Wednesday, May 21, 2008

உலகமயமாக்கல் - அதியமான் - எதிர்வினை

க.ர. அதியமான் ஒரு பதிவிட்டுள்ளார். பார்க்க : http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_1502.html. முழுக்க முழுக்க மறுக்கப் பட வேண்டியது இக்கட்டுரை. எதிர்வினையாக இதை எழுதுகிறேன்.

/ /ல் வருவது அவர் பதிவிலிருந்து எடுத்தது. வேறு வழியில்லை. 'மேற்கோள் யுத்தம்' செய்து தான் ஆக வேண்டியுள்ளது :)

/முதல்ல உலகமயமாக்கல் என்றால் என்ன ?
பெரும்பாலானோருக்கு சரியா புரியாமலே 'எதிர்பதாக' சொல்கிறார்கள்/

சரி, விளக்குங்களேன். தெரிந்து கொண்டே ‘எதிர்க்கிறோம்'.

/இந்த தமிழ் blogs/posts , ஆர்குட்/கூகுள் என்னும் அமேரிக்க நிறுவனமும்,
இன்னும் பல இணைய மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனக்களும், தொலைதொடர்பு
நிறுவனங்களின் அபாரமான வளர்சியில் விளைவுதாம். அவைகளை இந்தியாவிற்க்குள்
அனுமதித்து உலகமயமாக்கலின் ஒரு அங்கம்.
அதை எதிர்க்கிறவர்கள், இந்த tamilblogs/posts/groups ஆணிவேரையை
எதிர்ப்க்கிறார்களா ? எப்ப‌டி ? உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் இல்லாம‌ல் இந்த‌
அர‌ங்க‌மே சாத்திய‌மில்லையே ? முர‌ண் தொகை !!!/

1. தொழில் நுட்ப முன்னேற்றங்களை உலகமயமாக்கலால் தான் சாத்தியமானது எனச் சொல்ல முடியுமா.? wheel, ரேடியோ, தொலைக்காட்சி, தொலைபேசி எல்லாம் வந்தது உலகமயமாக்கலுக்கு முன்னாலா அல்லது பின்னாலா.?

2. முரண் தொகை எனச் சொல்வது முரண்நகையைத் தானென நினைக்கிறேன். ஒரு சமூகத்தில் இயங்குவதால் அதில் உள்ள பாதகமான அம்சங்களை விமர்சிப்பதில் என்ன முரண்நகை இருக்க முடியும்.? இதை இவர் செய்வதில்லையா.?

/சிறிபெரும்புதூர் தொடங்கி, ஒரகடம், மறைமலை நகர் வரை, சென்னையை சுற்றி
நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும்
அதற்க்கு பல உதிர்பாகங்கள் தயாரிப்போர் நிறுவனங்கள் க‌டந்த 15
ஆண்டுகளில், உலகமயமாக்கலின் விளைவாக‌ உருவாகின. அதில் பல ஆயிரம்
பேர்களுக்கு வேலை வாய்ப்பு, அரசுக்கு அபாரமான வரி வசூல், அன்னிய
செலாவாணி, மக்களுக்கு மலிவான தரமான பொருட்க்கள் (உ.ம் : நோக்கியா
செல்போன்கள்)..../

இதன் பாதக அம்சங்களை ஏன் பட்டியலிடாமல் வசதியாக மறந்து விட்டார்.? உதா. hire and fire policy etc. அப்புறம் இந்தத் ‘தரமான'ங்கற வார்த்தையை கேட்டாலே என்னவோ போலிருக்கிறது :)

சரிங்க, stp / ehtp நிறுவனங்களுக்கு வரி விலக்கு (வருமான வரி, சுங்க வரி, கலால் வரி, சேவை வரி - எல்லா வரிகளும்) அளிப்பது எதனால்.? ஹூண்டாய் நிறுவனத்திற்கு மட்டும் சென்னைத் துறைமுகத்தில் சகாய விலை (subsidised rates) எதனால்.?

/சரி, இவை எல்லாம் அனுமதிக்கபடாமல், 1990 வரை இருந்த மாதிரியே
தொடர்ந்திருந்தால், நம் நிலைமை இன்னும் 'நன்றாக' இருந்திருக்குமா ?
அல்லது மோசமாகியிருக்குமா ?/

சிலரின் வாங்கும் சக்தியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், பலரின் வாழ்க்கை நிலையை கணக்கில் கொண்டால், நன்றாக இருந்திருக்குமென்றே நினைக்கிறேன்.

/இவற்றின் சாதக/பாதகங்கள் என்ன ? உலகமயமாகலுக்கு பின் தான் தனியார்
துறைகளில் இப்ப வேலைவாய்ப்புகள் மிக மிக அதிகம் வளர்ந்துள்ளது. 1980இல்
வெளியான கமல் படம் 'வறுமையின் நிறம் சிகப்பு' பார்க்கவும், அன்றைய
சூழ்னிலை பற்றி அறிய. 1965க்கு முன் பிறந்தவர்களிடமும் விசாரிக்கவும்,
வேலை வாய்ப்புகள் பற்றி./

உலகமயமாக்கலின் 'சாதனைகள்' :

1. வினாயகர் சோடா, பொவண்டோ போன்றவை கிட்டத்தட்ட காணாமல்
போனது

2. ராமலிங்க ராஜு, அஜிம் பிரேம்ஜி போன்ற பணக்காரர்களை இன்னும் பணக்காரர்கள் ஆக்கியது

3. ஏழைகளைப் பிச்சைகாரர்கள் ஆக்கியது

4. என்ன சொல்ல வருகிறார்.? விட்டால், வேலை வாய்ப்புகளே உலகமயமாக்கலுக்குப் பின் தான் வந்தது என்கிறாரா.?

பொதுவாக கேப்பிடலிசத்தினால் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். ஆனால் இங்கு எடுத்துக் கொள்ளப் பட்டது உலகமயமாக்கல் மட்டுமே என்பதால் அதைத் தவிர்ப்போம்.

அவர் பதிவில் எழுதிவற்றை முழுவதுமாக எடுத்து எழுதியிருக்கிறேன். பிற அவர் பதில் கண்டு...

60 comments:

  1. அதியமான் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே உலகமயமாக்கலுக்கு
    ஆதரவு அளித்து வருகிறார்,
    அது உலகமயமாக்கலின் மீது உள்ள பற்றா
    அல்லது இடது சாரிகளின் மீது உள்ள கோபமா என்று தெரியவில்லை!

    வேண்டியதை எடுத்து கொள்வோம்
    வேண்டாததை தூர போடுவோம் என்று தான் நானும் பின்னூட்டமிட்டுறிக்கிறேன்

    வால்பையன்

    ReplyDelete
  2. வலைப்பதிவர் மீட்டிங்கில் நீங்கள் எல்லோரும் அதியமானுடன் தர்க்கம் புரிந்ததைக் கண்டு நானும் அதில் வந்தேன். அப்போது கூறியதையே இப்போதும் கூறுகிறேன்.

    உலகமயமாக்கல் நல்லதா கெடுதலா என்று பேசுவதே வெறும் அகாடெமிக் செய்கைதான். அது வந்துவிட்டது. அதை நீங்கள் எப்படி எதிர்க்கொண்டு உங்களை முன்னேற்றிக் கொள்ளப்போகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வேகமாகச் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவன் வந்துவிடுவான். அதை விடுத்து பேசிப் பேசி அலுப்பது சக்தி விரயம்தான்.

    வேலை வாய்ப்புகள் பல நூறு மடங்கானது உலகமயமாக்கலால்தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பாதகங்கள் உண்டா என்றால் உண்டுதான். எதில்தான் பாதகம் இல்லை? விசைத்தறி வந்தபோது அதை உடைத்து எரிந்தவர்களெல்லாம் இப்போது எங்கே? கணினியே வங்கிகளில் வேண்டாம் என்ற யூனியன் தலைவர்கள் எல்லாம் வி.ஆர்.எஸ்.-ல் போய் விட்டார்கள்.

    காலத்தின் கோலத்தில் எதிர்ப்புகள் அடிப்பட்டு போகும். புதிய எதிர்ப்புகள் வரும் அதுதான் வாழ்க்கை.

    உலகமயமாக்குதலை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும், நான், ஜெயகமல்கள், அதியமான்கள் முன்னேறி விட்டு போகிறோம்.

    உண்மை என்னவென்றால், நான் கூறுவதைத்தான் எல்லோரும் செய்கிறீர்கள், செய்யப் போகிறீர்கள். அவ்வப்போது டைம்பாசுக்காக இம்மாதிரி பேசவேண்டும் என பேசுகிறீர்கள். அதுகூடத் தேவையில்லை என நான் நினைக்கிறேன். அவ்வளவே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. நண்பர் க.ர.அதியமான் ஒரு வலையுலக எஸ்.வி.சேகர். அவரை ரொம்பவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு பதில்பதிவு எல்லாம் போட்டால் உங்கள் தாவூ தான் தீரும். தேவையில்லாமல் இரத்தக்கொழுப்பு ஏறும். பரவாயில்லையா?

    ReplyDelete
  4. அன்பு நணபர் சுந்தர்,

    உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி. யாரும் எனது பதிவில் வாதம் புரிவதில்லையே என்ற பெருங்குறை எனக்கு உண்டு.

    ///1. தொழில் நுட்ப முன்னேற்றங்களை உலகமயமாக்கலால் தான் சாத்தியமானது எனச் சொல்ல முடியுமா.? wheel, ரேடியோ, தொலைக்காட்சி, தொலைபேசி எல்லாம் வந்தது உலகமயமாக்கலுக்கு முன்னாலா அல்லது பின்னாலா.?////

    உல‌க‌ம‌ய‌மாக்க‌ ஆதிகால‌த்தில் இருந்தே உள்ள‌து. இப்போது அத‌ன் வீச்சும், ப‌ர‌வ‌லு‌ம் மிக‌ அதிக‌ம். உல‌க‌ வ‌ர்த‌க‌ம் ச‌ங்க‌ கால‌த்தில் இருந்துள்ள‌து. ரோமானிய‌ ம‌ற்றும் க‌ரேக்க‌ வ‌ணிக‌ர்க‌ளுட‌ன் இந்திய‌ ம‌க்க‌ள் வ‌ணிக‌ம் செய்த‌ வ‌ர‌லாறு...
    ப‌ல‌ க‌ண்டுபிடிப்புக‌ள் ஆங்காங்கே ந‌ட‌ந்த‌ன‌ / ந‌ட‌க்கும். இப்போது உல‌க‌ம‌ய‌மாக‌லின் விளைவாக‌ transfer of technology, outsourcing சுல‌ப‌ம். அத‌னால் இன்னும் ப‌ல‌ ப‌ல‌ க‌ண்டுபிடிப்புக‌ள், முன்றேற‌ங்க‌ள்.

    முர‌ண் என்று நான் சொல்ல‌ முற்ப‌ட்ட‌து, இந்த‌ இணைய‌ம் ம‌ற்றும் இல‌வ‌ச‌ பிளாக‌ர், த‌மிழ்ம‌ணம் என்னும் வ‌லைம‌னை உள்ள செர்வ‌ர் ம‌ற்றும் இனைப்புக‌ள் அனைத்தும் உல‌க‌ம‌ய‌மாக்க‌லின் விளைவுக‌ள் ; அதை பிளாகில் எழுதி எப்ப‌டி எதிர்கிறார்க‌ள் என்று புரிய‌வில்லை. ஒரு எறும்பு, யானை மீது இல‌வ‌ச‌மாக‌ ச‌வ்வாரி செய்து கொண்டே யானையை எதிர்ப‌தாக‌ கூறும் முர‌ணுக்கு ஒப்பான‌து இது !! :))))

