Friday, May 29, 2009

செல்வேந்திரனும் முத்து உதிர்ப்புகளும்

இந்தப் பதிவு சாருவின் கடிதமும் பின் நவீனத்துவமும் என்ற செல்வேந்திரன் பதிவைப் படித்ததும் எழுதியது. பிறகு எதற்கு வேண்டாமென்று பதிவிடவில்லை. ஆனால் இன்றைய அவரது இன்னொரு பதிவைப் படித்ததும் - அடக்க மாட்டாமல் இதை வெளியிடுகிறேன்.

செல்வேந்திரன் உதிர்த்துக் கொண்டேயிருக்கிறார் பல முத்துகளை. அவற்றைப் படிக்கும்போது வரும் எரிச்சலைச் சொல்லி மாளாது. இவை சாம்பிளுக்கு மட்டும் :

சாருவின் எழுத்துகளைக் காப்பி அடிக்கிறார் லக்கி. சாருவின் ஸ்டைல் இருக்கிறது லக்கியின் எழுத்துகளில்.

அட கிரகமே. இவர் சாரு நிவேதிதாவின் எழுத்துகளைப் படித்திருக்கிறாரா என்பதே எனக்கு சம்சயமாக இருக்கிறது. சுவாரசியம் என்பது ஒன்றே இருவரின் எழுத்துகளில் இருக்கும் பொது அம்சம். அப்படிப் பார்த்தால் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்துகள் கூடத்தான் படிக்க சுவாரசியமாயிருக்கும். அதற்கென்ன செய்வதாம்?

பாலியல் / செக்ஸ் எழுத்துகளை எல்லாம் இங்கே இணையத்தில் சாருவின் எழுத்துகள் என்று தடாலடியாகச் சொல்லிவிடுகிறார்கள் (என்னுடைய கதைகளுக்கும் அப்படிப்பட்ட விமர்சனத் திட்டுகள் வந்திருக்கின்றன). காரணம் என்ன - சிம்பிள் - இவர்கள் படித்தது சாரு நிவேதிதா மட்டும்தான் - அதுவும் இணையத்தில் அவர் எழுதியதை மட்டுமே. குபரா, திஜாவின் அம்மா வந்தாள், ஜெயகாந்தனின் ரிஷி மூலம், கரிச்சான் குஞ்சின் பசித்த மானிடம் தொடங்கி சமீபத்திய ஜேபி சாணக்யா, வா மு கோமு வரை எழுதுவது என்னவாம்?

ரமேஷ் வைத்யாவின் கவிதைத் தொகுப்பு தமிழில் வந்த பத்து சிறந்த கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று.

இதைப் படித்ததும் தோன்றுவது, இவருக்குக் கவிதையும் தெரியவில்லை ஒரு கண்றாவியும் தெரியவில்லை என்பதுதான். (ங்கொய்யால கொடுத்த காசுக்கு மேல கூவுறானே எனச் சிலர் சொல்லக்கூடும்!).

செல்வேந்திரனுக்கு கோயமுத்தூர் வட்டார இலக்கியத்தை முதலில் ஆரம்பித்தது லதானந்த், நாசரேத்தோ நாங்குனேரியோ அல்லது என்ன எழவோ என்றால் ஒரே இலக்கியவாதி ஆசிஃப் அண்ணாச்சி, அவ்வளவுதான் (நாங்க எங்கய்யா இலக்கியம் எழுதினோம் என்று அவர்கள் சண்டைக்கு வருவார்களோ என பயமாயிருக்கிறது!). திருப்பூருக்குப் பரிசலையும், ஈரோட்டிற்கு வால்பையனையும், ஹைதராபாத்திற்கு கார்க்கியையும் ஏன் வாட்டார மொழி இலக்கியவாதிகளாக அறிவிக்கவில்லை என்று தெரியவில்லை. அவர்களும் இவரது நண்பர்கள்தானே!

(இங்கே இடைவெட்டாக கார்க்கியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவர் சாரு நிவேதிதா எழுதுவதை உல்ட்டா செய்து நக்கல் அடிக்கிறார். அப்படிச் செய்வது மிகச் சுலபாமனது, யாருடைய எழுத்துகளை வேண்டுமானாலும் - இவரது எழுதுவதும் சேர்த்தி - அப்படி எளிதாகச் செய்துவிடலாம். அதற்கு இங்கு வேறு பெயர்கூடச் சொல்கிறார்கள் : எதிர் - கவுஜ. கார்க்கியின் எழுத்துகளின் மதிப்பு அவ்வளவுதான்!).

அப்போது ஆர் ஷண்முகசுந்தரம், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், அசோகமித்திரன் எல்லாம் என்ன ஆனார்கள்? காரணம் அவர்களை இவர் படித்ததில்லை, அல்லது இவரது எழுத்துகளைப் படிப்பவர்கள் அவர்களைப் படித்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை!

எல்லாம் போக, வட்டார மொழிநடை என்று சொல்லும்போது, யாருடைய வட்டார மொழி என்ற கேள்வியும் கேட்கப்பட்டாக வேண்டும். கோயமுத்தூரின் வட்டார வழக்கு என்பது கவுண்டர்களின் வட்டார வழக்காகவும், திருநெல்வேலியின் வட்டார வழக்கு என்பது பிள்ளைமார்களின் வட்டார வழக்காகவும்தான் இருந்து வருகிறதேயன்றி, அங்கிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் மொழியாக இருப்பதில்லை. இதற்கு முன்பே சிலர் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பியும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடித்து ஆடுகிறார் செல்வேந்திரன்.

ஆனந்த விகடனின் வந்த கவிதைகளை வேறு காரணங்களுக்காகச் சிலர் பாராட்டலாம். ஆனால் என்னுடைய கேள்வி, சுகுமாரன் போன்றவர்களின் பெயர்களை நேம் டிராப்பிங் செய்பவர் எப்படி அம்மாதிரியான கவிதைகளை எழுதி வெளியிட்டு, பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்?

தெருப் பொறுக்கி எழுத்தாளன் எனச் சொல்வது அல்லது தூ என்று காரி உமிழ்வதெல்லாம் அயோக்கியத்தனம்.

பின் நவீனத்துவம், புதுமைப் பித்தன், ரமேஷ் பிரேம், சில சிறு பத்திரிகைப் பெயர்கள் என அங்கங்கே பொன் தூவலாய்த் தூவிச் செல்லும் செல்வேந்திரன் அடுத்து பிரபலமாக ரஜினிகாந்த்தை வம்புக்கு இழுக்கலாம். இல்லை, இலக்கிய தாக்கத்தோடு கூடிய பிராபல்யம் வேண்டுமென்றால் ஜெயமோகனையோ (அவர்தான் இணையத்தில் எழுதுகிறார் என்பதால் ஈசி!) வா மு கோமுவையோ ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடலாம். வேறு என்ன செய்யலாம்!

70 comments:

  1. இன்றைக்கு செல்வேந்திரனின் ரீசண்ட் பதி்வு ஒன்றை படித்தபோது செல்வேந்திரனும் சுவாரசியமாக எழுதக்கூடியவர், எப்படி இவ்வளவு நாளாக தவறவிட்டுள்ளோம் என்று நினைத்தேன்...

    மற்றபடி இந்த பதிவை நான் படிக்கவேயில்லை, அப்புறமா படித்து பின்னூட்டம் போடுறேன்...

    ReplyDelete
  2. அண்ணா, உங்க பிரச்சணை என்னன்னு எனக்கு அவ்வளவா புரியல! ஆனா நீங்க சொல்லியிருக்கறதுல ஒரு விஷயம் மகா தப்புங்கண்ணா!!

    அதாவது
    "கோயமுத்தூரின் வட்டார வழக்கு என்பது கவுண்டர்களின் வட்டார வழக்காகவும்"

    வாங்க, எங்கூருக்கு வாங்க! அங்க எங்க மாவட்டத்துல பெரும்பான்மையா உள்ள நாய்க்கமாரு, செட்டியாரு, முதலியாரு ஏன் அங்கு பிறந்து வளர்ந்த ஐயமாரு யாருகூடவேணா பேசுங்கண்ணா! பெரும்பான்மையானோர் கொங்குத்தமிழ்தானுங்கண்ணா பேசுவாங்க! உங்க பிரச்சணைய பத்தி பேசும்போது ஒரு மாவட்டத்தபத்தியே தப்பான தகவல் தருவது பெரிய தப்பு!!

    ReplyDelete
  3. (நாங்க எங்கய்யா இலக்கியம் எழுதினோம் என்று அவர்கள் சண்டைக்கு வருவார்களோ என பயமாயிருக்கிறது//

    குடித்துக் கொண்டிருந்த டீயை கொட்டி விட்டேன்..அவ்வளவு சிரிப்பு வந்துவிட்டது.. உங்களின் குரலிலேயே ஒலித்ததாலோ என்னவோ?

    ReplyDelete
  4. வட்டார வழக்கு தனிப்பதிவு ஒன்று போடலாமே.. ஆராய்ச்சிப்பண்ணி

    ReplyDelete
  5. //தெருப் பொறுக்கி எழுத்தாளன் எனச் சொல்வது அல்லது தூ என்று காரி உமிழ்வதெல்லாம் அயோக்கியத்தனம்.//

    எவ்வடிவிலும் தனிமனித தாக்குதல் தவறு..100 சதவிகிதம் உண்மை.

    ReplyDelete
  6. தங்கமணி பிரபு, எது வட்டார மொழி இலக்கியம், அதற்கான வரையறை என்ன என்பதற்குள் புகுந்தால் மிகப் பெரிய பதிவாகவே ஆகிவிடும் :)

    உதாரணத்திற்கு ஆர் ஷண்முகசுந்தரத்தை எடுத்துக் கொள்வோம் (இவரை முதல் வட்டார இலக்கியம் எழுதியவர் என கநாசு முதற்கொண்டு பலர் சொல்லியுள்ளார்கள் என்பதாலும், கொங்கு வட்டார இலக்கியவாதி என அறியப்படுவதாலும் இவரை எடுத்துக் கொள்கிறேன்). இவரது கதைகளில் அங்கிருக்கும் ஆதிக்க சாதிகளான கவுண்டர், முதலியார்களையே மையப்படுத்தி உள்ளன. அந்தப் பகுதியில் வாழும் அருந்ததியர் போன்ற ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை (அப்படிச் செய்த இடங்களிலும் negative ஆகவே எழுதியிருப்பார்).

    புதுமைப் பித்தனிடமும் இந்தச் சிக்கல்கள் உண்டு.

    கி ரா எழுதியது கரிசல் வட்டார இலக்கியமென்றாலும் அது பெரும்பாலும் நாயக்கர் சாதி இலக்கியமாகவே இருந்திருக்கிறதுதானே.

    இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. //வாங்க, எங்கூருக்கு வாங்க! அங்க எங்க மாவட்டத்துல பெரும்பான்மையா உள்ள நாய்க்கமாரு, செட்டியாரு, முதலியாரு ஏன் அங்கு பிறந்து வளர்ந்த ஐயமாரு யாருகூடவேணா பேசுங்கண்ணா! பெரும்பான்மையானோர் கொங்குத்தமிழ்தானுங்கண்ணா பேசுவாங்க! உங்க பிரச்சணைய பத்தி பேசும்போது ஒரு மாவட்டத்தபத்தியே தப்பான தகவல் தருவது பெரிய தப்பு!!//

    கண்ணூ, என்னோட ரெண்டு பைசா! அவ்ர் சொன்னதும் நெசம், நீங்க சொன்னதும் நெசம். மூலம்ன்னா பாத்தம்ன்னா, அவரு சொன்னது நெசந்தானுங்க கண்ணூ?

    நடப்புன்னு பாத்தமின்னா, நீங்க சொல்றதுஞ் சரிதாங் கண்ணூ.

    முத்தாய்ப்பா, நடப்புல இருக்குறதத்தாஞ் சொல்லோணூ... அதுனால, அதை இன்னாருக்குன்னு சொல்லிச் சொல்ல வேணாமுங்றதுல நாம ரெண்டு பேருமு ஒன்னு.... இஃகிஃகி!!

    ReplyDelete
  8. // THANGAMANI PRABU said...
    வாங்க, எங்கூருக்கு வாங்க! அங்க எங்க மாவட்டத்துல பெரும்பான்மையா உள்ள நாய்க்கமாரு, செட்டியாரு, முதலியாரு ஏன் அங்கு பிறந்து வளர்ந்த ஐயமாரு யாருகூடவேணா பேசுங்கண்ணா! //


    Thangamani ji, சாமர்த்தியமா 30% இருக்கும் அருந்ததியர்களை விட்டுடீங்களே. அவர்களுடனும் பேசி பாருங்கள் சுந்தர்ஜி சொல்வத்து சரி என தோன்றும்.

    ReplyDelete
  9. //ரமேஷ் வைத்யாவின் கவிதைத் தொகுப்பு தமிழில் வந்த பத்து சிறந்த கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று.//

    இதை நீங்க சொல்றீங்களா, இல்லை செல்வேந்திரன் சொல்றதைக் குறை சொல்றீங்களா ஒரு இழவும் புரியலை, கொட்டேஷன் போட்டு எழுதியிருக்கலாம்.

    //இதைப் படித்ததும் தோன்றுவது, இவருக்குக் கவிதையும் தெரியவில்லை ஒரு கண்றாவியும் தெரியவில்லை என்பதுதான். (ங்கொய்யால கொடுத்த காசுக்கு மேல கூவுறானே எனச் சிலர் சொல்லக்கூடும்!).//

    தனிப்பட்ட என்னுடைய ஒப்பீனியன் என்னான்னா, இணையத்தில் சில இடங்களில் பார்த்த நீங்கள்(ஜ்யோவ்ராம்) பாராட்டிய கவிதைகளை வைத்து உங்களையும் இப்படிச் சொல்ல முடியுமா? கவிதை தெரியாதவர்னு. உதாரணம் கொடுக்க வேண்டாமென்று நினைக்கிறேன்.

    நீங்கள் பாராட்டிய சில கவிதைகளைப் படித்துவிட்டு ’பச்’ இதில் என்ன இருக்கு என்று நினைத்ததுண்டு. இதில் எப்படி “சுகுமாறன்” பெயர் மட்டும் தான் நேம் ட்ராப்பிங்கா, கோபி கிருஷ்ணன் வகையறா எல்லாம் கிடையாதா?

    //தமிழில் வந்த பத்து சிறந்த கவிதைத் தொகுப்புகளுள் //

    இப்படி ஒரு கவிதைத் தொகுப்பைப் பற்றி எழுதுவதற்கு என்ன “தகுதி” வேணுங்கிறீங்க நீங்க?! உண்மையிலேயே தெரியலை. கற்றபின் “நிற்கிறதா?” கற்றபின் என்றால் கற்றல் முடிஞ்சிருச்சின்னா? இல்லை கரை கண்டுட்டீங்கன்னா?

    செல்வேந்திரனைப் போல் எழுதுபவர்கள் ஆயிரம் பேர் இணையத்தில் இருக்கிறார்கள், இதில் செல்வேந்திரனை தனித்து அடிக்க காரணம் என்னவோ? சாருவைப் பிடிக்கலை அவருக்கு என்பதா?

    சிற்றிழக்கியவாதிகளை குத்தகைக்கு எதுவும் எடுத்திருக்கிறீர்களா? நான் மட்டும் தான் ட்ராப்பிங் செய்யலாம்னு கோபம் வர? விகடனில் “முடியலத்துவம்” எழுதுறவருக்கு அதீதனைத் தெரியாதுன்னோ புரியாதுன்னோ முடிவுக்கு வரும் உரிமையை யார் உங்களுக்குக் கொடுத்தது?

    புரிந்த பின்னால் முடியலத்துவம் எழுதக்கூடாதுன்னு சொல்ல நீங்கள் யார்? சிற்றிலக்கிய “குண்டாஸ்”ஆ?

    ReplyDelete
  10. //Karthikeyan G said...
    Thangamani ji, சாமர்த்தியமா 30% இருக்கும் அருந்ததியர்களை விட்டுடீங்களே. அவர்களுடனும் பேசி பாருங்கள் சுந்தர்ஜி சொல்வத்து சரி என தோன்றும்.
    //

    ஆகா, நானா வந்து மாட்ட்கிட்டன் போல இருக்கூ? கண்ணூ, அது ஊருக்கு ஊர் மாறுங்கண்ணூ... அவிகளும் இதே பழமயத்தான் பேசுவாங்க தோட்டங் காட்டுல... அது பொதுவா இருந்துச்சாது... கொலவுசுருங் குத்துசுருமா இருக்குற கொஞ்ச நஞ்சத்தையுமு இப்பியெல்லாஞ் சொல்லி? வேணான் இராசா... வேணான் இராசா....

    ReplyDelete
  11. //அட கிரகமே.
    சம்சயமாக இருக்கிறது
    ங்கொய்யால//

    இதெல்லாம் எந்த ஊர் வட்டார வழக்கு?

    ReplyDelete
  12. மோகன்தாஸ், ஆமாம், கொட்டேஷன் போட்டு எழுதியிருக்கலாம் :(

    எந்தக் கவிதையைப் பாராட்டினேன் என்பதையும் சொன்னால்தான் பேச இயலும். ஆனாலும், நிச்சயமாக, தமிழில் வந்த ஆகச் சிறந்த பத்து கவிதைகளுள் ஒன்று எனத் தீர்ப்பு சொல்லியிருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன் :)

    இங்கு பிரச்சனை 'தகுதி'யில்லை மோகன், தீர்ப்பு.

    அவர் தொடர்ந்து பல இடங்களில் லக்கியைச் சீண்டியபடி இருந்தார். பிறகு சாரு. இதுவும் முதலில் எழுதி வைத்து, சரி, வேண்டாமென்று பதிவில் ஏற்றவில்லை. இன்று இன்னொரு பதிவில் தெருப் பொறுக்கி எழுத்தாளன் என்றெல்லாம் எழுதியிருந்தார். அதற்கான எதிர்வினையே இது. இணையத்தில் ஆயிரம் பேர் இப்படி எழுதியிருந்தால், எல்லாருக்கும் எதிர்வினையாற்றிவிட்டுத்தான் செல்வேந்திரனைப் பற்றி எழுத வேண்டுமா என்ன. மட்டுமல்லாது, இதில் கார்க்கியைப் பற்றியும் எழுதியிருக்கிறேன்.

    இங்கு சாரு மேனியா அதிகமாக இருப்பதாக ஒரு பார்வை எனக்கு.

    நீங்கள் யார்? நீங்கள் யார்? எனத் தொடர்ந்து கேள்வி கேட்க நீங்கள் யார் என ஒற்றை வரியில் என்னாலும் பதில் சொல்ல இயலும் - ஆனால் அது உரையாடலோ அல்லது விவாதமோ அல்ல; சர்க்கஸ். அதில் சிக்கிக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.

    அப்புறம், நான் குண்டாஸ் எல்லாம் இல்லை. டயட்டிருந்து இளைத்துவிட்டேன் :)

    சரி, இந்தப் பதிவின் மையமாக நான் குறிப்பிடிருந்த செல்வேந்திரனின் பதிவுகள் உங்களுக்கு ஏற்புடையவைதானா?

    ReplyDelete
  13. ஜ்யோவ்,
    அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இதுகுறித்து பலமுறை யோசித்திருக்கிறேன், எழுதும் துணிவுதான் வரவில்லை, காரணம் பதிவர்களில் ஒரு சிலர் இலக்கியம், வாசிப்பு என்ற பழக்கமே முற்றிலும் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நான் எழுத வந்த சில மாதங்களில் அறிந்து கொண்டேன்.

    எனது பதிவுகளில் முதலில் பொதுவானதாக எழுத ஆரம்பித்து பிறகு ஒரு கவிதை ஒன்றை வெளியிட்டேன். தொடர்ந்து பலராலும் வாசிக்கப்படுகின்ற பதிவர் ஒருவர் ‘நீங்கல்லாம் பின்நவீனத்துவவாதியா‘என்று பின்னூட்டம் போட்டார்.

    எழுதும் மனோநிலை கொண்டவர் அனைவரும் வாசிப்பில் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். ஆனால் பதிவுலகில் வாசிப்பு என்றால் என்ன என கேட்கும் பலரை அறிகிறேன். உரையாடலின் இடையே ஒரு நாவலையோ, எழுத்தாளரையோ சிலாகித்து ஒரு வரி சொன்னால், ‘அவர் யாரு‘ என்கிறார்கள். குறைந்தபட்சம் அவர் யாரென அறிவதில்கூட ஆர்வமற்றவர்களாயிருக்கிறார்கள்.

    சாரு பாலியல் எழுதுகிறார் என்பது இவர்களின் குற்றச்சாட்டு என்றால், நீங்கள் ஏன் அதை வாசிக்கீறிர்கள்.
    ஜி.நாகராஜன், தஞ்சைபிரகாஷ் போன்றோரின் எழுத்துக்களில் புலப்படாத காமமா? காமமற்று யார் வாழ்கிறார்கள். புனைவின் ஒரு நிலைதானே காமமும், தாயின் பாசம், குழந்தை நேசம், காதலின் அன்பு என எல்லாவற்றையும் ஏற்கும் மனோநிலைகொண்டவர்கள் ஏன் காமத்தை தீண்டத்தகாததாய் எழுத்தில் ஒதுக்கக் கோரி கூவுகிறார்கள். காமத்திலிருந்துதானே தாய்மையும், காதலும் பிறக்கிறது.

