Thursday, February 26, 2009

கணினியும் போர்னோவும் கொலைகளும்

அறைக்குள் திடீரென
யாரும் பிரவேசித்தால்
வலப்பக்க மேல்மூலையிலுள்ள
சின்ன xஐ அழுத்த வேண்டும்
யாரும் வரும் சமயமல்ல என்றாலும்
எலியை அதை நோக்கியே
வைத்திருக்க வேண்டும்
பாகுபாடில்லாமல் அனைவரும்
சோரம்போகும் தளத்தில்
உலாவுகையில்
ஒலியை இல்லாமலாக்க வேண்டும்

சிலிக்கன் பொருத்தப்பட்ட
நிமிர்ந்த மார்பில்
இல்லாத தாலியைத் தொட்டபடி
தொங்கிக் கொண்டிருக்கும்
விறைப்பேறாத குஞ்சா மணிகளையும்
நம்பிக்கைகளையும்
தூரப்போட வேண்டும்

இப்போது வரலாற்றை
அழிக்கும் படலம்
ஆரம்பமாகிறது

34 comments:

  1. nice guru ji..!

    //இப்போது வரலாற்றை
    அழிக்கும் படலம்
    ஆரம்பமாகிறது //
    :) finishing touch..?!!!!!!

    ReplyDelete
  2. எல்லோருக்கும் பொதுவான அனுபவம்.

    ReplyDelete
  3. அருமை ஐயா......... இப்பதான் உங்க கவிதை புரிய ஆரம்பிச்சிருக்கு

    ReplyDelete
  4. விறைப்பேறாத குஞ்சா மணிகளையும்
    நம்பிக்கைகளையும்
    தூரப்போட வேண்டும்/////

    புரியல///

    ReplyDelete
  5. //உங்க கவிதை புரிய ஆரம்பிச்சிருக்கு//

    அடக் கடவுளே! சுந்தர் எங்கியோ சறுக்குறார்னு அர்த்தம்!

    ReplyDelete
  6. "உள்ளே’ன் ஐயா..

    ReplyDelete
  7. அதுக்கும் வரலாறுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?

    தாலி என்ன இண்டர்நேஷனல் திருமண குறியீடா?

    அது வந்து வரலாறை அழிக்க முடியாது!

    எல்லாத்துக்கும் அது இல்லாம போயிருச்சுனா வேணா வரலாறு காணாம போயிரும்.

    :)

    ReplyDelete
  8. 'மொழி விளையாட்டு'க்கு வந்தாலே இது எல்லாம் நடக்கும் :)

    வால், தலைப்பைப் பாருங்க. 'அழிப்பது' என்றால் destroy என்று மட்டும் பொருள் இல்லை. clear என்று வைத்துப் பாருங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. //வரலாற்றை
    அழிக்கும் படலம்
    ஆரம்பமாகிறது//

    தேவையான அளவு இரப்பர் இருக்கா?

    ReplyDelete
  10. உணர் என்று சொல்வார்கள். அது ஏற்பட்டது

    ReplyDelete
  11. சுந்தர் சார்! கவிதையை இப்படி
    முடிக்கலாம்.

    அழித்து முடித்து
    ஒய்ந்து பத்தினி ஆனாலும்
    சோரம் போன வரலாறு
    சொல்ல வரும்
    புத்தீசல் ஸ்பேம் மெயில்கள்

    ReplyDelete
  12. பின்னூட்டம் போடாமல் உங்கள் பதிவை பிரமிப்போடு படித்து வருகிறேன். இதற்கு போடாமல் இருக்க முடியவில்லை.

    எல்லாரும் கவிதை எழுத உட்காருகிறார்கள். உங்களுக்கு வார்த்தைகள் கவிதையாகவே வந்து அதை எழுதிவிடுகிறீர்கள்.

    என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அபாரம் ஜி!!!

    ReplyDelete
  13. Sabash! Please read title, tags, and poem..

    You might have to switch off anonymous posts soon is my forecast..

    ReplyDelete
  14. கொன்னுட்டீங்க சுந்தர்.

    ReplyDelete
  15. தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி, உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன், காற்றாக ஆதல் என்று ஒன்று எழுதி இருக்கிறேன். படித்து எனக்கு எழுதுகிற தகுதி இருக்கிறதா என உங்கள் கருத்தை சொன்னால் மேற்கொண்டு செய்வதை பற்றி யோசிக்கலாம் ..........

    ReplyDelete
  16. //பரிசல்காரன் said...