    ///இதன் பாதக அம்சங்களை ஏன் பட்டியலிடாமல் வசதியாக மறந்து விட்டார்.? உதா. hire and fire policy etc. அப்புறம் இந்தத் ‘தரமான'ங்கற வார்த்தையை கேட்டாலே என்னவோ போலிருக்கிறது :)////

    hire and fire policy ந‌ல்ல‌துதான். புதிய‌ வேலை வாய்புக‌ள் மேலும் உருவாக்கும். வேலை செய்யாம‌ல் ஓபி அடிக்கும் ந‌ம் 'இந்திய‌ தேசிய‌ குணம்' மாறும். காண்ட்ராக்ட்டில் வேலைக்கு சேரும் போது அனைவ‌ரும் ஒப்புக்கொண்டே (ந‌ல்ல‌ ச‌ம்ப‌ள‌ம்) சேருகின்ற‌ன‌ர். ச‌மீப‌த்தில் உன்டாய் நிறுவ‌ன‌த்தில் வேலை வாங்கித் த‌ருவ‌தாக‌ ஏமாற்ற‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை ப‌ற்றிய‌ செய்தி என்ன‌ சொல்கிற‌து ? உன்டாய் போன்ற‌ ப‌ன்னாட்டு நிருவ‌ன்ங்க‌ளில் வேலை செய்ய‌ ப‌லரும் போட்டி போடுகின்ற‌ன‌ர். அதை த‌டுக்க‌ யாருக்கும் உரிமை இல்லை என்ப‌தே அடிப்ப‌டை. த‌ர‌மான‌ பொருட்க‌ளை விஞ்ஞான‌ முறைப‌டி த‌யாரிப‌து தெரிந்த‌துதானே. சுமார் 25 ஆண்டுக‌ளுக்கு முன் ந‌ம‌து த‌னியார் ம‌ற்றும் அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளின் த‌ர‌ம் எப்ப‌டி இருந்த‌து, ஒப்பிடுங்க‌ளேன்.சென்னையில் தயாராகும் நோக்கொயா/ மோட்ரோலா செல்க‌ள் த‌ர‌ம் எப்ப‌டி ? பிடிக்க‌வில்லை என்றால் வாங்கி உப‌யோகிக்க‌ எந்த‌ க‌ட்டாய‌மும் இல்லையே ? ISO 9000, etc ?

    ///சரிங்க, stp / ehtp நிறுவனங்களுக்கு வரி விலக்கு (வருமான வரி, சுங்க வரி, கலால் வரி, சேவை வரி - எல்லா வரிகளும்) அளிப்பது எதனால்.? ஹூண்டாய் நிறுவனத்திற்கு மட்டும் சென்னைத் துறைமுகத்தில் சகாய விலை (subsidised rates) எதனால்.?////

    வ‌ரிவில‌க்குக‌ள் த‌ற்காலிக‌மான‌வைதாம். புதிய‌ தொழில்க‌ளை ஊக்குவிக்க‌ கொடுக்க‌ப‌டுப‌வை. ஆனால் அதில் ந‌ட‌க்கும் ஊழ‌ல் ம‌ற்றும் பார‌ப‌ட்ச‌ம் ந‌ம‌து இந்திய‌ நேர்மையை ப‌ற்றிய‌து. உல‌கம‌ய‌மாக‌ல் அதுவ‌ல்ல‌.ப‌ல‌ மானில‌ங்க‌ளுக்குள் க‌டும் போட்டி, இது போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளை தம் மானில‌ங்க‌ளுக்கு வாவ‌ழைக்க‌. போட்டி என்றாலே பிற‌கு ச‌லுகைக‌ள், விலை குறைப்பு போன்ற‌வை வ‌ருமே. அதுச‌ரி,
    த‌மிழ‌க‌ ச‌ரித்திர‌திலேயே இல்லாத‌ அள‌வு வ‌ரி ம‌ழை கொட்டுகிற‌து இப்ப‌. 20,000 கோடிக்கு மேல் வேட் வ‌ரி. அதை வைத்து க‌லைஞ‌ர் விளையாடுகிறார். த‌ர்ம‌பிர‌பு போல் வாரி வ‌ழ‌ங்கியும் துண்டு விழுந்த‌ தொகை வெறும் 2.5 கோடி ம‌ட்டும்தான் !!

    ///2. ராமலிங்க ராஜு, அஜிம் பிரேம்ஜி போன்ற பணக்காரர்களை இன்னும் பணக்காரர்கள் ஆக்கியது////

    உண்மைதான். ஆனால் அத‌னால்தான் ஏழைக‌ள் மேலும் ஏழைக‌ள் ஆனார்க‌ள் என்ப‌து த‌வ‌றான‌ வாத‌ம். அந்த‌ தொழில‌திப‌ர்க‌ள் ப‌ல‌ ல‌ச்ச‌ம் புதிய‌ வேலை வாய்ப்புக‌ளை உருவாக்கின‌ர். ப‌ல‌ ஆயிர‌ போடி புதிய‌ வ‌ரி வ‌சூல் அர‌சுக்கு.

    எல்லாறும் எழைக‌ளாக‌வே இருந்தால் ப‌ர‌வாயில்லையா ? திருப்பூரில் இன்று 1970அய் விட‌ ப‌ல‌ ஆயிர‌ம் புதிய‌ தொழில‌திப‌ர்க‌ள், ப‌ண‌க்கார்க‌ள் உருவாகி உள்ள‌ன‌ர். வேலை வாய்ப்பும், வ‌ரி வ‌சூலும் மிக‌ மிக‌ அதிக‌ம் உருவாகியுள்ளது. ஆனால் புதுக்கோட்டை போன்ற‌ ஊரில் இந்த‌ அளவு ப‌ணாக்கார்க‌ள் உருவாக‌வில்லை. எது பெட்ட‌ர் ?

    ///சிலரின் வாங்கும் சக்தியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், பலரின் வாழ்க்கை நிலையை கணக்கில் கொண்டால், நன்றாக இருந்திருக்குமென்றே நினைக்கிறேன்.////

    இல்லை. முன்பை விட‌ விகுதாச்ச‌ர‌ப்ப‌டி ம‌த்திய‌ வ‌ர்கம் மிக‌ அதிக‌மாகியுள‌து. ஏழ்மை குறைந்துள்ளாது. தார‌ள‌ம‌ய‌மாக்க‌ல், உல‌க‌ம்ய‌மாக்க‌ல் ஏதும் இந்த‌ அள‌வு அனும‌திக்க‌ம‌ல் இருதிருந்தால், ஏழ்மை ம‌ற்றும் வாங்கும் திற‌ன் இன்னும் மோச‌மாகியிருக்காது என்று நிருபிக்க‌ முடியுமா ?

