Tuesday, August 4, 2009

மயிரின் மாண்பு

மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்
என்னைத் திட்டும் சாக்கில்
ஏன் மயிரை இழிவு படுத்தினீர்
பயிர் வளர்ப்பதைவிடவும்
அதிக அக்கறையுடன்தானே
மயிர் வளர்க்கிறீர்
ஏழுவித எண்ணை
எட்டுவித ஜெல்
பதிமூன்று வித ஷாம்பு
இருபது வகை சீப்புகள்
என மயிர் வளர்த்துவிட்டு
ஏன் மண்டை காய்கிறீர்
மொட்டை தலையிலும்
முடி பயிரிடும்
சிகிச்சை முறை தேடித்தானே
சிண்டைப் பிய்த்துக் கொள்கிறீர்
என் கவிதையைத் திட்டுங்கள்
காரி உமிழுங்கள்
இயன்றால்
எதிர்கவிதை எழுதுங்கள்
இல்லையேல்
வலையை மூடிவிட்டு
கொசுவலை போர்த்திப் படுங்கள்
ஏழு மலையான் வருமானத்தில்
ஏழு சதவீதம்
மயிரென்று அறிவீரோ
மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்

‘தலைஇப்பு நீண்ட’ என்ற கவிதையை அனானி நண்பரொருவர் ’மயிரு’ என்று திட்டியதற்கு குமார்ஜியின் எதிர்வினை :)

43 comments:

  1. //ஏழு மலையான் வருமானத்தில்
    ஏழு சதவீதம்
    மயெரென்று அறிவீரோ
    மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்//

    இது நச் குருஜி.

    ReplyDelete
  2. ஜி..இதிலும் ஒரு எழுத்துப்பிழை உள்ளது.
    சொல்லவா..?
    சொன்னால், இந்த "டக்ளஸுக்கே வேற வேலையா இல்லையா...? "ன்னு நெனைக்கமாட்டீங்கன்னு
    சொன்னா சொல்றேன். நீங்களே ஒரு தடவை படிச்சுப் பாருங்க ஜி.
    :)

    ReplyDelete
  3. சொல்லுங்க டக்ளஸ், இதுல என்ன இருக்கு!

    அப்புறம், ஏன் உங்க பின்னூட்டங்களை boldல் எழுதுகிறீர்கள்?

    ReplyDelete
  4. இதுக்கும் எதிர் கவிதை ரெடி பண்ணியாச்சு போற்றலாமா.. I mean போட்டுறலாமா

    ReplyDelete
  5. மயிரு மயிராயிருக்கு :) சூப்பர்

    ReplyDelete
  6. \\சொல்லுங்க டக்ளஸ், இதுல என்ன இருக்கு! \\

    \\முடி பயிருடுமா..? \\

    இல்ல..முடி பயிரிடுமா..?
    இல்ல..பயிறிடுமா..?


    \\அப்புறம், ஏன் உங்க பின்னூட்டங்களை boldல் எழுதுகிறீர்கள்?\\

    இப்பிடியெல்லாம் கேட்டீங்கன்னா, அப்பறம் வாசகரோட எண்ணத்துல நீங்க தலையிடுறீங்கன்னு அண்ணன் பைத்தியக்காரன் அவர்களிடம் சொல்லி, போலீஸ்ல உங்க மேல புகார் பண்ணச் சொல்லீருவேன்.
    :)

    ReplyDelete
  7. கண்ணியமாக எதிர்வினை செய்வது எப்படி என்று நம் அனைவருக்கும் பாடம் எடுத்திருக்கும் குமார்ஜிக்கு என் வணக்கங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  8. நன்றி, டக்ளஸ், பயிரிடும் என்று மாற்றிவிட்டேன்.

    ReplyDelete
  9. குமார்ஜியின் எதிர்வினை அருமை.

    ReplyDelete
  10. கவிதை அருமை.