    பின்னூட்டம் போடாமல் உங்கள் பதிவை பிரமிப்போடு படித்து வருகிறேன். இதற்கு போடாமல் இருக்க முடியவில்லை.

    எல்லாரும் கவிதை எழுத உட்காருகிறார்கள். உங்களுக்கு வார்த்தைகள் கவிதையாகவே வந்து அதை எழுதிவிடுகிறீர்கள்.

    என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அபாரம் ஜி!!!//

    சுந்தர் எனக்கு ஒண்ணுமே புரியல ..ரொம்ப பின்ன்ன்ன்ன்னாடி இருக்கேனோ!

    என்னமோ போங்க!

    ReplyDelete
  17. ம்ம்ம்ம்.. முடிவு அபாரம்

    என் வாக்கு உங்களுக்கு

    ReplyDelete
  18. / வால்பையன் said...
    அதுக்கும் வரலாறுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு/

    என்ன சகா? இது வேற மேட்டர். clear history and cookies.

    அபாரம்ஜி. ஆனா வழக்கமா உங்க கவிதைல வேற அர்த்தம் இருக்கான்னு தேடுவேன். இதுல அப்படியில்ல.

    ReplyDelete
  19. நேரடியாக வாசித்தால் ஒரு அர்த்தமும் வேறு மாதிரி வாசிக்க வாய்ப்பிருக்ககூடியதுமாக இதை எழுத உத்தேசித்திருந்தேன். இம்முயற்சி எந்த அளவிற்குச் சரியாக வந்திருக்கிறதென்பது தெரியவில்லை.

    ReplyDelete
  20. நன்றி, RVC.

    நன்றி, மண்குதிரை.

    நன்றி, அத்திரி.

    நன்றி, தமிழ் சினிமா. மேலே கொடுத்துள்ள விளக்கத்தைப் படிக்கவும். புரியலாம் :)

    நன்றி, நாமக்கல் சிபி.

    நன்றி, நர்சிம்.

    ReplyDelete
  21. நன்றி, வால்பையன். மறுபடியும் படித்துப் பார்க்கவும் :)

    நன்றி, அனுஜன்யா.

    நன்றி, குசும்பன். உங்களுக்குத் தேவைக்கு அதிகமாகவே கொழுப்பு இருக்கிறது :)

    நன்றி, முரளிகண்ணன்.

    நன்றி, ரவிஷங்கர். அப்படிச் செய்தால் கவிதைக்கு ஒரு ஒற்றைத் தன்மை வந்துவிடும்.

    ReplyDelete
  22. கைய தூக்கிடுறேன்.. கவிதை புரியல.. மறுபடியும் வருவேன்..

    ReplyDelete
  23. நன்றி, பரிசல்காரன்.

    நன்றி, ரானின். ‘ஈழம்' பதிவைப் பற்றிச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன் :)

    நன்றி, வடகரை வேலன்.

    நன்றி, யாத்ரா.

    நன்றி, கிரி.

    நன்றி, ஆதவா.

    நன்றி, அனானி. எதற்குச் சிரிப்பு?

    நன்றி, கார்க்கி.

    நன்றி, வெண்பூ.

    ReplyDelete
  24. பிரைமோ லெவி, வேதியியலை முன்வைத்து புனைவுகளை படைத்திருப்பார்.

    நீங்கள் கணினி, போர்னோவை முன்வைத்து யுத்தக் கவிதையை படைத்திருக்கிறீர்கள்.

    யுத்தம் என்பதும் காமத்தின் நீட்சிதான், என்னும்போது இந்தக் கவிதையை ஈழத்தில் இன்று நடக்கும் இன அழிப்புடன் பொருத்திப் பார்க்க முடிகிறது...

    கிரேட் சுந்தர்

    ReplyDelete
  25. நன்றி, பைத்தியக்காரன்.

    ReplyDelete
  26. இந்த பின்னூட்டத்தையே நாலைந்து முறை எழுதி அழித்து எழுதி அழித்து போடுகிறேன்..என்ன போடுவது என்று தெரியவில்லை..

    நன்றாக உள்ளது

    :)

    ReplyDelete
  27. எப்படி இப்படி யோசிக்கிறீர்கள் இதனை விளங்குவதற்கே நிறைய வாசிக்ணும் போல இருக்கே..!

    ReplyDelete
  28. //இப்போது வரலாற்றை
    அழிக்கும் படலம்
    ஆரம்பமாகிறது//

    :))

    Cool Sir..

    ReplyDelete
  29. அற்புதமான கவிதை!

    ReplyDelete