Sunday, February 1, 2009

வெற்றி வெற்றி, இந்தியா வெற்றி!!

இன்றைய இரண்டாவது போட்டியில் இந்தியா இலங்கையை வென்றிருக்கிறது. இது நாம் தொடர்ந்து பெறும் ஏழாவது வெற்றியாகும்.

நவம்பர் மாதம் நம்மை ஆட்சி செய்த இங்கிலாந்தை ஐந்துமுறை வென்றோம். அது clean sweep எனச் சொல்லக்கூடிய ஏழு வெற்றியாக ஆகியிருக்க வேண்டியது, பயங்கரவாதிகளின் செயலால் முக்கால் கிணறு தாண்டிய நிலையில் நிறுத்தப்பட்டது. இப்போது நாம் ஆட்சி செய்ய விரும்பும் இலங்கையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றிருக்கிறோம்.

இனிமேலாவது அகண்ட பாரதக் கனவுகள் தவறென்று யாரும் சொல்ல மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

முதல் போட்டியில் நாம் சேஸ் செய்து வென்றோம். அவர்கள் 246 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நமது வீரர்கள் - குறிப்பாக தோனி, கம்பீர் போன்றவர்கள் - நன்றாக ஆடி போட்டியை ஜெயித்துக் கொடுத்தனர்.

ஆனாலும் பாருங்கள் சதம் அடித்ததற்காக ஜெயசூர்யாவிற்கே ஆட்ட நாயகன் விருது தந்திருந்தார்கள். இன்று அது 57 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக இஷாந்த் ஷர்மாவிற்குக் கொடுக்கப்பட்டதன் மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. 93 ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் கடாம்பிக்கு நம் வருத்தங்கள் உரித்தாகுக.

இன்றைய போட்டியில் முதலில் ஆடி வென்றிருக்கிறோம். நேற்று பேட்டியில் தோனி விளக்கு வெளிச்சத்தில் சேஸ் செய்வதைப் பற்றிய தன்னுடைய தயக்கங்களைத் தெரிவித்திருந்தார். அப்போதிலிருந்தே என்னைப் போன்ற பலருக்கு மன நெருக்கடி வந்துவிட்டது. நல்ல வேளையாக இன்றும் அவர் டாஸ் ஜெயித்துவிட்டார். நாம் முதலில் பேட் செய்தோம்.

ஆனாலும், நாம் முதலில் பேட் செய்தாலும் சரி, பௌலிங் செய்தாலும் சரி, இந்தியாவுக்கே வெற்றி என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

எப்போதுமே இலங்கை தன் மண்ணில் விளையாடும்போது வெற்றியே பெறும். ஆஸ்திரேலியா வலுவாக இருந்தபோதே அங்கு தோற்றிருக்கிறது. ஆனால் இப்போதைய நம் இளஞ்சிங்கம் தோனியின் தலைமை அந்த இலங்கை மேலாண்மையை அவர்கள் மண்ணிலேயே முறியடித்திருக்கிறது. . சென்ற முறை டெஸ்ட் தொடர்களில் தோற்றதற்குக் காரணம் கும்ப்ளே போன்ற வயதான தலைவர்களே. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் நாம் ஜெயித்திருந்தோம் என்பதிலிருந்தே தலைமைக்கு இள ரத்தம் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.

இந்நேரத்தில் நம்முடைய நாயகர்களை நாம் அங்கீகரிக்காமல் இருப்பது தவறு. சென்ற போட்டியில் தோனி, கம்பீர், ரைனா அரை சதம் அடித்திருந்தனர். அதில் தோனி ஆட்டமிழக்காமல் வேறு இருந்திருக்கிறார் (அதனால்தான் ஒரு நாளைக்கு 3 லிட்டர் பால் குடிக்க வேண்டுமென்று நான் சொல்கிறேன். போலவே போஷாக்கான உணவுகளும் வேண்டும் நல்ல திடகாத்திரமான உடல் வலிமைக்கும் விளையாட்டுகளில் அடுத்த நாடுகளை வெல்வதற்கும்). இன்றைய போட்டியில் யுவ்ராஜ் சிங், ஷேவாக் அரை சதம் அடித்திருக்கின்றனர். பிரவீன் குமார் 8.3 ஓவர்களில் 22 ரன்களே கொடுத்திருக்கிறார் எனும்போது அவரது பங்கும் மிகப் பெரிய பாராட்டுக்குரியது.

வேண்டுமென்றே முத்தையா முரளிதரன் தான் தமிழன் என்பதற்காக விட்டுக்கொடுத்தார் எனச் சிலர் சொல்லலாம். ஆனால் அதிலெல்லாம் உண்மையில்லை என்பதை நேரடி ஒளிபரப்பில் பார்த்த 100 கோடிக்கு மேலான இந்தியர்களும் உணர்ந்திருப்பார்கள்.

ஐந்து போட்டிகள் உள்ள இந்தத் தொடரில் நாம் ஐந்திலும் வெல்ல வேண்டும் என வேண்டிக் கொள்வோம். தொடர் முடிந்தபின் அடுத்தகட்ட நிலவர அறிக்கை வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவ்வளவுதான்.

15 comments:

  1. சுந்தர்ஜி,

    இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள்.
    சூடான பதிவா??!! :-))

    ReplyDelete
  2. சுந்தர்ஜி,

    இதை சொல்லம விட்டுட்டீங்களே, ஜெய்ஹிந்த், பாரத் மாதா கீ ஜெ

    எப்ப இந்த கிரிக்கெட் எழவை தமிழன் பார்க்கிறதை நிறுத்தறானோ அப்போ தான் உருப்புடுவான்

    ReplyDelete
  3. நல்ல பதிவு. அருமையாக எழுதி இருக்குறீங்க

    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

    ReplyDelete
  4. ஆஹா, சரியான நேரத்தில் சரியான பதிவு.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலையை சில்லறை காரணங்களுக்காக சில தேசத்துரோகிகள் ஏற்படுத்திவிட்டனர்.