    இப்போதைய வாமு கோமுவை ஒண்டிக்கு ஒண்டி கூப்பிட்டு பாருங்கள், (உண்மையில் அவர், கு... கு... வேணுமானால் வாங்க என்றே நையாண்டி செய்வார்)அவரின் வாசிப்பனுபவத்தின் ஆழம் அதீதமானது. அவர் எழுதலாம், ஆகவே எழுதுகிறார்.

    பிரபலமானவர்களை திட்டி, எவ்ளோ பெரிய ஆள் அவர் என்ற போலி பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது.

    சுந்தர்,
    நீங்கள் எழுதியிருப்பது குறிப்பிட்ட ஒருவருக்காக மட்டுமே என்று எனக்கு தோன்றவில்லை.
    .......... என்பது ஒரு பெயர்தான். இதுபோல பலருக்குமான பதில் இது.

    ஆழ்ந்து வாசியுங்கள், விமர்சியுங்கள், கேள்வி கேளுங்கள், விவாதம் செய்யுங்கள்... சேற்றை வாரி வீசாதீர்கள். காரணம் ஒருவரது எழுத்தை வாசித்துவிட்டு நமக்கு ஏற்படுவது வெறும், பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற மனோபாவம் மட்டுமே அல்ல.
    படைப்பின் ஆழ்ந்த தாக்கம் நம்முள் ஏற்படுத்தும் உள மாற்றங்கள்தான் வாழ்வின் பல்வேறு கணங்களில் இயக்குகிறது.

    எழுத வந்திருக்கிறோம், வாசிப்பு பழக்கமில்லாமல் இருக்ககூடாது.
    எழுத்து தீவிர வாசிப்பை நமக்களிக்க வேண்டும்.

    “முடிந்தவர்கள் செய்கிறார்கள். முடியாதவர்கள் பேசுகிறார்கள்“
    என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

    நேர்மையான பதிவிற்கு மறுபடியும்
    நன்றி, சுந்தர்.


    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  14. சுந்தர்,

    வட்டார வழக்கு பற்றிய உங்கள் பார்வை தவறானது.

    ஈரோட்டில் முதலியார்கள் பேசுவதும் கோவையில் நாயக்கர்கள் பேசுவதும் கொங்கு பாசைதான். அது ஜாதி அடிப்படையிலானது அல்ல, நெல்லையிலுள்ள முஸ்லீம் சகோதரர்கள்கூட நெல்லை வட்டார வழக்கில்தான் உரையாடுகிறார்கள். தமிழகமெங்கும் பரவியிருக்கும் மளிகைக் கடை அண்ணாச்சிகள் பேசுவது நாகர்கோயில் வட்டார வழக்கு.

    அதேபோல் தமிழின் சிறந்த 10 கவிதைத் தொகுப்பென்பது அவர் படித்த வரையில். நீங்கள் ஒன்றைச் சொல்லும்போதுகூட அவ்வாறேதானே?

    எழுத்து அல்லது இலக்கியம் ஏன் பிற கலைகளிலும்கூட இதுதான் பெஸ்ட் என அதையும் சொல்ல முடியாது ஏனெனில் அதைவிட பெஸ்ட் வேறெங்காவது இருக்கக்கூடும். அது நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.

    அப்ப்டி ஒருவர் சொன்னால் அது அவர் அறிந்தவரை என்பதுதான் உட்கருத்து.

    ReplyDelete
  15. After a long time a sincere post. ;-)

    ReplyDelete
  16. சுந்தர், செல்வேந்திரன் பாவம், வளர்ந்து வரும் எழுத்தர், (கவிஞர்) விட்ருங்க பாவம்,

    நான் சொல்ல வந்தது வட்டார பேச்சு வழக்கில் சாதியம்.-

    நெல்லை பகுதிகளில் எல்லா சாதியினரும் (பெரும்பாலான பார்ப்பனர்கள் உட்பட, பிள்ளைமார்கள், அருந்ததியர், நாடார் எலாரும் )பேசுவது ஒரே வட்டார மொழி, அதே போலவே மதுரை திண்டுக்கல், தேனீ வட்டார வழக்கும் (குறிப்பிட்டு தேவரின பேச்சு என சொல்ல முடியாது), ராயபுரம், எண்ணூரில் எப்படி ஒரே பேச்சு வழக்கு உள்ளதோ (மீனவர்கள், நாடார், செடியார், ரெட்டியார்) ,

    ReplyDelete
  17. //ஆனால் அது உரையாடலோ அல்லது விவாதமோ அல்ல; சர்க்கஸ். அதில் சிக்கிக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.//

    உங்கக்கிட்டேர்ந்து அப்படி பதில் வராதுன்னு தான் அந்தக் கேள்வியே கேட்டேன் - பதிலாய் நீங்கள் நினைப்பதை மறைக்காமல் சொல்வீர்கள் என்று!

    //எல்லாருக்கும் எதிர்வினையாற்றிவிட்டுத்தான் செல்வேந்திரனைப் பற்றி எழுத வேண்டுமா என்ன. //

    நிச்சயமாகக் கிடையாது? ஆனால் இப்படித் தாக்கும் பொழுது ‘கருத்தை’ மய்யப்படுத்திய ஒன்றாக இருந்து நீங்கள் அப்படிச் செய்திருந்தீர்கள் என்றால் இந்தக் கேள்வியே வராது, சாரு - லக்கி - செல்வேந்திரன் என்று இதென்னமோ தனிப்பட்ட முறையில் நீங்கள் தாக்குவதாகப் பட்டது. செல்வேந்திரன் செய்யலாம் நான் செய்யக்கூடாதான்னு கேட்க மாட்டீங்கன்னே நினைக்கிறேன்.

    //சரி, இந்தப் பதிவின் மையமாக நான் குறிப்பிடிருந்த செல்வேந்திரனின் பதிவுகள் உங்களுக்கு ஏற்புடையவைதானா?//

    நிச்சயமாக இல்லை. ஆனால் இந்தப் பதிவு எழுதியதன் மூலம் நீங்கள் செல்வேந்திரன் செய்ததையே நீங்களும் செய்ததாகப் படுகிறது, நேரடியான “தெருப்பொறுக்கி எழுத்தாளன்” மட்டுமல்ல வசை. இவருக்கு என்ன தெரியும் கவிதையைப் பற்றி பேச என்பதும் எனக்கு வசையாகத்தான் படுகிறது.

    //எந்தக் கவிதையைப் பாராட்டினேன் என்பதையும் சொன்னால்தான் பேச இயலும்.//

    அவசியமில்லை என்றே நினைக்கிறேன், ஒருவருக்குப் பிடிக்கும் புரியும் கவிதை மற்றவருக்கும் அப்படியே இருக்காது என்பதுவும் உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.

    //தமிழில் வந்த ஆகச் சிறந்த பத்து கவிதைகளுள் ஒன்று எனத் தீர்ப்பு சொல்லியிருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன் :)//

    சரி நீங்க இப்பச் சொல்லுங்களேன், ஒன்றிரண்டு பேராவது நீங்கள் சொல்வது ஆகச்சிறந்ததாக இருக்காது என்று சொல்வார்கள் என்றாவது நம்புகிறீர்களா?

    எனக்கு இந்த விதத்தில் லக்கி நடந்து கொண்ட விதம் பிடித்திருந்தது, நிராகரித்தல் தான் இங்கே சிறந்த முடிவாக இருக்க முடியும்.

    என் முந்தைய பின்னூட்டத்தை நீங்கள் எடுத்துக்கொண்ட முறைக்காக ஒரு நன்றி! ;)

    ReplyDelete
  18. //பழமைபேசி said...
    ஆகா, நானா வந்து மாட்ட்கிட்டன் போல இருக்கூ? கண்ணூ, அது ஊருக்கு ஊர் மாறுங்கண்ணூ. அவிகளும் இதே பழமயத்தான் பேசுவாங்க தோட்டங் காட்டுல... அது பொதுவா இருந்துச்சாது... கொலவுசுருங் குத்துசுருமா இருக்குற கொஞ்ச நஞ்சத்தையுமு இப்பியெல்லாஞ் சொல்லி? வேணான் இராசா... வேணான் இராசா....
    //
    பழமைபேசி,
    உண்மையாலுமே புரியல. விளக்கவுரை தேவை.

    ReplyDelete
  19. //பொன்.வாசுதேவன்//

    வணக்கம்! சுந்தர் அண்ணாச்சிக்கும் வணக்கம்!! தயவு கூர்ந்து மறுமொழிக்கான எனது மறுமொழியை அனுமதிக்கவும், சிரமத்திற்கும் வருந்துகிறேன்!

    அகநாழிகை அண்ணாச்சி! ஒரு சில கருத்துகளை பதிய விரும்புகிறேன்.

    பத்தாம் வகுப்பு மாணவன், முதல் இலக்கியப் புத்தகத்தைப் படிக்கிறான். அதில் இருக்கும் கருவை விமர்சனம் செய்கிறான். அவனுக்கு இலக்கிய வாசிப்பு பின் புலம் இல்லை என்பதற்காக, அவனது விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதா?

    பதிவுலகம், முதல் படிக்கட்டாக இருந்துவிட்டுப் போகட்டுமே?!

    இலக்கியம் பிறப்பது, ஒருவனது நெஞ்சார்ந்த உணர்விலும், அவந்து உணர்வைப் பிரதிபலிக்கக் கூடிய எழுத்திலும் மட்டுமே!

    மொக்கையோ, கிக்கையோ, வரும் தலைமுறை தமிழில் தட்டட்டும், தமிழ் வளரட்டும்.

    வாசிப்பு அனுபவம் இல்லை என்று சொல்லப் போய் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கி விடக்கூடாது என்பதே எம் அவா. ஆகவே, அனுபவம் பெற்றவர்கள் வழிகாட்டியாய் இருங்கள், இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள், சாதியை விட்டொழித்து!

    ஒரு சில அதுவாகவே இருப்பினும், அதுவாகச் சொல்வதில்லை. உதாரணம்: கால் கழுவிட்டு வர்றேன்.
    அதைப் போலத்தான், தேவையில்லாதன களைதலோடு வழிகாட்டுதல் தொடரட்டும்.

    நட்பும் மரியாதையும் கலந்து,
    பழமைபேசி.

    ReplyDelete
  20. //Karthikeyan G said...
    //பழமைபேசி said...
    ஆகா, நானா வந்து மாட்ட்கிட்டன் போல இருக்கூ? கண்ணூ, அது ஊருக்கு ஊர் மாறுங்கண்ணூ. அவிகளும் இதே பழமயத்தான் பேசுவாங்க தோட்டங் காட்டுல... அது பொதுவா இருந்துச்சாது... கொலவுசுருங் குத்துசுருமா இருக்குற கொஞ்ச நஞ்சத்தையுமு இப்பியெல்லாஞ் சொல்லி? வேணான் இராசா... வேணான் இராசா....
    //
    பழமைபேசி,
    உண்மையாலுமே புரியல. விளக்கவுரை தேவை.
    //

    காங்கயத்து மாப்பிள்ளை கார்த்தி,

    உங்களது இந்த வேண்டுகோளே சான்றாகிறது, வட்டார வழக்கு எவ்வளவு வேகமாக அழிந்து வருகிறது என்பதற்கு. எனவேதான் சொன்னேன், அது இன்னாருக்கு என பிரிக்கப்பட வேண்டாமே என்று.

    ReplyDelete
  21. ரமேஷ் வைத்யாவின் கவிதைத் தொகுப்பு தமிழில் வந்த பத்து சிறந்த கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. //

    இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் என்னுடைய பத்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை நிரூபணம் செய்தால் என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஜ்யோவ் பெயரில் எழுதி வைக்கலாம் என்றிருக்கிறேன்.

    ரமேஷ்வைத்யாவின் ஓரே கவிதைத் தொகுப்பான 'உயரங்களின் ரசிகனை' முற்றிலும் நிராகரிக்கிறேன் என்று எழுதிவிட்டுத்தான் வாங்கிக் கட்டி இருக்கிறேன்.

    திரும்பவும் ஜெமோவை துணைக்கழைக்கிறேன்.

    "உலகமே ஒப்புக்கொண்ட எழுத்தாளனாயினும் அவனை நிராகரிக்கும் உரிமை வாசகனுக்கு உண்டு"

    அதிகாரத்தின் உரையாடல்களைப் பற்றி அதிகமாகப் பேசுகிறோம். அடுத்தவனின் வாசிப்பு குறித்து உங்களுக்கிருக்கும் கற்பனைவாதம் அற்பத்தனமான அதிகாரத்தின் உரையாடலாகப் படவில்லையா...

    இவனுக்கு என்ன தெரியும்?
    இவன் என்னத்தை படிச்சி கிழிச்சான்?
    இவன் என்னத்தை எழுதிக் கிழிச்சான்?
    கவிதையப்பத்தி இவனுக்கு என்ன தெரியும்?
    இலக்கியத்தைப் பத்தி இவனுக்கு என்ன தெரியும் என்கிற ரீதியில் உங்களது அதிகாரத்தின் உரையாடல்கள் தொடர்கிறது.

    ReplyDelete
  22. குன்றேறி யானைப் போர் கண்டற்றால் ...

    ReplyDelete
  23. பூனைக்கு மணி கட்டியாச்சு !!!!

    அவருக்கு ஒரு பின்னுட்டம் போட தயார் செய்து கொண்டு இருந்தேன்

    நீங்க எனக்கு வேலை இல்லாம செஞ்சுடிங்க (எனக்கு ரொம்ப கோவம் ஆமா சொல்லிபுட்டேன் அண்ணே இது எந்த வட்டார மொழி ?)

    //தூ என்று காரி உமிழ்வதெல்லாம் அயோக்கியத்தனம்.

    இதை நான் அவர் பதிவில் சுட்டி காட்டி இருந்தேன்

    இந்த தடவை அவருக்கு பதில் சொல்ல இந்த அரைப்பொடிக்கு அதிர்ஷ்டம் இல்லை

    அண்ணே உங்க பதிவு மிளகாப்பொடி மாதிரி ரொம்ப காரமா இருந்தது லக்கி எழுத்து அவர ரொம்ப பாதித்து விட்டது

    அவர் பண்ற கோமாளித்தனங்களை விக்ரமன் பழைய படத்திலே எடுத்து விட்டதால் ஒரு 'லா லா' வுக்கு வாய்ப்பு இல்லை

    ReplyDelete
  24. //விமர்சன வெப்பத்தைத் தாங்க முடியாதவன் எப்படி தன்னை எழுத்தாளனென கற்பிதம் செய்துகொள்கிறான் என்பது புரியவில்லை. நான் என்ன எழுதினாலும் ரசி. தப்பித்தவறி விமர்சனம் செய்தால் மவனே நாறிடுவ லெவலில் ஒரு ----------எழுத்தாளன்.

    "தெருப்பொறுக்கி" இந்த வார்த்தையை தவிர இதில் வேறு தவறு ஏதும் இருப்பதாக தோன்றவில்லை.

    ReplyDelete
  25. சாருவின் மீதான எனது விமர்சனங்கள் அவர் பாலியலை சித்தரிக்கிறார் என்பதனால் அல்ல. ஜட்டிக்கதை எழுதி குட்டுப்பட்டுத்தான் எழுத்து வாழ்க்கையைத் துவக்கியவன் நான். அதற்கடுத்த தினமே 'குரங்குப் புணர்ச்சி' எழுதினேன். கூகிளில் தட்டியெடுத்து படித்துக்கொள்ளவும். அதுவுமில்லாமல் பாலியலைத் தொடர்ந்து எழுதி வருகிற ஜ்யோவை ஒருமுறை கூட செல்வேந்திரனாகிய நான் விமர்சித்தது இல்லை.

    வா.மு.கோமுவை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? அவரது 'சொல்லக் கூசும் கவிதைகள்' தொகுப்பிற்காக பாராட்டு விழா நடத்தும் முஸ்தீபுகளில் இருக்கிறோம்.

    ReplyDelete
  26. தப்பு பண்றீங்க ஐயா. செல்வேதிரனும் ஒரு எழுத்தாளர். லக்கி - தெரிஞ்ச விசயம். புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம், புகைச்சல் இருக்ககூடாது.

    ReplyDelete
  27. //Nundhaa said...
    குன்றேறி யானைப் போர் கண்டற்றால் ...
    //

    :-)
    நானும் உங்கள் கட்சி..

    ReplyDelete
  28. ஒன்னும் சொல்றதுக்கில்லை,

    வர வர நீங்களும் பயங்கரமா தமாஷ் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க!

    உங்க பதிவிலேயே இப்போ தான் விழுந்து விழுந்து சிரித்து படித்தேன்!

    ReplyDelete
  29. சுந்தர்,

    நெம்பவே ஜூடாயிட்டீங்க போல...கூலிங் ஸார்..கூலிங்...

    சாரு லக்கி செல்வேந்திரன் என்ற முக்கோணம் உங்களையும் சேர்த்து சதுரமாக ஆகியிருக்கிறது...பல பதிவர்களும் கலந்து கொள்வதால் சீக்கிரம் வட்டமாகி விடும்...பதிவர் வட்டம்!

    செல்வேந்திரனின் அந்த பதிவில் முதல் கமெண்ட் போட்டவன் என்ற முறையில்....சாரு மீது எனக்கு மதிப்பு இருந்தாலும், அவரது எல்லாக் கருத்துகளிலும் ஒப்புதல் இல்லை...குறிப்பாக ஜெயமோகன் மீதான அவரது அசிங்கமான தாக்குதல்...(உன் மகன் உனக்கு பிறந்தவன் தானா என்று கேட்பது ஜெயமோகனை மட்டுமல்ல, பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத அவரது மகனையும் தாக்குவது...)...பொதுவில் வைக்கும் போது எல்லாவிதமான கருத்துக்களும் வந்து தான் சேரும் இல்லையா??

    அடுத்து....சீர்காழியை ரசிப்பவன் இசையே தெரியாதவன்...பானுமதியை ரசிப்பவன் செவிடனாக இருக்க வேண்டியவன் ரீதியிலான போன்ற விமர்சனங்கள்....ஆக, இவர் ரசிப்பது உயர்வானது...மற்றவர்களுக்கு பிடித்தது கேவலம்...

    இதே ரீதியில்...எழுதும் முன் அவரை படியுங்கள்...இவரைப் படியுங்கள் என்று அள்ளி வீசப்படும் கருத்துக்கள்...வட்டார மொழியில் எழுதுவது மொழியை கெடுப்பது எனும் மொழிக் காவலர்கள்...

    வட்டார மொழி என்றால் யாருடைய வட்டார மொழி என்று கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்...எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது...தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் பிறந்ததால், என் ஊரில் எல்லா ஜாதி மக்களின் பேச்சும் எந்த சுவையுமின்றி தட்டையாக தான் இருக்கிறது...எனக்கு தெரிந்த வரை, நெல்லையிலும், நாகர்கோவிலுலும் எல்லாரு ஒரே மாதிரி தான் பேசுகிறார்கள்..ஆனால், பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் ஜாதி/மதம் பொறுத்து மாறுகின்றன என்பது உண்மை...

    செல்வேந்திரனின் எழுத்துக்கள் குறித்து எனக்கு பெரிய அனுபவம் இல்லாததால் எதுவும் சொல்ல இயலவில்லை...மன்னிக்க..

    ReplyDelete
  30. @ பழமைபேசி

    அன்பின் பழமைபேசி,
    உங்கள் கருத்துகளுக்கு எனது நன்றி.
    எனது கருத்து எழுதுபவர்கள் வாசிப்பு பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான். இது கூட பலரிடம் இல்லை என்பதே எனது ஆதங்கம், மற்றபடி கல்கி படித்தாலும், அம்புலிமாமா படித்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.

    //ஆழ்ந்து வாசியுங்கள், விமர்சியுங்கள், கேள்வி கேளுங்கள், விவாதம் செய்யுங்கள்... சேற்றை வாரி வீசாதீர்கள். காரணம் ஒருவரது எழுத்தை வாசித்துவிட்டு நமக்கு ஏற்படுவது வெறும், பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற மனோபாவம் மட்டுமே அல்ல.
    படைப்பின் ஆழ்ந்த தாக்கம் நம்முள் ஏற்படுத்தும் உள மாற்றங்கள்தான் வாழ்வின் பல்வேறு கணங்களில் இயக்குகிறது.

    எழுத வந்திருக்கிறோம், வாசிப்பு பழக்கமில்லாமல் இருக்ககூடாது.
    எழுத்து தீவிர வாசிப்பை நமக்களிக்க வேண்டும்.//

    இதுமட்டுமே என் கருத்து.

    உங்கள் ரெண்டு பைசாவுக்கும் எனது நன்றியும் அன்பும்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  31. இன்னும் இலக்கியம்னா என்னன்னே தெரியாம், என்னை மாதிரி ஒரு கூட்டம் இதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்கு. எங்களைப் பொருத்தவரைக்கும் ஒரு புத்தகம் தமிழ்ல அச்சடிச்சி, அந்த புத்தகத்துல முதல் பத்து பக்கங்களையும் தாண்டி படிக்க முடிஞ்சுதுன்னா அதுதான் இலக்கியம். முதல் பத்து பக்கங்களை கூட படிக்கமுடியாத அளவுக்கு இருந்துதுன்னா, அது எவ்ளோ காசு கொடுத்து வாங்கி இருந்தாலும், அந்த புத்தகம் இருக்க வேண்டிய இடம் வேற! இந்த பதிவுல எனக்கு தெரிஞ்ச ஒரே புத்தகம் எழுதி வெளியிடற எழுத்தாளரான 'சாரு' வோட, ஒரு புத்தகம் வாங்கி மொதோ பத்து பக்கம் படிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சி. வெளிய சொல்லலாம்னு பாத்தா எல்லாரும் அந்த புத்தகத்த புகழ்ந்து தள்ளராங்க. நமக்கு ஏன் வம்புன்னு வாய தொறக்கல. ஆனா நாங்களும் கண்ட புத்தகத்த படிச்சிகிட்டேதான் இருக்கிறோம்(எங்களுக்கு புரியற எழுத்துகளை மட்டும், நாங்கள் யாரிடமும் விமர்சனம் கேட்டு புத்தகம் வாங்குவதில்லை)

    'தெருப் பொருக்கி ' என்ற ஒரு வார்த்தையை தவிர செல்வேந்திரனை விமர்சிக்க வேறு நியாயமான காரணங்கள் அவரது பதிவில் இருப்பதாக தெரியவில்லை.