    மொத்த‌ வ‌ரி வ‌சூல், புதிதாக் இந்த‌ 20 ஆண்டுக‌ளில் உருவான‌ மொத்த வேலை வாய்ப்பு போன்ற‌ விசிய‌ங்க‌ள் பாருங்க‌ளேன்..

    and how did we accumulate 230 billion foreign exchange within 17 years. In 1991, there was a terrible balance of payments crisis and we had too pledge our gold to raise critically needed dollars to finance our imports.
    Slowly we have got out of our need to borrow from IMF. How ?
    and without liberalisation, we would have been bankrupt in 1992...

    more later.

    ReplyDelete
  5. வணக்கம்

    இருவரின் எண்ணங்களையும் படித்தேன்

    என்னைப்போல் அதிகம் தெரியாதவர்களை தெரிந்துகொள்ள வைக்கின்றீர்கள்

    நன்றி

    கொஞ்சம் தெரிந்துகொண்டு வருகிறேன் நிச்சயம் எல்லோருமே யோசிக்க வேண்டிய விஷயம்

    மீண்டும் நன்றி
    இராஜராஜன்

    ReplyDelete
  6. இந்த "உலகமயமாக்கல்" என்ற சொல்லாடலே என்னவோ செய்வது போலத்தான் இருக்கிறது. உலகமயமாக்கல் என்ற இவ்வார்த்தைக்குள் உண்மையிலேயே இருக்கின்ற 195 நாடுகளும் உள்ளடக்கமா?

    ReplyDelete
  7. நன்றி, வால்பையன், கையேடு & ராஜராஜன்.

    அதியமான் & டோண்டு... நாளை காலை மறுமொழியிடுகிறேன்.

    ReplyDelete
  8. //1. வினாயகர் சோடா, பொவண்டோ போன்றவை கிட்டத்தட்ட காணாமல்
    போனது//

    இந்த நிறுவனங்கள் காணாமல் போகவில்லை. பிராண்ட்கள் மட்டும்தான் காணாமல் போயிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு franchise-ஆக மாறியிருக்கின்றன. இது ஒரு win-win ஒப்பந்தமே. பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் சந்தைபடுத்துதல் இந்த franchise-களுக்கு அதிக இலாபம் ஈட்டி தருகினறன. இந்த சிறிய நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, பாட்டிலிங் பளான்ட், லோக்கல் தொழிலாளர்கள் பலம் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு jump-start போல. இதில் தொழிலாளர்களுக்கு எந்தவிதத்திலும் நஷ்டம் ஏற்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒரு குறிப்பிட்ட தொழில்திறமையுள்ள ஒரு தொழிலாளர் அதே திறமையுடன் தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார். Gold Spot என்ற பிராண்ட்க்கு பதில் Cocoa Cola என்ற பிராண்டோடு.

    பன்னாட்டு நிறுவனம் என்றால் என்ன? பல நாடுகளிலும் அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தொடங்கப்படும் நிறுவனங்கள் ஒரு குடையின் கீழ் செயல்படுவது. Cocoa Cola India Pvt Ltd என்பது இந்திய நிறுவனமே. அமெரிக்க தலைமையகம் இதற்கு சிறப்பு தள்ளுபடிகளுடன் (subsidies) பல ஆர்டர்களை தருகிறது. சீனாவின் IBM நிறுவனத்தை Lenova வாங்கியது போல, இங்கிலாந்தின் KPMG நிறுவனத்தை ATOS வாங்கியது போல், நாளை Gold Spot போன்ற நிறுவனங்களை நடத்தியவர்கள் இந்திய கோகோ கோலா நிறுவனத்தையும் வாங்கலாம்.

    இன்று இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்கள்தான். இந்தியாவை தலைமையாக கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள்.

    ஜாகுவார் என்னும் ஐரோப்பா பிராண்டை ஒரு இந்திய நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திடமிருந்து வாங்கி தயாரிக்கிறது என்பதும் உலகமயமாக்கல்தான். இதனால ஐரோப்ப தொழிலாளர்கள் நட்டமடைய போவதில்லை.

    //2. ராமலிங்க ராஜு, அஜிம் பிரேம்ஜி போன்ற பணக்காரர்களை இன்னும் பணக்காரர்கள் ஆக்கியது//

    90-களில் விப்ரோ எத்தனை வருவாய் ஈட்டியது? இன்று எவ்வளவு வருவாய் ஈட்டுகிறது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது? அதுவும் ஒன்று ராஜபாட்டை அல்ல. இந்திய, பல பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டியிட்டுதான் அவர்கள் பிராஜக்டுகள் பெறுகிறார்கள்.

    80-களில் அம்பாசிடர் மற்றும் பியட் மட்டும்தான் இந்தியாவில் கார்கள் தயாரித்தன. வேறு யாரும் தொழில் தொடங்க முடியாதபடிக்கு பல்வேறு சிக்கல்கள். அந்த நிறுவனங்களின் உற்பத்தி திறன் எவ்வளவு? ஏன் அவ்வளவு மந்தம்? அதற்கு என்ன காரணம்?

    இன்று நாம் எரிபொருள் சேமிக்க வேண்டும், பொது போக்குவரத்துகளை மேம்படுத்த வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால் 80-களில் மந்த உற்பத்திக்கு அதுவல்ல காரணம். சந்தையை அலட்சியபடுத்தியதுதான் காரணம். உற்பத்தியை பெருக்க எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேற்கொள்ள முடியாது. ஏனென்றால் லைசன்சுகள், பெர்மிட்டுகள் போன்றவை சரியாக முறைமை படுத்தபடவில்லை.

    இதற்கு ஒரு உதாரணம் இன்றைய தொலைபேசித் துறை. அருண் ஷோரி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவர் கொண்டு வந்த பல்வேறு 'எளிமைப் படுத்து'ம் வழிகள்.

    //3. ஏழைகளைப் பிச்சைகாரர்கள் ஆக்கியது//

    இந்த வாதம் எப்பொழுது வேண்டுமானாலும் வைக்கலாம். சான்றுகள் இருக்கின்றனவா? 70-களின் பிச்சைக்காரர்கள் இவ்வளவு. 2000-ல் அது இவ்வளவு மடங்கு கூடியது. மக்கள் தொகை பெருக்கத்தைவிட இந்த விகிதம் அதிகம். இது போன்ற ஆய்வுகள நடந்தனவா?

    விவசாயிகள் தற்கொலை அதிகமாகிவிட்டது என்பது பொதுவாக இந்த வாதத்தின் பிற்சேர்க்கையாக வரும்.

