சூசிப் பெண்ணே ரோசாப் பூவே

நகுலன் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் - கவிஞர். அவரைப் பற்றிய பேச்சுவந்தால் நாளெல்லாம் பேசி / கேட்டுக் கொண்டிருப்பேன். அவருடைய சில கவிதைகளை என்னுடைய குறிப்புகளுடன் பதிவிடவேண்டுமென்பது நெடுநாளைய விருப்பம். அதற்கு முன்னோட்டமாக இது.

நகுலனின் பேட்டியொன்று 1991ல் கல்குதிரை (நகுலன் சிறப்பிதழ்?) வந்திருந்தது. அப்பேட்டியில் அவரது கவிதையொன்றின் வரிகளைக் கொடுத்து விளக்கச் சொல்லியிருப்பார்கள். அது பற்றி அப்போது நண்பர்களிடம் பேசியது நினைவிருக்கிறது.

இப்போது நகுலன் இலக்கியத்தடம் புத்தகத்தில் அதை மீண்டும் படித்தபோது அந்த ஞாபகங்கள் துளிர்விட்டன. பேட்டியின் அப்பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.

கவிதை வரிகள் :

1. காகிதம் கிறுக்கிக் கவியானேன்
2. இருந்தாலும்
3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு
4. மனம் நினைவு கூறும் அந்த முள்பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.
5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே
6. சாதாரண பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும்.
7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் ஆனந்தத்தை எய்துகிறேன்
8. நான் நானாக நாலுவிதம்
9. மனிதன் சாவிற்கு உள்ள அர்த்தத்தை கற்பிக்குமாறு போல
10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை

இனி அவரின் 'விளக்கங்கள்'. இது கவிதை மற்றும் கவிதையாக்கம் குறித்த அவரது thought processஐ புரிந்து கொள்ள உதவியாயிருக்குமென நினைக்கிறேன். :

1. காகிதம் கிறுக்கிக் கவியானேன் :

நான் முன்பு சொன்னமாதிரி முறையான படிப்பு படித்ததை படித்தபடியே சொல்வது என்பது - நமது சிந்தனை வளர்ச்சியை தடுக்கிறது. மாணவன் என்ற நிலையிலும் விரிவுரையாளன் என்ற நிலையிலும் எனக்குத் தெரிந்த வரையில் நான் அதிகமாக யாரையும் என்னைக் கவனிக்கும்படி ஒன்றும் செய்யவில்லை. என்னமோ படிக்கிறேன் அது எங்கேயோ போகிறது. அது எப்பொழுதோ மேல் விளிம்பில் வருகிறது. அப்பொழுது எழுத்து உருவாகிறது. ஒரு வழியில் சொல்லப்போனால் நாவிலிருந்துதான் நாதம் முளைக்கிறது என்று தோன்றுகிறது. பிளேட்டோ சொன்னமாதிரி நம் மனதில் இருப்பதைத்தான் நாம் எந்தப் புஸ்தகத்திலும் பார்க்கிறோம். இங்கு சொல்லப்பட்ட வரிகளில் முதல்வரி என் நினைவு சரியென்றால் தி சோ வேணுகோபலின் கவிதை ஒன்றிலிருந்து வந்தது என்று நினைக்கிறேன்.

2. இருந்தாலும் :

இருந்தாலும் என் புத்தி பின்னர் எந்த ஒரு கருத்தையோ அனுபவத்தையோ சோதனை செய்யும் ஒரு திருப்பம்.

3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு :

இது வர்ஜீனியா உல்ஃப் என்ற ஆசிரியையின் ஒரு புஸ்தகத்திலிருந்து என் மனதில் புகுந்ததென்று நினைக்கிறேன். நமது பரிபாஷையில் சொல்வதென்றால் சிருஷ்டி என்பதுகூட அர்த்த நாரீஸ்வர வடிவந்தாங்கியது, அது தொழில் படுகையில்.