    ReplyDelete
  32. செல்வேந்திரன், தகவல் பிழைக்கு வருந்துகிறேன். நீங்கள் ரமேஷ் வைத்யாவின் ஒரு சிறுகதையைப் பற்றிக் குறிப்பிட்டு அது தமிழில் வந்த ஆகச் சிறந்த பத்து சிறுகதைகளில் ஒன்று எனச் சொல்லியிருந்தீர்கள். நினைவிலிருந்து எழுதியதால் வந்த பிழை இது. அதனால் உங்கள் சொத்துகள் எனக்கு வேண்டாம் :)

    அதிகாரம், உரையாடல் என மறுபடியும் அடித்து ஆடுகிறீர்கள். ஏன்யா, இரண்டாம் வகுப்பு மாணவன் கணக்கு தனக்கு நன்றாக வருமென்று நினைத்துக் கொண்டு ராமானுஜத்தைத் திட்டினால் பொறுத்துக் கொண்டு போகவேண்டுமா? தம்பி, உனக்குத் தெரியாது என்றால், உடனே அதிகாரம் அது இதென்று அடித்து விடுவதா :)

    குப்பன் யாஹூ, இங்கு ராயபுரம் ஏரியாவிலும் மொழி வழக்கிலும் வித்தியாசங்கள் உண்டு.

    வடகரை வேலன் அண்ணாச்சி, இடைநிலைச் சாதிகளில் உபயோகிக்கும் மொழிநடைக்கும் தலித் சமூகத்தினர் உபயோகிக்கும் மொழிநடைக்கும் வித்தியாசங்கள் உண்டு (கொங்கு பிரதேசத்திலும்!). இதை நான் வேறொருவரிடமும் பேசி ஊர்ஜிதப் படுத்திக் கொண்டேன்.

    ReplyDelete
  33. இங்கே பின்னூட்டங்களில் ‘லக்கி, லக்கி’ என்ற பெயர் அதிகமாக ஏன் அடிபடுகிறது என்றே புரியவில்லை.

    அதிலும்

    //சாரு லக்கி செல்வேந்திரன் என்ற முக்கோணம் //

    //சாரு - லக்கி - செல்வேந்திரன் என்று இதென்னமோ தனிப்பட்ட முறையில்//

    இதுபோன்ற பின்னூட்டங்கள் தேவையில்லாதது. செல்வேந்திரன் என்ற ஒரு நபரை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் மீது எனக்கு பெரிய மரியாதை எதுவுமில்லை.

    சூரியனை பார்த்து யார் வேண்டுமானாலும் குரைக்கலாம். யார் யார் குரைப்பது என்று சூரியன் கணக்கெடுத்துக் கொண்டிருக்க முடியாது.

    எனவே இனி பின்னூட்டம் போடுபவர்கள் தயவுசெய்து ‘லக்கி’ என்ற பெயரை மறந்துவிட்டு பின்னூட்டம் போடவும் :-)

    ReplyDelete
  34. ///ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    செல்வேந்திரன், தகவல் பிழைக்கு வருந்துகிறேன். நீங்கள் ரமேஷ் வைத்யாவின் ஒரு சிறுகதையைப் பற்றிக் குறிப்பிட்டு அது தமிழில் வந்த ஆகச் சிறந்த பத்து சிறுகதைகளில் ஒன்று எனச் சொல்லியிருந்தீர்கள். நினைவிலிருந்து எழுதியதால் வந்த பிழை இது. அதனால் உங்கள் சொத்துகள் எனக்கு வேண்டாம் :)///


    'சாரு'வை ரசிக்கும்/படிக்கும்/விரும்பும் எவரும் தகவல் பிழைக்காக வருந்தவேண்டாம்.அது அவரின் பிறப்புரிமை.

    ReplyDelete
  35. ///சூரியனை பார்த்து யார் வேண்டுமானாலும் குரைக்கலாம். யார் யார் குரைப்பது என்று சூரியன் கணக்கெடுத்துக் கொண்டிருக்க முடியாது.///

    உண்மைதான். யார் சூரியன்?

    ReplyDelete
  36. //கோயமுத்தூரின் வட்டார வழக்கு என்பது கவுண்டர்களின் வட்டார வழக்காகவும், திருநெல்வேலியின் வட்டார வழக்கு என்பது பிள்ளைமார்களின் வட்டார வழக்காகவும்தான் இருந்து வருகிறதேயன்றி, அங்கிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் மொழியாக இருப்பதில்லை.//

    சுந்தர்,

    என்னுடைய சொந்த ஊரில் இருக்கும் முடி திருத்துபவர், “என்ன அண்ணாச்சி சொகமா இருக்கியளா? புள்ளீவோ நல்லாப் படிக்குதுவோளா?” என்று நெல்லை ஸ்லாங்கிலும், நான் வளார்ந்த பழனியில் உள்ள முடி திருத்துபவர், “ எப்ப வந்தாப்ல. எப்படி இருக்காப்ல. குழந்தைங்க படிப்பெல்லாம் எப்படி?” என்று மதுரை ஸ்லங்கிலும், அதே போல் கோவையில் இருப்பவர், “ வாங் சார், வெட்டீரலாங் சார்” என கொங்கு ஸ்லாங்கிலும்தான் பேசுகின்றனர்.

    அவர்களாது அடுத்த தலைமுறை படித்து வளர்ந்தவர்கள் பேசும் ஸ்லாங் வேறு அது கலந்துகட்டி.

    கோவையில் பேசும் ஸ்லாங்கிற்கும் காரமடையில் பேசும் ஸ்லாங்கிற்கும், விஜயமங்கலத்தில் பேசும் ஸ்லாங்கிற்கும் வித்தியாசம் இருக்கிறது ஆனால் ஜாதி அடிப்படையில் அல்ல.

    இதில் இன்னும் ஆச்சர்யமான விஷயம். வீட்டில் தெலுங்கில் மாட்லாடும் நாயக்கர்கள வெளி இடங்களில் பேசிப் பழகி தங்கள் தெலுங்கையும் கொங்கு பாஷை போல் பேசுவதுதான்.

    ReplyDelete
  37. //
    இரா.சிவக்குமரன் said...//

    yaarunga indha pudhu jatti thangi?

    ReplyDelete
  38. வழக்கம் போல் மொழிவிளையாட்டில் ஒன்னுமே புரியலை

    ReplyDelete
  39. ம்..... எல்லாம் மொழி விளையாட்டு!

    ReplyDelete
  40. //(இங்கே இடைவெட்டாக கார்க்கியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவர் சாரு நிவேதிதா எழுதுவதை உல்ட்டா செய்து நக்கல் அடிக்கிறார். அப்படிச் செய்வது மிகச் சுலபாமனது, யாருடைய எழுத்துகளை வேண்டுமானாலும் - இவரது எழுதுவதும் சேர்த்தி - அப்படி எளிதாகச் செய்துவிடலாம். அதற்கு இங்கு வேறு பெயர்கூடச் சொல்கிறார்கள் : எதிர் - கவுஜ. கார்க்கியின் எழுத்துகளின் மதிப்பு அவ்வளவுதான்!).//

    அது மிகவும் எளிமையானது. நான் எப்போ அதை கடினம் என்றேன்? ஒரு வேளை எதிர் கவிதைகள் பல எழுதிய உங்களுக்கு அது தெரியவில்லை என்றால் சொல்லித் தர நான் தயார். என் எழுத்துக்களுக்கு மதிப்பு அவ்வளவுதானா? அதுக்கு மதிப்பே இல்லை என்றே நினைத்துக் கொண்டிருந்தேன் அய்யா.. :))) மொக்கைசாமி லேபிளில் எழுதியதற்கு இப்படி ஒரு முக்கியத்துவம் கிடைக்கப் பெற்றதைக் கண்டு எனக்கு ஆனந்தமே..

    //செல்வேந்திரன், தகவல் பிழைக்கு வருந்துகிறேன். நீங்கள் ரமேஷ் வைத்யாவின் ஒரு சிறுகதையைப் பற்றிக் குறிப்பிட்டு அது தமிழில் வந்த ஆகச் சிறந்த பத்து சிறுகதைகளில் ஒன்று எனச் சொல்லியிருந்தீர்கள். நினைவிலிருந்து எழுதியதால் வந்த பிழை இது. அதனால் உங்கள் சொத்துகள் எனக்கு வேண்டாம் :)//

    மீண்டும் நீங்கள் ஒரு சாருவின் அடிவருடி என்பதை நிரூபிக்கிறீர்கள். எழுதும்போது தடாலடியாக எழுதிவிட்டு பின் இப்படி மறுப்பு வெளியிடுவது யார் ஸ்டைல் என்பது இணையத்தில் உலவும் வாசக்ர்களுக்கு நன்கு தெரியும். அந்த ஒரு பாய்ண்ட்டுதான் இந்த பதிவின் அடிநாதம் என கருதுகிறேன். செல்வேந்திரனை தன் தம்பி என்று ரமேஷ் சொன்னதற்காக இப்படி சவுண்ட் விடுகிறர் என்றால் ,பத்து புத்தகங்களில் நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர் என்று போட்டதற்கு நீங்கள் போட்ட சத்தம் மிக குறைவு. அடுத்த பகுதி போடுவீர்கள் என நினைக்கிறேன்..

    தனிமனித தாக்குதல் செய்ததற்கு செல்வேந்திரனை கண்டிக்கலாம். கண்டிக்க வேண்டும். அபப்டியே நான் அனுப்பவிருக்கும் சுட்டிகளில் தனி மனித தாக்குதலும், தகாத வார்த்தைகளையும் எழுதிய காட்டு எருமைகளையும்(திட்டும் லிஸ்ட்டில் என்னையும் சேர்த்துக்கோங்க பாஸ்) கண்டிச்சு ஒரு பதிவோ, சைடு பாரில்(நோ நோ அதுவல்ல) ஒரு நோட்டிஸோ போடுங்கள்.

    ஒரு எழுத்தாளனின் ஒரே ஒரு படைப்பை படித்திருந்தாலும், அதைப் பற்றி விமர்சிக்க வாசகனுக்கு உரிமையுண்டு. அவர் எழுதிய அத்தனை குப்பைகளையும் வாசித்து விட்டுதான் விமர்சிக்க வேண்டுமென்றால் யாரும் யாரையும் விமர்சிக்க முடியாது.

