முதல் முறை படித்தபோது இந்த நாவல் சில குறைகளுடன் என்னைக் கவரவே செய்தது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது நிறைய குறைகளே தெரிகின்றன. இது ஏதோ நாவல் வெளியிட வேண்டுமே என்று அவசரத்தனமாக எழுதப்பட்ட ஒரு நாவல் என்று தோன்றுகிறது.
தேகம் நாவலில் எனக்குத் தெரியும் சில குறைகள் :
கத்துக்குட்டித்தனமான முயற்சிகள். தர்மா, நீதி என்று குறியீட்டுப் பெயர்கள் வைத்திருப்பது (remember, அன்னைவயல், தாய்வாசல்!).
ஒழுங்காக எடிட்டிங் கூடச் செய்யாதது. கந்தவேல் என்ற பெயர் அடுத்த
பக்கத்தில் கந்தசாமியாக மாறுவது.
ஒரே விதமான வரிகள் திரும்பத் திரும்ப வருவது. உதா : உன்னை நினைத்தால் எனக்குக் ஈரமாயிடுது, நீ பார்த்தாலே எனக்கு நிதம்பத்தில் நீர் சுரக்குது, நீ என்னைப் பார்த்தாலே ஆர்கசம் வந்துடுது... (இந்த இடத்தில் அம்பை சொன்னது ஏனோ நினைவுக்கு வருகிறது : சினிமால தொட்டாலே ஆர்கசம் வந்தா மாதிரி உணர்ச்சி காட்டறாங்களே, அப்ப முத்தம் கொடுத்தா காக்கா வலிப்பு வந்துடுமா?)
ஏன் முத்தம் கொடுக்க மாட்டேன் என்கிறாய் என்ற கேள்விக்கு செலின் பதில் சொல்லியிருப்பாள். ஆனால் இரண்டு அத்தியாயங்கள் கழித்து நான் அப்ப சொல்லலை, இப்ப சொல்றேன் என்றுவிட்டு அதே காரணத்தை மறுபடியும் சொல்வாள். நூலாக்கும் போது இதையெல்லாம் கூடவா கவனிக்காமல் விடுவார்கள்?
ஏற்கனவே எழுதி உயிர்மையில் / சாரு ஆன்லைன் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் பக்க நிரப்பிகளாக மறுபடியும் இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார். தனிப்பட்ட அளவில் சில கவிதைகள் நன்றாயிருந்தாலும், நாவலுடன் முழுத் தொடர்பும் கொண்டவை எனச் சொல்ல முடியவில்லை.
வேதங்கள் / சங்க இலக்கியத்திலிருந்து எதையாவது தொடர்பே இல்லாததை (அல்லது தொடர்பு இருப்பது போன்ற தோற்றம் தருவதை) எடுத்து
அங்கங்கே பொன் தூவலாகத் தூவுவது ஒரு ஃபேஷனாகிவிட்டது போல. அது இந்த நாவலிலும் அப்படியே இருக்கிறது. என்ன எழவோ இந்த மாதிரி மோஸ்தர்களைக் கண்டாலே எரிச்சலாகிவிடுகிறது.
கதையின் நாயகனால் உடல்-ரீதியாக வதை செய்யப்படுபவர்கள் ரொம்பக் கெட்டவர்கள் என்பது வெகு கவனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. எதேச்சைத்தன்மையாகவோ அல்லது காரண காரியமற்ற ’வெறும்’ வதையாகவோ இவை மாறாததால், சாதாரண கிராஃபிக்கல் டீடெய்ல்ஸுற்கு மேல் மதிப்பளிக்க முடியவில்லை. (இதை காம்யூவின் அந்நியன் நாவலில் வெயில் நேரத்தில் ஒருவனைச் சுட்டுக் கொல்லும் சம்பவத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்).
சாருவைப் பற்றிய முக்கிய குற்றச் சாட்டு அவர் கிசுகிசு பாணியில் தன்னுடன் பழகியவர்களைப் பற்றி எழுதுகிறார் என்பது. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. ஆனால் அதைக்கூட ஏற்கனவே எழுதியதை மறுபடி எழுதினால் என்ன செய்ய? ஏற்கனவே சிறுகதைகளில், பத்திகளில், ராசலீலாவில் வந்த அதே நிகழ்வுகள் வேறு பெயர்களுடன் இந்த நாவலிலும் வருகின்றன (நீலாவதி என்ற பெண் பெயரில் வரும் பகுதிகளைப் படித்துப் பாருங்கள்).
