காமக் கதைகள் 45 (16)

வயஸி கதே க:காமவிகார:
சுஷ்கே நீரே க:காஸார:
க்ஷீணே வித்தே க:பரிவார:
ஞாதே தத்வே க:ஸம்சார:

பொருள் :

வயதாகிவிட்டபிறகு ஏது காம விசாரம்? நீர் வற்றியபிறகு ஏது ஏரி? பணமில்லாது போகும்போது எங்கே உறவினர்கள் (அ) சுற்றத்தார்கள்? ஆத்ம ஞானம் கிடைத்தபிறகு ஏது குடும்பம் / சம்சாரம் ?

(ஆதி சங்கரரின் பஜகோவிந்தத்திலிருந்து ஒரு பாடல்)

***

அலுவலகத்தின் உடன் பணிபுரியும் நித்யா சுமாரான தோற்றம் உடையவள். அவள்மீது ஆசை கொண்டான் அதீதன்.

நித்யாவிற்கு இவனது கதைகள் தெரிந்ததால் இவனைத் தவிர்க்க ஆரம்பித்தாள். தவிர்க்க ஆரம்பித்ததும், அவன் துரத்த ஆரம்பித்தான். 'வக்காளி, இவள விடறதில்லை'ன்னு முடிவு பண்ணிட்டேன் என்றான்.

அவளை வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு பைக்கில் அழைத்து வருவது, மாலையில் திரும்ப விடுவது போன்ற உபத்திரவமில்லாத வேலைகளைச் செய்யத் துவங்கினான். பைக்கில் நல்ல இடைவெளி விட்டே அமர்வான். நித்யாவிற்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தது. அவளும் தொடர்ந்தாள்.

ஒருநாள் மாலையில் அலுவலகம் முடிந்து கிளம்புகையில், கடற்கரைக்குப் போவோமா என்றான். சரி என்றாள். பிறகு, அடிக்கடி கடற்கரைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். கவிதை சொல்லிப் பார்த்தான், சினிமாவிற்குக் கூட்டிப் போனான், செக்ஸ் ஜோக் சொல்லிப் பார்த்தான். அவள் கேட்டுவிட்டு, பார்த்துவிட்டு, சிரித்தாள். ஆனால் இவனது முன்னேற்றங்களை அங்கீகரிக்கவேயில்லை.

அதீதனுக்கு வெறி ஏறிக் கொண்டே இருந்தது.

மதிய உணவின்போது அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். 'நீ இல்லாட்டி நான் செத்துடுவேன்' என்றான். அவள் மெதுவாக அவன் கைகளை அகற்றினாள். ‘சரி, செத்துப்போ' என்றாள்.

பிறகு வழக்கமான சினிமாவில் வருவதுபோல் அவன் தற்கொலைக்கு முயற்சிக்க, மருத்துவமனையில் அவனைப் போய்ப் பார்த்தாள் நித்யா....

அவன் காதலை ஏற்றுக் கொண்டாளே தவிர, அவளுக்கு உண்மையில் அதீதனைக் காதலிக்கிறோமோ எனச் சந்தேகமிருந்தது.

விடுமுறையன்று, அவளை வீட்டிற்கு அழைத்தான். வீட்டில் யாருமில்லாத நேரம். ஆஹா என காத்திருந்தான்.

அவள் வந்ததும், படுக்கையில் அவளைத் தள்ளி, பாய்ந்தான்.

முதல் முறை அவசரத்தில் முடித்துவிட்டது. இரண்டாவது முறை முயற்சிக்கையில் 'வேண்டாம் வலிக்கிறது' என்றாள்...

அதன்பிறகு அவனுடன் பழகுவதை முற்றாக நிறுத்திக் கொண்டாள்.

உண்மையில் அவள் ‘பிடிக்கவில்லை' என்பதைத்தான் வலிக்கிறது என்றிருக்கிறாள் என்றான் சோகமாக.

13 comments:

chandru / RVC said...

கதையின் தொடக்கம்.... அணுகுமுறை பிரமாதம். :)

//உண்மையில் அவள் ‘பிடிக்கவில்லை' என்பதைத்தான் வலிக்கிறது என்றிருக்கிறாள் என்றான் சோகமாக.//
கலக்கல்.
அதீதனின் சோகத்திற்கு காரணம்?
:) அதீதன் சோகமாகவெல்லாம் பேசுவாரா? pls explain.
வழக்கம் போல் இந்தக் கதையும் அமர்க்களம்.

மங்களூர் சிவா said...

/
'வக்காளி, இவள விடறதில்லை'ன்னு முடிவு பண்ணிட்டேன் என்றான்.
/

:)
நேச்சுரலாக பேசுவதைப்போலவே இருந்தது. கதை அருமை.

சுக்ரீயா said...

கதை அருமையாக உள்ளது.
எப்படியப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
உட்கார்ந்து யோசிப்பீங்க போலீருக்கு....

லக்கிலுக் said...

//நீர் வற்றியபிறகு ஏது ஏரி? //

மிகவும் ரசித்த வரிகள் :-)


//உண்மையில் அவள் ‘பிடிக்கவில்லை' என்பதைத்தான் வலிக்கிறது என்றிருக்கிறாள் //

காதலும், காமமும் ஒரே புள்ளியில் இருப்பதை இதைவிட சாமர்த்தியமாக சொல்லிவிட முடியாது. கலக்கல்!!

anujanya said...

சுந்தர்,

எல்லா 'வலிக்கிறது' (தலைவலி உட்பட)க்கும் 'பிடிக்கவில்லை' தான் உண்மைக் காரணம் என்று அதிதன் உணர்ந்திருப்பான். தொடருங்கள்.

லக்கி, மடிப்பாக்கத்திலேயே எத்தனை ஏரிகள் வீடுகளாகிவிட்டன! நிச்சயம் உங்களுக்குப் புரியும் நீர் வற்றுவதும் ஏரி இல்லாமற்போவதும்.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

rvc, மங்களூர் சிவா, சுக்ரீயா, லக்கிலுக் & அனுஜன்யா... நன்றி.

அப்பாஸ் Abbas said...

உங்கள் எலுத்து உடுக்கை அடித்து உரம் ஏற்றுகிறது.. பேச சிந்திக்கத் தயங்கும் கருத்துக்களை மிக எளிமையாக் எடுத்தாள்கிறிர்.

MSK / Saravana said...

காமக் கதைகள் 45 (15) போல் மொழி விளையாட்டு இதில் சற்றே குறைவு தான்.

ஆனால் ஒவ்வொரு பகுதியும் கதையை முன்னோக்கி நகர்த்தியாக வேண்டுமே..

மொழியோடு விளையாடினால் மட்டுமே போதுமா என்ன??

:)

Athisha said...

\\
(ஆதி சங்கரரின் பஜகோவிந்தத்திலிருந்து ஒரு பாடல்)
\\

பஜ கோவிந்தமா அவ்வ்வ்வ்வ்

;-))))))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அப்பாஸ், சரவணகுமார், அதிஷா... நன்றி.

சூர்யா - மும்பை said...

உண்மையில் அவள் ‘பிடிக்கவில்லை' என்பதைத்தான் வலிக்கிறது என்றிருக்கிறாள் .இதுதான் சுந்தரின் டச் .அசத்துங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சூர்யா.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு அனானிப் பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது.