Wednesday, April 1, 2009

இல்லாத சாலமனுக்கு ஒரு கடிதம்

ப்ரியமுள்ள சாலமன்,

நீ உண்மையில் கிடையாது. ஒரு விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட எழுத்துரு. இதுவும் ஒரு வசதிதான். எனக்கு உவப்பான மற்றும் சில சமயம் நான் வெறுக்கும் என் நண்பர்களின் குணங்களை உனக்கு ஏற்றிப் பார்த்து இந்தக் கடிதத்தை எழுதலாம்.

எப்படி நீ வெறும் புனைவோ அப்படியே இந்தக் கடிதமும் ஆகட்டும். அதனாலேயே உனக்கு நான் பல வருடங்களுக்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தை இப்போது மறுபடியும் எழுதுகிறேன்.

இரு மக்கா, எதை எழுதுவதென்றாலும் கொஞ்சம் சரக்கு தேவைப் படுகிறது. மூடிய கதவுகளுக்குள்ளான என்னுடைய கோப்பையை நிரப்பிக் கொள்கிறேன். உன்னுடனான என் பிரிவு நிகழ்ந்தபோதும் (அது இருக்குமா ஒரு 15 வருசம்!), நான் வாசித்துக் கொண்டும் குடித்துக் கொண்டும்தான் இருந்தேன். முன்னது பாதியாகி, பின்னது இரு மடங்காகி... ஆனால் கடிதமெழுதுவது மட்டும் காணாமலே போயிருக்கிறது. இப்போதெல்லாம் அரட்டைப் பெட்டியில் எழும் நீள் சதுரங்களுடனான உரையாடல்கள் கடிதங்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டன. நீயும் நானும் வாரத்திற்கு இருமுறை நான்கு முழுப் பக்கங்களில் கடிதம் எழுதிக் கொண்டது கனவாயிருக்கிறது சாலமன்.

சாலமன், சாலமன், சாலமன்... உன்னுடையே இந்தப் பெயர் உச்சரிப்பதற்கே எவ்வளவு இனிமையாயிருக்கிறது!

சரி, போன மாதம் உன்னதம் பத்திரிகையில் என்னுடைய கதையொன்று வந்திருக்கிறது. அதை நீ இங்கு வாசிக்கலாம் : http://jyovramsundar.blogspot.com/2008/01/blog-post_14.html. மணல்வீட்டில் வந்த என்னுடைய கவிதைக்கான சுட்டி எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

எதை எடுத்தாலும் சுட்டி குட்டி என்று பேசும் நிலையில் இப்போது இருக்கிறேன். இணையத்தில் இரண்டு வார்த்தை கதைகள், நான்கு எழுத்து கவிதைகள், ஒன்பது வரி நாவல்கள் என்று போட்டு படுத்தறாங்க மக்கா. இன்னொருத்தர் இரண்டு மூன்று வருடம் ஓடக்கூடிய மெகா சீரியல் நாடகத்தை ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருக்கிறார். தாங்க முடியலைப்பா. உடனே மற்றமையை அங்கீகரித்தல், ஏற்றுக் கொள்ளுதல்னு ஆரம்பித்துவிடாதே... எனக்கு உடம்பில் தெம்பில்லை.

கோணங்கியின் எழுத்துமுறை automatic writing வகையைச் சேர்ந்தது. முன் தீர்மானிக்காமல் சுய போதமின்றி எழுதிச் செல்லும் கை. அங்கே எழுதுபவனும் ஒரு கருவிதான். ஆனாலும் பார் நண்பா, நான்காவது வரியிலேயே தூக்கம் வந்துவிடுகிறது எனக்கு.

ங்கோத்தா... (கெட்ட வார்த்தை இல்லாட்டி இதை ஒரு புண்டா மவனும் இலக்கியமா எடுத்துக்க மாட்டான். அதுக்காகத்தான் இந்த வார்த்தை. நீ தப்பா எடுத்துக்காதே!).

