Friday, March 12, 2010

அணு சக்தி தொடர்பாக சி ஜெயபாரதன், கனடா

ஜெயபாரதன் என்ற பெயரை நான் திண்ணையின் மூலமாகவே அறிந்தேன். அவர் ஒரு அணு விஞ்ஞானி (nuclear scientist) என்பதாய் எனக்கு ஒரு நம்பிக்கை. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் நான் எழுதியிருந்த ஞாநிக்கு ஒரு ஓ போடுவோம் (http://jyovramsundar.blogspot.com/2008/07/blog-post_13.html) என்ற பத்திக்கு இரண்டு நாட்கள் முன்பு அவர் பின்னூட்டமிட்டார். தொடர்ந்து, நேற்று / இன்றும்கூட. அவரது பார்வைகள் முக்கியமானவை எனத் தோன்றுவதாலும், எனது பத்தி மிகப் பழையது அதனால் வாசிப்பவர்களின் கவனிப்பிற்கு ஜெயபாரதனது பின்னூட்டங்கள் வராமல் போகலாமென்பதாலும், இதைத் தனிப் பதிவாக இடுகிறேன்.

1.http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

(கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள்)

2. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40305042&format=html

(ஞாநியின் 'கான்சர் கல்பாக்கம் ' கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்)

3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309252&format=html

(மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்)

4. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310161&format=html

(கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்)

5. http://www.thinnai.com/?module=displaystory&story_id=203041912&format=html

(கேன்சர் கல்பாக்கம்: முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம்)

---

இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

+++++++++++++

திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துகளுக்குப் பிறகு உலகிலே பழைய அணுமின் நிலையங்கள் எல்லாம் சீர்மை செய்யப்பட்டுள்ளன. இந்தியா முதல் அநேக நாடுகளில் புதிய அணுமின் நிலையங்கள் தோன்றி பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.

அணுப்பிணைவு நிலையங்கள் வர்த்தக ரீதியாக வருவது வரை அணுப்பிளவு நிலையங்கள்தான் உலகில் பேரளவு மின்சக்தி அளிக்கும். ஜப்பான், பிரான்ஸ் அதற்கு உதாரணங்கள்.

இப்போது அமெரிக்காவும், கனடாவும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போகின்றன.

அணுமின் நிலையங்களை விட அனுதினம் பறக்கும் ஆகாய விமானங்கள் பயங்கர மானவை. பல்லாயிரம் உயிர்களைக் குடித்துள்ளன. ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும். அதுவும் இப்போது பெண்கள் அவற்றை இயக்கி வருகிறார். ஆகாய விமானத்தில் விபத்துக்கள் இருப்பினும் மக்கள் பயமின்றி அவற்றில் தினமும் பயணம் செய்கிறார்.

அணுமின் நிலையங்களில் நிகழும் யந்திரப் பழுதுகளை மனிதத் தவறுகளைக் குறைப்பதற்கும், அவற்றைக் கண்காணிக்கவும் அகில நாட்டு அணுவியல் துறைப் பேரவை (IAEA) வியன்னாவில் சிறந்த பணி செய்கிறது.

பொதுடமை ரஷ்ய விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் IAEA வற்புறுத்திய அணு உலை அரண் போன்ற பாதுகாப்பு முறைகளைச் செர்நோபில் உலையில் கையாள வில்லை.

கூடங்குளத்து ரஷ்ய அணு உலைகளில் இப்போது IAEA வற்புறுத்திய அத்தனை பாதுகாப்பு முறைகளும் உள்ளன.

அவற்றை IAEA கண்காணிப்பது போல் மற்ற இரசாயனத் தொழிற் துறைகள் கண்காணிக்கப் படுவதில்லை.

போபால் விபத்து ஓர் உதாரணம்.

---


ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்பத் தீவுகளில் தற்போது 55 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 43,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங்களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.

ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.

இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6% இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.

மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிர்ப்பந்த விதி இதுதான்: பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.

வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.

செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை. பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.

செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு !


சி. ஜெயபாரதன், கனடா.
http://jayabarathan.wordpress.com/
jayabarathans@gmail.com

9 comments:

  1. என்னது ஜெயபாரதன் விஞ்ஞானியா? சரிதான்!

    ReplyDelete
  2. அனானி, எனது நம்பிக்கையைச் சொன்னேன். ஒருவேளை அவர் ஆய்வு செய்திருக்கலாம் (அல்லது படித்திருக்கலாம் என நினைக்கிறேன்). இது குறித்து எப்போதோ வாசித்த நினைவுதான்.

    அணுக்கழிவு குறித்து எனது சந்தேகங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

    ReplyDelete
  3. பழைய பதிவில் ஜெயபாரனின் இன்னொரு பின்னூட்ட :

    எந்த யந்திரச்சாலையிலும் சாதனத் தவறுகள், மனிதத் தவறுகள் ஏற்படாவென்று யாரும் உத்தரவாதம் 100% தரமுடியாது.

    அதன் இயக்கமுறைகளில் தவறுகள் நேர்ந்தால் எப்படிக் கையாளப் படவேண்டும் என்று இயக்க விதிகளில் அழுத்தமாக எழுதப் பட்டுள்ளன. அவை மேற்கொள்ளப் படும் என்னும் உத்திரவாதத்தில் காப்பீடுகள் தரப்படுகின்றன. ‌

    ஐந்து கட்டச் சோதிப்புகள் (Quality Controls) (Five Stage Quality Control Tests & Verifications as per Specifications) (Production, Construction, Commissioning, Operation, Maintenance)

    (a) தயாரிப்பு நிலை :

    அணு உலைச் சாதனங்களிலும், இயக்க முறைகளிலும் தவறுகளைக் குறைக்கும் "தரக் கட்டுப்பாடு" (Quality Controls) முறைப்பாடுகள் :

    1. சில பாதுகாப்புச் சாதனங்கள், கருவிகள் தயாரிக்கப்படும் போது "பூஜியப் பழுதுகள்" (Zero Defects) என்னும் சல்லடையில் தேர்ந்தெடுக்கப் படும்.

    2. சில பாதுகாப்புச் சாதனங்கள், கருவிகள் தயாரிக்கப்படும் போது "ஏற்றுக் கொள்ளும் பழுதுகள்" (Acceptable Flaws) என்னும் தரத்தில் ஒப்புக் கொள்ளப்படும். இவை தரக் கட்டுப்பாடு நிபுணரால் எழுத்து முறையில் ஒப்புக் கொள்ளப் பட வேண்டும்.

    (b) கட்டுமான நிலை : (Construction & Commissioning)

    ஒவ்வொரு கட்டத்திலும் சோதிப்பு செய்தல் (வெல்டிங் சோதிப்பு, சாதன‌ங்கள் அழுத்த சோதனை Pressure Test) போன்றவை. பழுதுகள் இருந்தால் செப்பணிடப்படும்.

    (c) Operation & Maitenace Stage

    ஒவ்வொரு நாளும் இரவு ஷிப்டில் கட்டுப்பாடு, பாதுகாப்புக் கருவிகள் (Control & Safety Instrumentation) சோதிப்பு. பராமறிப்பு.

    (d) இயக்குபவர், பராமறிப்பவர் தவறுகளைக் குறைக்க கையாளும், பின்பற்றும் முறைகள் எழுத்து மூலம் திட்டமிடப் பட்டு, கண்காணிக்கப் படுதல்.

    (e) இவற்றையும் மீறி விபத்துக்கள் நேர்ந்தால் அணு உலை தானாக நிறுத்தம் அடையும். கதிரியக்க விளைவுகள் கோட்டை அரணுக்குள் கிடக்கும்.

    இந்த உத்திரவாததில் இப்போது உலக அணு உலைகள் காப்பீடுகளுடன் இயங்கி வருகின்றன.

    These are the reasons why the construction, commissioning of a Nuclear Power Reactor takes time, money & skilled manpower. The Nuclear Groups of the World are well knowledgeable because of IAEA, Vienna.

