வெகுநாட்கள் கழித்து
உன்னைச் சந்தித்த
அந்த ஞாயிறு நன்றாக நினைவிருக்கிறது
லேசாகக் கவிந்த செயற்கை ஒளியில்
வெளியிலுள்ளவர்களைக் கவனியாமல்
பருகிக் கொண்டிருந்தோம்
இள மஞ்சள் திரவத்தை
ஏசியின் உறுமலுடன் கலந்து
தவழ்ந்த மெல்லிய இசையை
கண்களை மூடி ரசிக்கின்றோம்
ஆனந்தமாக கழிந்தது பொழுது
நவீன ஓவியம் முறைக்க
வெளியில் வந்தோம்
தகிக்கிறது சாலை
கார்காலக் குறிப்புகள் - 60
12 hours ago
11 comments:
ஆஹா
//வெகுநாட்கள் கழித்து
உன்னைச் சந்தித்த
அந்த ஞாயிறு நன்றாக நினைவிருக்கிறது//
:)
:)
Hi,
எனக்கொரு சந்தேகம்..
நானொரு சாதாரண வாசகன்..
அது என்ன முன்/பின் நவீனத்துவம், புனைவு, கழிவிரக்கம், மீள்பதிவு..
இதன் அர்த்தம் மற்றும் அளவுகோல்கள் என்ன??
முடியும்பட்சதில் விளக்கவும்..
:)
உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்..
தல சுத்துது..
முரண்களை அழகாகச்சொல்கிறது.. ஆனால் அது மட்டுமேயல்ல வாழ்க்கை.
நன்றி, முரளி கண்ணன்.
நன்றி, சரவண குமார். நிஜமான ஆர்வமிருந்தால் தனிமடல் அனுப்பவும். படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்புகிறேன்.
நன்றி, கிருத்திகா.
This isnt kavithai. But Naveenam. Katturai.
Ok.
//நிஜமான ஆர்வமிருந்தால் தனிமடல் அனுப்பவும். படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்புகிறேன்.//
அதென்ன இப்படி கேட்டுட்டீங்க..
ஜிமெயில் மடல் அனுப்பியிருக்கிறேன்..
:)
நன்றி, ரமேஷ்.
நன்றி, சரவணகுமார். நானும் மடல் அனுப்பிவிட்டேன் :)
உங்க பேரையும் உங்க நண்பர் அதீதன் பேரையும் என்னொட உருவெளி சிதைவுகள் 3 - ல பயன்படுத்திருக்கேன்.
நன்றி, எழுதிட்டு அனுமதி கேக்குறதுக்கு மன்னிசிடுங்க தல. :)
AC ரூம்ல தண்ணியடிச்சதுக்கெல்லாம் கவுஜயா??
:))))
சுந்தர்,
நல்லா இருக்கு. 'வெளியுலுள்ளவர்களைக் கவனியாமல்', நவீன ஓவியம் முறைக்க' ரசித்தேன்.
அனுஜன்யா
Post a Comment