Monday, April 28, 2008

வளர்மதியின் குறும்படம் - Shiva : The Third Eye

நண்பர் வளர்மதி சமீபத்தில் UNESCOவிற்காக சிவா : தி தேர்ட் ஐ என்ற மூன்று நிமிடங்கள் ஓடும் குறும் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்து மத தொன்மங்களில் உள்ள சிவ பார்வதி நடனத்தை முன்வைத்து இந்த நாட்டிய குறும் படத்தை இயக்கியிருக்கிறார். சிவனும் பார்வதியும் நடனமாட பார்வதி காலை தூக்கி ஆடிய கோபத்தில் அவரை எரித்து விடுகிறார். அவரது மறு பாகம் போனதால் தடுமாறி, தன் தவறை உணர்ந்து பார்வதியை மீண்டும் உயிர்ப்பிக்கிறார். மன்னிப்பு கோரும் விதமாக பார்வதியை நெருங்க, அவர் சாதுர்யமாக சிவனின் மூன்றாவது கண்ணைப் பிடுங்கி அதை முழுங்கச் செய்கிறார். சிவனின் தொண்டையில் அதை நிறுத்துகிறார். இதுவே adam's apple. பிறகு இருவரும் களி நடனம் புரிகிறார்கள். இருவரின் கால்களும் ஒரு கண்ணைப் போலத் தோன்ற நடுவில் நீல நிற ஒளி வீசுவதுடன் படம் முடிகிறது.

இந்த நாட்டியப் படம் தொன்மங்களை மறு வாசிப்பு செய்வதன் மூலம் இரு பாலருக்குமான சமத்துவத்தை முன் வைக்கிறது. படத்தில் நிறங்களை கையாண்டிருக்கும் விதம் நன்றாக வந்துள்ளது.

இக்குறும் படத்தின் வெளியீட்டு விழா உலக நடன தினமான நாளை (29/04/2008) யதார்த்தா ஃபிலிம் சொசைட்டியால் மதுரையில் நடத்தப் படுகிறது :

MUTA அரங்கு
6 காக்கா தோப்பு தெரு
மதுரை 625 001
நேரம் : மாலை 6.15

செந்நிறக் கண் இமைத்தபடி துவங்கும் இப்படத்தை நீங்கள் யுனெஸ்கோவின் இணைய தளத்தில் பார்க்கலாம் :

http://www.unesco-ci.org/cgi-bin/media/page.cgi?g=Detailed%2F134.html;d=1

இப்படத்திற்கான என் விமர்சனத்தை பிறகு நேரம் கிடைக்கையில் விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு வளர்மதிக்கு வாழ்த்துகளைப் பதிவு செய்கிறேன்.

11 comments:

  1. நன்பர் வளர்மதிக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வளருக்கு எனது வாழ்த்துக்கள்..

    சுந்தர், அந்தச் சுட்டியில் படம் தெரியவில்லையே.. எப்படி அதை பார்ப்பது?

    ReplyDelete
  3. தோழர் வளர்மதிக்கு வாழ்த்துக்கள்!

    //சுந்தர், அந்தச் சுட்டியில் படம் தெரியவில்லையே.. எப்படி அதை பார்ப்பது?//

    உ.த. அண்ணாச்சி!

    உங்கள் அலுவலகத்தில் ஸ்ட்ரீமிங் மீடியா தடை செய்யப்பட்டிருக்கலாம். எங்காவது பிரவுசிங் செண்டரில் அந்த லிங்கை ஓபன் செய்து பாருங்கள்.

    ReplyDelete
  4. வணக்கம்ஜி,
    வளர் எங்கிட்டயும் சி.டி. கொடுத்து நாளாச்சு. இன்னும் பார்க்கலை. அது செல்போன் படம்னு சொன்னாரே...!

    ReplyDelete
  5. //லக்கிலுக் said...
    உ.த. அண்ணாச்சி!
    உங்கள் அலுவலகத்தில் ஸ்ட்ரீமிங் மீடியா தடை செய்யப்பட்டிருக்கலாம். எங்காவது பிரவுசிங் செண்டரில் அந்த லிங்கை ஓபன் செய்து பாருங்கள்.//

    டேய் ராசா.. கூட இருந்துக்கிட்டே உள் குத்து குத்துறியா..? எனக்கும் ஒரு நேரம் வரும்ப்பூ.. அப்ப பாத்துக்குறேன்..

    ReplyDelete
  6. எனக்கும் வளர்மதி அவர்கள் அப்படத்தை குறுந்தகட்டில் அனுப்பி வைத்துள்ளார். தனிப் பதிவிடலாம் என்று இருந்தேன். அதற்குள் முந்திவிட்டீர்கள். நண்பர் வளர்மதியின் இம்முயற்சிக்கு பாராட்டுக்கள். வெளியீட்டுவிழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. படம் 1.30 நிமிடங்களுக்குப்பிறகு நின்று போகிறது..முழுவதும் பார்க்க முடியவில்லை...

    ReplyDelete
  8. லின்கின் கீழே also available as என்று video podcast download, windows media stream என இருப்பதில் முயற்சித்துப் பார்க்கவும்.

    ReplyDelete
  9. பின்னூட்டங்களுக்கு நன்றி முனி,உண்மைத் தமிழன், லக்கி லுக் & ஆடுமாடு.

    ReplyDelete
  10. நன்றி, ஜமாலன். நான் அறிமுகம் செய்து தானே எழுதியிருக்கிறேன். நீங்கள் விமர்சனமாகவே எழுதுங்களேன்.

    நன்றி, கிருத்திகா. நான் முன் சொன்ன யோசனையைச் செய்து பாருங்கள், சரியாக வரலாம்.

    ReplyDelete
  11. விழா நன்றாக நடந்ததாகக் கேள்விப் பட்டேன். புகைப் படங்கள் கிடைத்தால் அதையும் வலையேற்றுகிறேன்.

    ReplyDelete