4. மனம் நினைவுகூறும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது :

இதுகூட மிகவும் நைந்து போன விஷயம். இதன் அடிப்படை படைப்புத் தொழிலை நாம் முன்கூட்டிக் கருதிச் செய்யமுடியாது என்பதுதான். இந்த அடிப்படை தற்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. என் வகையில் இதைச் சொல்வதென்றால் என்னை அறியாத ஒரு வேகத்திற்கு ஆட்பட்டு நான் செயல்படுகிறேன்.

5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே :

இதுவும் ஓசை இன்பத்திற்காக எழுதப்பட்டது. இதற்குப் பின்னால் சுசீலா என்று கூறப்படும் ஒரு பெண்ணின் உருவம். இதைக் கூறுகையில் இந்த சுசீலாவைப் பற்றி ஒரு நண்பர் கூறியது ஞாபகம் வருகிறது. சுசீலாவின் சிறப்பு சுசீலாவில் இல்லை என்று.

6. சாதாரணப் பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும் :

இது H G வெல்ஸ் எழுதிய நாவலில் வாசித்த வாக்கியத்தின் மனதில் பதிந்த வரி.

7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் நான் ஆனந்தத்தை எய்துகிறேன் :

இதற்குச் சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வேளை ஒரு பைத்தியநிலையாகவும் இருக்கலாம். தற்கொலை என்பதற்கு ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நான் தற்கொலை செய்ய முயற்சித்ததுண்டு. ஆனால், நான் அதில் செயல்படவில்லை. இன்றுகூட சில நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. இனியும் வாழ்ந்து என்ன பயன். தற்கொலை செய்துகொண்டால் என்ன என்று, அவர் சொன்னார் : 69 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இதை ஏன் சொல்ல வேண்டும் முன்னாடியே செய்திருக்க வேண்டும் என்றார். இதன் அடிப்படை எந்த ஒரு குறிக்கோளையும் அடைவதற்கு - அடைவதென்பதே நம்மை நாமே சித்ரவதை செய்வது போன்ற ஒரு அனுபவம். ஒரு வகையில் தோன்றுகிறது. திருப்தியான வாழ்க்கை உடையவர்கள் படைப்பிலக்கியம் படைக்க முடியாதென்று.

8. நான் நானாக நாலுவிதம் :

இதற்குக்கூட மூலம் D H லாரன்ஸ் எழுதிய ஒரு வாக்கியம் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட உருவம் உண்டு, என்ற நிலையை இன்று நாம் காண்பதற்கில்லை என்று அவர் சொல்லியிருந்தார். பல உணர்ச்சிகள் பல சிந்தனைகள் தன்னோடு வாழ்வதற்கு தான் ஒரு வடிகால் என்ற அளவுக்கு மனிதத் தனித்துவம் மாறுபட்டு விட்டதென்று.

9. மனிதன் சாவதற்கு உள்ள அர்த்தத்தைக் கற்பிக்குமாறு போல :

இதற்குப்பின் பலமனிதர்கள் - வள்ளுவர் வேறொரு நிலையில் வேறொரு பொருளில் கூறிய மாதிரி, சிலரைக் காணும்போது செத்தவர்களும் உயிருடன் இருக்கிறார்களே! என்ற ஒரு வியப்புணர்ச்சி.

10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள் :

இவையெல்லாம் கேள்விமூலம் படித்த புத்தகங்கள் பிரக்ஞையில் விட்டுச் சென்ற பகுதிகள். Grdrudestin ஒரு இடத்தில் ஒரு வார்த்தையைத் திருப்பித் திருப்பி எழுதினால் அதற்கு பல்வேறு அர்த்தங்கள் வேண்டுமென்றில்லை என்று சொல்லியிருக்கிறான். அவருடைய புஸ்தகங்களை முழுவதும் புரிந்துகொண்டு படித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால் மொழி மூலம் படைப்புத் தொழிலை நடத்தும் எந்த எழுத்தாளனுக்கும் மொழியைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் எல்லைமீறிச் செல்கிறது. இந்த வாக்கியத்தின் அடித்தளம் இதுதான்.

