Tuesday, December 18, 2007

நண்பனும் தனிமையும்

எப்போதாவது வரும் நண்பன்
இப்போதும் வந்து விட்டான்
திரைச்சீலை ஆடுவதிலிருந்து
காற்றை உணர முடிகிறது என்றான்
ஒளிக் கற்றைகள் விழமுடியாத
பிரதேசத்தில் வசிக்கிறாய்
வெளிச்சத்தின் முக்கியத்துவத்தை
உணரவில்லை நீ
எனக் குற்றம் சாட்டினான்
கவிதை எழுத முயலாதே
காற்றைப் படி என்று
அவன் கிழித்தெறிந்த தாள்கள்
காற்றில் அசைந்தசைந்து
வெளியில் கலக்கின்றன
நண்பர்களில்லாத நான்
கவிதைகளோடு வசித்துக் கொண்டிருக்கிறேன்

(கவிதா சரன் செப்டம்பர் 1996ல் வெளியானது)

4 comments:

  1. சொல்லவே இல்ல.நீங்களும் ப்ளாக் ஜோதியிலே ஐக்கியமாயிட்டீங்கபோல.வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி, சிவா. நீங்கள் தானே என்னுடன் ஒருமுறை தொலைபேசியில் பேசினீர்கள்... நினைவிருக்கிறது...

    ReplyDelete
  3. புரியும் படியான புதுக்கவிதை என்று நினைக்கையிலேயே அதன் சிறப்பு தெரிகிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நன்றி, ஜீவி.

    எல்லாக் கவிதைகளும் எல்லாருக்கும் புரிந்து விடாது என்பதையும் நினைவில் கொள்வோம்...

    ReplyDelete