக்கொள்ளாமல், அந்தரத்திலே கால்பாவி நின்று ஆசீர்வாதமும் அறிவியலும் அவித்துக் கொட்டுவதிலே அர்த்தமில்லை. வளர்மதி அதைத்தான் செய்கிறார்.
-/பெயரிலி. என்பவனுக்கும் தமிழ்மணத்துக்கும் என்ன தொடர்பு, -/பெயரிலி. என்பவன் எவன் என்பதெல்லாம் நிச்சயமாகத் தமிழ்மணத்தினைப் பயன்படுத்தும் மிகப்பெரும்பான்மைக்குத் தெரியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால், இப்படியானவர்களிலே பலர் "விசைநெம்புகோலுடன் இணையத்தைப் புரட்டு" முயற்சியிலே பேசுவதில்லை; இங்கே சத்தமிட்டுக்கொண்டிருக்கும் சுகுணா திவாகர், லக்கி லுக், செந்தழல் ரவி, பொட்"டீ"கடை, ஓசை செல்லா போன்றவர்களுக்குத் தமிழ்மணத்தினைத் திட்டுவதென்பதும் -/பெயரிலி.யைத் திட்டூவதென்பதும் ஒன்றுதான். இதனை ஒத்துக்கொள்வீர்களென்று நம்புகிறேன். இவர்களுக்கு ஏதோ நான் மட்டுமே தமிழ்மணத்தின் நீக்குதல்களைச் செய்து அறிக்கைகளை எழுதுவது என்ற உணர்வு. இந்தக்கடைசிக்களேபரத்திலே, என் பங்கு ஒன்றுமேயில்லை - நடவடிக்கையினை மற்றைய தமிழ்மண நண்பர்களோடு இறுதியிலே ஆதரித்ததுதவிர. தமிழச்சியைப் புரட்சிச்செம்மல் என்று எண்ணிக்கொண்டு, அறிக்கை விடுகின்றவர்களைப் பற்றிச் சொல்வதற்கில்லை.
சுகுணா திவாகர் பற்றி நீங்கள் சொல்லும் கருத்து எனக்கு ஓராண்டு முன் வரை இருந்தது. ஆனால், வளர்மதியுடனான சண்டையிலே வீதியிலே அழுதுகொண்டுபோனேன் போன்ற உணர்வுக்குதம்பலின்பின்னான பல செயற்பாடுகளுடன் முற்றாகத் தேய்ந்து, நான் என்ன தமிழச்சிக்குச் சொன்னேன் என்பதை வாசிக்காமலே "தமிழச்சி-பூல்" என்றெல்லாம் எழுதியவர் என்னைக் காராசாரமாக விமர்சித்து எழுதியபோது இன்னமும் தேய்ந்து, கடைசியிலே அதற்காக நான் அவருக்கும் விளக்கி -/பெயரிலி. என்ற பெயருடன் எழுதிய பின்னூட்டத்தினைஅனுமதிக்காமல் தொடாந்தும் என் செயற்பாட்டைத் திட்டியபோது அற்றுப்போய்விட்டது. விமர்சிக்க இவருக்கு என்ன அருகதையுள்ளது? இதேபோலவே, ஜ்யோராம் சுந்தருக்குத் தமிழ்சசி தொழில்நுட்ப ரீதியிலே அவருடைய பதிவுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைச் சுட்டி, எவ்விடுகையும் விலக்கப்படவில்லை என்று எழுதிய பின்னூட்டத்தினை அவர் அனுமதிக்கவில்லை. ஆனால், தொடர்ந்தும் தன் பதிவு "நீக்கப்பட்டதற்கு" நக்கலாக எழுதிக்கொண்டிருக்கின்றார். இவ்வளவுதானா போராட்ட நேர்மை?