    ஆனால் திட்டும் பொழுது நாம் குறிக்கும் மயிறு- பிறப்பு உறுப்பின் அருகில் இருக்கும் மயிறு, தலை முடியில் இருக்கும் மயிறு அல்ல.

    ஆனால் கவிஞர் சொல்வது போல இன்று பிறப்பு உறுப்பு மயிரை கூட அழஅகு படுத்துகின்றனர். (ஆயிரம் விதங்களில் அழஅகு படுத்தும் உலகம் இது)

    ஆண்டவன்/ இயற்கை, நம்மை படைக்கும் பொழுது பிறப்பு உறுப்பிலும் மயிருடன் படைத்து உள்ளது, அந்த மயிறு இல்லாவிடில் சுரப்பிகள் வேலை செய்யாமல் உயிர் வாழ்வே அவதி படுவோம்.

    ReplyDelete
  11. ஜி.. "பயிர்" ஓ.கே. அதனால "பயிரிடும்" அதுவும் ஓ.கே.
    ஆனால் தனித்தனியா "சுண்டல்பயிர்", "பச்சைப் பயிர்"ன்னு பெரும்பாலானோர் "சுண்டல் பயிறு" "பச்சைப் பயிறு"ன்னு
    சொல்றது எதுக்கு ஜி..? (ஒருவேளை, காலப்போக்கில் திரிந்து விட்டதா..?)

    அப்போ "மயிரை" என்பதை "மயிற்றை" எனவும் பயன்படுத்தலாமா..? இல்லை "மயிர்ரை" என்றுதான் பயன்படுத்த வேண்டுமா ..? குழப்பமா இருக்கு ஜி.
    இந்த "மொழி விளையாட்டுக்கு" பதில் சொன்னால் தன்யனாவேன் ஜி.

    ReplyDelete
  12. டக்ளஸ், பயிர் தான் சரி. மயிரை தான் சரி; மயிர்ரை / மயிற்றை தவறு. இதற்குமேல் விவரங்கள் வேண்டுமானால் உங்கள் ஊர் கார்ப்பரேட் கம்பரை அணுகவும் :)

    ReplyDelete
  13. எனக்கு எந்த ர வரும் என்றே தெரிய வில்லை.

    ஒரு வேளை, தலை முடிக்கு மயிரும், பிறப்பு உறுப்பு முடிக்கு மயிறும் ஆ.

    கத்துக் கொடுங்க மொழி விளையாட்டு வீரரே.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  14. குப்பன்_யாஹூ, உங்கள் கமெண்டுகளின் ரசிகன் நான். :)

    இந்த கமெண்ட்டும் வழக்கம் போலவே இருக்கு.

    ReplyDelete
  15. கவரிமான் சிறப்பும் இருக்கிறது. முடி அழகைச் சொல்லும் எழுத்து. மிக்க நன்றி.

    ReplyDelete
  16. இந்த கவிதையோட மாறுபட்ட ஆனால் இதைபோல் உண்மை கூறும் கவுஜையைஇங்கே போய் படிங்க.

    ReplyDelete
  17. வாய்ப்பே இல்ல குரு...(கவி) கோபம் கண்டு நாளாகிறது...ரொம்ப அழகா எதிர்வினை செய்திருக்கார் குமார்ஜி..

    ReplyDelete
  18. ரொம்ப நல்லா இருக்கு.

