Wednesday, December 23, 2009

விவேக் ஷன்பேக்

சிறுகதைகளை இணையத்தில் படிப்பதில் எனக்கொரு சிக்கல் இருக்கிறது. அலுவலக நேரத்தில் மற்ற வேலைகளுக்கிடையில் கதைகளைக் கவனமாகப் படிக்க முடியாது. ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வரும் தொலைபேசி அழைப்போ உடனடியாகப் பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சலோ எரிச்சல் படுத்தும். அது அந்தக் கதையைத் மீண்டும் படிக்கும்போதும் தொடரும். அல்லது மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பதை மட்டுமே செய்ய வேண்டும் - அதுவும் பல சமயங்களில் முடியாது. அதனால் பெரும்பாலும் சிறுகதை நாவல்களைப் புத்தகங்களாகத்தான் படிப்பது. நாளொன்றிற்கு ஒரு கதைவீதம் இணையத்தில் வாசித்தாலே அதிகம். மற்ற கதைகள் ஞாயிற்றுக் கிழமைக்கானவை என்று தள்ளி வைத்துவிட்டு, பிறகு படிக்காமலேயே போய்விடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது :(

அப்படித்தான் ரீடரில் ஜெயமோகனின் பதிவில் வந்த விவேக் ஷன்பேக் எழுதி ஜெயமோகன் மொழிபெயர்த்திருந்த கதைகளைப் படிக்கவில்லை. பிறகு படிக்கலாமென்று விட்டுவிட்டேன். இன்று காலை சுரேஷ் கண்ணனின் (http://pitchaipathiram.blogspot.com/2009/12/191209.html) பதிவில் அதைச் சிலாகித்து எழுதியிருந்ததும் மூன்று கதைகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.

சமீபத்தில் வாசித்த மிக வித்தியாசமான கதைகள் என்று நிச்சயம் சொல்வேன். நேரம் கிடைக்கும்போது உங்களையும் வாசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

1. http://www.jeyamohan.in/?p=5611 வேங்கைச் சவாரி

2. http://www.jeyamohan.in/?p=5659 அடுத்தவர் குடும்பம் (இந்தக் கதையின் இடையில் வரும் ’ஒரு வார்த்தைகூடப் பேசாமல் செயல்மூலம் பேச்சின் வலிமையைக் காட்டுவது’ என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு முழுக் கதையை எழுதியிருக்கும் சாமர்த்தியம் + ஒரு கதையை ஆரம்பித்துவிட்டு சாவகாசமாக இன்னொரு கதையைச் சொல்லி முடிப்பது இரண்டும் என்னைக் கவர்ந்தது )

3. http://www.jeyamohan.in/?p=5752 கோழியைக் கேட்டா மசாலா அரைப்பது (சாதத் ஹாசன் மாண்டோவின் கதையொன்றின் முடிவை ஞாபகப் படுத்தினாலும், இந்தக் கதையும் பிடித்திருந்தது.)

நிச்சயம் விவேஷ் ஷன்பேக்கின் கதைகள் வித்தியாசமானவை. இதற்கு முன் இவரை வாசித்ததில்லை - இனி முயற்சி செய்து வாசிக்க வேண்டும். வேறு ஒரு பதிவு தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தியிருந்த எரிச்சலில் ஜெயமோகனின் நூல் வெளியீட்டிற்குச் செல்லாதது தவறு என்று இப்போது வருத்தப்படுகிறேன் - குறைந்த பட்சம் இவர் பேச்சைக் கேட்பதற்காவது சென்றிருக்கலாம்.

22 comments:

  1. தனியாக லிங்க் கொடுத்தற்க்கு :)

    ReplyDelete
  2. நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு நன்றி :)

    வாசிப்பனுபவத்தை உங்களுக்கு கொடுத்ததற்கும், இடுகையை நீங்கள் எங்களுக்கு அளித்ததற்கும் :(

    உங்க இடுகையால எவ்வளவு நன்மை விளையுதுனு இப்பவாவது புரியுதா சு.க. :)

    உணர்ந்து எழுதியிருக்கீங்க சுந்தர்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  3. அன்பின் சுந்தர்,

    ஒரு இடுகை, உங்களை இன்னொரு வலைத்தளத்துக்கு அழைத்துச் செல்கிறது. அதை வாசிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் பரவசத்தை இன்னொரு இடுகையாக எழுதுகிறீர்கள், அதுவும் லிங்க் கொடுத்து.

    இந்த வட்டச்சூழல் விளையாட்டு, புனைவாக விரித்து உள்ளிழுத்துச் செல்கிறது.

    சொல்லத் தெரியலை, ரொம்ப பரவசமா இருக்கு. தேங்க்ஸ்ணா :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  4. ம்ம் எனக்கும்தான்

    ஆனால் ஒன்று மட்டும் வாசித்திருக்கிறேன், கோழியக் கேட்டு... மட்டும்

    வாசித்தவரையில் நன்று.

    பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. எனக்கு கூட மெயிலில் வந்திருந்தது!

    ReplyDelete
  6. ஆம்,சிவராமன்.

    நன்றி சுந்தரா!

    ReplyDelete
  7. பைத்தியக்காரனின் பின்னூட்டம் புது அனுபவத்தை தருகிறது..

    ReplyDelete
  8. //நாளொன்றிற்கு ஒரு கதைவீதம் இணையத்தில் வாசித்தாலே அதிகம். மற்ற கதைகள் ஞாயிற்றுக் கிழமைக்கானவை என்று தள்ளி வைத்துவிட்டு, பிறகு படிக்காமலேயே போய்விடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது //

    உரையாடல் சிறுகதைப் போட்டி 250 கதைகளையும் நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்ற என் சந்தேகம் உறுதியானது..நன்றி

    :-)))

    ReplyDelete
  9. உங்களுடைய பதிவிற்கும், லிங்க் கொடுத்ததற்கும் மிக்க நன்றி தோழரே...