இது மட்டுமில்லை. ஏற்கனவே இவர் கதைகளில் வந்த அதே பாத்திரங்கள் அதே குணங்களுடன் இங்கேயும் உண்டு. ஆனால் வேறு பெயர்கள். ஆழ்வார், கிருஷ்ணா என்று. அடப் போங்கப்பா, போரடிக்குது.
அப்படியானால், நாவலில் நல்ல விஷயங்களே இல்லையா எனக் கேட்கிறீர்களா.. சில கவித்துவமான வர்ணனைகள், பித்த நிலையில் வரும் நேஹாவின் வரிகள்...
இது வதையைப் பற்றிய நாவல் என்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. பாலியல் சித்தரிப்புகளில் வதையெல்லாம் தெரியவில்லை (சாமான் எழும்பாததை எல்லாம் வதை லிஸ்டில் சேர்க்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்). எனக்குத் தெரிந்து இது, வதை + சாருவின் வழக்கமான பாலியல் சித்தரிப்புகள் + வழக்கமான சாரு சமாச்சாரங்கள் உள்ள நாவல்.
நீங்கள் குறிப்பிட்டது தவிர்த்த, இன்னும் சில புதிய / சுவராசியமான விஷயங்கள் நாவலில் காணக் கிடைக்கின்றன.. குப்பியடித்தல், பன்றி வதை, பஸ்ஸில் இடித்தல், மலம் அள்ளுதல் போன்றவற்றை (நிஜமாகவே) முக்கியமான மற்றும் உயிர்ப்புள்ள பதிவுகளாக நினைக்கிறேன்.. 'தேகம்' வதை பற்றிய நாவல் என்று முன் நிறுத்தப்பட்டாலும், மூன்றே அத்தியாயங்களில் தான் அதைப் பற்றிய காட்சிரூபங்கள் வருகின்றன.. அவையும் ரொம்பவும் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இல்லை.. நம்மில் நிறையப் பேர் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் டார்ச்சர் முறைகள் தான்.. என் 'பரத்தை கூற்று' புத்தக வெளியீட்டின் போது தான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ஒரு காலத்தில் தான் ஜிகிலோவாக இருந்த போதான அனுபவங்கள் என்று சொன்னார்.. ஆனால் அதைப் பற்றி அதிகபட்சம் இரண்டு மூன்று பக்கங்களில் மட்டுமே வருகிறது.. அதே போல் ட்ரான்ஸ்ஜென்டர் என்பது பற்றியும் போகிற போக்கில் மட்டுமே சொல்லிச் செல்கிறார்..
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை இப்போதும் ராஸலீலா தான் சாருவின் புனைவுகளுள் மாஸ்டர்பீஸ்.. நான் ஏற்கனவே சொன்னது போல் தமிழின் மிகச்சிறந்த 10 நாவல்கள் பட்டியலில் அதைத் தாராளமாய் வைக்கலாம்.. அந்நாவலில் நிறைய இடங்களில் வெளிப்பட்ட வாழ்வின் நுட்பமான தரிசனம் பின் பெரிய அளவில் அவரிடமிருந்து வெளிப்படவே இல்லை.. இந்த 'தேகம்' நாவலில் அத்தகைய உக்கிரத்துடன் மிகச்சில தீற்றல்கள் மட்டும் புலனாகின்றன..
மிக மிக நேர்மையான விமர்சனம்.. கிட்டதட்ட முழுக்கவே ஒத்துப் போகிறேன்..
An honest review.. hats off
ReplyDeleteநேஹாவின் பித்த நிலை பகுதி மிகவும் அருமையானது. அது பற்றி இன்னும் கொஞ்சம் நீங்கள் எழுதியிருக்கலாம்...
ReplyDeleteவிமர்சனம் சரியான அளவில் இருக்கு சீக்கிரம் படிக்கனும் :)
ReplyDeletei felt the same when manu joseph got the award- in my opinion it should have gone to neti,neti..
