குமார் (எ) கலெக்டர் குமார்
இன்று காலை 4.00 மணியளிவில் இயற்கை எய்தினார்
அறிவிக்கிறது ஃபிளெக்ஸ் பேனர் தெருமுனையில்
டிரைவர் குமார் என்ற பெயரும் உண்டு
என்பது ஞாபகம் வந்தது
மதுச்சாலையில் வைத்து
15 வருடப் பழக்கம் இருவருக்கும்
இவனைப் போலவே தொடர்ச்சியாய்ப் புகை பிடிப்பவரும்கூட
சமீபத்தில் சந்தித்துக் கொள்ள வாய்க்கவில்லை இருவருக்கும்
விசாரித்தபோது
மாரடைப்பாம்
உறங்கும்போது நடந்த மரணமாம்
இளமையாகத் தோன்றினாலும்
குமாருக்கு இவனைவிட 10 வயது கூடுதல்
என்ற விவரம் தெரிந்தபோது ஆசுவாசமாயிருக்கிறது
அப்பப்ப ஒன்னு திருஷ்டிக்கு எழுதணுமா ? நல்லா இல்லை :)-
ReplyDelete//குமாருக்கு இவனைவிட 10 வயது கூடுதல்
ReplyDeleteஎன்ற விவரம் தெரிந்தபோது ஆசுவாசமாயிருக்கிறது//
இந்த ”இவனைவிட” என்பது என்னைவிட என கொண்டால் குமாருக்கு 30 வயசா!
இப்படிக்கு
ரியல் யூத்து!
பயமாத்தாங்க இருக்கு
ReplyDelete//உறங்கும்போது நடந்த மரணமாம்//
ReplyDeleteதேவலை
மனதில் குடிகொண்ட மது அரக்கனை பயம் எனும் இருள் அரக்கனை கொண்டு பயமுறுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteபுகை நமக்கு பகை...
ReplyDeleteஅப்படியே இதையும் படிங்க தலைவரே
http://ennaduidu.blogspot.com/2010/02/blog-post_17.html
ஐயோ இந்த மரணம் பயம் இருக்கிறதே ... ஒன்றும் செய்ய முடியவில்லை போங்கள் ...
ReplyDeleteசிலபேரு சொல்லுவாங்க...சாகற வயசு கூட இல்லை. பாவம் செத்துட்டான்...எனக்கு இதைக்கேட்டால் குழம்பும். சாகறதுக்கு வயசு இருக்கா? கொஞ்சம் வயசான ஆளுங்க செத்தா நம்மளோட பச்சாதாபத்தின் அளவு ஒரு இஞ்ச குறைகிறது.
ReplyDeleteகவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க!
ReplyDeleteரொம்ப எளிமையா இருக்குது குருஜி,
ReplyDeleteகலக்கல் எப்போதும் போல.
ReplyDeleteவண்ண தாசன் அல்லது சுஜாதா எழுதியதாக ஞாபகம். ஹிந்து பேப்பரில் கண்ணீர் அஞ்சலி செய்தி படிக்கும் பொது, இறந்தவர் வயதையும், நம் வயதையும் ஒப்பீடு செய்து மகிழ்வோம்..
நல்லா இருக்கு
ReplyDeleteநல்லாருக்கு மக்கா.
ReplyDeleteபரவால்லை..
ReplyDeleteமணிகண்டன், வால்பையன், கவிதை காதலன், அஷோக், காவேரி கணேஷ், ரோமியோ, நந்தா, விநாயக முருகன், மோகன், தராசு, யாஹு ராம்ஜி, பேநா மூடி, ராஜாராம், விதூஷ்... நன்றி.
ReplyDeleteஉங்கள் கவிதைகளிலேயே எனக்கு பிடிச்சது இதுதான்...!!!!
ReplyDelete