வெகு நாட்கள் கழித்து
ஊருக்கு வருவான்
பட்டண ஓட்டலில்
வேலை செய்யும் சிறுவன்
காதோரம் வளர்ந்த
முடியை ஒதுக்கி
ரஜினி ஸ்டைல் என்பான்
தங்கை விழி மலர அதிசயிப்பாள்
அக்கா மனதாரச் சிரிப்பாள்
அப்பா
பட்டணத்தில் என்னவெல்லாம்
சல்லிசாகக் கிடைக்குமென
விசாரிப்பார்
இவனுக்குப் பெருமையாயிருக்கும்
ஓட்டலில் தான் பட்ட
அவமானங்களை மறப்பான்,
தற்காலிகமாக
(மாலைக் கதிர் நவம்பர் 1995ல் வெளியானது)
தொழிலாளர் தினத்தன்று குழந்தை தொழிலாளர் பற்றிய கவிதை!
ReplyDeleteநன்றி.
நன்றி, அருட்பெருங்கோ & உமாபதி.
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteநன்றி, ஜமாலன்.
ReplyDelete