எதைப் பற்றியும்

பூனை ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடிக் கொண்டிருந்தது
படித்துவிட்டுப்
புரியவில்லையே என
யோசித்துக் கொண்டிருந்தேன்
மழை பெய்யப் போவது போல்
வந்த மேகங்களைக்
கிழித்துக் கொண்டு
சூரிய ஒளி
கல்யாண மேடையில்
தாலி கட்டிக் கொண்டிருந்தான்
முறைத்துப் பார்த்துப் போனது
நான் காடு பள்ளம்

(நடு கல் 14 - 1994 ஏப்ரலில் வெளியானது)

14 comments:

Wahe Guru said...

புரியவில்லை சுந்தர்---விளக்கவும்--குரு

narsim said...

.........

ஆதவா said...

எனக்கும் புரியவில்லை... கொஞ்சம் விளக்கிவிடுங்கள்...

அன்புடன்
ஆதவன்

அனுஜன்யா said...

திரு.வாசகன் எங்கிருந்தாலும் இங்கு வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்.

இவண்

நர்சிம்
அனுஜன்யா

thevanmayam said...

பூனை ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடிக் கொண்டிருந்தது
படித்துவிட்டுப்
புரியவில்லையே என
யோசித்துக் கொண்டிருந்தேன்
மழை பெய்யப் போவது போல்
வந்த மேகங்களைக்
கிழித்துக் கொண்டு///

படித்துவிட்டேன் புரியவில்லை

narsim said...

//அனுஜன்யா said...

திரு.வாசகன் எங்கிருந்தாலும் இங்கு வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்.

இவண்

நர்சிம்
அனுஜன்யா
//

Month end தொல்லையையும் மீறி ரசித்துச் சிரித்தேன் அனுஜன்யா..

Anonymous said...

எனக்கும் புரியவில்லை.

மின்னல் said...

எனக்கும் புரியலை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

குரு, நர்சிம், ஆதவா, அனுஜன்யா, தேவன்மயம், வடகரை வேலன், மின்னல்... நன்றி.

இது எதிர்-கவிதை (counter poetry). புரிவதற்கோ அல்லது புரியாமல் போவதற்கோ ஒன்றுமில்லை :)

கார்க்கி said...

ஓட்டுப் போடிருக்கும் மீதி இரண்டு பேருக்கு புரிந்தத்தா? ஆமெனில் சொல்லுங்கப்பா.. இல்லையெனில் எதுக்கு ஓட்டுப் போட்டிங்க?

தல நீங்க திமுகவா இல்லை மதுரையா?

வால்பையன் said...

//திரு.வாசகன் எங்கிருந்தாலும் இங்கு வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்.

இவண்

நர்சிம்
அனுஜன்யா//

என்னையையும் ஆட்டையில சேர்த்துகோங்க!

முரளிகண்ணன் said...

//திரு.வாசகன் எங்கிருந்தாலும் இங்கு வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்.

இவண்

நர்சிம்
அனுஜன்யா//

என்னையையும் ஆட்டையில சேர்த்துகோங்க

:-)))

மதன் said...

//புரிவதற்கோ அல்லது புரியாமல் போவதற்கோ ஒன்றுமில்லை :)//

சிரமத்தைப் புரிந்து கொண்டதற்கு நன்றி சுந்தர்..!:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கார்க்கி. விழறதே ஒன்னோ ரெண்டோ ஓட்டு. அதையும் ஏன்யா கெடுக்கறீங்க :)

நன்றி, வால்பையன்.

நன்றி, முரளி கண்ணன்.

நன்றி, மதன்.