    யுகபாரதி அவர் ப்ளாகில் சொல்லொயிருப்பதை பாருங்கள்,

    //விமர்சனங்களை நான் அன்போடு ஏற்று அதைப்பற்றி கவலையுறாமல் தூங்கிவிடுவேன்.
    சுருக்கமாகச் சொல்வதென்றால் நான் உங்களைப் போல அல்லது உங்களைவிட கீழான என்று வைத்துக்கொள்ளலாம்.//

    //ஒரு கவிதை எப்படியும் இருக்கலாம்.ஆனால்,அது கவிதையாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.எனக்கு கவிதையாக
    இல்லாத அல்லது தோன்றாத விஷயம் உங்களுக்கு கவிதையாகப் படக்கூடும்.கவிதையின் சுருதியும் சுவாரஸ்யமும் அவரவர்
    மனம் சார்ந்தது என்பதால்தான் கவிதைகள் காலந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன.காலத்தின் புள்ளியில் கவிதைகளின்
    சுழற்சி இடது பக்கத்திலா?வலது பக்கத்திலா? என்று யோசித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்? பிடித்தால் நன்று.பிடிக்காவிட்டால் அதுவும் நன்றுதான்.//

    ReplyDelete
  19. மயிர் நீப்பின் உயிர் போகும் வம்சக்காரர் போல அதுதான் திட்டி இருப்பார்
    இல்லை நசரேய விரதமிருந்த சவரக்கத்தி படாத ஆதி மனிதர்களில் ஒருவராய் இருப்பார் இல்லை மயிரில் மானம் முடிச்சிட்டு வைத்திருக்கும் தற்காப்பு கலை பயின்றவராய் இருப்பார் .இல்லை அவள் கொண்டையில் முடிச்சிட்டுப் போகும் காதலியாய் இருப்பாள் .
    அவர் யாராய் இருந்தாலும் குமார் ஜி யின் கவிதை படித்தபிறகு மயிரென்று சொல்வாரோ இனிஒருவரை ..
    :)

    ReplyDelete
  20. ஆரம்பிச்சுட்டீங்களா? :-))

    நல்லா இருந்தது.

    ReplyDelete
  21. //ஏழு மலையான் வருமானத்தில்
    ஏழு சதவீதம்
    மயிரென்று அறிவீரோ//

    அதில் நம் பங்கும் இருக்கா ஜீ?:))

    ReplyDelete
  22. Follower ஆயிட்டேன் தல ....

    I LOVE U

    (நல்லாத்தான் ... போயிட்டுருக்கு...!)

    ReplyDelete
  23. //அப்புறம், ஏன் உங்க பின்னூட்டங்களை boldல் எழுதுகிறீர்கள்?//

    மயித்தை பத்தி bold ஆ எழுதறீங்கன்னு சொல்றாரு போல..

    ReplyDelete
  24. ////ஏழு மலையான் வருமானத்தில்
    ஏழு சதவீதம்
    மயிரென்று அறிவீரோ//

    அதில் நம் பங்கும் இருக்கா ஜீ?:))//

    எலேய்..அக்மார்க் குசும்புடோய்.

    ReplyDelete
  25. :)

    நல்ல எதிர்வினை. அருமை.

    ReplyDelete
  26. ஏழுவித எண்ணை??

    ReplyDelete
  27. கருமாந்திரம் புடிச்சவன்கள்டா ரெண்டு பேரும்...நைனாவின் எதிர்பாட்டு வரையில்..எவ்வளவு காலமாச்சு இப்படி பேசி சிரிச்சு..சந்தோசமாகத்தான் இருக்கு என்றாலும் மண்குதிரை நான் உங்களுடன் உடன்படுகிறேன்(என்ன வந்தாலும் வரட்டும் மயிறு..)

    ReplyDelete
  28. hi,

    please mention for which kavithai this reciprocation is done...

    waiting for reply

    pavithra

    ReplyDelete
  29. இந்தக் கவிதையைப் படித்ததும் நான் அம்பலம்.காம்-இல் எழுதிய “என் இனிய ஸ்கீஸோஃப்ரீனிக்” சிறுகதை ஏனோ நினைவிற்கு வந்தது ... அதன் பிரதி எதுவும் என்னிடம் இப்போது இல்லை ... மற்றபடி சூப்பர் குசும்புங்க ... வாழ்க கவிதை வளர்க மயிர்

