Monday, September 21, 2009

ரயில்(ப்) பயணங்கள்

நீண்டு கிடக்கும் தண்டவாளங்களில்
ஓடும் விரைவு ரயில்களின்
அவசரமான தடக் லடக் ஓசை பயமுறுத்துகிறது
hornகளின் கூக்குரலில்
உடம்பு பதறியோ அல்லது கால் தள்ளியோ
ரயிலில் வி்ழுந்து விடுவேன் என அச்சத்தை
எப்போதும் தந்து கொண்டேயிருக்கின்றன அவை
இறந்தவர் பிரேதத்தை vendors பெட்டியில்
அடிக்கடி பார்த்திருக்கிறேன் நான்
பழுப்பான வெள்ளைத் துணியில்
ரத்தம் தெரிய முகம் தெரியாது மூடப்பட்டிருக்கும்
பாடைகளை ஒத்திருக்கும் பெட்டியே
ரயிலில் சிக்கி மாண்டோர் கதையைக்
கூறாமல் இருந்திருக்கலாம் ஹரி
அவன் டிக்கெட் வாங்கி வரச் செல்லும்போது
ஆவடியில் ரயில் மோதிச் செத்தாளாம் அவனது பாட்டி
உடனிருந்த அவன் தம்பியும்
வேறொரு ரயிலில்
வேறொரு சமயத்தில்
முகம் நசுங்க அடிபட்டுச் செத்தவன்தான்
எனக்கான எட்டு ஐம்பத்தைந்து ரயில் வந்து கொண்டிருக்கிறது
இரண்டாவது நடைமேடையில்
ரயிலின்றி தீராது வாழ்வு
என் சாவும்

20 comments:

  1. //ரயிலின்றி தீராது வாழ்வு
    என் சாவும்

    இறுதியில் இந்த வரிகள் உச்சம். ரசிக்க வைக்கின்றது

    ReplyDelete
  2. wow ... அபாரம் ... ரயில்விலங்கு இப்போதல்லாம் என்னை தொடர்ந்து வசீகரிக்கிறது ... இந்தக் கவிதையைப் போன்றே ... ரயிலின்றி அமையாது உலகு :)

    ReplyDelete
  3. அபாரமான கவிதை சுந்தரா!அமானுஷ்யமான மன நிலையை தருகிறது,//அடிக்கடி பார்த்திருக்கிறேன் பழுப்பான வெள்ளை துணியில் ரத்தம் தெரிய முகம் தெரியாது மூடப்பட்டிருக்கும் பாடைகளை ஒத்திருக்கும் பெட்டியை//பெட்டியே என்று வந்திருக்கு.சரிதானா?நல்ல கவிதை மக்கா.

    ReplyDelete
  4. சுவரின் ஓரத்தில் கிறீச்சிட்டுக் கொண்டிருக்கும் பல்லி போல மனதின் ஓரத்தில் சில பயங்கள் எப்போதும் நிரந்தரமாக வசிக்கத்தான் செய்கின்றன. சிலருக்கு ரயில், சிலருக்கு தண்ணீர், சிலருக்கு உயரம்.. நல்ல கவிதை . ( எனது சில கவிதைகளை வலையேற்ற முனைந்துள்ளேன். அவை குறித்து உங்கள் கருத்தறிந்தால் மகிழ்வேன். )

    ReplyDelete
  5. நல்லா இருக்கு சுந்தர். நகரவாசிகளுக்கு ரயிலின்றி .......

    அனுஜன்யா

    ReplyDelete
  6. ரயில் எல்லோருக்கும் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. காலையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரை தினமும் வந்து பணி புரிந்த நண்பர்கள் இருந்தார்கள், அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆறு மணி நேரங்களுக்கு மேல் ரயிலிலேயே கழியும். நானும் ஒரு காலத்தில் தினுமும் ஆறு மணி நேரம் ரயில்பயணம் செய்து பணி புரிந்திருக்கிறேன். வென்டார் காட்சிகள்,,,,,,,,
    ரயில் இப்படி பல கதைகளை உள்ளடக்கியிருக்கிறது.ரயில் மரணங்கள் எனக்கும் ஏற்படுத்திய பாதிப்புகள் அநேகம். என் பல நினைவுகளை கிளறி விட்டது இந்தக் கவிதை.

    ReplyDelete
  7. கவிதை அருமை.

    ஆனால் ரயில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை நம் குழந்தைகளுக்கு அடுத்த தலைமுறைக்கு .தெளிவாக சொல்லி கொடுப்போம்.

    கொடுமையில் கொடுமை ரயில் தண்டவாளம் கடக்கையில் இறப்பது, இரு நிமிட அவசர்த்திர்க்காக வாழ்க்கையையே இழப்பது.

    ReplyDelete
  8. மனதின் துனுக்குற்ற உட்பெட்டிகளை நோக்கி நகர்கிறது உங்கள் ’ரயில் பயணங்கள்’

    ReplyDelete
  9. விநாயக முருகன், நன்றி.

    நந்தா, நன்றி.

    ராஜாராம், நன்றி. அது தனி வரி என்பதால் பெட்டியே சரிதான் :)

    செல்வா, நன்றி. உங்களது இரண்டு கவிதைகளையும் படித்தேன். நன்றாக இருக்கின்றன.

    அனுஜன்யா, நன்றி.

    யாத்ரா, நன்றி.

    ராம்ஜி, யாஹூ, நன்றி.

    அஷோக், நன்றி.

    மண்குதிரை, நன்றி.

    ReplyDelete
  10. ராஜேஷ்வைத்யாவின் மனைவி ஒரு ரயில்வே ஊழியர்.டெஃப்&டம்ப்.அவர் ரயிலில் அடிபட்டு இறந்து போனார்

    ReplyDelete
  11. நல்லா இருக்கு.. வாழ்த்துகள்!!

    ReplyDelete
  12. ரயில் கவிதை அருமை ஜி.

    ReplyDelete
  13. தலை(ப்)பே நல்லாயிருக்கு குருஜி!
    புதுசா என்ன சொல்ல.. அதான் எல்லாரும் சொல்லீட்டாங்களே :)

    ReplyDelete
  14. ரயிலில் பயணித்து மரணித்தது போல இருக்கிறது வரிகள்..எக்ஸ்பிரஸ் ரயில் கவிதை.

    ReplyDelete
  15. அழகான கவிதை.
    ரயிலில் தண்டவாளங்கள் நம் எண்ணங்களாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  16. தண்டோரா, கார்த்திகேயன், நிலா ரசிகன், RVC, நர்சிம், ராஜா சந்திரசேகர்... நன்றி.

    ReplyDelete
  17. கவிதை சூப்பர்.

    ReplyDelete
  18. இரசிகை, ரவிஷங்கர்... நன்றி.

    ReplyDelete