வீட்டில் இருந்தே தீர வேண்டிய பத்து புத்தகங்கள்னு ஒருத்தர் பதிவு எழுதியிருக்காரு. இங்கே சுங்க அலுவலகத்திற்குப் பின்னிருக்கும் சாலையோரக் குடிசைகளைப் பார்க்கும்போது, எனக்குத் தோன்றுவது வீட்டில் இருந்தே தீர வேண்டியது புத்தகங்கள் அல்ல, கக்கூஸ்தான் என்று. இன்னொருத்தர் காந்தியின் சுயசரிதை படிச்சே ஆகணுமாம். யோவ், ஆட்டோ சங்கரோட சுயசரிதைகூட இன்னும் கொஞ்சம் உபயோகமாயிருக்கும்யா.

என்னைப் பொறுத்தவரை படித்தே தீரவேண்டிய புக்ஸ்னு ஒன்னுமேயில்லை. பைத்தியக்காரன், செல்வேந்திரன் பதிவுல முக்கியமான புத்தகம்னு interpretation of dreamsஐச் சொல்றாரு. உடனே எனக்கு சொப்பன ஸ்கலிதம் சேலம் சிவராஜ்தான் ஞாபகம் வர்றாருப்பா. தான் பெரிய புத்திசாலின்னு அடுத்தவன் நம்பணும்னு ஜெர்மன் ஐடியாலஜி, குடும்பம் தனிச் சொத்துன்னு ஃபிலிம் காட்டறாருப்பா பைத்தியக்காரன். (அந்தாளு நிஜாமவே பைத்தியக்காரன்தான் போல... இந்த மாதிரி name dropping யாருக்குத்தான் தெரியாது!). என்னைக் கேட்டா கீழே இருக்கற புக்ஸ்தான் பெஸ்ட் :

1. Umerto Eco - Foucault's Pendulam
2. James Joyce - Finnegans Wake
3. Friedrich Nietsche - Thus Spake Zarathustra
4. Michel Foucault - History of Sexuality
5. Allen Ginsberg - Fall of America

இன்னும் Marquis De Sade, Roland Barthes, William Faulkner, Sylvia Plathன்னு பல பேர் இருக்காங்கடா.

ஏன் தமிழில் எதுவும் சொல்லவில்லை என்கிறாயா? எல்லாரும் குடும்பக் கதைகள்தான் எழுதிகிட்டிருக்காங்க. கொஞ்சம் நல்லா நகுலன் எழுதிகிட்டிருந்தாரு, இப்ப நான் எழுதறேன்... வேற யார் இருக்காங்க சொல்லு பாக்கலாம். இப்பல்லாம் நான் தமிழ்ல படிக்கறதேயில்லை.

இரு, பெப்சி தீந்து போச்சு, போய் எடுத்துகிட்டு வந்துடறேன்.

(இந்த இடத்தில் காலச்சுவடு கண்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகனையெல்லாம் திட்டி 10 வரிகள் எழுதியிருந்தேன். அது காணாமல் போயிருக்கிறது).

சரிடா.. என்ன பேர் அது சாலமன்ன்னு.. மண்ணு மாதிரி இருக்கு. இப்ப என்னோட பேரையே எடுத்துக்கோ, எவ்வளவு கவித்துவமா இருக்கு. வச்சிருக்கான் பார் பேர, சாலமன்னு.. சரியான முட்டாப் பையன்டா நீ.

பாத்துக்கடா, எப்படி நீ உண்மையிலேயே சாலமன் கிடையாதோ அப்படியே நானும் நான் ஒருத்தன் மட்டுமே கிடையாது. உடனே பலரோட குரல்ல பேசற தாமுவை நினைச்சுக்காதே.. இது பலகுரல் இல்ல, பலரின் குரல்கள்.

நீ நல்லா இருக்கியா, உன் மச்சினிச்சி கொழந்த சுகமான்னு எல்லாம் நான் ஏன் விசாரிக்கலைன்னு கேட்காதே. அதெல்லாம் மிடில் கிளாஸ் ஆளுங்க செய்யறது.

