Wednesday, June 17, 2009

போதுமென்ற மனம்

சிறுதுயில்
கடும்சினம்
வரும் போகும் தினம் மனம்
மோனம் குணம்
உளி தெளி(த்து)
தணி அறை பன்னீர்
சொக்கும் சிவக்கும் மொக்கும் மலரு(க்கு)ம்
பணம் கொண்டாடும்
இனம்

கொஞ்சம் வார்த்தைகள்
கொஞ்சம் சமரசம்

சந்துஷ்டியாய் கழிகிறது

29 comments:

  1. ஐயாம் எஸ்கேப்

    ReplyDelete
  2. உஹூம்ம்.. நாலு தடவை வாசிச்சு ஒன்னு கூட புரியல..!
    ஒரு வேளை அதுதான் கவிதையோ....?

    ReplyDelete
  3. ஒன்னியும் பிரியல.. மீ த எஸ்கேப்பு

    ReplyDelete
  4. ஒரு பின்னூட்டம்..
    தமிழிஷ் தமிழ்மண ஓட்டு...

    ReplyDelete
  5. சந்துஷ்டி-ன்னா என்ன?

    ReplyDelete
  6. //தணி அறை //

    சரியா?இல்லை மொழியின் விளையாட்டா?

    ReplyDelete
  7. சுஜாதா எப்போதோ ச கர வரிசையில் இப்படி ஒரு கவிதை எழுதி அதை வகை படுத்தியும் இருந்தார், மறந்து விட்டேன் சுத்தமாக.

    அருமை, மொழி விளையாட்டு வீரர் நீங்க. விளையாட்டு சூப்பர்.

    விளையாட்டு அருமை, இனிமை,

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  8. தண்டோரா, தணித்தலில் வரும் 'ணி'. தனி அறை என்றால் seperate room என ஆகிவிடாது?

    ReplyDelete
  9. இதுக்கெல்லாம் ஒரு நாளைக்கு நீங்க எங்களுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்..!

    ReplyDelete
  10. வந்ததுக்கு ஒரு நல்ல காரியம்ன்னு ஒரு குத்து குத்தி்ட்டேன்..

    ReplyDelete
  11. அய்யாம் ஆல்சோ எஸ்கேப்பு..

    ReplyDelete
  12. எனக்கு படிச்சவிடனே கழிகிறது!

    இது என்ன கவிதையா
    இல்ல மந்திரமா!

    வார்த்தை விளையாடுதே!

    ReplyDelete
  13. wow ... என்ன ஒரு சந்த நயம் ... படித்தவுடன் பிடித்தது

    ReplyDelete
  14. ஒன்னியும் பிரியல.. மீ த எஸ்கேப்பு

    ReplyDelete
  15. கவிதையை முழுமையாய் உணர்கிறேன், ஒவ்வொரு சொற்களுக்குள்ளும் உள்சென்று பரந்து விரிந்து,

    //கொஞ்சம் வார்த்தைகள்
    கொஞ்சம் சமரசம்

    சந்துஷ்டியாய் கழிகிறது//

    நிதர்சனமான வரிகள்.

    ReplyDelete
  16. எப்படியோ சமாதானம் ஆச்சுல்ல..
    சந்தோஷம் ..

    ReplyDelete
  17. நல்நித்திரை
    சிறுபுன்னகை
    போனால் வராத தினம் மனம்
    மோனம் குணம்
    தெறிக்காத உளிஒலி
    தணிமையற்ற அறையின்
    பன்னீர் சொக்கும் சிவக்கும் மலர்ந்த மொக்கு

    பணமும் கொண்டாடும்
    இனம்

    நிறைய வார்த்தைகள்
    சமரசமற்று.

    கழிந்தாலும் கழியாத வாழ்க்கை.

    (பொழுதே போகலை குருவே அதனால தான்.. வேறொன்றும் இல்லை.. நான் நலமாகத்தான் இருக்கிறேன்.)

    ReplyDelete
  18. லா.ச.ரா. வின் வரிகள் தரும் மோன நிலை இந்தக் கவிதையில் வருகிறது. நல்லா இருக்கு ஜ்யோவ்.

    அனுஜன்யா

    ReplyDelete
  19. சுந்தர்,

    பாலியல் தொழிலாளிப் பற்றி.அவர்கள்
    அன்றாட மனச் சிக்கல்கள்.


    // வெங்கிராஜா said...
    சந்துஷ்டி-ன்னா என்ன?//

    சந்துஷ்டி = பரம திருப்தி.(புல் சாட்டிஸ்பேக்‌ஷன்)

    ReplyDelete
  20. போன பின்னூட்டத்தில் விடுபட்டு விட்டது.

    கவிதைகள் புரியாதுகூட இருக்கலாம். அதில் தப்பில்லை.மற்றொரு நாள் புரியும்.இறக்கும்வரை புரியாமல் கூட போகலாம்.

    என் பட்டியலில் புரியாத கவிதைகள்
    எவ்வளவோ இருக்கு.

    சில சமயம் நேர் கோட்டில் எழுதப்படும் கவிதைகள் கூடப் புரிவதில்லை.

    ReplyDelete
  21. சரிதான்.
    நகுலனின் கவிதை ஒன்று சென்ற மாதம் புரிந்தது. புரிந்த தினம் முதல் அது அவ்வப்போது வந்து பயமுறுத்தியபடியே இருக்கிறது. அந்த அனுபவ ரஸத்திற்காகவே இங்கு அனுதினமும் வருகிறேன். புரிதலும் சுகமே, அறியாமையும் சுகமே. நன்றி சுந்தர்ஜி.

    ReplyDelete
  22. எங்களுக்கெல்லாம் குருன்னு மருபடியும் நிரூபிச்சிட்டே இருக்கீங்க சுந்தர். நன்று.

    ReplyDelete
  23. வாவ்... பண்ணிரெண்டு வரியில் ஃபுல் போதை :-)

    ReplyDelete
  24. சரிங்க ஆபிசர்.. வர்ட்டா.. :)

    ReplyDelete
  25. லக்கிலுக் said...
    வாவ்... பண்ணிரெண்டு வரியில் ஃபுல் போதை :-)

    தலீவா..வாவ்வா? பிரிஞ்கினியா?
    சிரிப்பு மூட்றயே தலீவா!

    ReplyDelete
  26. //பன்னீர்
    சொக்கும் சிவக்கும் மொக்கும் //

    தொனி இங்கு பன்னீரில் தடுக்குகிறது.

    //பணம் கொண்டாடும்
    இனம்//

    பணம் பண்ணும் இனம்.

    ரா.கிரிதரன்

    ReplyDelete
  27. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    ReplyDelete