Wednesday, January 7, 2009

காதலும் போதையும்

என்ன செய்வது தெரியவில்லை
என்றேன்
என்ன செய்வது தெரியவில்லை
என்றாள்
ஒன்றும் செய்யாமல் இருந்தோம்
இதமாகத்தான் இருக்கிறது
இதுவும்
(இந்துமதிக்கு)

(மவ்னம் 7 - செப்டம்பர் 1994ல் வெளியானது)

வாங்க வாங்க
கடன் தான்
குடிக்கக் குடிக்க
போதை தான்

(நடு கல் 13 - ஜனவரி 1994ல் வெளியானது)

11 comments:

  1. நன்று..

    [எனக்கு மட்டும் ஏன் இது மாதிரி கவிதைகள் வந்து தொலைய மாட்டேங்குது.. எதுக்கு இப்படி பக்கம், பக்கமா மாங்கு, மாங்குன்னு கழுதை மாதிரி டைப் பண்ணணும்..? முருகா நீ செய்த சதியோ..?]

    ReplyDelete
  2. //ஒன்றும் செய்யாமல் இருந்தோம்
    இதமாகத்தான் இருக்கிறது//

    நம்பமுடியவில்லை
    ம்பமுடியவில்லை
    பமுடியவில்லை
    முடியவில்லை
    டியவில்லை
    யவில்லை
    வில்லை
    ல்லை
    லை
    .

    ReplyDelete
  3. //வாங்க வாங்க
    கடன் தான்
    குடிக்கக் குடிக்க
    போதை தான்//


    வாங்க வாங்க
    போதை தான்!
    குடிக்க குடிக்க
    கடன் தான்!

    இது என் அனுபவம்!!

    ReplyDelete
  4. காதலிக்கும் போதும் , குடிக்கும் போதும் limit தெரிவதில்லை ..
    வாந்தி வந்த பின்னர் தான் தெரியும் நாம limit-ஐ மீறிவிட்டோம் என்று.
    சொல்றது புரியுதா ?

    ReplyDelete
  5. //குடிக்கக் குடிக்க
    போதை தான்/


    சரிதான்.

    ஆனா அளவுக்கு மிஞ்சினா
    வாந்தி
    வாந்திதான்

    ReplyDelete
  6. !
    முதல் கவிதை நெடுநாட்களாய் என் மனதிற்குள் இருப்பது... ஆனால் இவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்ல தெரியாமல் சொற்களை புதைய விட்டிருந்தேன்..

    ReplyDelete
  7. இரண்டாவது நறுக்கென்றிருக்கிறது...


    கவிதை சுடும் அல்லது
    உண்மை சுடும்!

    :)

    ReplyDelete
  8. உண்மைத் தமிழன், TamilBloggers Unit, வால்பையன், தமிழ் சினிமா, மந்திரன், அத்திரி & தமிழன் - கறுப்பி... நன்றி.

    ReplyDelete
  9. எனக்கு காதலை அதிகம் தெரியாது,ஆனால் பொதை பற்றி தெரியும்---ரம்ஜி குரு

    ReplyDelete