போதும்டா மச்சான், தூக்கம் வருது.. ஸீ யூ... முடிஞ்சா என்னோட எழுத்துங்களை படிச்சு எப்படி எழுதணும்னு கத்துக்கோ.. அவ்வளவுதான் சொல்வேன்.

உனக்கெல்லாம் அன்புடன்னு முடிக்க முடியாதுடா பாடு.

முத்தையா

இந்த விளையாட்டிற்கு என்னை அழைத்த மாதவராஜூக்கு நன்றி. இதைத் தொடர நண்பர் பைத்தியக்காரனை அழைக்கிறேன். பாருங்கள், இதில் எவ்வளவு சாத்தியக்கூறுகள் என்று :

(1) சாலமன் என்று ஒருவரும் கிடையாது; போலவே முத்தையா என்றும்.
(2) பதிவு இருந்தாலும் அதில் பைத்தியக்காரன் எழுதுவது கிடையாது
(3) அவர் எழுதிக் கொடுப்பதை என் பதிவிலேயே போட்டுக் கொள்ளலாம்.
(4) இல்லாவிட்டால் இந்தப் பதிவுதான் பைத்தியக்காரன் எழுதியது என்று சொல்லி வேறு ஒருவரை விளையாட்டிற்கு அழைக்கலாம்.
(5) இப்படியாக, இப்படியாக.

30 comments:

  1. /வீட்டில் இருந்தே தீர வேண்டிய பத்து புத்தகங்கள்னு ஒருத்தர் பதிவு எழுதியிருக்காரு. இங்கே சுங்க அலுவலகத்திற்குப் பின்னிருக்கும் சாலையோரக் குடிசைகளைப் பார்க்கும்போது, எனக்குத் தோன்றுவது வீட்டில் இருந்தே தீர வேண்டியது புத்தகங்கள் அல்ல, கக்கூஸ்தான் என்று. இன்னொருத்தர் காந்தியின் சுயசரிதை படிச்சே ஆகணுமாம்.//

    தல ரெண்டுமே ஒருத்தர்தான் :)))

    ReplyDelete
  2. சுந்தர்,

    பொதுப் புத்தியில் பதிந்துவிட்ட ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இந்தப் பதிவை நீங்கள் எழுதியிருப்பதும், தொடர என்னை அழைத்திருப்பதும் தற்செயலானது என்றே நம்புகிறேன் :)

    மாதவராஜை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. முத்தையா இப்படி எழுதுவான் என்று தெரிந்திருந்தால் விளையாட்டை தொடங்கி இருக்கவேமாட்டார். போலவே சாலமனாக பைத்தியக்காரன் தொடரப் போவதும்.

    கஷ்டம். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மாதவராஜ்?

    அலுவலகத்தில் ப்ளாகரை பூட்டி சீல் வைத்துவிட்டதால், உங்கள் பதிவிலேயே இல்லாத முத்தையாவுக்கு, பிறக்காத சாலமன், எழுதாத கடிதத்தை எழுதுவார்.

    பாவம் பதிவுலக நண்பர்கள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    டிஸ்கி: அய்யனார் மீது உங்களுக்கு என்ன கோபம்? இந்தத்தாக்கு தாக்கியிருக்கிறீர்கள் :)

    ReplyDelete
  3. இல்லாத சாமானுக்கு ஒரு கடிதம்னு தலைப்பை தவறாக படித்துவிட்டு ஆர்வத்தோடு வந்தேன்.. இங்கே வேறு ஏதேதோ எழுதியிருக்கிறது..

    உங்கள் பேச்சு க்கா.!

    ReplyDelete
  4. //(கெட்ட வார்த்தை இல்லாட்டி இதை ஒரு புண்டா மவனும் இலக்கியமா எடுத்துக்க மாட்டான். அதுக்காகத்தான் இந்த வார்த்தை. நீ தப்பா எடுத்துக்காதே!).//

    அப்போ நான் எழுதுறதெல்லாம் எலக்கியத்துல சேராதா?