விடுங்கள். சந்திரமதி விவகாரத்துடன் இப்படியான "போராடப் பொய்யாகவேனும் ஓர் அதிகாரபீடம் தேடும் இணையப்போராளிகளைக் கண்டபின்" ஓரளவுக்கு ஒதுங்கி, தமிழச்சி விவகாரத்துடன் நான் எதிலுமே தலையிடுவதில்லை. Blogging is merely a self-gloating egostic popularity game, after all.
சுந்தர்,
பெயரிலி குறிப்பிட்ட தமிழ்சசியின் மடலும், நீங்கள் குறிப்பிட்ட அனானிப் பின்னூட்டமும் ஒன்றே. இதோடு முற்றுப்புள்ளி வைப்பதே நல்லது.
லக்கி,
அங்க போட்ட பின்னூட்டத்தில் உங்க பெயரை நீக்கிவிட்டு இங்க உங்களுக்கு மட்டும் தனியா இடலாமா? :-)
நன்றி, சுந்தரமூர்த்தி. நீங்கள் சொல்லியதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
இது எனக்கு இப்போது தேவையில்லாத பிரச்சனையும்கூட. அலுவலகம் சாப்பிடும் நேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தை என்னால் படிக்கவோ / எழுதவோ செலவிட முடிவதில்லை கொஞ்ச நாட்களாக - தேவையற்ற மன அழுத்தங்கள். (ஏன் பதிவெழுத வந்தோம் எனக்கூடத் தோன்றுகிறது சில சமயம்).
பெயரிலி தன்னுடைய குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டால் மகிழ்வேன்.
/பெயரிலி தன்னுடைய குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டால் மகிழ்வேன்./
சுந்தரமூர்த்தி சுட்டிக்காட்டியதுபோல, ஒரே பின்னூட்டமென்றால், நிச்சயமாக - முன்னரே இங்கே குறிப்பிட்டதுபோல- மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இனி -/பெயரிலி. அன்பர்களாலே இது என்ன மாதிரியாகத் திருப்பப்படும் என்பதை இருந்து பார்த்து மகிழுவோம் :-)
/இது எனக்கு இப்போது தேவையில்லாத பிரச்சனையும்கூட. அலுவலகம் சாப்பிடும் நேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தை என்னால் படிக்கவோ / எழுதவோ செலவிட முடிவதில்லை கொஞ்ச நாட்களாக - தேவையற்ற மன அழுத்தங்கள். (ஏன் பதிவெழுத வந்தோம் எனக்கூடத் தோன்றுகிறது சில சமயம்). /
நண்பரே,
இதையே எங்களை வைத்தும் எண்ணிப் பார்க்கத் தோன்றியிருக்கக்கூடாதா என்பதே என் ஆதங்கம் (உங்களை, வளர்மதியை அய்யனாரைப் பொறுத்த மட்டிலே மட்டும்)
//ஏன் பதிவெழுத வந்தோம் எனக்கூடத் தோன்றுகிறது சில சமயம்//
சுந்தர், எது எப்படியானாலும் பதிவெழுத கொஞ்சம் தடித்த தோல் வேண்டும் தான்.
மேலே குறிப்பிட்ட வரியை உங்கக்கிட்டேர்ந்து எதிர்ப்பார்க்கலை, போய்க் கொண்டிருக்கும் விஷயத்தின் நிலை/தீவிரம் புரிந்தாலும் கூட.
நகர்தல் மட்டுமே நிரந்தரம் என்ற புரிந்த பிறகும் நிற்றல் தவறு தான். தொடர்ந்து எழுதுங்க.
Go to google.com
Make a search for “tamilmanam.net dccreator”
You’ll get a link.
Now open the CACHED PAGE of this link in fire fox.
So what you get?
Now what do you say on this?
Thamizhmanam's CODER wanted to reject one particular blogger's comments & posts in any form automatically.
Whoz that coder and why did he do this? Is this Thamizmanam’s policy decision?!
Nope, reason is simple. That coder Thamizh Sasi's another (hidden) face was shown by this particular blogger long back. So ThamizhSasi wanted to show his power now.
