Saturday, June 12, 2010

என்ன கொடுமை இது?

இன்று எங்கள் வீட்டிற்கு வந்த தமிழ் தினசரியொன்றின் உள்ளே சொருகப்பட்டிருந்த கலர் பிட் நோட்டிசில் இருக்கும் வாசகங்களைக் கீழே தந்திருக்கிறேன் :

வணக்கம்,

நான் விஜய் டீவி உங்கள் சூப்பர் சிங்கர் ஜூனியர் (குட்டி) ஸ்ரீகாந்த். என்னுடைய சூப்பர் சிங்கர் ஜூனியர் வெற்றி உங்களுடைய vote-ல் தான் இருக்கு. உங்களுக்கு தெரிஞ்ச்வங்களையும் உங்க நண்பர்களையும் குடும்ப உறுப்பினர்களான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, அக்கா, மாமா, மாமி, எல்லோரிடமும் சொல்லி என்னை வாக்களித்து ஜெயிக்க வைத்து ஜூனியர்2 டைட்டிலை win பண்ணி கொடுங்க. Please.

குறிப்பு : ஒருவர் எத்தனை வாக்கு வேண்டுமானாலும் போடலாம்

வாக்கு போட : ஜுன் 7ம் தேதி இரவு 10.30 மணி முதல்
நாளும் நேரமும் : ஜூன் 17ம் தேதி இரவு 9.30 மணி வரை
SMS எண் : SSJ 20
அனுப்பும் எண் : 57827
Email : www.vijay.indya.com

அன்புள்ள உங்கள்
செல்ல ஸ்ரீகாந்த்

நோட்டிசின் இன்னொரு பக்கத்தில் இதனுடைய ஆங்கில வடிவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கூடவே கூழைக் கும்பிடு + நெஞ்சின் குறுக்காக இரண்டு கைகளையும் வைத்து வாக்குகளுக்காக இறைஞ்சும் சிறுவனின் புகைப்படம். இம்மாதிரி அந்தந்த ஊர்களில் தனிசரிகளில் வைத்து இம்மாதிரியான நோட்டிஸ்களை வினியோகிப்பதாக அறிகிறேன்.

நான் தொலைக்காட்சி பார்ப்பது எப்போதாவதுதான். இந்த நிகழ்ச்சியைப் பார்த்தது இல்லை. இது பற்றி அதிஷா எழுதிய ஒரு கதையை வாசித்தபின் விசாரித்தபோது இன்னும் கேவலமான விஷயங்கள் நடப்பதாகச் சொன்னார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே? வணிக முதலாளிகளின் பண வெறிக்கு இன்னும் என்னென்ன கூத்துகளையெல்லாம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை.

43 comments:

  1. // வணிக முதலாளிகளின் பண வெறிக்கு இன்னும் என்னென்ன கூத்துகளையெல்லாம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. //

    இதுதான் ஆரம்பம்.. வீட்டுக்கு வீடு கேன்வாசிங் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  2. ஹா.. ஹா.. நல்ல காமெடியா இருக்கே..!

    இதைச் செய்யச் சொன்னது விஜய் டிவி இல்லையே..!

    கலந்து கொண்ட நமது மக்கள்ஸ்தானே..!

    அப்போ ஆர்வமும், வெறியும் யாருக்கு இருக்குங்க ஜ்யோவ்..!

    மொதல்ல நாமதான் திருந்திணும்..!

    ReplyDelete
  3. //நான் தொலைக்காட்சி பார்ப்பது எப்போதாவதுதான்//

    முதல்ல பாருங்க பாஸு...
    எவ்வளவோ அறியநிகழ்ச்சியெல்லாம் போடறாங்க..

    ReplyDelete
  4. கொஞ்ச கூத்து இல்ல சுந்தர்ஜி. நிறைய நடக்குது. நேர்ல சொல்றேன்.

    ReplyDelete
  5. பாட்டு பாடியே எல்லாம் நாசமா போகட்டும்...

    ReplyDelete
  6. //
    வணிக முதலாளிகளின் பண வெறிக்கு இன்னும் என்னென்ன கூத்துகளையெல்லாம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை.
    //

    இதில் மட்டும் மாறுபடுகிறேன்.

    இதற்கு காரணம் முதலாளிகள் என்பதை விட, முழுப் பொறுப்பு பெற்றோர்களே....என் பையன் ஃப்ர்ஸ்ட் ராங்க், அஞ்சு வயசு பையன் அஞ்சு லாங்குவேஜ்ல பேசுறான்...எட்டாம் கிளாஸ் பொண்ணுக்கு ஐ.ஐ.டி. என்ட்ரன்ஸ் எக்ஸாம் ட்ரைனிங்.. இதே போன்ற குழந்தைகளுக்க்கு எதிரான மற்றொரு வன்முறை தான் இந்த சூப்பர் சிங்கர் போன்றவை...என்ன ஒன்று, இப்படி ஓட்டு கேட்டு நோட்டீஸ் போடுவது ஆபாசமாக இருக்கிறது.....இதே போன்று இன்னொரு கொடுமை, எஸ்.எஸ்.எல்.சி எக்ஸாமுக்கு எட்டாம் கிளாஸ்ல இருந்தே ப்ரிப்பேர் பண்றேன்னு பேட்டி தர்றது!

    ReplyDelete
  7. உண்மைத் தமிழன்

    Yosikkave mattara????

    ReplyDelete
  8. அடங்கொய்யால..இந்த கூத்த கேளுங்க.. நேற்று எனக்கு தெரிந்த பள்ளியில் நடனப்போட்டி. ராதை வேடமும் கிருஷ்ணன் வேடமும் போட்ட குழந்தைகள் ஆடிக் கொண்டிருந்தார்கள். நான் லேட்டாக செல்லும்போது வாசலில் கிருஷ்ணன் அழுதுக்கொண்டிருந்தார். அவருக்கும் ராதைக்கும் கெமிஸ்ட்ரி சரியில்லையென்று ஹெட்மிஸ் சொன்னார்களாம். அதனால் ராமர் வேடம் போட்ட சிறுவனுடன் ராதையை ஆடச்சொல்லி விட்டார்களாம். விடிய விடிய கதை கேட்டு ராதைக்கு ராமர் என்ன உறவுனு கேட்காதீங்க

    ReplyDelete
  9. இது மட்டுமா? SMS-ல் எனக்கு ஓட்டு போடுங்க என மெசேஜ் வருது!! போஸ்டர் எல்லாம் அடிச்சு பல இடத்தில ஒட்டிருக்காங்க.. ம்ம் என்னென்னமோ நடக்குது

    ReplyDelete
  10. http://nee-kelen.blogspot.com/2010/06/blog-post_11.html

    ReplyDelete
  11. அதுல ஜெயிச்சா 25 லட்சம்னு சொல்றாங்க எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா அந்த பசங்க பாடுறதுல்ல இருக்கும் திறமைக்காக தருகிறார்களா அல்லது என்னை போல இசை அறிவு இல்லாதவர்கள் த‌னக்கு பிடித்த பசங்களுக்கு அதிக எண்ணிகைக்காக ஒட்டு போடுவதாலா

    பரிசு திறமைக்காகவா இல்ல ஓட்டுக்காகவா

    தெரிந்தவங்க சொல்லுங்க....

    ReplyDelete
  12. கடைசி இதுவும் தமிலிஷ் ஓட்டு மாதிரி ஆக போகுது பாருங்க...

    ReplyDelete
  13. :-)) அடுத்த போட்டிக்காக ஓட்டு கேட்க அரசியல்வாதிக மாதிரி கிளம்பிடுவாங்களோ! ஓட்டு என்றாலே பதிவுலகம் முதல் பாட்டுலகம் வரை பிரச்சனை தான் போல இருக்கு! ;-)

    ReplyDelete
  14. செய்தி புதிதாக அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  15. ||என்ன கொடுமை இது?||

    கொடுமைக்கு அடைமொழி எதுக்கு.. கொடுமைதானுங்க..

    ReplyDelete
  16. இது வேற நடக்குதா
    அடக் கொடுமையே

    //குறிப்பு : ஒருவர் எத்தனை வாக்கு வேண்டுமானாலும் போடலாம்//

    அப்ப அவுங்க குடும்பமே குத்திக்கிட்டு தான் இருப்பாங்களே(ஓட்டதான்)
    இது நியாமா படல

    ReplyDelete
  17. Sundar,

    ithu pola prog ellam udance than just maariamma kovil light music katcheri pola ninaichu paakanum.