    விவசாயத்தை நெறிபடுத்து, அதனிலும் பல டெக்னாலஜிகளை புகுத்தி, குறைந்த செலவில் நிறைந்த மகசூலை அள்ள முடியாதா? கட்டாயம் முடியும். இதற்கும் பல பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் உதவியிட தயாராக இருக்கின்றன. சமீபத்தில் நான் கேட்ட ஒரு ரேடியோ பேட்டியில், நேபாள கிராமத்தில் ஒரு விவசாயியின் தண்ணீர் பிரச்சினைய தீர்க்க ரூபாய் இரண்டு இலட்ச முதலீட்டில் சொட்டு நீர்ப்பாசனம் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதனால் அவருக்கு வருடம் ரூ 20,000 இலாபம் கிடைக்கிறது.

    அரசாங்கம் இது போன்ற செயல்திட்டங்கள் வகுத்து அதை செய்ய பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கலாம்.

    //4. என்ன சொல்ல வருகிறார்.? விட்டால், வேலை வாய்ப்புகளே உலகமயமாக்கலுக்குப் பின் தான் வந்தது என்கிறாரா.?//

    வேலையில்லா திண்டாட்டம் பெருமளவு குறைந்திருக்கிறது என்பது நிதர்சனம். இதற்கு சான்று - இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்துவிட்டு, தெருமுனை குட்டிசுவரில் உட்கார்ந்து கொண்டு ஏகாதிபத்தியத்தை சாடி கொண்டிருக்கிறார்கள்?

    //பொதுவாக கேப்பிடலிசத்தினால் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். ஆனால் இங்கு எடுத்துக் கொள்ளப் பட்டது உலகமயமாக்கல் மட்டுமே என்பதால் அதைத் தவிர்ப்போம்.//

    ஆனால் நிதர்சனம் என்னவென்றால், கேபிடலிசம்தான் ஜெயித்து இருக்கிறது. இன்றைய கம்யூனிச நாடான சீனா கேபிடலச பாதையில்தான் தனது உள்கட்டமைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. இந்திய மாநிலங்களில் கம்யூனிசம் எஞ்சி நிற்க்கும் மேற்கு வங்கம், கேரளமும் கேபிடலிஸ பாதையில் பன்னாட்டு நிறுவனங்களை தங்கள் மாநிலத்திற்க்கு வருந்தி வருந்தி அழைக்கின்றன. அவர்களுக்கு பற்பல சலுகைகளும் தருகின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கேபிடலஸித்தினால் தீங்குகள் பெரிதும் இல்லை என்றே சொல்லலாம்.

    டோண்டுவின் வாதம் ஏற்புடையதே. பதினைந்து வருடங்களாக இந்தியா தனது சந்தையை உலகமயமாக்குதலுக்கு திறந்து வைத்திருக்கிறது. 9.5 சதவீத வளர்ச்சி. கடந்த மூன்று வருடங்களாக 8% சதவீத வளர்ச்சி. இது இன்னமும் தொடரும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

    இதில் என்ன பாதக அம்சங்கள் இருக்கின்றனவோ அதை களைந்து இந்த வளர்ச்சி பரவலாக எல்லாருக்கும் சென்றடைய பாடுபடுவதுதான் சிறந்தது.

    அதை விடுத்து, உலகமயமாக்கலை எதிர்த்தல், மறுகாலனியாதிக்கம் போன்ற வாதங்கள் பழமைவாதமாகவே தோன்றுகிறது.

    நமக்கு இப்பொழுது தேவை - வாய்ப்புகளை உபயோகபடுத்தும் செயல்திறன், வளர்ச்சியை பரவலாக்கும் செயல்திட்டத்துடன் கூடிய அரசாங்கம், அரசையும், சட்டத்தையும் மதிக்கும் குடிமக்கள்.

    பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய நன்பர் ஒருவர் ஆயுள் காப்பீடு கழகத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தார். சேர்ந்த புதிதில் யூனியன் செயல்பாடுகளில் மிகுந்த நாட்டத்துடன் பணியாற்றி வந்தார். தனியார் நிறுவனங்களை insurance தொழிலில் அனுமதிக்க கூடாது என்று காரசாரமாக வாதிடுவது வழக்கம்.

    'தனியார் நிறுவனங்கள், உங்களுக்கு நல்ல சேவையை தராது. அது உங்கள் பணத்தை பறித்து உங்களை நடுத்தெருவில் நிறுத்திவிடும்.' இதுதான் அவருடைய வாதம். 'அரசாங்கம் Insurance தொழிலுக்கு தகுந்த கோட்பாடுகளை வகுத்து கொடுக்க வேண்டியதுதானே... பின்னர் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் கண்காணித்து நேர்வழி படுத்த வேண்டியதுதானே.. ' என்று கேட்டால் 'அது எப்படி அரசாங்கம் செய்யும்? அதெல்லாம் நடைமுறையில் ஒத்து வராது' என்பது அவருடைய அடாவடி வாதமாக இருந்தது.

    இன்று அவர் ஒரு தனியார் Insurance நிறுவனத்தின் Regional Head.

    ReplyDelete
  9. நண்பர் சுந்தர்,

    நாம் இருவரும் தொழில் முனைவோர்கள். இருவரின் நிறுவனங்களிலுமே முறைதான் உள்ளது. இந்தியவில் சுமார் 90 சதவீத தொழிலளர்கள் இது போன்ற முறைகளில்தாம் வேலைக்கு அமர்தப்பட்டுள்ளனர். அரசு ஊழியர் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சதவீதம் குறைவுதான். இதில் உள்ள சிக்கல்கள் பற்றி :

    http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_12.html
    தொழிலாளர் நலச் சட்டங்களும் வேலை வாய்ப்பும்

    ---------------------
    லக்கி,

    வலையுலக எஸ்.வி.சேகர் யார் என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும். ஓ.கே.
    எனது சொந்த அபிப்பராயம் வேறாக உள்ளதே !!!!!!!!! :))))))))))

    ReplyDelete
  10. வணக்கம்

    \\உலகமயமாக்கல் நல்லதா கெடுதலா என்று பேசுவதே வெறும் அகாடெமிக் செய்கைதான். அது வந்துவிட்டது. அதை நீங்கள் எப்படி எதிர்க்கொண்டு உங்களை முன்னேற்றிக் கொள்ளப்போகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\\

    ஆம் இதில் நாம் சிரப்பாக எப்படி முன்னேறுவது என்று தான் பார்க்க வேண்டும்

    எனக்கு தெரிந்து

    பணக்காரர்கள் செல்வந்தர்களாகவும் ஏழைகள் ஏழைகளாவதும் உலகமயமாக்கலால் அல்ல என்பது என் கருத்து அது அவரவர்களின் குடும்ப மற்றும் மன ஆழங்களை பொருத்தது

    நன்றி
    இராஜராஜன்

    ReplyDelete
  11. நன்றி,லக்கி லுக்.

