Friday, July 17, 2009

ஆனால்

ஆனால்
நாற்காலியின் எதிரில்
கால் கேள் போட்டு
வெடிக்கும் வேட்டுக்களின்
சத்தம் நித்தம்
யோசிக்கையில்
தூள் தூள்
தலை ஆனது
பிரச்சனைகளின் நெருக்கடி
வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றங்கள்
தினமும் பொழுது போக்கும்
கேபிள் டீவியே
போற்றி போற்றி

(இணையத்தில் எழுத வந்த புதிதில் பதிந்தது. பழைய பதிவையும் பின்னூட்டத்தையும் - ஆமாம், ஒரே பின்னூட்டம்தான், அதுவும் ஒரு வருடம் கழித்து 2008ல் வந்தது! - பார்க்க : http://jyovramsundar.blogspot.com/2007/12/blog-post_07.html)

18 comments:

  1. //கால் கேள் போட்டு

    புரியவில்லை. மன்னிக்கவும். விளக்கவும்.

    ReplyDelete
  2. அப்பல்லாம் கேபிள் மட்டும் தானா பொழுது போக!

    ReplyDelete
  3. இப்பவும் கேபிள் பொழுதுபோக்(க)காத்தான் எழுதறாரு..

    ReplyDelete
  4. பிரச்சினைகளின் நெருக்கடியும்,
    வாழ்வின் குறுக்கு வெட்டு தோற்ற பூச்சாண்டியும்
    நாளை கிழிக்க முடியாத இயக்கமின்மையை
    அழகாக உணர்த்துகிறாய் சுந்தரா.ஆனால் கால் கேள் போட்டு
    பிடிபட மாட்டேன்கிரதுதான்.இன்னும் ஐந்து
    வருடங்களுக்கு முந்தைய கவிதைகளை மீள் பதிவு செய்டா.
    படியேறி வர உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  5. அற்புதம்
    speakers on
    நீங்கள் தொடர்ந்து எழுதிய வற்றில் பரிணாமமும் பரிமாணமும்
    ஒளியாண்டை நேனோ ஆக்கும் வித்தை ..!

    ReplyDelete
  6. தினமும் பொழுது போக்கும்
    கேபிள் டீவியே
    போற்றி போற்றி
    ஆனால்
    நாற்காலியின் எதிரில்
    கால் கேள் போட்டு
    வெடிக்கும் வேட்டுக்களின்
    சத்தம் நித்தம்
    யோசிக்கையில்
    தூள் தூள்
    தலை ஆனது
    பிரச்சனைகளின் நெருக்கடி
    வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றங்கள்

    ippadi padichaa oru velai puriyumo ?

    ReplyDelete
  7. அதென்னங்க
    கால் கேள் போட்டு?

    கால் மேல் கால் போட்டு ?

    கால்கேர்ள் போட்டு !? :)

    ஒன்னும் வெளங்கலீங்கோ

    ReplyDelete
  8. கால் - Call
    கேள் - Listen
    இது சரியா?
    குழம்புதுங்க

    ReplyDelete
  9. ஆ-கவிதை :)

    கேள்
    உன் தலை வெடிப்பதை
    பார்
    தூள் தூளாகும் கேபிள் டீவியை
    வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றங்கள்
    நாற்காலியில் கால் போட்டு
    தினமும் பொழுது போக்கும்
    பிரச்சனைகளின் நெருக்கடி
    வேட்டுக்களின் எதிர்-சத்தம் ஆனது
    நித்தம் நிகழும்
    அ-நியாயம்
    போற்றி போற்றி
    ஆனால்

    And by the way ... I like this game

    ReplyDelete
  10. அருமை, இப்படித்தான் நெருக்கடிகளிலும், குறுக்கு வெட்டு தோற்றங்களிலிருந்தும் தப்பித்து எதிலெதிலேயோ தஞ்சமடைந்து போக்க வேண்டியிருக்கிறது பொழுதையும் வாழ்வையும்

    ReplyDelete
  11. கொஞ்சம் புரியுது, ஆனா நான் இன்னும் வளர வேண்டுமா மம்மி.

    ReplyDelete
  12. //இணையத்தில் எழுத வந்த புதிதில் பதிந்தது. பழைய பதிவையும் பின்னூட்டத்தையும் - ஆமாம், ஒரே பின்னூட்டம்தான், அதுவும் ஒரு வருடம் கழித்து 2008ல் வந்தது! //

    ஆக இந்த கோவம் தான் தற்பொழுது உங்களை ஆப்புவாக மாற்றி இருக்கிறது, தாங்கள் தானே புதுபதிவர்களுக்காக அன்நியன் போல் உருவம் எடுதிருப்பது என்பது இதன் மூலம் புலன் ஆகிறது.தாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ஆதாரத்துடன் பதிவு விரைவில் வரும்!

    இப்படிக்கு தமிழ்க புலனாய்வு துறை டிஜிபி.சக்திவேல் IPS

    ReplyDelete
  13. கிரிக்கெட்டில் reverse sweep மாதிரி
    கேபிள் டீவி இவரைப்(இவர் மண்டையில் வெடிக்கும் பிரச்சனைகளைப்) பார்த்து பொழுது போக்குகிறது என்றும் பொருள் படும்.

    கால் கேள் -remote?

    ReplyDelete
  14. //ஆமாம், ஒரே பின்னூட்டம்தான், அதுவும் ஒரு வருடம் கழித்து 2008ல் வந்தது!//

    ஹ்ம்ம்..ஜி, இதல்லாம் சாதனையா.. எங்க ப்ளாகெல்லாம் எப்பவுமே இப்படித்தான். ;-)))

    ReplyDelete
  15. //கால் கேள் -remote?//

    பெப்சி உங்கள் சாய்ஸ், டயல் எ சாங்க். எனக்கு ஒங்க கொரலு ரொம்ப புடிச்சுருக்குங்க. அவங்க இந்த புரோராம தெனம் பாப்பாங்க.. கீப் டிரையிங் கீப் ஆன் டிரையிங்! :))))

    அ - (சத்தல்) கவிதை!

    ReplyDelete
  16. கணேஷ், வால்பையன், தண்டோரா, குப்பன் யாஹூ, அஷோக், ராஜாராம், நேசமித்ரன், பாலா, வினாயக முருகன், நந்தா, யாத்ரா, தராசு, குசும்பன், ரவிஷங்கர், கார்த்திகேயன், சென்ஷி... நன்றி.

    இது அ-கவிதை. அதனால் கால், கேள் ஒரே வரிசையில் வர வேண்டிய அவசியமில்லை. இது கவிதையிலிருந்து நமக்கான கவிதைகளை எழுதிக் கொள்ளும் விளையாட்டு :)

    நந்தா - உங்கள் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete