Thursday, January 28, 2010

இன்னொன்று

ஆகச் சிறந்த கவிதையெழுத
காகிதம் பேனா அட்டை
சிகரெட் லைட்டர் சாம்பல் கிண்ணம்
முன் தயாரிப்புகளுடன் அமர்கிறேன்
பால்கனியில்
தொங்கிக் கொண்டிருக்கும் மின்சாரக் கம்பியில்
ஆடிக் கொண்டிருக்கின்றன மூன்று காக்கைகள்
தெருவில் துரத்திப் பிடித்து விளையாடுகின்றன இரண்டு நாய்கள்
கிரிக்கெட் விளையாடும் சிறார்களின் சப்தம்
தொலைக்காட்சி ஒலியோடு கலந்து கேட்கிறது
எதிர் காலிமனையிலிருந்து டாடா இண்டிகா கிளம்புகிறது
காக்கைகளில் ஒன்று பறந்துவிட்டிருக்கிறது இப்போது
கிரிக்கெட் சப்தம் குறைந்தது போல் தோன்றுகிறது
நாய்களைக் காணவில்லை,
பக்கத்துத் தெருவிற்குச் சென்றிருக்கலாம்
தெருமுனைச் சாக்கடையின் துர்கந்தம் அடிக்கறதா என்ன
தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
வேறொன்றுமில்லை
சும்மா
உன்னிடம் சொல்லத் தோன்றியதடா லவ்டா

25 comments:

  1. -:) பிடிச்சிருக்கு

    ReplyDelete
  2. சஞ்சய் காந்தி, மண்குதிரை... நன்றி.

    ReplyDelete
  3. நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வணக்கம் குருஜி!!!!!

    ReplyDelete
  5. தலை.,

    அது லவ்டாவா..இல்லை லவடாவா?

    ReplyDelete
  6. இன்னமும் கொஞ்சம் இதே பாணியில் நீட்டியிருக்கலாம்தானே....

    ReplyDelete
  7. நவ-லவ் கவிதை நன்றாக தான் இருக்கிறது :)

    ReplyDelete
  8. கடைசி வரி திட்டுகிறாயா,காதலை சொல்கிறாயா என மனமயக்கம் எனக்கு.வழக்கம் போல் திட்டுப் பக்கம் சாய்ந்து விடுகிறேன்.இப்பத்தான் வசதியாக பார்க்கமுடிகிறது.கவிதையில் உன் முகத்தையும்,கவிதையின் முகத்தையும்.

    :-)

    ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா.

    ReplyDelete
  9. :) ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  10. //எதிர் காலிமனையிலிருந்து டாடா இண்டிகா கிளம்புகிறது//

    கால நகர்வு சுட்டப் பொருத்தமான இடத்தில் வந்திருக்கிறது. 'contrary - empty plot - travel vehicle' என்றும் பொருள் செய்து கொண்டேன்.

    அதென்ன 'லவ்டா'? ஹிந்திக் கெட்ட வார்த்தையா? என்றால் என்னை ஏன் இம்புட்டு அசிங்கமா ஏசுறீங்க?

    ReplyDelete
  11. கலக்கல் கவிதை

    ரொம்ப புடிச்சு இருக்கு

    ReplyDelete
  12. அன்னிக்கு அனுஜன்யா கேட்ட அதே கேள்விதான்! பிராண்டை மாத்தீட்டீங்களா?

    ReplyDelete
  13. அண்ணாமலையான், தராசு, கும்க்கி, நந்தா, ராஜாராம், T V ராதாகிருஷ்ணன், யாத்ரா, ராஜசுந்தரராஜன், குப்பன் யாஹு, நிலாரசிகன், தண்டோரா, RVC, ரௌத்ரன்... நன்றி.

    ReplyDelete
  14. எனக்குப்பிடித்து இருக்கிறது.

    அடுத்து....

    கிழ் உள்ள வலையில் உள்ள கதையைப் படியுங்கள்.
    அருமை.வித்தியாசமான கரு/நடை

    பாராட்டுவோம்.

    தலைப்பு: கக்கூசும் ஒரு உரிமைப் போராட்டமும்.

    http://mrsdoubt.blogspot.com/2010/02/blog-post.html

    ReplyDelete
  15. புது டிஸைன் சூப்பர்..போன வருடத்தை விட இந்த வருட டிஸைன் நன்றாக இருக்கிறது. கலரும் சூப்பர் குருவே..

    ReplyDelete
  16. template கலக்கல்

    கவிதையோ கலக்கலோ கலக்கல்..

    ReplyDelete
  17. : யதார்த்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  18. ரவிஷங்கர், நர்சிம், கார்க்கி, ராதாகிருஷ்ணன்... நன்றி.

    ReplyDelete
  19. இது நல்லா இருக்கு, அது சரி இத்தனை பேர் கேட்குறாங்கள்ல, அந்தக் கடைசி வரிக்கு என்னா அர்த்தம் னு சொல்ல வேண்டியதுதானே?

    ReplyDelete
  20. சுப முத்துக்குமார், நன்றி.

    ReplyDelete