    House prize tharathe oru emathu velai, vilaila periya discount than tharanga winner about 70% panam kattanum. So who is willing to pay that money will be the winner.

    Building contractor therinthavar than,cuddalore pakkam ecrla avar site irukku anga ponapo kelvipaten. Maanada mayilada house prize matterum ippadithan.

    ReplyDelete
  18. பாஸ் இதெல்லாம் சாம்பிள் தான். இன்னும் நிறையா கொடும இருக்காம்.நானும் உங்களமாதிரி டிவியே பார்பதில்லை.

    ReplyDelete
  19. இந்த எரிச்சல் எழவுக்குதான் நான் டி.வி. பார்ப்பதேயில்லை

    ReplyDelete
  20. சுந்தர்,

    அந்த SMSக்கு 5 ரூபாய் என நினைக்கிறேன். இது வி டி வியும் மொபைல் நிறுவனங்களும் சேர்ந்து செய்யும் கூட்டுக் கொள்ளை.

    இதே போலத்தான் டீலா நோ டீலாவில் பங்கேற்பவர்களை அழவைத்துப் பார்ப்பதும்.

    ReplyDelete
  21. தகவல் அதிர்ச்சியாக இருக்குங்க.

    ReplyDelete
  22. நித்யஸ்ரீ என்ற குழந்தைக்கு மதுரை S.B.O.A பள்ளியிலும் பெரிய பிளக்ஸ் போர்டு வைத்திருக்கிறார்கள்,[அட.. கேவலமே..]
    என்ன என்று கேட்டால்,அந்த சிறுமி சென்னை S.B.O.A பள்ளி மாணவியாம்.இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நாம் வன் நுகர் கலாச்சாரத்தின் அடிமைகளாக மாறிவருகிறோம் என்பதைத்தான் காட்டுகிறது,பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை இப்படி வலிந்து தள்ளுகிறார்கள்.அதிலும் அந்த அல்கா என்ற சிறுமி வாரவாரம் குடும்பத்தோடு கொச்சியில் இருந்து சென்னை வருகிறாராம்.கல்வியெல்லாம் இங்கே பின்னுக்கு தள்ளப்படுகிறது,கிடைக்கிற கேப்பில் புகுந்து எப்படியாவது பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமே இங்கே பிரதானமாய் இருக்கிறது.சிறு வயதிலேயே இப்படி புகழ் வெளிச்சத்தில் சிக்கி,பின் அதை தக்கவைத்து கொள்ள வேண்டி ஓடும் ஓட்டம் இருக்கிறதே ....அது பரிதாபத்திற்கு உரியதாக,வக்கிரங்களையும்,சாபங்களையும் சுமந்தலைவதாக இருக்கும்.சிலர் மட்டுமே ஜெயிக்க முடிகிறது.தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே நீதிமன்ற பொது நல வழக்கு மூலம் இது போன்ற "கல்வி கற்கும் குழந்தைகள் மீதான கொடுமைகளை" தடுத்து நிறுத்த முடியும்.

    ReplyDelete
  23. Boss, in TRP rating it is the number 1 programme. No body there to watch makkal tv or agriculture programme.

    ReplyDelete
  24. எப்படி எல்லாம் யோசிக்கறாங்க !!!!!

    ReplyDelete
  25. PARENTS ARE RESPONSIBLE FOR THIS "CRIME" NOT TV CHANNEL.
    :(

    ReplyDelete
  26. நீங்கள் டிவி பார்க்காமல் இருப்பது மட்டுமல்ல, ரோட்டிலும் நடக்காமல் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஓட்டு போட சொல்லி ஆளுயர போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  27. நிறைய நடக்குதுங்க!

    ReplyDelete
  28. Valluvar kottam area la ellam innoru contestant shravan ithe mathiri poster adichu otti irukanga. Mm Evalavo paathacha

    ReplyDelete
  29. :-))

    வர வர ரொம்ப சென்சிட்டிவ் ஆகிட்டு இருக்கடா.