    ReplyDelete
  41. //திருப்பூருக்குப் பரிசலையும், ஈரோட்டிற்கு வால்பையனையும், ஹைதராபாத்திற்கு கார்க்கியையும் ஏன் வாட்டார மொழி இலக்கியவாதிகளாக அறிவிக்கவில்லை என்று தெரியவில்லை. அவர்களும் இவரது நண்பர்கள்தானே!//

    ஜ்யோவ் அண்ணா..

    என் பெயர் இதில் வந்திருப்பதால் மட்டும் இந்த பின்னூட்டம்.

    எனக்கிருக்கும் ஒரே பலமே நண்பர்கள்தான். செல்வேந்திரன் என்றில்லை... எவருமே நான் நன்றாக எழுதவில்லையென்றால் என்னைப் பாராட்டுவதில்லை. நீ எழுதியது கேவலமாக இருக்கிறது என்ற விமர்சனத்தையும், ‘பரிசல் நீ எழுதினத ஒரே வார்த்தைல சொல்லணும்ன்னா பரிசல்-சறுக்கல்' என்றும் ஆண்மையோடு என்னை விமர்சிக்கும் உரிமையை அனைவர்க்கும் கொடுத்திருக்கிறேன். அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். நான் ஒன்றும் என்னை ஒத்த நண்பர்கள் அளவுக்கு சிறப்பாக எழுதுபவனுமல்ல என்பதையும் அறிவேன். இன்னும் உயரத்துடிக்கும் ஊர்க்குருவிதான் நான்.


    செல்வேந்திரன் தனது நண்பனாயிருக்கும்பட்சத்தில் அவரைப் புகழ்பவர் என்ற உங்கள் வாதம் எனக்கு உடன்படவில்லை.

    நண்பனாயிருக்கும் பட்சத்தில் என்ன எழுதினாலும் பாராட்டப்படும் என்றால் வலையுலகிலேயே மிக அருமையான எழுத்தாளன் நான்தான்! அத்தனை நட்புகள் எனக்கு என்பதை கர்வமாகவே சொல்லிக் கொள்கிறேன்!

    ReplyDelete
  42. கார்க்கி, நான் எங்கே நிறைய எதிர் - கவிதைகள் எழுதினேன் :)

    அடிப்படையிலேயே சில சிக்கல்கள் இருக்கின்றன கார்க்கி. நான் செய்திருந்தது தகவல் பிழைதான். சொல்ல வந்த விஷயமல்ல. அதாவது நான் சொல்ல வருவது செல்வேந்திரன் ஆகச் சிறந்த பத்து கவிதைகளுள் ஒன்று எனத் 'தீர்ப்பு' எழுதுகிறார் என்றேன். அதைக் கதைகளுள் ஒன்று என மாற்றிக் கொள்ள வேண்டும், அவ்வளவே.

    ஒரே ஒரு புத்தகத்தைப் படித்திருந்தாலும் விமர்சிக்கலாம். ஆனால் காறித் துப்புவதையோ அல்லது தெருப் பொறுக்கி எழுத்தாளன் எனச் சொல்வதையோ நீங்கள் விமர்சனம் என்று சொன்னால்... உண்மையிலேயே என்னிடம் பதிலில்லை.

    அப்புறம், இந்த அடிவருடி மாதிரியான வார்த்தைகளை போகிற போக்கில் உபயோகிக்காதீர்கள். அது என்னைச் சினப்படுத்துகிறது.

    ReplyDelete
  43. //ஒரே ஒரு புத்தகத்தைப் படித்திருந்தாலும் விமர்சிக்கலாம். ஆனால் காறித் துப்புவதையோ அல்லது தெருப் பொறுக்கி எழுத்தாளன் எனச் சொல்வதையோ நீங்கள் விமர்சனம் என்று சொன்னால்... //

    ஜி, அதை நான் விமர்சனம் என்று சொல்லவில்லை. அதற்கு அவரை கண்டிக்க வேண்டுமென்றே சொல்லி இருக்கிறேன். அந்த போக்கை அவர் கைவிட வேண்டும் என இங்கேயே கேட்டுக் கொள்கிறேன்.



    //அப்புறம், இந்த அடிவருடி மாதிரியான வார்த்தைகளை போகிற போக்கில் உபயோகிக்காதீர்கள். அது என்னைச் சினப்படுத்துகிறது.//

    நண்பர்களுக்காக புகழ்ந்து சொல்வது என்பதில் ஒளிந்து இருப்பது அடிவருடி என்னும் அர்த்தம் தானே தல? என் மீதும், பரிசல் மீதும் இன்னும் சிலர் மிதும் வைக்கபடும் முக்கியமான குற்றச்சாட்டு இது. அதனால்த்தான் அபப்டி சொல்லிவிட்டேன்.. நீங்களே எங்கள் மீது கொண்ட அக்கறையால் உண்மையான கருத்துகளை அவ்வபோது சொல்கிறீர்கள். அது போல்த்தான் அனைவரும். நல்லாயிருக்குனு அவர்கள் பாராட்டுவது எங்கள் தரத்திற்கு. அதை அடுத்த தளத்தில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டு கொள்வதாகது..

    வேறு சொல்வதென்று தெரியவில்லை. சினப்படுத்த வேண்டும் என்பதல்ல என் எண்ணம் :(((

    ReplyDelete
  44. வழமையான பதிவு போன்று பின்னுட்டத்தை மறுவாசிப்பு செய்யாமலே போட்டது தவறு என எண்ணுகிறேன். சொல்ல் வந்த கருத்தில் மாற்றமில்லை எனினும், வார்த்தைகளை கவனமாக கையாண்டிருக்கலாம். இந்த தவறுக்கு மன்னித்து விடுவீர்கள் என்று நம்புகிறேன். அப்படித்தானே???? :))))

    ReplyDelete
  45. "சூரியனை பார்த்து யார் வேண்டுமானாலும் குரைக்கலாம். யார் யார் குரைப்பது என்று சூரியன் கணக்கெடுத்துக் கொண்டிருக்க முடியாது."

    அட! அவர் இப்ப சூரியன் லெவலுக்குப் போயாச்சா...? யாரை எதுக்கு ஒப்பிடுறதுன்னு ஒரு நியாயம் இல்லையா?

    ReplyDelete
  46. சுந்தர்ஜி, கோவை வட்டார வழக்கு விஷயத்தில் யாரோ உங்களுக்குத் தவறான தகவல் தந்திருக்கிறார்கள். எனக்கு வியாபார ரீதியிலான ஏராளமான தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களும் கோவை வட்டார வழக்கில் தான் பேசுகிறார்கள். ஒரு வேளை என்னைப் போல் பிழைப்பிற்காக சில காலம் முன் வந்தவர்கள் வேண்டுமானால் அப்படி இல்லாமல் இருக்கலாம். எனக்கும் இன்னும் கூட கோவை பாஷை பேச முடியவில்லை. :)

    கோவை மட்டுமில்லை, எனக்கு நன்கு பரிச்சயமான தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்னகிரி மற்றும் சேலம் பகுதிகளிலும் கூட எல்லா மக்களும் ஒரே மாதிரி தான் பேசுகிறார்கள். சாதிக்கு ஏற்றவாறு மாற்றிப் பேசுவதில்லை. பிராமணர்களைத் தவிர.

    புதியதாக குடியேறியவர்கள் அவர்களின் சொந்த ஊர் வழக்கில் பேசுகிறார்கள். கோவையில் நான் பேசுவது போல். :)

    ReplyDelete
  47. இங்க வந்தா குச்சுமிட்டாயும் குருவி ரொட்டியும் கிடைக்கும் என்று அனுப்பினார்கள் யார்க்கிட்ட கேட்பது?
    யார் கொடுப்பா?

    ReplyDelete
  48. //
    லக்கிலுக் said...
    இங்கே பின்னூட்டங்களில் ‘லக்கி, லக்கி’ என்ற பெயர் அதிகமாக ஏன் அடிபடுகிறது என்றே புரியவில்லை.

    அதிலும்

    //சாரு லக்கி செல்வேந்திரன் என்ற முக்கோணம் //

    //சாரு - லக்கி - செல்வேந்திரன் என்று இதென்னமோ தனிப்பட்ட முறையில்//

    இதுபோன்ற பின்னூட்டங்கள் தேவையில்லாதது. செல்வேந்திரன் என்ற ஒரு நபரை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் மீது எனக்கு பெரிய மரியாதை எதுவுமில்லை.

    சூரியனை பார்த்து யார் வேண்டுமானாலும் குரைக்கலாம். யார் யார் குரைப்பது என்று சூரியன் கணக்கெடுத்துக் கொண்டிருக்க முடியாது.

    எனவே இனி பின்னூட்டம் போடுபவர்கள் தயவுசெய்து ‘லக்கி’ என்ற பெயரை மறந்துவிட்டு பின்னூட்டம் போடவும் :-)
    //

    லக்கி,

    அது நான் போட்ட கமெண்ட்... உங்களை இழுக்க வேண்டும் என்ற நோக்கம் அல்ல, ஆனால் பதிவிலேயே உங்களை குறித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதால் வந்தது அது...மன்னிக்க!

    ReplyDelete
  49. //ஒரு எழுத்தாளனின் ஒரே ஒரு படைப்பை படித்திருந்தாலும், அதைப் பற்றி விமர்சிக்க வாசகனுக்கு உரிமையுண்டு. அவர் எழுதிய அத்தனை குப்பைகளையும் வாசித்து விட்டுதான் விமர்சிக்க வேண்டுமென்றால் யாரும் யாரையும் விமர்சிக்க முடியாது.//

    உங்கள் டெஸ்ட் என்ற ஒரு வார்த்தை பதிவு படித்து விட்டு உங்கள் எழுத்தின் மீது
    விமர்சனத்தை வைக்க முடியாது
    அதனால் தான் நீங்கள் எழுதிய அத்தனை குப்பைகளையும் வாசித்து விட்டுதான் விமர்சிக்க முடியும்

    உங்களுக்கு மேலும் ஒரு பதில்
    இரண்டாம் வகுப்பு மாணவன் கணக்கு தனக்கு நன்றாக வருமென்று நினைத்துக் கொண்டு ராமானுஜத்தைத் திட்டினால் பொறுத்துக் கொண்டு போகவேண்டுமா?

    நன்றி ஜ்யோவ்ராம் அண்ணா

    வில்லு என்ற ஒரு படத்தின் தோல்வியை வைத்து விஜயை விமர்சிக்க முடியுமா
    எல்லா குப்பைகளையும் (எல்லா நடிகர்களின் படத்தையும் சேர்த்து ) பார்த்து விட்டு தான்
    விமர்சிக்க முடியும்

    //ஒரு வேளை எதிர் கவிதைகள் பல எழுதிய உங்களுக்கு அது தெரியவில்லை என்றால் சொல்லித் தர நான் தயார்.

