Wednesday, February 3, 2010

எழுதப்படாத கவிதையின் இறுதி வரி

மதிலில் இருந்து தாவப்போகும்
பூனையைப் போல் மரணத்திற்குக் காத்திருக்கிறேன்
என் மரணமல்ல -
வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்
என்று தத்துவம் பேசி
மனைவிக்கு ஒன்றும் விட்டுச் செல்லாத
என்னுடைய கையாலாகாத்தனமே
அதிகம் துன்புறுத்துகிறது
அவளருகில் படுத்திருந்த இரவுகளில்
என்னை வெளிப்படுத்த ஆசைப்பட்டிருக்கிறேன்
அவளுடன் போட்ட பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத
சண்டைகளைக்கூட இப்போது நினைக்கையில்
சுகமாயிருக்கிறது
நாளைக் காலை
என்னுடைய வெளிறிய உடலைப் பார்ப்பாள்
உலுக்குவாள்
என் பெயர் சொல்லி அழைப்பாள்
ஆனால் நான் பதில் சொல்ல மாட்டேன்
எப்போதும் அவளிடம் சொல்லத் தயங்கிய
வார்த்தைகளை இப்போது சொல்ல நினைக்கிறேன் :
நான் உன்னைக் காதலிக்கிறேன் கண்ணே

(சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி எழுதப்பட்டது)

25 comments:

  1. இந்த கவிதையில் ஒரிஜினல் கவிதை நானும் படித்து இருக்கிறேன்

    ReplyDelete
  2. அலுக்காத விஷயங்கள்..மரணமும்,காதலும்!!நிறைய இது போல் பகிருங்கள் குரு!!

    ReplyDelete
  3. சிந்தனையை தூண்டும் கவிதை.

    ReplyDelete
  4. மரணத்தருவாயில் காதலை நுகரும் கவிநாயகன்..

    ReplyDelete
  5. ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா.தலைப்பு ஒரு கவிதையாக பயணிக்கிறது.

    ReplyDelete
  6. maranavaasam kaathal vayappattu ullathu, kaviththuvamaai .

    ReplyDelete
  7. மனிதன் மரணத்தின் தறுவாயில்தான் சிலவற்றை உணர்கிறானோ!!

    ReplyDelete
  8. மரணங்களின் மீதான கவிதைகளுக்கு ஒரு அற்புதமான ஈர்ப்பு வந்துவிடுகிறதே அது ஏன்..?

    ReplyDelete
  9. நேற்று சொன்னதேதான்; இதே ரூட்ல போய்கிட்டே இருங்கண்ணா.

    ஒரிஜினல் சுட்டி இருந்தால் ஏதாவது குற்றம், குறை கண்டு பிடித்த திருப்தி கிடைக்கும் :)

    அனுஜன்யா

    ReplyDelete
  10. ஒவ்வொரு வரியிலும் துயரம் படர்ந்து சென்று ஏதோ ஒரு இனம் புரியாத தவிப்பில் (மதில் மேல் பூனை போல) அலைகழிக்கிறது

    ReplyDelete
  11. கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  12. :) தலைப்பே அருமையான கவிதை.

    ReplyDelete
  13. //நான் உன்னைக் காதலிக்கிறேன் கண்ணே//

    நிறைய கணவர்கள் தங்கள் மனைவியிடம் சொல்ல நினைக்கும் வார்த்தைகள், ஆனால் சொல்லப்படாமல் நெஞ்சுக்குள்ளேயெ புதைந்து போகும் வார்த்தைகள்.

    இறுதிவரியின் இறுதி வரி சூப்பர் குருஜி.

    ReplyDelete
  14. ம்ஹீம்...ஒன்னும் சொல்றதுக்கில்ல :))

    ReplyDelete
  15. அப்பாடா ரொம்ப நாளைக்கப்புறம் எனக்குப் புரியற மாதிரி ஒரு கவிதை படிச்சிருக்கேன். அற்புதமா இருக்கு. நன்றிண்ணே

    ReplyDelete
  16. மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  17. சங்கர், நர்சிம், தண்டோரா, காவேரி கணேஷ், பிரியமுடன் வசந்த், ராஜாராம், நிலாரசிகன், RVC, நேசமித்ரன், மதுரை சரவணன், தேவன் மாயன், அன்புடன் அருணா, கும்க்கி, அனுஜன்யா, விநாயக முருகன், அண்ணாமலையான், யாத்ரா, செந்தில்நாதன், தராசு, ரௌத்ரான், ஜீவ்ஸ், ராதாகிருஷ்ணன்... நன்றி.

    @ அனுஜன்யா - மொழிபெயர்ப்பில்லை - அதனால் குற்றம் குறையெல்லாம் கண்டுபிடிக்க முடியாது :)

    ReplyDelete
  18. கவிதையின் தலைப்பைப் பார்த்துத்தான் கவிதைப்பக்கத்தைத் திறந்தேன். கவிதையின் முதல் வரியே நெஞ்சில் பாய்ந்தது. ஆனால் எழுதப்பட்ட கவிதையின் இறுதி வரி கவிதையின் தலைப்பிற்கும், முதல் வரிக்கும் ஈடு கட்டும் விதமாக
    இல்லை. குமுதத்தின் ஒரு பக்கக் கதையின் கடைசி வாக்கியம் போல மொண்ணையாக இருக்கிறது.

    ReplyDelete
  19. சுப முத்துக்குமார், நன்றி.

    ReplyDelete