How many of Thamizmanam OWNERS know this coding thillu mullu?!
ஆட்டம் சூடேறியிருக்கிறது இது நீங்கள் எழுத வந்த பிரச்சனையை விட பெரிதாகவிருக்கிறது...
லக்கி லுக்...said
////பெயரிலி அண்ணையோடு கும்மியடித்தால் இதுபோல நிகழ்வுகள் அவ்வப்போது சகஜமாக நடந்தேறும். அனுபவசாலி சொல்கிறேன். பார்த்துக்கங்க. அண்ணை அப்புறம் கொண்டோடியாவோ, கொழுவியாவோ பரதநாட்டியம் ஆடினார் என்றால் தாங்கமாட்டீர்கள், சொல்லிட்டேன்///
நிறைய அடிவாங்கி இருப்பிங்க போல...;)
//லக்கி,
அங்க போட்ட பின்னூட்டத்தில் உங்க பெயரை நீக்கிவிட்டு இங்க உங்களுக்கு மட்டும் தனியா இடலாமா? :-)//
சுந்தரமூர்த்தி அண்ணே!
சிரிக்கக் கூட உங்களுக்கு நேரமிருக்கா? :-)
எனிவே, இந்தப் பிரச்சினையில் என்னுடைய ஜட்டிக்கதைகள் மாட்டிக் கொண்டதை தவிர்த்து எனக்கு யார்மீதும், எதன்மீதும் எந்த காண்டுமில்லை என்பதை இங்கே மனந்திறந்து ஒப்புக் கொள்கிறேன்.
இந்தப் பிரச்சனை முடிந்தது.
ஆனால் ஜி நாகராஜன் உடைக்காத பருப்பு / அல்லது அவர் சொல்லாத என்ன எழவு சொல்லியிருக்கிறேன், பாவனையாக எழுதுகிறேன், would be charu என்பது போன்ற காட்டடிகளுக்குத் தனியாக பதில் எழுதுகிறேன்.
இந்தப் பதிவிற்கு வந்த மூன்று அனானிப் பின்னூட்டங்கள் வேவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் பட்டுள்ளன.
//சுந்தரமூர்த்தி அண்ணே!
சிரிக்கக் கூட உங்களுக்கு நேரமிருக்கா? :-)
//
"இடுக்கண் வருங்கால் நகுக!" என்று அய்யன் கலைஞர் குறளோவியத்தில் சொல்லியிருக்கிறாரே லக்கி :-)
பின்னூட்டமிட்ட சதீஷ்குமார், லக்கி லுக், கொழுவி, பெயரிலி, ராம், மு சுந்தர மூர்த்தி, மோகன் தாஸ், கிங், அனானிகள்.. அனைவருக்கும் நன்றி.
???
இந்த கேள்விக்குறிகளுக்கான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்...
அடக் கொடுமையே.. பெயரிலி இதே வேலையாத் தான் இருக்காரா?.. இது தெரியாம நான் ரொம்ப உணர்ச்சிவசப் பட்டு இவருக்காக ஒரு பதிவு போட்டுட்டேனே..
http://podian.blogspot.com/2008/08/blog-post.html
//Anonymous said...
From a technical perspective, both of you cannot prove "one way or other" that one party indeed "posted the comment" and the other party "never received the comment" conclusively.//
நான் நிரூபித்திருக்கேன் பாருங்கோ. :))
பெயரிலி அதை பார்த்தாரா இல்லையா தெரியவில்லை. இன்னும் அவர் தவறை ஒப்புக் கொள்ளவில்லை... நான் மன்னிப்பெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இனியும் இது போல முட்டாள்தனமான அவதூறுகளை பரப்பி யாரையும் காயப் படுத்தாமல் இருந்தாலே போதும். இதை செய்வாரா பெயரிலி?
கிங் & சஞ்சய்... நன்றி.
Post a Comment