    Visit NPCIL, India & IAEA Websites :

    1. http://www.iaea.org/

    2. http://en.wikipedia.org/wiki/International_Atomic_Energy_Agency

    3. http://www.iaea.org/NewsCenter/News/2010/inpro010210.html

    4. http://www.npcil.nic.in/ (Indian Nuclear Power)

    5. http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India

    6. http://www.candu.org/npcil.html (CANDU Owners Group COG)

    7. http://www.world-nuclear-news.org/newsarticle.aspx?id=24663


    சி. ஜெயபாரதன்

    ReplyDelete
  4. http://www.cag.gov.in/reports/scientific/1999_book1/chap2.htm

    பாவம் ஜெயபாரதன், அதைவிடப் பாவம் நீங்கள்!

    ReplyDelete
  5. http://jayabarathan.wordpress.com/about-the-author/ (என்னைப் பற்றி)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada


    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

    அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.

    எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.

    எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்,

    கிங்கார்டின்,

    அண்டாரியோ, கனடா.

    ஆகஸ்டு 21, 2009 (புதுப்பிக்கப் பட்டது)

    ReplyDelete
  6. (Nukespeak said... )

    முகமூடியைப் போட்டுக் கொண்டு பயந்து நடுங்கி இப்படிக் கோமாளித்தனமான பதிலை எழுவதற்கு என்ன அர்த்தம் ?

    சி. ஜெயபாரதன்.

    ReplyDelete
  7. /// அணுக்கழிவு குறித்து எனது சந்தேகங்கள் அப்படியேதான் இருக்கின்றன. ////

    சுந்தர், உங்கள் கேள்விகள் என்ன ?

    ஞாநிக்கு எழுதிப் போட்ட பதிலுக்கு யார் பின்னூட்டம் அளித்தார் ?

    சி. ஜெயபாரதன்.

    ReplyDelete
  8. அன்பான நண்பர் திரு ஜோவ்ராம்,

    திரு ஜெயபாரதன் ஒரு established விஞ்ஞானி என்பதை அவரின் பதிவுகளை படித்ததிலிருந்து தெரிந்துகொண்டேன்! இந்திய அணுகுண்டு project பற்றி நான் பின்னூட்டம் போட்ட பொழுது அவர் மேலும் சில விபரங்களை விளகினார்! மேலும் அவரின் பின்புலம் பற்றியும் எழுதினார்! அணுமின்நிலையங்கள், அணுசக்தி போன்றவற்றை பற்றி பேச அவர் முற்றிலும் தகுதி பெற்றவர் என்பதில் துளியும் ஐயம் இல்லை! Not only that, இந்த விடயங்களில் அவரின் விளக்கங்கள் மற்றவர்களைவிட வலுபெற்றது ஏனென்றால் அவர் அந்த துறையில் ஆராய்ச்சி செய்து, பட்டம் வாங்கி, வேலை செய்து பரிமளித்தவர்! ஆதலால் அணுசக்தி பற்றி பேச ஞானி போன்றவர்களை விட மிக மிக மிக தகுதியானவர்! யாராவது அவரை disprove செய்ய வேண்டும் என்றால் மேலே ஒரு பின்னூட்டக்காரர் அசட்டுத்தனமாக செய்தது போல ஒரு சுட்டியை போட்டு படியுங்கள் என்று கூறவேண்டாம்! உங்கள் ஐயங்களை அவருக்கு சொல்லுங்கள், கண்டிப்பாக தீர்ப்பார் என்று நான் நம்புகின்றேன்!

    அவர் வெறும் ஞானி அல்ல, சும்மா ஏதோ அரைகுறையாக படித்துவிட்டு politically correct ஆக எழுதவேண்டும் என்று ஓ போடுவதற்கு!!! அவர் ஒரு விஞ்ஞானி, அதுவும் மெத்த படித்த, அந்த துறையில் பல காலம் இருந்த, தேர்ந்த experienced விஞ்ஞானி!

    நன்றி

    ReplyDelete
  9. EXCUSE ME ... நான் வழி மாறி வந்துட்டேனா?

    ReplyDelete