சற்று முன்புதான்

அதிகாலை நேரம்
காகங்கள் மின்சாரக் கம்பிகளில்
காத்துக் கொண்டிருக்கின்றன
நேற்றிரவு மறந்து போன
சப்பாத்தியைத் தின்று கொண்டிருக்கிறேன்
அமைதியான ஞாயிறு காலை 6 மணிக்கு

சுவரோரத்தில் ஒரு செருப்பு சாய்ந்து இருக்கிறது
அதன் ஜோடி அருகில் சிதறிக் கிடக்கிறது

சில வாழ்க்கைகள் பாழாய்ப் போகவே
படைக்கப்பட்டிருக்கின்றன

சார்லஸ் ப்யுகோவ்ஸ்கி

16 comments:

கார்க்கிபவா said...

அதிகாலை, காலை 6 மணி

2 தடவ வருதே? மூலத்திலும் அபப்டித்தானா குரு?

Athisha said...

ப்யுகோவ்ஸ்கிக்கும் சப்பாத்திக்கும் என்னங்க சம்பந்தம்..

சப்பாத்திக்கு பதிலா நேத்து சுட்ட வடைனு போட்டிருந்தா.. முன்னால காக்கா அப்புறம் வடைனு மேட்ச் ஆகிருக்கும்!

ச்சே வடை போச்சே

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

@ கார்க்கி, நன்றி. இல்லை, வசதிக்கென மாற்றியதுதான்

@ அதிஷா, நன்றி. சாண்ட்விச்சைத்தான் சப்பாத்தின்னு மாத்தியிருந்தேன். தப்போ?

Siddharth said...

நல்ல மொழிபெயர்ப்பு சுந்தர். ஆனா சப்பாத்தின்னு சொல்லி இருக்கனுமா? சாண்ட்விச் நே சொல்லி இருக்கலாம்னு படுது.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு சுந்தர்.

ராம்ஜி_யாஹூ said...

அருமை, பகிர்விற்கு நன்றிகள்

நந்தாகுமாரன் said...

nice translation of charles bukowski's it was just a little while ago

கலகலப்ரியா said...

||சாண்ட்விச்சைத்தான் சப்பாத்தின்னு மாத்தியிருந்தேன். தப்போ?||

மொழிமாற்றம்னா... பெயர்ச்சொல்லை அப்படியே மொழிமாற்றுவதுதான் சரி.. சப்பாத்தி நல்லா இருக்கிறதால (நீங்க சாப்ட்ட சப்பாத்திய சொல்லலை..) bukowski-யைத் தழுவி :o) எழுதினதுன்னு சொல்லி இருக்கலாம்..

ஆனாலும்.. தப்ப தப்புன்னு எடுத்துக்கிட்டாதான் அது தப்பு... மொழி விளையாட்டுன்னு போட்டிருக்கிறதால... ஓக்கே.. மத்தபடி இதுக்கும் யாராவது கேஸ் போட்டா... உங்க பாடு கோவ்ஸ்கி பாடு...

நந்தாகுமாரன் said...

சப்பாத்தி என்ன இட்லி அல்லது தோசை என்றும் சொல்லலாம் ... கவிதையின் இந்த காட்சிக்கூறு சாண்ட்விச்சில் இல்லை ... நேற்று உண்ண மறந்த மீந்த பண்டம் ... அவ்வளவு தான்

Joe said...

நல்லாருக்கு.

சித்தார்த் ஏற்கனவே சொன்னது தான், ஒருவேளை சார்லஸ் இந்திய உணவின் ரசிகரோ-ன்னு நினைச்சு விட்டுட்டேன்.

Unknown said...

அங்கேயும் மீந்ததா.. அவனுக்கு சான்ட்விச்.. நமக்கு சப்பாத்தி அல்லது பழய சாதம்...

Athisha said...

சப்பாத்திக்கு மாற்றாக புளியோதரையை பரிந்துரைக்கிறேன்.. அதுதான் நம்முடைய தமிழ் கலச்சார உணவு. தமிழ்வாழ்க

யாத்ரா said...

//சுவரோரத்தில் ஒரு செருப்பு சாய்ந்து இருக்கிறது
அதன் ஜோடி அருகில் சிதறிக் கிடக்கிறது//

இக்கவிதையின் மூன்று காட்சிகளிலும் கொஞ்சம் நின்று நின்று வாசித்து வந்தேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சித்தார்த், பா ராஜாராம், ராம்ஜி யாஹு, நந்தா, கலகலப்ரியா, ஜோ, கே ஆர் பி செந்தில், யாத்ரா... நன்றி.

தர்ஷன் said...

அவருக்கு மங்களூர் பீடிக்கட்டுகள் பிடிக்குமென எங்கோ படித்த ஞாபகம். பெரும்பாலும் சாருவின் தளத்திலாயிருக்கலாம். சாப்பிட்டாரெனில் சப்பாத்தியும் பிடிக்கலாம். ஏன் கவிதையில் காகங்கள் கூட டெலிபோன் கம்பங்களில்தானே இருந்தது. கவிதைக்கு ஊறு நேராத வகையில் எதைப் போட்டால்தான் என்ன.

Sangeetha said...

நேற்றிரவு மறந்து போன ( மீந்து போனதா?)