    ReplyDelete
  5. //இல்லாவிட்டால் இந்தப் பதிவுதான் பைத்தியக்காரன் எழுதியது என்று சொல்லி வேறு ஒருவரை விளையாட்டிற்கு அழைக்கலாம்.//

    இந்த விளையாட்டு நல்லாயிருக்கே!

    ReplyDelete
  6. //இல்லாத சாமானுக்கு ஒரு கடிதம்னு தலைப்பை தவறாக படித்துவிட்டு//

    ஏன் நீங்க தான் எழுதுங்களேன் அதிஷா!

    ReplyDelete
  7. //டிஸ்கி: அய்யனார் மீது உங்களுக்கு என்ன கோபம்? இந்தத்தாக்கு தாக்கியிருக்கிறீர்கள் :)

    ஒரு வேளை சாலமன், உரையாடலினி உறவுக்காரரோ என்னமோ :)

    ReplyDelete
  8. //கடி‘ஜம்’//

    பைத்தியக்காரனுக்கு அடுத்து நீங்கதானாமே?

    டிஸ்கி: எப்பா கார்க்கி, நர்சிம்மை பைத்தியக்காரன்னு நான் சொல்லலை :)

    ReplyDelete
  9. interesting.. go on. i really would like to meet someone who had read the interpretation of dreams ( or being and nothingness)!

    ReplyDelete
  10. வணக்கம்

    கடிததின் ஊட நீங்கள் குறிப்பிட்ட கதையை இப்போதுதான் வாசிக்கிறேன். நல்ல கற்பனை.

    அந்தக் கதையில் நாராசமாக என்று ஒரு வார்த்தையை பயன் படுத்தியிருக்கிறேர்கள். அது தமிழ் வார்த்தையா? ( சென்னை வட்டார மொழி என்று நினைக்கிறேன்) ஏனெனில் மற்ற வார்த்தைகளிடம் இருந்து இது வெளியில் நிற்பது போல தெரிகிறது. இந்தக் கதை பேச்சு மொழியில் இல்லை அதனால் அப்படி தோன்றுகிறது.

    ReplyDelete
  11. இந்தக் கடிதம் நல்ல ஆரம்பம். மாதவராஜ் எழுதியது போன்று அல்ல இது. நீங்கள் பல விடயங்களை எழுப்புகிறேர்கள்.

    நாங்கள் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  12. தலை அய்யனார் மீது அப்படி என்ன கோபம்???

    உண்மையைச் சொல்லணும்னா இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்த்தேன். ஆனால் சில இடங்களில் க்ளாசிக்காக இருக்கு.

    ReplyDelete
  13. ஒரு பதிவில் இவ்வளவு பேரை ...

    குடிப்பதிலும் ஒரு தருணம் (இருப்பதாகச் சொல்லக் கேள்வி). போதை இருக்கும். ஆனால் அதி போதை ஆகிவிடவில்லை. Moment of clarity என்பார்கள். அப்போது கிரிக்கெட் ஆடச் சென்றால், புட்பால் அளவு பெரிதாகத் தெரியும். துல்லியமான, சில நிமிடங்களே இருக்கும் தருணம் அது. அந்த மாத்ரி ஒரு தருணத்தில் எழுதியது என்று நினைக்கிறேன். சாலமன் பெயரை சிலாகித்து, பின்பு திட்டுவதில் இந்தக் குறியீடு புரிகிறது.

    கடிதம் முழுதும் அதகளம்.

    'போய்ச் சேர்ந்தான் நகுலன்
    வந்து நிற்கிறான் ஜ்யோவ்ராம்'

    என்றும் சொல்லலாம்.

    பை.காரன் பதிவு எப்போ வரும்னு ......