    ReplyDelete
  10. சுந்தர்,

    நண்பர் சிவராமனை இப்படி பரவச நிலையை அடைய வெச்சுட்டிங்களே? :-)

    btw விவேக் ஷன்பேக்கின் பிற (கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட) சிறுகதைகளை இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் ஜெ.மோக்கு போட்டியாக இறங்க உத்தேசம். :-)

    தமிழைத் தவிர பிற இந்திய மொழிகளை நெருக்கமாக அறிந்தவர்கள் அங்குள்ள சிறந்த எழு்ததாளர்களையும் படைப்புகளையும் இங்கு அறிமுகப்படுத்தலாம். ஜெமோ போன்ற சிலரும் சாகித்ய அகடமியின் அறிமுக நூல்களையும் தவிர வேறு எவரும் இதில் முனைப்பாக இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்பெயின் எழுத்தாளர்களைக் கூட தெரிந்து வைத்திருக்கும் நாம் அண்டை மாநிலத்தில் இருப்பவர்களைப் பற்றி துளிக்கூட அறியாமலிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

    ReplyDelete
  11. முன்பே ஜெ.மோவின் தளத்தில் இம்மூன்று கதைகளையும் வாசித்திருக்கிறேன். இப்போது தங்கள் தளத்திலும் தங்களுக்கு விருப்பமானதாக பார்ப்பது மகிழ்வு.

    @ சுரேஷ் கண்ணன்..

    //தமிழைத் தவிர பிற இந்திய மொழிகளை நெருக்கமாக அறிந்தவர்கள் அங்குள்ள சிறந்த எழு்ததாளர்களையும் படைப்புகளையும் இங்கு அறிமுகப்படுத்தலாம்.//

    மலையாளம் நன்கு தெரிந்த, இலக்கிய பரிச்சயம் கொஞ்சம் கொண்ட தமிழ் நண்பர் ஒருவருக்கு தங்களது மறுமொழியை அனுப்பி வைத்திருக்கிறேன். :)

    ReplyDelete
  12. ஜெயமோகனின் தளத்திலேயே இந்த சிறுகதைகதைகளை வாசித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல நிச்சயம் மிக அருமையான எழுத்து அவருடையது.

    ReplyDelete
  13. அஷோக், பைத்தியக்காரன், மண்குதிரை, வால்பையன், ராஜாராம், பரிசல்காரன், ராதாகிருஷ்ணன், கமலேஷ், சுரேஷ் கண்ணன், சென்ஷி, சரவணகுமார்... நன்றி.

    @ ராதாகிருஷ்ணன் - இப்ப ஒரே மூச்சுல மூணு கதை படிக்கலையா, அப்படித்தான் :)

    @ சுரேஷ் கண்ணன் - நானும் தேடிப் பார்த்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களுக்குக் கிடைத்தால் சுட்டி அனுப்பவும். ஜெமோவுடன் கோதாவில் இறங்குவதற்காக இல்லையென்றாலும், படிப்பபதற்காகவேணும் :)

    ReplyDelete
  14. மூன்று கதைகளையும் தொடர்ச்சியாக நேற்று தான் வாசித்தேன், ரொம்பப் பிடித்திருந்தது, நானும் விவேக் ஷன்பேக் அவர்களை தற்போது தான் வாசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. நண்பா உங்களை எனது blog-ல் கொஞ்சம் கலாய்த்திருக்கிரேன். வந்து பாருங்கள்

    ReplyDelete
  16. தல அட்டகாசம்.சுரேஷ் கண்ணனுக்கும் நன்றி.

    பாசங்குத்தனம்/பம்மாத்து இல்லாமல நேரடியாக கதைப் போகிறது.முதல் கதை கொஞ்சம் சீரியஸ்.மற்ற இரண்டும் அருமை.நகைச்சுவை மெல்லிய இழையாக ஓடுகிறது.

    கருப்புப் பையில் துணிகளை வைத்துக்கொண்டு புதன் கிழமை கிளம்பிப் போய் சனி அன்று திரும்பும்
    ”அமுக்கு” ஜானகிராமம் மனதில் நிற்கிறார்.

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  18. குப்பன் யாஹு, யாத்ரா, மோகன் குமார், ரவிஷங்கர், இரவுப் பறவை... நன்றி.

    ReplyDelete
  19. சென்ஷி said...

    @ சுரேஷ் கண்ணன்..

    //தமிழைத் தவிர பிற இந்திய மொழிகளை நெருக்கமாக அறிந்தவர்கள் அங்குள்ள சிறந்த எழு்ததாளர்களையும் படைப்புகளையும் இங்கு அறிமுகப்படுத்தலாம்.//

    மலையாளம் நன்கு தெரிந்த, இலக்கிய பரிச்சயம் கொஞ்சம் கொண்ட தமிழ் நண்பர் ஒருவருக்கு தங்களது மறுமொழியை அனுப்பி வைத்திருக்கிறேன். :)

    ஷைலஜா பவா.செல்லத்துரை கூட இந்த விஷயத்தில் உதவலாம்..
    அவர்கள் மளையாள நாவல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள்..
    அவரைத்தான் குறிப்பிடுகிறீர்களென நினைக்கிறேன்.

    ReplyDelete
  20. நர்சிம், கும்க்கி... நன்றி.

    ReplyDelete