    ReplyDelete
  30. சூப்பர் தல..நானும் ஒரு கவிதை எழுதி பார்த்தேன்

    மயிர்நீப்பின்
    மயிர்நீப்பின்
    ————————————
    மயிர்நீப்பின் வாழாவென்று
    எழுதி முடித்து
    உயிர் விட்டது
    கொஞ்சம் கொஞ்சமாக
    சாக்பீஸ் துண்டொன்று
    மிச்சம் சொச்சமிருந்த
    மயிரும்
    ஆசிரியரின் கைஉதறலில்
    பறந்து மறைந்தது…

    ReplyDelete
  31. நான் சொல்ல வேண்டியதை தராசு, அனுஜன்யா, மண்குதிரை சொல்லிட்டாங்க...

    குமார்ஜியொவ்) சூப்பர்ஜி

    ReplyDelete
  32. கவிதையை மிகவும் ரசித்தேன் குருஜி, அப்படியே குசும்பனின் பின்னூட்டத்தையும்தான்.. ஹிஹி.!

    ReplyDelete
  33. ஆஹா... மயிரை வச்சே பின்னிட்டாரே!

    ReplyDelete
  34. ரொம்ப நாள் கழித்து நல்ல கவிதை---வாஹே குரு

    ReplyDelete
  35. Italic text

    எப்படி போல்டாக பேசுவது, மன்னிக்க, எழுதுவது. அதாவது போல்ட் பாண்டில் பேசுவது. சாரி எழுதுவது என்பதை, பாண்டில் ஒன்று பேசமுடியாது, போடதான் முடியும் பாண்டை, இருந்தாலும் எழுத்து எழுதும் பாண்டை சொன்னேன், ம்ஹூம், எழுத்து அதாகவா எழுதும், நாமே எழுதுவது தானே ?

    ஆமாம், நான் எதை குறிந்து உங்களுக்கு பின்னூட்டம் எழுத ஆரம்பித்தேன், ஆ, அய்யோ, அங்கே குறிந்து என்று எழுத்துப்பிழையாக எழுதிவிட்டேனே, குறித்து என்றல்லவா இருக்கவேண்டும், ஆனால் குறி என்று எழுதினால் எல்லோரும் கோபிப்பார்களோ ? ச்சே சே ஜ்யோராம் சுந்தர் பதிவில் குறிக்கா பஞ்சம், கொஞ்சம் இண்டலக்சுவல்களாகத்தான் உலவுவார்கள், இதை எல்லாம் கண்டுக்கிட மாட்டார்கள்...

    ஆமாம், மயிறு. மயிறு. ஓவ். அது கெட்டவார்த்தையில்லையா ? ஐ யாம் க்ரேஸி.

    ReplyDelete
  36. கார்த்திகேயன், தராசு, டக்ளஸ், நையாண்டி நைனா, கென், அனுஜன்யா, துபாய் ராஜா, குப்பன் யாஹூ, வெ இராதாகிருஷ்ணன், ரௌத்ரன், மண்குதிரை, நேசமித்ரன், சுரேஷ் கண்ணன், குசும்பன், மணிப்பக்கம், ஏதோ சொல்கிறேன், யாத்ரா, தண்டோரா, பா ராஜாராம், டாக்டர் ருத்ரன், பவித்ரா, நந்தா, விநாயக முருகன், அஷோக், ஆதிமூலகிருஷ்ணன், அது சரி, கோவி கண்ணன், குரு, அத்திவெட்டி ஜோதிபாரதி, செந்தழல் ரவி ... நன்றி.

    ReplyDelete
  37. கலக்கிட்டீங்க தலைவா

    குப்பன்யாஹூ,
    மயிர் என்று திட்டுவது பிறப்பு உறுப்பு மயிரை குறிப்பது என்று எப்படி சொல்கிறீர்கள்?

    வேறு ஏதோ காரணம் இருக்குன்னு தோனுது...

    ReplyDelete