    ReplyDelete
  30. இது பெற்றவங்க சார்பா செய்யப் படுதா அல்லது விஜய் தொ.கா , அல்லது Airtel சார்பா செய்யப் படுதா ?
    அந்த சிறுவன் நல்லா பாடறான். அதைக் கேவலப்படுத்துவது மாதிரி இது என்ன canvasing?

    http://www.virutcham.com

    ReplyDelete
  31. இப்படியெல்லாம் கூட நடக்குதா!

    ReplyDelete
  32. நானும் காலையில் படித்து கடும் அதிர்ச்சி + அயர்ச்சி அடைந்தேன்

    ReplyDelete
  33. கேவலம் கலைக்கு

    விஜய்

    ReplyDelete
  34. எனக்கும் நித்யஸ்ரீ என்ற குட்டிப் பாப்பாவின் பாடலும் ஆடலும் ஸ்டைலும் ரொம்ப பிடிக்கும்.. அதுக்காக ஓட்டுப் போடுங்கன்னு சொல்றதெல்லாம் ரப்பிஷ்.. மக்கள் ஓட்டுப் போட்டு தான் இவங்க ஜெயிக்கனும்னா, நடுவர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் என்ன வெங்காயத்துக்கு அங்க உக்காந்துட்டு இருக்கு? அதிலும் கூட ஓட்டுப் போடுவதற்கு அவர்கள் தரும் எண்களைப் பாருங்க.. அதெல்லாம் 3 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் எண்கள். எதாவது ஒரு மொபைல் என் கொடுத்தால் அது இலவச செய்தி சேவையில் வந்துவிடும். மொபைல் நிறுவனத்துக்கு வருமானம் இருக்காது.. இது ஒரு பெரும் கூட்டுக் கொள்ளை.. இதை தடை செய்ய வேண்டும்..

    ReplyDelete
  35. விடுங்க தல,

    இது இன்னும் கேவலமாகத்தான் மாறும்.

    அந்தப் பையன்கிட்ட ஒரு கேள்வி கேட்டா அதுக்கு சரியா பதில் சொல்லும் அளவுக்கு கூட இன்னும் வளர்ச்சி பத்தல. ஆனா, அவனையும் இங்க கொண்டு வந்து அவுங்க அப்பா, அம்மா அடிக்கற கூத்தைப் பாத்தா, ஐயோ....

    இதுல எம்.எஸ். விஸ்வநாதன் வேற அவனுக்கு சான்ஸ் குடுக்கறேன்னு சொல்றார்.

    ஆண்டவா, இன்னும் என்னென்னெல்லாம் பாக்கணும்னு இருக்கோ......

    ReplyDelete
  36. ஓட்டு போட சொல்லி எனக்கு மெயில் வந்தது!

    ReplyDelete
  37. இலங்கையில் பெரியவர்களுக்கான பாடல் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான பாடகர்கள் வீதிக்கு வீதி சுவரொட்டியும் பிரதான சந்திகளில் கட் அவுட்டும் வைத்தார்கள். அத்துடன் சிலர் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டார்கள். எல்லாம் வியாபாரம் தான்.

    ReplyDelete
  38. பாளிடிக்ஸுக்கு பசங்கள தயார் பண்றாங்க பாஸு..நல்ல விஷயம் தானே. ஹி ஹி ஹி

    ReplyDelete
  39. //இதுல எம்.எஸ். விஸ்வநாதன் வேற அவனுக்கு சான்ஸ் குடுக்கறேன்னு சொல்றார்//

    முதலில் அவருக்கு யாரும் சான்ஸ் கொடுத்தா நல்லது!:))

    ReplyDelete
  40. பிட் நோட்டிஸ் கொஞ்சம் ஓவர்னு தான் தோணுதுங்க... போட்டி இருக்கலாம்... வெறி கூடாது... அந்த பிள்ளைக்கு இந்த வயசுல இதை சொல்லி தர்றது ரெம்ப தப்பு...

    ReplyDelete
  41. உங்க மேட்டரே..ஷாக்கிங்கா இருந்தது..அதுக்கு எல்லாரும் போட்டுருக்கற பின்னூட்டத்தைப் படிச்சா...அது அதுக்கும் மேல இருக்கே...

    ReplyDelete