    இதை தான் அகம்பாவம் என்று கூறுவார்கள்
    உங்கள் அபிமான நடிகர் மீது விமர்சனம் வைத்தால் பாய்ந்து வருவிர்கள்
    அவர் உங்களுக்கு என்ன செயதார்

    //பத்து புத்தகங்களில் நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர் என்று போட்டதற்கு நீங்கள் போட்ட சத்தம் மிக குறைவு.

    இந்த சத்தம் போதும்

    //மீண்டும் நீங்கள் ஒரு சாருவின் அடிவருடி என்பதை நிரூபிக்கிறீர்கள்.

    விமர்சனத்தை தாங்க முடியாதவர்கள் தான் இது போல கூறுவார்கள்
    அதில் தெருப் பொறுக்கி எழுத்தாளன் ,தூ போன்றவையும் அடங்கும்

    //(இங்கே இடைவெட்டாக கார்க்கியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவர் சாரு நிவேதிதா எழுதுவதை உல்ட்டா செய்து நக்கல் அடிக்கிறார். அப்படிச் செய்வது மிகச் சுலபாமனது, யாருடைய எழுத்துகளை வேண்டுமானாலும் - இவரது எழுதுவதும் சேர்த்தி - அப்படி எளிதாகச் செய்துவிடலாம். அதற்கு இங்கு வேறு பெயர்கூடச் சொல்கிறார்கள் : எதிர் - கவுஜ. கார்க்கியின் எழுத்துகளின் மதிப்பு அவ்வளவுதான்!).//

    இந்த நாலு வரிக்கு இந்த சத்தம் ரொம்ப அதிகம்

    ReplyDelete
  50. நாசரேத்தோ நாங்குனேரியோ அல்லது என்ன எழவோ என்றால் ஒரே இலக்கியவாதி ஆசிஃப் அண்ணாச்சி, அவ்வளவுதான் //////

    இப்படி நம்ம பய ஒருத்தன் பாசத்துல உண்மையைச் சொல்லுதான்னா சொல்லட்டும்டேன்னு விட வேண்டியதுதான்வே.. அத விட்டு போட்டு உமக்கு ஏன்வே வலிக்கி?? :)

    உமக்கு அதிகாரம் தலைக்கு மேல ஏறிக்கிடக்குவே. பைத்தியக்காரன் கிட்ட சொல்லி உம்மக் கொல செய்ய வேண்டியதுதான் :)

    நல்லா இருங்கடே!!

    ReplyDelete
  51. சுந்தர்,

    "ஒரே ஒரு புத்தகத்தைப் படித்திருந்தாலும் விமர்சிக்கலாம். ஆனால் காறித் துப்புவதையோ அல்லது தெருப் பொறுக்கி எழுத்தாளன் எனச் சொல்வதையோ நீங்கள் விமர்சனம் என்று சொன்னால்... உண்மையிலேயே என்னிடம் பதிலில்லை.

    அப்புறம், இந்த அடிவருடி மாதிரியான வார்த்தைகளை போகிற போக்கில் உபயோகிக்காதீர்கள். அது என்னைச் சினப்படுத்துகிறது."

    நீங்கள் புனிதங்களைக் கட்டுடைப்பவர் என்று இதுகாறும் நினைத்திருந்தேன். சுகுணா திவாகர், பைத்தியக்காரன் வரிசையில். தெருப்பொறுக்கி, அடிவருடி என்று சொன்னால் என்ன... சரி என்று கடந்துபோகவேண்டியதுதானே...எதற்காக இப்படிக் கோபம் வருகிறது?

    இது உங்களுக்கும் எனக்குமான கேள்வி-பதில். இதில் என்னோடு கருத்து வேறுபாடுடைய 'முந்திரிக்கொட்டைகள்'மூக்கை நுழைக்கவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  52. சாரு
    செல்வேந்திரன்
    லக்கி.

    இதில் லக்கி கேட்டுகொண்டபடி லக்கியை நீக்கிவிடவும்.

    செல்வேந்திரன் மேற்கோளிட்ட நிராகரிக்கும் உரிமையில் எவரை தெருப்பொருக்கி என அப்யூஸ் செய்ய அவருக்கு உரிமையில்லை என்பதே எனது கருத்து.

    எனது கருத்து எல்லா மூலங்களையும் கிளைகளையும் வாசித்து வரவில்லை.

    மேம்போக்காக ஸ்க்ரோல் செய்ததில் வந்த கருத்து. இதற்காக யாருக்காகவேனும் சினமிருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.ஆனால் சாருவை நான் சில நேரம் மேதாவியாகவும் சில நேரங்களில் டிக் ஹெட் ஆகவும் பார்க்கிறேன் அவ்வளவே. அது எனது உரிமை அதற்காக நான் அவரை டிக் ஹெட் என பொத்தாம்பொதுவாக அழைத்து அப்யூஸ் செய்யமாட்டேன்.

    ReplyDelete
  53. sundar, let me tell u one thing,
    both of these peoples i mean selvendran, and lucky genious idiots. really they r genious idiots.

    they are spoiling hole blog world. they have to stop their noncence that blaming against.

    if any ones writing is good, they can appreciate, but when it is bad thay have to convey in good way.

    also another big idiot is charu, useless man.

    u r doing ur work well, pls never involve for them.

    ReplyDelete
  54. அடிவருடி என்பதின் அர்த்தமே எனக்கு புரிவதில்லை...:) யாராவது தெளிவுபடுத்தவும்.

    அ)நின்று கொண்டிருக்கும் போது பாதமே அடியில் இருப்பதால் பாதத்தை வருடுவது.

    ஆ)நாற்காலியில் அமர்ந்திருந்தால் "அடியில்" என்று குறிப்பிட்டால் பிட்டம் அதாவது குண்டி...அதனால் குண்டியை வருடுவது.

    இ)இது தற்போது வழக்கத்தில் இருக்கும் சொம்படிப்பதையொத்தது. எனது அபிப்ராயம் தவறாக இல்லாத பட்சத்தில் வயதானவர்களுக்கும், சோம்பேறிகளுக்கும் விறைப் பை அதாவது புடுக்குகள் பெரிதாக இருக்கும். அதனை வருடினால் சுய இன்பத்தையொத்த சுகம் தரும். அதனால் கொட்டை அல்லது விறைப் பை அல்லது புடுக்குதனை வருடுவதை அடிவருடுவது என்று பொருள் கொள்ளலாமா?

    மூத்த தமிழ் அறிஞர்களும், புலவர்களும், இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் புழங்கும் இவ்விடத்தில் எமது ஐயத்தை விட்டுச் செல்கிறேன். தெளிவுபடுத்தவும்.

    ReplyDelete
  55. ரெம்ப பிஸியா இருக்கீங்க போல?

    மேலும் முதல் பின்னூட்டத்தில் :) போட்டுவிட்டு பின்னால் வரும் பின்னூட்டத்தில் விளக்கங்கள் கொடுக்கும் லக்கியை நான் நிராகரிக்கிறேன்

    :))

    ரெம்ப நாளைக்கப்புறம் தமாசா இருக்கு.

    இப்பதிவிற்கும் வாசிப்பனுவத்திற்கும் நன்றி சுந்தர்...

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  56. வட்டார வழக்கு சம்பந்தமாக மட்டும்
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

    புத்தகங்களைப் படிப்பதும் நண்பர்களிடம் பேசுவதும் மட்டும் உண்மையான தகவலைத்தராது (உண்மை என்பது என்ன என்பதும் பிரச்சனைக்குரியது)

    தமிழகத்தில் இலக்கியவியாதி என்று சொல்லிக் கொள்பவர்கள் அல்லது பின்நவீனத்துவம் என்று பேசுகிறவர்கள் முதலில் தமிழகம் முழுக்க, குறைந்த பட்சம் மாவட்ட தலை நகரம் + ஒரு கிராமம் என்று தான் வாழும் பிரதேசத்தின் இயல்பை அறிய நேரம் செலவிட வேண்டும். அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தத்துவங்களை பேசித் திரிவதில் என்ன பயன்?


    தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்களுக்கு விஜயம் செய்து இருக்கிறீர்கள்? ஒரு மாவட்டத்தின் தலை நகரில் குறைந்தது ஒரு நாள் தங்கி இருக்கீறீர்களா?
    அல்லது எத்தனை கிராமங்களுக்கு விஜயம் செய்து இருக்கீங்க?

    என்று அவரவர் கேட்டுக்கொள்ளவேண்டிய விசயம்.


    **

    வட்டார வழக்கு என்பது அந்த வட்டாரத்திற்கு பொதுவான ஒன்று.
    பார்பனர்கள்தான் எங்கு இருந்தாலும் அந்த வட்டாரத்துடன் ஒட்டாமல் தனி மொழி அடையாளம் காப்பார்கள்.

    ஒரே வட்டாரத்தில் இருந்தாலும் பல சாதிப்பிரிவுகளுக்குள் சில தனிப்பட்ட பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கவழக்கங்களின் தாக்கம் சொற்களில் இருக்கும். இருந்தாலும் , சாதிக் கென்று தனியான வட்டார வழக்கு நானறிந்த அளவில் இல்லை.

    ***

    கொங்கு வட்டாரத்தில் "ஏனுங்க அம்மணி" என்று ஒரு தலித் விவசாயக்கூலி சொல்வதற்கும் , "என்ன அம்மணி" என்று மிட்டாமிராசு சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கும். அது அதிகாரத் தோரணையும் , சாதியப் பெருமையும் கலந்துவரும் ஒன்று.

    **

    பார்ப்பண மற்றும் நரிக்குறவர்கள் தவிர்த்து சாதி சார்ந்த மொழி வட்டார வழக்கு இருப்பதாக நான் அறியவில்லை. இது அலசப்படவேண்டிய ஒன்று.

    ReplyDelete
  57. சுந்தர்,

    செல்வேந்திரனை அதிகம் வாசித்திராதவன் என்ற முறையில் உங்கள் பதிவு குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை.

    ஆனால் ஒரு விசயம், நீங்கள் கார்க்கியை குறித்து எழுதியிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது எதிர் கவுஜகளை மட்டுமே நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மேலும் அவரைப் போன்ற இளவயது எழுத்தாளர்களை உங்களின் மதிப்புரைகள் ஊக்கப்படுத்தாது என்பது உங்களுக்கு தெரியாதா சுந்தர்?

    கார்க்கி,

    அடிவருடி போன்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம், விவாதம் இன்னும் ஆரோக்கியமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  58. //கோயமுத்தூரின் வட்டார வழக்கு என்பது கவுண்டர்களின் வட்டார வழக்காகவும்//

    As a கோயமுத்தூர் கவுண்டன், I just would like to add that one of the best Kongu slang I've heard is from my அருந்ததியர் & கம்மவார் நாயுடு friends.