    அனுஜன்யா

    ReplyDelete
  14. போட்டு செம பின்னு பின்னீட்டேளே ஜ்யோவ்ராம். கலக்க்க்க்க்கல்....

    ReplyDelete
  15. இந்த கடிதத்தை படித்துவிட்டு இன்னமும் உங்களுக்கு பைத்தியக்காரன் ஏன் ‘உம்மா’ கொடுக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  16. இந்திய சட்டப்படி, 'உம்மா' கொடுக்கத் தூண்டுவதும் குற்றம்தான் லக்கி.

    நினைவுப்படுத்தாதீங்க :)

    ReplyDelete
  17. சுந்தர்!

    இப்போதுதான் வந்து ஆவலோடு பார்த்தேன்.

    ஆமாம் நானும் சாலமனுக்குத்தான் கடிதம் எழுதியிருந்தேன். நீங்களும் சாலமோனுக்குத்தான் எழுதியிருக்கீங்க...

    நான் வேற ஒரு தளத்தில் எழுதியிருந்தேன்.
    இது கொஞ்சமும் தொடர்பற்று வேறு தளத்தில் இருக்கிறது.

    ம் .. பைத்தியக்காரன் என்ன செய்கிறார் பார்ப்போம்.

    ReplyDelete
  18. சுந்தர்ஜி..

    ஃபோன்ல கூப்ட்டு கண்டபடி திட்டினத இப்படியா பொதுவுல போட்டுத் தாக்கறது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

    இந்த அருமையான கடிதத் தொடர் என்னைப் போல கும்மி ஆசாமிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகாமலிருக்க எல்லாம் வல்ல அய்யனாராண்டவர் அருள்புரிவாராக!

    ReplyDelete
  19. சுந்தர்!

    உங்கள் கலக்கலுக்குப் பிறகு சுந்தர் சாலமன்னுக்கு எழுதுவாரா.... முத்தையாவுக்காக எழுதுவாரா...

    அதை பைத்தியக்காரனே தீர்மானிக்கட்டுமா...

    ReplyDelete
  20. // ஒரு வேளை சாலமன், உரையாடலினி உறவுக்காரரோ என்னமோ :)//

    உரையாடலினி கூட உங்க ஊருதானா கேட்டுசொல்லுங்க.

    ReplyDelete
  21. பூனைகள் கதையை மறுபடியும் வாசித்தேன், அதன் சாத்தியங்கள் போலவே இக்கடிதத்திலும்.

    //நீ உண்மையில் கிடையாது. ஒரு விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட எழுத்துரு. இதுவும் ஒரு வசதிதான். எனக்கு உவப்பான மற்றும் சில சமயம் நான் வெறுக்கும் என் நண்பர்களின் குணங்களை உனக்கு ஏற்றிப் பார்த்து இந்தக் கடிதத்தை எழுதலாம்//


    //சாலமன், சாலமன், சாலமன்... உன்னுடையே இந்தப் பெயர் உச்சரிப்பதற்கே எவ்வளவு இனிமையாயிருக்கிறது!//

    //எதை எடுத்தாலும் சுட்டி குட்டி என்று பேசும் நிலையில் இப்போது இருக்கிறேன்//

    //உடனே மற்றமையை அங்கீகரித்தல், ஏற்றுக் கொள்ளுதல்னு ஆரம்பித்துவிடாதே... எனக்கு உடம்பில் தெம்பில்லை.//


    //வீட்டில் இருந்தே தீர வேண்டியது புத்தகங்கள் அல்ல, கக்கூஸ்தான் என்று//

    //இந்த மாதிரி name dropping யாருக்குத்தான் தெரியாது//

    //சரிடா.. என்ன பேர் அது சாலமன்ன்னு.. மண்ணு மாதிரி இருக்கு//


    //இந்த இடத்தில் காலச்சுவடு கண்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகனையெல்லாம் திட்டி 10 வரிகள் எழுதியிருந்தேன். அது காணாமல் போயிருக்கிறது).//

    //அதெல்லாம் மிடில் கிளாஸ் ஆளுங்க செய்யறது//


    // முடிஞ்சா என்னோட எழுத்துங்களை படிச்சு எப்படி எழுதணும்னு கத்துக்கோ.. அவ்வளவுதான் சொல்வேன்.//

    இந்த இடத்தில் சுரா அவர்களுடைய உன் கவிதையை நீ எழுது நினைவு வந்தது.

