Sunday, April 18, 2010

சத்தங்களால் ஆன உலகு

நீர்வீழ்ச்சியின் ஓசையோடு
அடித்துச் செல்லப் படுபவன்
அலறுகிறான் கேட்டுக் கொள்
ஒதுங்கிய ரயில் பெட்டியின்
திறந்த வான் நோக்கிய
புணரல் ஒலி
காம்போதி ராகம்
ஓர் இடம் விட்டு
மறு இடம் பிடிக்கும்
கண்ணே கலைமானே வானொலியில்
தவழும் காலை ஒடித்துக் கொண்டு
இடிந்து போன கனவுகள்
தலையில் வீழ்ந்து
தூக்கத்தில் கதறும்
கண்ணாளா உனக்கென உண்டு
ஒலி பெருக்கிகளின் அலறல்
பிரத்யேகமாக
மண்டைக்குள் கேட்கும்
ஊழித் தாண்டவ கூத்து இரைச்சல்கள்

20 comments:

  1. ம்ம் இப்போ இருக்கிற மனநிலைக்கு சரியா இருக்கு சுந்தர் :)

    ReplyDelete
  2. கென் சொன்னது போல இப்போ இருக்கிற மனநிலைக்கு ஏத்த வரிகள் :)

    ReplyDelete
  3. மிகவும் சிறப்பான சிந்தனை !
    என்ன செய்வது வாழ்ந்தாக வேண்டுமே !

    ReplyDelete
  4. இது மறுபிரசுரம் தானே - அ-கவிதை? நானும் நிறைய மறுபிரசுரங்கள் செய்திருக்கிறேன் என் தளத்தில் (பிளாகரில் தொகுக்கப்படாத என் கவிதைகளை) ... மற்றபடி இந்த கவிதை பிடித்திருக்கிறது ...

    ReplyDelete
  5. கென், விநாயகமுருகன், பனித்துளி சங்கர், நந்தா... நன்றி.

    @ நந்தா... பழைய கவிதைகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தேன். அதை இன்று மதியம் பார்த்ததும், வலையில் ஏற்றாததுபோல் தோன்றியது. பிளாக்கரில் எடிட் மோடில் சென்று பழைய பதிவுகளைப் பார்த்ததில் ஏற்கனவே பதிவேற்றிய தடயம் இல்லை (ஆனால் இப்போது, உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு, மறுபடியும் பார்த்ததில் 2007லேயே பதிவில் ஏற்றியிருக்கிறேன் என்பது தெரிகிறது).

    நான் நிறைய மீள் பதிவுகள் செய்வேன். மாதம் ஒன்று என்ற கணக்கில்கூட செய்துகொண்டிருந்தேன் - இப்போதுதன் சில மாதங்களாகச் செய்வதில்லை.

    இனி, இன்னும் கவனமாயிருக்கிறேன்.

    ReplyDelete
  6. ஒலி,ராகம்,வானொலி, அலறல்,
    இரைச்சல் - இப்படி சிம்பிளாவும் யோசிக்க முடியுது.அதோடு அகம் சார்ந்தும் ரொம்ப விரிவா..!
    நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. நம்ப கவிஞ்சர்களுக்கு மட்டும் எப்படிதான் இந்த மாதிரி கவிதைலாம் புரியுதோ! ஸ்ஸ்ப்பா பாதி கவிதைக்கு காதுக்குள்ள குருவி குய்ய்ய்னு கத்துது

    ReplyDelete
  8. அதிஷாவை ரிப்பீட்டுக்கறேன்

    ReplyDelete
  9. சந்துரு, அதிஷா, இரசிகை, தராசு... நன்றி.

    ReplyDelete
  10. இப்பதான் வாசித்தேன்.

    ரொம்ப பிடிச்சிருக்கு.

    மீள் பதிவதில் தவறில்லை.தாமதமாக வந்த எங்களை போன்றோருக்கு.

    நந்தா,உன்னை போல போல.(நினைவுத்திறன்)

    ReplyDelete
  11. நன்றி ஜ்யோவ். :))

    ReplyDelete
  12. எனக்கும் ஓரளவுக்கு புரிஞ்ச மாதிரி தான் இருக்கு. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி!

    ReplyDelete
  13. உரையாடல் கவிதை போட்டி முடிவுகள்

    http://suryesh.blogspot.com/

    ReplyDelete
  14. கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு

    நேசமித்திரன்
    பா.ரா
    நவாசுதீன்
    தேனம்மை
    காயத்ரி
    ஹேமா
    ராமலக்ஷ்மி
    லாவண்யா
    விஜய்
    நாவிஷ் செந்தில்குமார்
    பலாபட்டறை ஷங்கர்
    புபட்டியன்
    ஆதிமூலகிருஷ்ணன்
    பாலா
    அக்பர்
    கலகலப்ப்ரியா
    கமலேஷ்
    சிவாஜி சங்கர்
    முரளிகுமார் பத்மநாபன்
    தாமோதரன்

    ReplyDelete
  15. @ஓம் சைக்கிள்

    சுவாமி லிஸ்டில் என்னுடைய பெயரும் கவிப்பேரரசு வைரமுத்து பெயரும்தான் மிஸ்ஸிங் அதையும் தயைகூர்ந்து சேர்த்துக்கொள்ளுங்க!

    ReplyDelete
  16. கவிசுற்றரசு அதிஷா

    ஓகேவா

    ReplyDelete
  17. பா ராஜாராம், டிவி ராதாகிருஷ்ணன், விதூஷ், ஜீவ்ஸ், பிரவின்ஸ்கா, சூர்யேஷ், ஸ்வாமி ஓம்ஸைக்கிள்... நன்றி.

    ReplyDelete