    ஒரு அடிப்படைவாதியின் தீவிரத்துடன் இக்கொள்கைகளை அவர் முன் வைக்கிறார். எதற்கெடுத்தாலும் உலகமயமாக்கல், தனியார்மயம், என்று பல இடங்களில் (சில சமயம் தேவையில்லாத இடங்களிலும் :) ) சொல்லி வருவதால், எதிர் வினை ஆற்றினேன்.

    ரத்த அழுத்தம் கூடுவது போல் இருந்தால் ஓடியே விடுவேன் :)

    ReplyDelete
  12. //ரத்த அழுத்தம் கூடுவது போல் இருந்தால் ஓடியே விடுவேன் :)//

    இது நல்ல புரிதலே. அதாவது முடிந்த வரை டைம்பாசுக்கு வாதம் புரிய வேண்டியது, பிறகு அதனால் எதிராளி மசியவில்லை என்றால் ரத்த அழுத்தம் அடையாது ஓடிவிட வேண்டியது. பலே. அப்படித்தான் இருக்க வேண்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. //வலையுலக எஸ்.வி.சேகர் யார் என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும். ஓ.கே.
    எனது சொந்த அபிப்பராயம் வேறாக உள்ளதே !!!!!!!!! :))))))))))//

    அதியமான் அவர்களே, இம்மாதிரியா நம் இருவர் எண்ணமும் ஒத்து போக வேண்டும்? ஆ க க க க.

    விஷயம் தெரியாமல் இருந்து நான் டோண்டு ராகவனாக இல்லாதிருந்தால், டோண்டுவும் நீங்களும் ஒரே ஆள்தான் என்பதை நானும் நம்பியிருப்பேன். :)

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    பின் குறிப்பு: பின்னூட்டத்தை எடுப்பதில் பிளாக்கர் சொதப்புவதாகத் தெரிகிறது. ஆகவே பை சான்ஸ் ஒரு முறைக்கு மேல் வரும் ஒரே பின்னூட்டதி எக்ஸ்ட்ரா காப்பிகளை ரிஜக்ட் செய்யவும்

    ReplyDelete
  14. //இது நல்ல புரிதலே. அதாவது முடிந்த வரை டைம்பாசுக்கு வாதம் புரிய வேண்டியது, பிறகு அதனால் எதிராளி மசியவில்லை என்றால் ரத்த அழுத்தம் அடையாது ஓடிவிட வேண்டியது. பலே. அப்படித்தான் இருக்க வேண்டும்.//

    இல்லேன்னா நீங்களே உருவாக்கின போலி டோண்டுவால நீங்களே அசிங்கபட்டது மாதிரி எல்லாரும் அசிங்கபட வேண்டியதுதான்.

    டோண்டுசார் உங்க முகத்திலே காக்கா ஆயி போனா நீங்க வேணா ஈசியா துடைச்சிக்கிட்டு போயிடுவிங்க. எல்லாரும் அப்படி இருப்பாங்களா? உட்டுத்தள்ளுங்க சாரு.

    ReplyDelete
  15. டோண்டு அதியமான் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் முதுகுசொறிந்து கொள்ளும் ஒட்டுண்ணிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த அசிங்கத்தை ஏன் சுந்தரின் நல்ல ஒரு பதிவில் வைத்துகொள்ள வேண்டும். தேவைபட்டால் நங்கநல்லூர் ஆஞ்சநேயர்கோயிலில் இருவரும் சந்தித்து ஒருவரையொருவர் எங்கு வேண்டுமானாலும் சொறிந்துகொள்ளட்டும். இந்த அரைகுறை மேதாவிகளால் ஞாநியிடமெல்லாம் ஓ பக்கங்களில் வலைப்பதிவர்கள் ஓத்தாமட்டை வாங்கவேண்டியிருக்கு. கருமம்.

    ReplyDelete
  16. ///விஷயம் தெரியாமல் இருந்து நான் டோண்டு ராகவனாக இல்லாதிருந்தால், டோண்டுவும் நீங்களும் ஒரே ஆள்தான் என்பதை நானும் நம்பியிருப்பேன். :)///

    நூலிழை வித்தியாசம் உண்டு,
    அதியமான் பதிவுகளில் கோபம் அதிகமாக இருக்கும்,
    உங்கள் பதிவுகளில் அறிவுரையும் , எச்சரிக்கை உணர்வுகளும் இருக்கும்
    இரண்டு பேரும் ஒரே கருத்துடையவர்கள் என்பதை நானும் ஒப்பு கொள்கிறேன்,