    //உனக்கெல்லாம் அன்புடன்னு முடிக்க முடியாதுடா பாடு.//

    இந்த கடிதம் முழுவதுமே highlights ஆகத்தான் இருந்தது. இருந்தாலும் இதை வாசிக்கும் தருணத்தில் மேற்குறிப்பிட்ட இடங்களில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இன்னும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
    எங்கும் கட்டுடைத்தல், கலகம், சிதைந்த மனோநிலை, சூழலின் வெளிப்படுத்தவியலாத மன இறுக்கத்தை கடிதத்தின் மூலமாக வெளிப்படுத்தி தளர்த்திக்கொள்ளுதல் அல்லது அதிகப்படுத்திக்கொள்ளுதல், இருத்தல் நிமித்தம் சூழலினால் அடையும் உளைச்சல்கள் என இக்கடிதம் பல சாத்தியங்களை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது,,,,,,,
    அதகளம் ரணகளம் அருமை,,,,,,,

    பாவம் சாலமன்,,,,,,,

    ReplyDelete
  22. "இங்கே சுங்க அலுவலகத்திற்குப் பின்னிருக்கும் சாலையோரக் குடிசைகளைப் பார்க்கும்போது, எனக்குத் தோன்றுவது வீட்டில் இருந்தே தீர வேண்டியது புத்தகங்கள் அல்ல, கக்கூஸ்தான் என்று"

    Jyovram:

    Wonderful words..This statement is a powerful, funny and meaningful one..

    Regards,

    Ronin

    ReplyDelete
  23. முழுப் பதிவையும் பிட்டு பிட்டா பின்னூட்டத்தில் போட்ட யாத்ரா 'அவராக' இருப்பதற்கு சாத்தியகூறுகள் ......... இல்லை :)

    அனுஜன்யா

    ReplyDelete
  24. நன்றி, கார்த்திகேயன்.

    நன்றி, கார்க்கி. அப்படியா :)

    நன்றி, பைத்தியக்காரன்.

    நன்றி, அதிஷா. இப்படியெல்லாம் பின்னூட்டம் போடக்கூடாது!

    நன்றி, வால்பையன். ஓஹோ!

    நன்றி, சென்ஷி. ஒருவேளை இருக்கலாம்.

    நன்றி, நர்சிம்.

    நன்றி, டாக்டர் ருத்ரன்.

    நன்றி, மண்குதிரை. நாராசமாக என்பது சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்தான்.

    ReplyDelete
  25. நன்றி, நந்தா.

    நன்றி, அனுஜன்யா. குடித்துவிட்டு எழுதியதில்லை இது :)

    நன்றி, லக்கி லுக். என்னைக் கொல்ல வேண்டுமா பைத்தியக்காரன் :)

    நன்றி, மணிகண்டன். தெய்வீகச் சிரிப்பய்யா உங்களுடையது :)

    நன்றி, மாதவராஜ்.

    நன்றி, பரிசல்காரன்

    ReplyDelete
  26. நன்றி, கார்த்திக்.

    நன்றி, யாத்ரா.

    நன்றி, ரானின்.

    அனுஜன்யா, ஆமாம், இல்லை :)

    ReplyDelete
  27. எல்லோரையும் மிக நல்லா திட்டி இருக்கீங்க.. ஒரு நல்ல எதிர்வினை வராததுனாலே எனக்கே ஏமாற்றமா இருக்கு ;)

    உங்ககிட்டே இப்படி பம்மிட்டாங்களே.. :)

    ReplyDelete