Saturday, April 19, 2008

சொற்களால் ஆனது

சொற்களின் மூலமாக
சொற்களால்
என்ன சொல்ல
பல் வலியை
காதலென்ற பெயரில் குதறிக் கொள்வதை
கடவுளும் சாத்தானும்
முத்தங்கள் பரிமாறிக் கொள்வதை
காமத்தின் வாசனையை
வியர்வையின் நசநசப்பை
முடிவுறாத கவிதையை
அறிவின் ஆக்ரமிப்பை
குறியின் நமைச்சலை
தலைப்பின் போதாமையை
அதை இதை

13 comments:

  1. சொற் குவியல் !!

    ReplyDelete
  2. சொற்களின் கலைத்துவ செதுக்கல்தானே மொழி விளையாட்டு. மேலும் மேலும் செதுக்குங்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. நன்றி, அனானி & டொக்டர். எம்.கே. முருகானந்தன்

    ReplyDelete
  4. நல்லாருக்கு சுந்தர்.. கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்பு நானும் இதுபோல் ஒன்று யோசித்தேன்..

    ReplyDelete
  5. கத்தாழைக் கண்ணாலே குத்தாதே நீ என்னை, இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

    ReplyDelete
  6. சுகுணா, பதிவிற்குச் சம்பந்தமில்லாது பின்னூட்டம் போட விரும்பினால், கவிதைக்குப் பாடலைப் போடக் கூடாது :)

    ReplyDelete
  7. என்ன சமையலொ, எதிர்த்து கேட்க யாரும்மில்லையொ

    ReplyDelete
  8. எதுக்கிந்த சொற்கள்...

    ReplyDelete
  9. பின்னூட்டத்திற்கு நன்றி, அனானி & கிங்.

    ReplyDelete
  10. நன்றாக உள்ளது கவிதை.

    ReplyDelete
  11. நல்ல மொழி.வாழ்த்துக்கள்

    ReplyDelete