    வால்பையன்

    ReplyDelete
  17. மாற்றம் ஒன்றுதான் எப்போதும் மாறாதிருக்கக்கூடியது. "வந்துவிட்டது இதற்கு நாமென்ன செய்யப்போகிறோம்" என்ற கையறுநிலை இல்லை ஆனால் இது ஒரு பரிணாம வளர்ச்சி, தொழில் முனைவர்கள் தன் பிராந்தியத்தில் மட்டுமே தொழில் செய்துகொண்டு ஒரு குறுகிய வட்டத்துள் இருப்பதை விட அவர்கள் மற்ற பிராந்திய குழுமங்களோடு இணைந்து பணியாற்றும் போது தொழிலின் விரிவாக்கத்துக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . (instead of we have our own branch office in other area we are associating with other companies to do our work some time in our brand some time on the other parties brand depends on the product familiarity on the subject) இது போன்றது தான் உலகமயமாக்கலும், நாம் அதற்குப்பிறகு தான் முன்னேறத்தொடங்கினோம் என்றில்லாது நம் முன்னேற்றம் அதற்குப்பின் பலபடிகள் வேகமடைந்துள்ளது என்பது யாவரும் மறுக்க முடியாத உண்மை. இன்றைக்கு மடிக்கணணியும், ப்ராட்பேண்ட் இணைப்பும் இல்லாத நடுத்தரவர்க்க குடும்பத்தை நினைத்துப்பார்பது கூட சாத்தியமற்றுப்போகிறது. இந்த நிலமை நிச்சயமாய் 90 களுக்கு முன்பு இல்லை. 15 நிமடங்களில் கடக்கக்கூடிய இடத்தை வாகன நெரிசலில் கடக்க 50 நிமிடமாகிறது இதற்குக்காரணம் தனிமனித வாங்கும் திறன் உயர்ந்திருப்பதே ஒரு சிறுவீடு, மற்றும் கார் என்பதே ஒரு குறைந்த பட்ச எதிர்ப்பார்ப்பாகிவிட்டது இந்த நிலமை 90 களுக்கு முந்தி இல்லை, வங்கிச்சேமிப்பு, அடுத்த கட்டமாக வேல்யில் இருந்து ஓய்வெடுக்குமுன் ஒரு வீடு என்பதே குறிக்கோளாயிருந்தது.. ஆகவே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்... ஒரு ஆரோக்கியமான விவதத்திற்கு அடிகோலிய தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  18. டோண்டு ராகவன்,

    /உலகமயமாக்கல் நல்லதா கெடுதலா என்று பேசுவதே வெறும் அகாடெமிக் செய்கைதான். அது வந்துவிட்டது/

    ஒன்று வந்து விட்டது என்பதால் அதைப் பற்றிப் பேசக் கூடாது; வராததைப் பற்றிப் பேசினால், அது தான் வரவேயில்லையே பிறகேன் பேச்சு. நல்லாத் தான் இருக்கு :)

    சாதி ஏற்றத் தாழ்வுகள் தான் வந்து விட்டதே, பிறகேன் அதைப் பற்றிப் பேச்சு. நாம் எப்படி 'மேலேயே' இருந்து கொள்வது என்பது தான் பிரச்சனை என்றால், ஒன்றும் சொல்வதற்கில்லை. இது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே.

    விசைத் தறி, கணினிக்கும் உலகமயமாக்கலும் தொடர்பில்லை என நினைப்பதால் அதைத் தொடவில்லை. வேலை வாய்ப்பைப் பற்றிச் சிறிது நேரத்தில் எழுதுகிறேன்.

    நீங்கள், ஜெயகமல்கள், அதியமான்கள் முன்னேறிக் கொண்டே இருங்கள். மகிழ்ச்சி தான் (அஜிம் பிரேம்ஜிகள் ஆட்டம் கண்டிருக்கிறார்கள் இவர்கள் முன்னேற்றம் பார்த்து)

    ReplyDelete
  19. //ஒன்று வந்து விட்டது என்பதால் அதைப் பற்றிப் பேசக் கூடாது; வராததைப் பற்றிப் பேசினால், அது தான் வரவேயில்லையே பிறகேன் பேச்சு. நல்லாத் தான் இருக்கு :)//

    சரி பேசுங்கள், எங்களுக்கும் நேரம் கிடைத்து பொழுது போகவில்லை என்றால் பேசி விட்டு போகிறோம். இப்படித்தான் சுதந்திரம் வந்து ரொம்ப காலத்துக்கு பல பெரிசுகள் (பெரியார் உட்பட) வெள்ளைக்காரன் ஆட்சிதான் ஒசத்தின்னு பேசிக் கொண்டிருந்தார்கள். வேலை இல்லாதவர்கள் அவர்கள் பேசுவதை ஆவென்று திறந்த வாய் மூடாது கேட்டு கொண்டிருந்தார்கள்.

    இப்போதும் முந்தைய கிழக்கு ஜெர்மனியினர் சிலர் கம்யூனிசத்தை பற்றி நோஸ்டால்ஜியாவுடன் பேசித் திரிகிறார்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. உலகமயமாக்கல் வந்ததால் தான் டோண்டு சல்மாஅயூப்போடு எல்லாம் சகஜமாக பழகமுடிந்தது என்பது மட்டும் உண்மை.

    ReplyDelete
  21. உலகமயமாக்கலால் வேலை வாய்ப்புகள் பெருகி உள்ளதாகச் சிலர் சொல்லியிருப்பதால், அது குறித்து சில உதாரணங்கள்.

    1. பேரகன் பிரிண்டர்களை எல் & டி என்ற நிறுவனம் தயாரித்துக் கொண்டிருந்தது. அதற்குத் தேவையான பாகங்கள் மற்றும் ரா மெட்டீரியல்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தார்கள். பாகங்களுக்கு 20% சுங்க வரி என்றால், பிரிண்டர்களுக்கு 50%வரி இருந்தது 1996 வரை. பிறகு WTO obligations படி, பாகங்கள் / பிரிண்டர்கள் இரண்டிற்கும் சமமான வரி விதிக்கப் பட்டது. பிறகு யார் இந்தியாவில் தயாரிப்பார்கள்...? L & T stopped manufacture of printers as it became unviable. Many people lost their jobs.

    2. இப்போது எல்லா ஐடி பொருட்களுக்கு 0% சுங்க வரி (இதுவும் wto ஒப்பந்தப்படிதான்). அதனால் இப்போது எல்லா பொருட்களுமே இறக்குமதி செய்யப் படுகின்றன - as finished products.

    3. ஹூண்டாய் / ancilliary units பற்றிப் பேசுபவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பல சிறு / நடுத்தர (small & medium scale) நிறுவனங்களின் கதி பற்றிப் பேசுவார்களா.?

    உண்மையில் உலகமயமாக்கலால் 10 வேலைகள் உருவாகியிருந்தால் 30 வேலைகள் போயிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

    ReplyDelete
  22. அதியமான்,

    /உல‌க‌ம‌ய‌மாக்க‌ ஆதிகால‌த்தில் இருந்தே உள்ள‌து/

    அந்தக் காலத்துல வாணிபம் செய்திருக்கிறார்கள் அதனால் அப்பவே உலகமயமாக்கல் உண்டு என்றால், இப்போது கூட உலகமயமாக்கல் இல்லை என ஒருவர் சொல்லலாம் - ஏனெனில் still there are trade and tariff barriers. பிறகு பேசவே முடியாது.! இப்போது இருப்பதை வைத்து தான் இவ்விவாதமே.