    உங்களைப்போன்ற உணர்வாளர்கள் இருப்பதால்தான் நம் அன்னைபூமி மேதினியில் பீடுநடைபோடுகின்றாள்.

    கிரிக்கெட் போட்டிய பாக்கும்போது மட்டுந்தான் என் இந்திய ரத்தம் சூடேறுது

    இந்தியன்ங்கிற உணர்வ தட்டி எழுப்ப இதவிட்டா நமக்கு வேற நாதியில்ல.

    இலங்கை மட்டுமல்ல, அனத்து நாடுகளையும் தோற்கடித்து நம் பாரதபூமி வல்லரசாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.


    வாழ்க இந்திய ரத்தம், வீழ்க டுபாக்கூர் ரத்தம்.

    இத்தாலி மாதா கீ ஜே.

    ReplyDelete
  5. கிரிக்கெட்டில் (ரன் எடுப்பதில்) மட்டுமா நாம் இலங்கையை வென்று இருக்கிறோம்.

    அப்பாவி தமிழர்களை கொல்வதிலும் கூட இலங்கை ராணுவத்தை இந்திய இராணுவம் முந்தி இருக்கிறதே.

    இலங்கை ராணுவத்தை விட இந்திய இராணுவம் அளித்த பீரங்கிகள், வெடி குண்டுகள் தானே அதிக தமிழர்களை கொன்று குவிக்கிறது.

    வெற்றி வெற்றி அப்பாவி தமிழர்களை கொள்வதில் வெற்றி.

    முத்து குமரன்கள் இருந்தால் என்ன இறந்தால் என்ன,
    முரளிதரனின் பந்தை நாம் சிக்ஸர் அடிதோமா இல்லையா என்பதே இன்று மிக முக்கியம் .



    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  6. ஆயிரம்தான் சொன்னாலும் சதம் என்பது மட்ற எல்லவட்ரயும்விட பெறிது அல்லவா, winning team தொத்த டீம் என்று பார்க முடியது அல்லவா? --குரு

    ReplyDelete
  7. shevag netru arai sadham adikkavillai thirutthividungal yuvarag mattum than half century aditthar

    ReplyDelete
  8. நல்ல ரிப்போர்ட் சுந்தர். ஜாகீர் கான் பத்தி ஒரு வார்த்தை கூட எழுதாம உங்களோட சுயரூபத்த வெளிபடுத்திடீங்க. ஏன் இந்த பொழப்பு ? இதுக்கு நீங்க நேராவே
    பஜ்ரங்தல்ல இருக்கறத சொல்லிடவேண்டியது தான !

    ReplyDelete
  9. ஹாஹா..... இரண்டு மேட்சையும் பார்த்தேன்.... தோனியின் தலைமையில் பழைய ஆட்களையே மறந்துவிடும் சூழ்நிலையில் இருக்கிறோம்... இல்லையா...


    வேண்டுமென்றே முத்தையா முரளிதரன் தான் தமிழன் என்பதற்காக விட்டுக்கொடுத்தார் எனச் சிலர் சொல்லலாம். ஆனால் அதிலெல்லாம் உண்மையில்லை

    சான்ஸே இல்ல.. ஏன்னா, அவர் தமிழர்..... விளையாட்டுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்..

    ReplyDelete
  10. இதற்கு தமிழில் என்ன பெயர் குருவே?? இடக்கரடக்கல்???

    ReplyDelete
  11. //தலைமைக்கு இள ரத்தம் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.//


    இது அரசியலுக்கும் பொருந்துமா?

    ReplyDelete
  12. சுந்தர்,

    ஏதோ ”பொடி” வைத்து எழுதப்பட்டிறிக்கிறது.

    ReplyDelete
  13. சுந்தர், தங்களின் ஆற்றாமை புரிகிறது... நான் இந்திய நிலைப்பாட்டை குறை கூறமுடியாவிட்டாலும்..

    ஏனோ இந்த சீரிஸை பார்க்க பிடிக்க வில்லை என்பது மறுக்க் முடியாத உண்மை... முரண்பாடுகள் நிறைந்தது தானே சமூகம்

    ReplyDelete
  14. சனிக்கிழமை முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம்.

    தொலைக்காட்சி சேனல்களை மாற்றியபடியே வந்தபோது இந்தியா வெற்றி பெறும் தருணம். வெற்றி பெற்றதும் வெளியே யாரோ பட்டாசு வெடித்தார்கள். அந்தக் கோபத்தில் எழுதிய பதிவு இது. வேண்டுமென்றே சில தவறுகளைச் செய்திருந்தேன் பதிவில். I did not want this post to be a perfect one.

    பின்னூட்டமிட்ட லேகா, காட்டாமணக்கு, விஜி, ஒரிஜினல் மனிதன், குப்பன் யாஹூ, குரு, ஷபி, மணிகண்டன், ஆதவா, நர்சிம், வால்பையன், ரவிஷங்கர், மாயன்... நன்றி.

    ReplyDelete
  15. கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனவே இந்த கட்டுரை எரிச்சலைத் தான் கிளப்பியது. பின்னூட்டங்களை படித்த பிறகுதான் உள்நோக்கம் புரிந்தது.

    ReplyDelete