Tuesday, January 8, 2008

முதல் முயற்சி

அகண்ட வெளியை
நோக்கிப் பயணப்பட்ட
மகிழ்ச்சி
இடையில் உடையும்
சுக்கு நூறாய்
தலையணையில் முகம் புதைத்த
கேவல்கள்
அழுகையாய் வெடிக்கும்
ஆதரவுக் கரங்கள்
அதிகப் படுத்தும் வேதனையை
ரயிலின் முன் விழுவதற்குத்
தயாராய்
உயிர் தாங்கிய உடல்

மனச் சலனங்களில்
சோர்வுறும் உடல்
உடற் சலனங்களில்
சோர்வுறும் மனம்

3 comments:

  1. தோல்விதான் வெற்றிக்கு முதல் படி...

    அது சரி..

    எல்லாத்திலேயும் வெற்றிப் பெறுவது தான் சரி என்று யார் சொன்னது..

    ReplyDelete
  2. ஆனா நமக்கு மூன்று நான்கு படி ஆயிடுச்சுங்க. நன்றி, tbcd...

    ReplyDelete
  3. உங்கள் interest நுண்ணரசியலா? கலக்கல்

    ReplyDelete