சொற்களின் மூலமாக
சொற்களால்
என்ன சொல்ல
பல் வலியை
காதலென்ற பெயரில் குதறிக் கொள்வதை
கடவுளும் சாத்தானும்
முத்தங்கள் பரிமாறிக் கொள்வதை
காமத்தின் வாசனையை
வியர்வையின் நசநசப்பை
முடிவுறாத கவிதையை
அறிவின் ஆக்ரமிப்பை
குறியின் நமைச்சலை
தலைப்பின் போதாமையை
அதை இதை
கார்காலக் குறிப்புகள் - 52
1 week ago
13 comments:
சொற் குவியல் !!
சொற்களின் கலைத்துவ செதுக்கல்தானே மொழி விளையாட்டு. மேலும் மேலும் செதுக்குங்கள். பாராட்டுகள்.
நன்றி, அனானி & டொக்டர். எம்.கே. முருகானந்தன்
நல்லாருக்கு சுந்தர்.. கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்பு நானும் இதுபோல் ஒன்று யோசித்தேன்..
கத்தாழைக் கண்ணாலே குத்தாதே நீ என்னை, இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை
நன்றி, கிருத்திகா
சுகுணா, பதிவிற்குச் சம்பந்தமில்லாது பின்னூட்டம் போட விரும்பினால், கவிதைக்குப் பாடலைப் போடக் கூடாது :)
என்ன சமையலொ, எதிர்த்து கேட்க யாரும்மில்லையொ
எதுக்கிந்த சொற்கள்...
பின்னூட்டத்திற்கு நன்றி, அனானி & கிங்.
நன்றாக உள்ளது கவிதை.
நல்ல மொழி.வாழ்த்துக்கள்
நன்றி, இலக்குவண்.
Post a Comment