காமக் கதைகள் 45 (15)

அதீதனுக்குப் பிடித்த பாடல் வரிகள் : ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏறாதே; கற்பனை இல்லாமல் கட்டில்மேல் சேராதே..

குறி த்துக் கொள் நண்பா காமத்திற்கு கா தான் முக்கியம். மொழியின் குறி ச்செயல்பாடு அப்படியிருக்கிறது.

மதத்திற்காகவும் பணத்திற்காகவும் போரிட்டதை விட பெண்களுக்கான போர்களே அதிகம் நடந்திருக்கின்றன.

பாலுமகேந்திரா படங்களில் வரும் கதாநாயகர்கள் ஏன் சட்டையணியா மார்புடன் காட்சி தருகிறார்கள். தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பிடித்த கதாநாயகர்கள் யார்?

அதீதனின் நண்பன் ஷ்யாம். இருவரும் காதலித்திருக்கிறனர் சியாமளாவை. இருவரில் யாருக்கு சியாமளா கிடைப்பாள் எனப் பந்தயம் கட்டியிருந்தனர்.

ஒன்பதிலிருந்து ஒன்று வரை எண்ணிக்கே கொண்டே இருங்கள்.

காம இச்சை கூடும் போது பச்சைத் தண்ணீரைத் தலையில் கொட்டிக் கொள்ளுங்கள். அல்லது கலவியில் ஈடுபடுங்கள்.

டிரைவர்கள் முன்னோடும்;
விழியோரம் பெண்ணாட
விழியோடும் பெண்ணோடு
கரம்பூம்பூம் என்றாட்டும்.

என்ற சி மணியின் கவிதையில் வருவது லாரி டிரைவர்களாகத்தான் இருக்க முடியுமென நினைப்பவன் அதீதன். என்னுடைய சமூகச் சூழல் எனக்கு அதைத்தான் கற்றுத் தந்திருக்கிறது என்றான்.

வாலி இறந்ததாய் நினைத்து அவன் மனைவி தாரை சுக்ரீவனுடன் இணைந்து கொண்டாள்.

மனைவிகள் விருப்பமில்லையெனில் சொல்லும் காரணம் தலைவலி என்பதாகவே ஏன் பெரும்பாலும் இருக்கிறது?

தமிழ்மணத்தில் காமக் கதைகள் தலைப்பிற்கு தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழில் அதிகம் பார்க்கப்படும் வலைப்பூவின் முகவரி தெரியுமா உங்களுக்கு?தேடுபொறியில் அதிகம் தேடப்படும் வார்த்தை செக்ஸ்.

இளமையில் அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளுக்கான மருந்துகளில் புழங்கும் பணம் எவ்வளவு கோடிகள்.

தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும். அவ்வாறு இளைக்குமுடல் அப்பெண்ணைச் சேர்ந்து அவள் குண்டாவாள். சுயபோகம் உடலுக்குத் தீங்கானது. போகமின்மை கொல்வது.

செக்ஸ் கல்வி பள்ளிகளில் தேவையில்லை என்பது பெற்றோர்களின் பெருவாரியான கருத்து.

பாடப்புத்தகத்திற்குள் மஞ்சள் பத்திரிகையை ஒளித்துவைத்துப் படித்துக் கொண்டிருக்கிறாள் ஒன்பதாம் வகுப்பு மாணவி.

காமசூத்ராவில் உள்ள 7 பகுதிகள் சாதாரணம், சாம்பிரயோகிகம், கன்யாசம்பிரயுக்தகம், பார்யாதிகாரம், பாராதாரிகம், வைசிகம், ஔபமிஷாதிகம்.

கடலில் காணப்படும் ஆய்ஸ்டர் உணவு (சிப்பி வகை) ஆண்களின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்கக் கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதீதனுக்குப் பால்வினை நோய் இருக்கிறதா என ஏன் கரிசனப்படுகிறார்கள் மக்கள் என்பது புரிகிறதா? எய்ட்ஸ் அமெரிக்கா உருவாக்கிய பூதம் என்றான் அதீதன்.

அதீதனை ஸ்திரீ லோலனாகவோ அல்லது விடலைப் பையனாகவோ அல்லது குடிகாரனாகவோ அல்லது கலக்காரனாகவோ அல்லது அதிகாரத்தைக் கட்டவிழ்ப்பவனாகவோ அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது

14 comments:

லக்கிலுக் said...

//கடலில் காணப்படும் ஆய்ஸ்டர் உணவு (சிப்பி வகை) ஆண்களின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்கக் கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
//

இந்த சிப்பி வகை உணவு மெரீனா பீச்சில் கிடைக்குமா என்று கேட்கச் சொன்னார்கள் :-)


//தமிழ்மணத்தில் காமக் கதைகள் தலைப்பிற்கு தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.//

டைமிங்காக அடிக்கிறார் அதீதன்!