    Both speak 'a sorta' Telugu at home.

    //அடிவருடி என்பதின் அர்த்தமே எனக்கு புரிவதில்லை...:) யாராவது தெளிவுபடுத்தவும்.//

    Mee too.
    Could be இடக்கரடக்கல் for ass-licking?

    For the rest of the show, I'm thoroughly entertained. Keep going mates! :)

    ReplyDelete
  59. //உங்களுக்கு மேலும் ஒரு பதில்
    இரண்டாம் வகுப்பு மாணவன் கணக்கு தனக்கு நன்றாக வருமென்று நினைத்துக் கொண்டு ராமானுஜத்தைத் திட்டினால் பொறுத்துக் கொண்டு போகவேண்டுமா//

    ஹிஹி.தவறான உதாரணம். பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவன் சினிமாவில் உயரிய விருது வாங்கியவரின் மொக்கைப் ப்டத்தை குப்பை என சொல்லுவது தவறா? டெஸ்ட் என்ற ஒரு வார்த்தை பதிவை படித்துவிட்டு என் எழுத்தை விமர்சிக்க முடியாது. ஆனால் அந்தப் பதிவு வேஸ்டுன்னு சொல்லலாம் இல்லையா?

    //வில்லு என்ற ஒரு படத்தின் தோல்வியை வைத்து விஜயை விமர்சிக்க முடியுமா
    எல்லா குப்பைகளையும் (எல்லா நடிகர்களின் படத்தையும் சேர்த்து ) பார்த்து விட்டு தான்
    விமர்சிக்க முடியும்//

    இங்கே எங்கேயிருந்து வில்லு வந்தது?வில்லை வைத்து விஜயை மொத்தமாக விமர்சிக்க முடியாது. ஆனால் வில்லு மொக்கை. வில்லுவில் விஜய் குப்பை என சொல்லலாம். நானும் சொல்லி இருக்கிறேன்.

    //இதை தான் அகம்பாவம் என்று கூறுவார்கள்
    உங்கள் அபிமான நடிகர் மீது விமர்சனம் வைத்தால் பாய்ந்து வருவிர்கள்
    அவர் உங்களுக்கு என்ன செயதார்//

    அய்யா சாமீ. என்ன ஆச்சு உங்களுக்கு? இவர் எங்கே என் அபிமான நடிகரை பற்றி விமர்சனம் வைத்தார்? உண்மையென்னவெனில் உங்கள் காவல் தெய்வம் மதிப்பிற்குரிய சாரு அவர்களைப் பற்றி நான் பேசியது கண்டு புத்தி பேதலித்து உளறுகிறீர்.இது தெரியாமல் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறென்.

    சுந்தர்ஜி, என்னைப் பற்றி இவர் சொல்லியதால் பதில் சொல்லி இருக்கிறேன். தேவையில்லையென் நினைத்தால் நீக்கிவிடுங்கள்.

    ReplyDelete
  60. //ஹிஹி.தவறான உதாரணம். பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவன் சினிமாவில் உயரிய விருது வாங்கியவரின் மொக்கைப் ப்டத்தை குப்பை என சொல்லுவது தவறா? டெஸ்ட் என்ற ஒரு வார்த்தை பதிவை படித்துவிட்டு என் எழுத்தை விமர்சிக்க முடியாது. ஆனால் அந்தப் பதிவு வேஸ்டுன்னு சொல்லலாம் இல்லையா?

    நாம் சினிமாவையும் எழுத்தாளர்களையும் ஒன்றாகவே பார்க்கிறோம் அதனால் இந்த ஒப்பிடு வருகிறது .பதிவை படித்து விட்டு பதிவு வேஸ்டுன்னு சொல்லலாம்
    ஆனால் எழுத்தை விமர்சிக்காமல் அதை எழுதியவரை அல்லவா விமர்சனம் செய்கிறோம் (உதாரணம் தெருப் பொறுக்கி எழுத்தாளன் ,அடிவருடி ) அதை தான் தவறு என்று சுட்டி காட்டுகிறோம் அதற்கே உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது

    //அய்யா சாமீ. என்ன ஆச்சு உங்களுக்கு? இவர் எங்கே என் அபிமான நடிகரை பற்றி விமர்சனம் வைத்தார்? உண்மையென்னவெனில் உங்கள் காவல் தெய்வம் மதிப்பிற்குரிய சாரு அவர்களைப் பற்றி நான் பேசியது கண்டு புத்தி பேதலித்து உளறுகிறீர்.

    உங்கள் அபிமான நடிகரை பற்றி அவர் விமர்சனம் செய்தார் என்று நான் சொன்னேனா? உங்கள் அபிமான நடிகரை பற்றி யாராவது விமர்சனம் வைத்தால் என்று அதற்கு அர்த்தம் ? என்னை பொறுத்தவரை நீங்கள் விஜய்க்கு ஒரு முகம் தெரியாத ரசிகன் அப்படி இருக்கும் உங்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால் மற்றவர் 'சாருவை' (சாருவின் எழுத்தை அல்ல) விமர்சனம் செய்யும் பொழுது சாருவிடம் நெருங்கி பழகும் நண்பர்களுக்கு கோபம் வர கூடாதா ?

    இதை சொன்னதற்கு எனக்கு 'புத்தி பேதலித்து விட்டது' என்று நீங்கள் கூறுகிறீர்கள் இது கூட நான் விஜயை பற்றி கூறியதால் எனக்கு நீங்கள் கொடுக்கும் சான்று
    இப்படி நீங்கள் என்னை பற்றி சொன்ன பிறகும் கூட நான் உங்கள் எழுத்தை மற்றுமே விமர்சித்து உள்ளேன்

    நன்றி கார்கி பைத்திக்கார பட்டம் கொடுத்தற்கு

    ReplyDelete
  61. தமிழ்நதி, போகிறபோக்கில் சேற்றை அடித்துச் சென்றால், வேண்டாம் அப்படிச் செய்யாதே எனக்குக் கோபம் வருகிறது எனச் சொல்லும் உரிமைகூட இல்லையா என்ன?

    முந்திரிக் கொட்டை என்ற பெயரில் பின்னூட்டம் போட்டவருக்கு - தமிழ்நதி மற்றவர் குறிக்கிடவேண்டாம் எனச் சொல்லியிருப்பதால், மன்னிக்கவும், உங்கள் பின்னூட்டத்தை வெளியிடவில்லை.

    போலவே இரண்டு தினங்களுக்கு முன் ஒரு அனானி பின்னூட்டதை வெளியிடவில்லை.

    அதுசரி, ஜெயமோகனின் தேர்வு கட்டுரையும் அதற்கு சாருவின் எதிர் கட்டுரையையும் வாசித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன வரிகளை வாசித்த நினைவில்லை. கொஞ்சம் சுட்டி தர இயலுமா?

    ReplyDelete
  62. //தூ என்று காரி உமிழ்வதெல்லாம் அயோக்கியத்தனம்.//

    Yes, because they should say like their 'Zeru' sorry "Charu" "Vuve, vanthi varuthu', endru thaan sollavendum. Hello first advise to your favourite ZERO HERO
    FYI- I am no blogwriter,e xcept a normal reader. Not an expert to find the tamil font, sorry for that.

    ReplyDelete
  63. எச்சூஸ்மீ,

    யாருங்க அந்த செல்வேந்திரன்?

    ReplyDelete
  64. //இங்க வந்தா குச்சுமிட்டாயும் குருவி ரொட்டியும் கிடைக்கும் என்று அனுப்பினார்கள் யார்க்கிட்ட கேட்பது?
    யார் கொடுப்பா?//

    வாய்விட்டு சிரித்தேன்.

    செல்வேந்திரன் பதிவை படித்தேன்... அது ஏனோ.. புனிதர்களுக்கு... சாருவை பிடிப்பதில்லை.

    சாருவை போல கணிவான மனிதரை பார்ப்பது சிரமம். அவரது எழுத்தை படித்துவிட்டு குத்துது குடையது.. என்று ப்ளாக்கர் உலகில் தொடர்ந்து பிரஸ்தாப்பதே வழக்கமாகிவிட்டது.

    என்று தனியும் இந்த சாருவின் தாகம்.
    (சாரு நினச்சா பொறாமையா தான் இருக்கு)

    ReplyDelete
  65. //
    இந்தப் பதிவு சாருவின் கடிதமும் பின் நவீனத்துவமும் என்ற செல்வேந்திரன் பதிவைப் படித்ததும் எழுதியது. பிறகு எதற்கு வேண்டாமென்று பதிவிடவில்லை. ஆனால் இன்றைய அவரது இன்னொரு பதிவைப் படித்ததும் - அடக்க மாட்டாமல் இதை வெளியிடுகிறேன்.
    //
    பதிவிடாமலே இருந்தால் நன்றாக இருந்திருக்கும், சுந்தர்.

    பிரபல்யம் என்பது வெறும் பம்மாத்து வேலை என்பதை அறியாதவரா நீங்கள்?
    பிரபலம் ஆவதற்காக சாருவை வைகிறார், அவரை ஒப்பிடுகிறார் என்பதெல்லாம் ...

    பதிவுலக பிரபல்யம் என்பது பத்து பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லாதது என்பது நாம் அறிந்தது தானே?

    ReplyDelete
  66. எச்சூச்மீ..மே கம்மின்...?

    ReplyDelete
  67. ஐயா, பின்னூட்டவாதிகளே ஏனய்யா,அந்த லக்கி, கொக்கினுலாம் போட்டு அவரை ஹூக் பன்றீங்க?

    ReplyDelete
  68. //..வட்டார வழக்கு சம்பந்தமாக மட்டும்
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

    புத்தகங்களைப் படிப்பதும் நண்பர்களிடம் பேசுவதும் மட்டும் உண்மையான தகவலைத்தராது (உண்மை என்பது என்ன என்பதும் பிரச்சனைக்குரியது)..//

    யானும் அவ்வண்ணமே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

    ஈரோடு மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி கிராமத்தில் இருப்பவன் என்கிற முறையில், நான் பேசிப் பழகிய வரையில் ஆதி திராவிட(தலித்!) மக்கள் வட்டார மொழி பேசுவது இல்லை என்கிற கருத்தை நான் மறுக்கிறேன்..

    நான் அவர்களோடு காடு, தோட்டங்களில் வேலை செய்த போதும் சரி, தற்போது ஊருக்கு செல்லும் போதும் சரி வட்டார மொழி வழக்கிலே தான் உரையாடிக் கொள்கிறோம்..

    உதாரணத்திற்கு, "ஏனுங் மகராசரே(மன்னிக்கவும் வேறு எதுவும் ஞாபகத்திற்கு வர வில்லை. பிடிக்கவில்லை என்றால் நீக்கி விடவும். இந்த பின்னூட்டம் உங்களுக்காக மட்டுமே..) எப்ப வந்தீங்க.."


    இவண்,
    மா.திருஞானசம்பத்.

    ReplyDelete