11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை :

இதுவும் பாரதத்தில் இருந்து வந்த ஒரு தகவல்.

நகுலனின் பார்வையை ஓரளவிற்குப் புரிந்துகொள்வது அவருடைய கவிதைகளை அணுக உபயோகமாயிருக்கும். எனவே...

16 comments:

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அண்ணன்...

வார்ர்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்!
மொழி எவ்வளவு ஆழமாயிருக்கிறது.

புதுகைச் சாரல் said...

ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரைசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழைநிஜார் போட்ட மனிதனின் பேஜார்

அனுஜன்யா said...

அட்டகாசம். மீள் வாசிப்பு அவ்வப்போது செய்யவேண்டியது உசிதம். குறிப்பாகக் கவிஞர்கள். தொடருங்கள் சுந்தர்.

அனுஜன்யா

வால்பையன் said...

கவிதையின் விளக்கமே புரிய மாட்டிங்குதே!
கவிதை எப்படி புரிய போகுது என்ன மாதிரி ஞானசூன்யங்களுக்கு!
இதுகெல்லாம் உங்கள மாதிரி நிறைய வாசிப்புனுபவம் வேணும்!

Wahe Guru said...

ஒரு எழவும் புரியலை, இருந்தாலும் படித்து தொலைத்தேன்---குரு

கிருத்திகா said...

நகுலனை மீள் வாசிப்புக்களிலேயே நம்முள் இருத்திக்கொள்ளமுடிகிறது. இந்தப்பகுதிக்கு மிக்க நன்றி சுந்தர்.

முரளிகண்ணன் said...

thank you

narsim said...

// அனுஜன்யா said...
அட்டகாசம். மீள் வாசிப்பு அவ்வப்போது செய்யவேண்டியது உசிதம். குறிப்பாகக் கவிஞர்கள். தொடருங்கள் சுந்தர்.

அனுஜன்யா
//
அனுஜன்யா said...
அட்டகாசம். மீள் வாசிப்பு அவ்வப்போது செய்யவேண்டியது உசிதம். குறிப்பாகக் கவிஞர்கள். தொடருங்கள் சுந்தர்.

அனுஜன்யா
// அதாவது ரிப்பீட்டு..

SanJaiGan:-Dhi said...

வழிதவறி வந்துட்டேன்.. இதோ கிளம்பிட்டேன் சாமி.. :(

மாதவராஜ் said...

சுந்தர்!

ரொம்ப நன்றி. நகுலனின் கவிதைகளோடு பரிச்சயம் இல்லை. இதற்கு முன்னரும் சில நண்பர்கள் மூலம் கேட்டிருக்கிறேன். தங்கள் ப்திவு, நகுலனை வாசி என்று விரட்டுகிறது.

Anonymous said...

What is your opinion about the following article?

http://www.tamilhindu.com/2009/01/mangalore-attacks-condemned/

மின்னல் said...

நகுலன் உதிர்க்கும் சொல் எல்லாமே கவிதையாகி இருக்கின்றதே.

படிக்க தூண்டும் பதிவு. நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தமிழன் - கறுப்பி, புதுகைச் சாரல், அனுஜன்யா, வால்பையன், குரு, கிருத்திகா, முரளி கண்ணன், நர்சிம், சஞ்சய், மாதவராஜ், அனானி, மின்னல்... நன்றி.

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

பரிசல்காரன் said...

வார்த்தைகள்

வார்த்தைகள்

வார்த்தைகள்


ப்பா! பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. நீங்கள் எழுதாவிட்டால் தெரியாமலே, இதைப் படிக்காமலே போயிருப்போமே என்று பதை பதைக்க வைக்கிறது. நன்றி.

ஆதவா said...

யப்பா... முற்றிலும் புதிய அனுபவம்... ஆனாலும் அந்த கவிதைக்கு அர்த்தம் படித்த பின்னர் ஒன்றுமே விளங்கவில்லை..

மொழி ஆளுமை என்பது எளிதில் அமையும் வரமல்ல..

பகிர்வுக்கு நன்றி..