//தமிழில் அதிகம் பார்க்கப்படும் வலைப்பூவின் முகவரி தெரியுமா உங்களுக்கு?//

tamil-stories.blogspot.com என்று நினைக்கிறேன் :-) நல்லா Content ஜெனரேட் பண்ணி வெச்சிருக்கானுங்க. கூகிளில் எந்த தமிழ் வார்த்தை போட்டு தேடினாலும் இது வந்துடுது...


//தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும்.//

உடல் குண்டாக என்ன செய்யவேண்டும்?

- இதுவரை வந்த கதைகளிலேயே ரொம்பவும் பிடித்த கதை இது... வழக்கம்போல சூப்பர்...

அனுஜன்யா said...

சுந்தர்,

இந்தக் கதை (?) நல்லா வந்திருக்கு. Explicit வார்த்தைகள் இல்லாமல், நீங்கள் எந்த மொழி விளையாட்டை விளையாட விழைந்தீர்களோ, அது கைகூடுவதாக உணர முடிகிறது. குறி த்துக்கொள் முதல், சி.மணி கவிதை, பாலு மகேந்திரா நாயகன், மனைவிகளின் தலைவலி, தமிழ்மண நிகழ்வு என்று போய், 'அல்லது அல்லது' என ஒரே அதகளம் பண்ணிவிட்டீர்கள். Please take a bow.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

லக்கிலுக் & அனுஜன்யா... நன்றி.

அதிஷா said...

\\
தமிழில் அதிகம் பார்க்கப்படும் வலைப்பூவின் முகவரி தெரியுமா உங்களுக்கு?தேடுபொறியில் அதிகம் தேடப்படும் வார்த்தை செக்ஸ்.
\\

முதல்ல tamil-stories
நெக்ஸ்டு madippakkam
உங்க வலைப்பூவுக்கு தேர்டு பிளேஸுதான்

\\
மனைவிகள் விருப்பமில்லையெனில் சொல்லும் காரணம் தலைவலி என்பதாகவே ஏன் பெரும்பாலும் இருக்கிறது?
\\

ஆமால

மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்

\\
காம இச்சை கூடும் போது பச்சைத் தண்ணீரைத் தலையில் கொட்டிக் கொள்ளுங்கள். அல்லது கலவியில் ஈடுபடுங்கள்.
\\

;-)

இராம்/Raam said...

உங்களுடைய மொழி பிரயோகம் வியக்க வைக்கிறது.... :)

வெண்பூ said...

சின்ன சின்ன வரிகளாக நல்ல நடை & கருத்துகள் சுந்தர். இதை கதை என்பதா? கட்டுரை என்பதா? துணுக்குகள் என்பதா?

பின்குறிப்பு: அதீதன் தன் பெயரின் கடைசி 2 எழுத்துகளை மட்டும் உபயோகப்படுத்த சொன்னதாக ஞாபகம்.:)

கயல்விழி said...

//தமிழில் அதிகம் பார்க்கப்படும் வலைப்பூவின் முகவரி தெரியுமா உங்களுக்கு?தேடுபொறியில் அதிகம் தேடப்படும் வார்த்தை செக்ஸ்.
//

திரிஷா குளியல் விவகாரம் வெளிவந்த போது இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை "திரிஷா"வாம்.
கலாச்சாரக்காவலர்கள் தான் பதில் சொல்லவேண்டும்!

Ram said...

Food, Sex, Thoughts, taking a dig at USA. Nice one!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதிஷா, இராம், வெண்பூ, கயல்விழி & ரமேஷ்... நன்றி.

M.Saravana Kumar said...

// இராம்/Raam said...
உங்களுடைய மொழி பிரயோகம் வியக்க வைக்கிறது.... :)//

அதிகம் வியக்க வைக்கிறது..

எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது..?? இதுதான் மொழி விளையாட்டோ?????

மங்களூர் சிவா said...

//தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும்.//

உடல் குண்டாக என்ன செய்யவேண்டும்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சரவணகுமார் & மங்களூர் சிவா... நன்றி.

வால்பையன் said...

////தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும்.//

உடல் குண்டாக என்ன செய்யவேண்டும்?//

எனக்கும் இதே சந்தேகம் உண்டு.

வால்பையன்

வெண்பூ said...

//
//தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும்.//

உடல் குண்டாக என்ன
செய்யவேண்டும்?
//

நல்லா சாப்புடங்கப்பு.. வேறென்ன சொல்ல...