ReplyDeletethank you sundar for sparing from reading that
//சாமான் எழும்பாததை எல்லாம் வதை லிஸ்டில் சேர்க்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்//
ReplyDeleteச்சே ஆபாச குப்பை!
//ச்சே ஆபாச குப்பை!//
ReplyDeleteஇந்த அதிஷா எல்லா இடங்களிலும் இப்படியே சொல்கிறார் , எதிர்விளம்பரமாம் , சரோஜா தேவி புக்குன்னு சொல்லி வித்தாலும் எவனும் வாங்க மாட்டேங்கிறானே , என்ன செய்ய ?
Guruji, a good review. Opinion differs. Va.Mu.Komu said 'Theham is a wonderful novel by Charu'.
ReplyDeleteபடிக்கவேண்டும். சுந்தரின் விமர்சனத்தின் ஞாபகத்தை மறந்துவிட்டு:)
ReplyDelete//சினிமால தொட்டாலே ஆர்கசம் வந்தா மாதிரி உணர்ச்சி காட்டறாங்களே, அப்ப முத்தம் கொடுத்தா காக்கா வலிப்பு வந்துடுமா//
ReplyDeleteஹி ஹி உண்மை தானுங்க!!!
// சாரு அவசரப்பட்டு விந்(த்)து விட்டாரோ .. இன்னும் எடிட் செய்யனும்னு படித்தவர்கள் எல்லாரும் கூறுகிறார்கள் //
கவனிப்பாரா சாரு
\\வதை + சாருவின் வழக்கமான பாலியல் சித்தரிப்புகள் + வழக்கமான சாரு சமாச்சாரங்கள் உள்ள நாவல்\\
ReplyDeleteசரியான கணிப்பு ஜி
சிஎஸ்கே, அனானி, பாஸ்கி, கென், டாக்டர் ருத்ரன், அதிஷா, சாரு வாசகன், மயில் ராவணன், தமிழ்நதி, இக்பால் செல்வன், நிகழ்காலத்தில்... நன்றி.
ReplyDeleteஅருமையான நாவல்
ReplyDeleteசிறப்பான விமர்சனம்.
ReplyDeleteநூல் படி்க்கவில்லை.
குறைகள் பல இருந்தாலும் படிக்கத் தோன்றுகிறது
குருஜி,
ReplyDeleteஇதெல்லாம் நம்ம தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்குது.
சுந்தர், பக்கா விமர்சனம். நான் படிக்கும் போது ஏற்பட்ட அதே உணர்வு. இந்த விமர்சனத்தை எல்லாம் சாரு கண்டு கொள்ளமாட்டார். யாராவது "சாரு, படித்துவிட்டு எனக்கு தூக்கம் வரல, வெளிக்கி வரல" என்று எழுதினால் அதை தன்னுடைய வலைமனையில் ஒட்டிவைத்து விடுவார். தேகம் ஒரு போலிதனம் மிகுந்த நாவல். யாரோ எழுதினார்களாம் "கோபிகிருஷ்ணனின் எழுத்தில் உண்மை இருந்தது, ஆனால் சாரு நடிக்கிறார்" என்று. அது மிக மிக உண்மை கருத்து. எனக்கு ஒன்று மட்டும் எப்போதும் புரிவதில்லை சுந்தர், எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் ஆயிரம் பக்க நாவலை கதற கதற குதறி ஒரு விமர்சனம் எழுதினர், ஆனால் கடித்து குதற நிறைய வாய்ப்புகள் இருந்தும் ஏன் செய்யவில்லை. "இந்த நாவல் ஒரு வதை, சதை, கீதை என்று வார்த்தை விளையாட்டு செய்கிறார். மனுஷ்யபுத்திரன் சாருவின் "கேர் ஆப்", ஆதலால் அவரை பற்றி விமர்சிக்க முடியாது. எஸ் ராமகிருஷ்ணன் "நண்பேண்டா" என்ற ரேஞ்சிதான். பக்கத்தை ரொப்புவதே அந்த கவிதைகளின் வேலை. மொத்தத்தில் தேகம் எழுத்தின் குஷ்டரோகம்.
ReplyDeleteதமிழ்த் தோட்டம், டாக்டர் எம் கே முருகானந்தன், தராசு, ரமா லக்ஷ்மணன்... நன்றி.
ReplyDelete