    நகைமுரணெல்லாம் ஒன்றுமில்லை. அதைத்தான் பதிவில் சொல்லியிருந்தேன் - ஒரு சமூகத்தில் நாம் இயங்கினால், அதைப் பற்றிய பாதகமான அம்சங்களைப் பேசக் கூடாதா என்று. நீங்கள் பதில் சொல்லுங்கள்.

    hire and fire policy சரி என்று சொல்லி விட்டால் பிறகு பேச்சே இல்லை :)

    /த‌ர‌மான‌ பொருட்க‌ளை விஞ்ஞான‌ முறைப‌டி த‌யாரிப‌து தெரிந்த‌துதானே. சுமார் 25 ஆண்டுக‌ளுக்கு முன் ந‌ம‌து த‌னியார் ம‌ற்றும் அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளின் த‌ர‌ம் எப்ப‌டி இருந்த‌து, ஒப்பிடுங்க‌ளேன்./

    இதற்கும் உலகமயமாக்கலுக்கும் என்ன தொடர்பு. என்ன சொல்ல வருகிறீர்கள், MNCகளால் மட்டுமே இது போன்று செய்ய முடியுமென்றா.? Even in telecommunications, companies like Reliance, Tata, Airtel are operating. நீங்கள் ஏன் handsets பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்.?

    /தார‌ள‌ம‌ய‌மாக்க‌ல், உல‌க‌ம்ய‌மாக்க‌ல் ஏதும் இந்த‌ அள‌வு அனும‌திக்க‌ம‌ல் இருதிருந்தால், ஏழ்மை ம‌ற்றும் வாங்கும் திற‌ன் இன்னும் மோச‌மாகியிருக்காது என்று நிருபிக்க‌ முடியுமா /

    மேசையின் மேல் பேனா இருக்கிறது என்பதை நிரூபி என்றால் சரி. இல்லாத ஒன்றை எப்படி நிரூபிப்பது. நீங்கள் தான் உலகமயமாக்கலால் ஏழ்மை ஒழிந்திருக்கிறது என நிரூபிக்க வேண்டும்.!

    Balance of Payments என்றால் இப்போதும் சிக்கல் தான். இப்போதும் இறக்குமதி தான் ஏற்றுமதியை விட அதிகம் - சொல்லப் போனால் விகிதாசாரப் படி கொஞ்சம் கூடுதலாகவே.! இன்னொன்று, இவ்வளவு foreign exchange கையிருப்பு இருப்பதும் தவறென்று சிலர் சொல்கிறார்களே...

    /we would have been bank rupt in 1992 /

    இல்லை. மாற்றாக அப்போது வீசிய புயலில் சில நாடுகள் (உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்டவை) வீழ்ந்தன. நாமும் தாக்குப் பிடித்து நின்றோம். இதை என் நினைவிலிருந்து எழுதுகிறேன்.

    ReplyDelete
  23. தவறுதலாக ஒரு பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டேன். பார்த்தால் இன்னும் இரண்டு பின்னூட்டங்கள் வந்துள்ளன - டோண்டு, போலி டோண்டு என்று. முதல் பின்னூட்டத்தை அழிக்கிறேன், இப்போது வந்த பின்னூட்டங்களையும் நிராகரிக்கிறேன்.

    தயவு செய்து பதிவு தொடர்பாக விவாதம் இருக்கட்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  24. //தவறுதலாக ஒரு பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டேன். பார்த்தால் இன்னும் இரண்டு பின்னூட்டங்கள் வந்துள்ளன - டோண்டு, போலி டோண்டு என்று. முதல் பின்னூட்டத்தை அழிக்கிறேன், இப்போது வந்த பின்னூட்டங்களையும் நிராகரிக்கிறேன்.

    தயவு செய்து பதிவு தொடர்பாக விவாதம் இருக்கட்டுமென கேட்டுக் கொள்கிறேன்.//

    அப்படியென்றால் டோண்டு பதிவுக்கு சம்பந்தமில்லாமல் அதியமானுக்கு கொட்டை தாங்கி போட்ட பின்னூட்டத்தையும் அழித்துவிடுங்கள் :-)

    ReplyDelete
  25. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி, ஸ்ரீதர் நாராயணன். உங்கள் கருத்துகளோடு மாறுபடுகிறேன்.

    உலகமயமாக்கலால் விளையும் நன்மைகளாகப் பலர் சொல்வது (திரும்பத் திரும்ப) கார்கள், அலைபேசிகள்.! இவை அடிப்படைத் தேவைகளா என்ன.?

    வேலை வாய்ப்பு பற்றி மேலே சொல்லியிருக்கிறேன்.

    உலகமயமாதலால் ஒரு பெரிய தீமை என்னவெனில் அது உற்பத்தி செய்பவர்களை வெறும் வியாபாரிகளாக (traders) ஆக்குகிறது என்பது. இதனால் பல வேலை இழப்புகள் ஏற்படுகின்றன.

    WTO ஒப்பந்தப்படி நடப்பதால், பலருக்குச் சலுகைகள் தேவையின்றி வழங்குகிறார்கள். அதியமான் சொல்லியிருப்பது போல் சில காலங்களுக்கு அல்ல - stp / ehtp / sez போன்றவர்களுக்கு வரிகளே கிடையாது பத்து வருடங்களுக்கு - இது மேலும் நீட்டிக்கப்படலாம் (ஆனால் விவசாயிகளுக்குக் கொடுக்கும் இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டுமென்பார்கள் மத்திய தர வர்க்க பொருளாதார அறிவுஜீவிகள்.!).

    Gap between rich and poor மிக அதிகமாகிவிட்டது. இதற்கு நிறைய புள்ளிவிவரங்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன.

    இந்த ஏற்பாடு ஒப்பீட்டளவில் மிகச் சிலருக்கு மட்டுமே பயன்படுவதாக உள்ளதாலேயே அதை எதிர்க்கிறேன்.

    ReplyDelete
  26. மறுமொழியை பதிந்ததற்க்கு நன்றி. இங்கு ஒரு சம்பவத்தை முதலில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

    90-களில் அரசுத்துறையில் கணிணிகள் கொண்டு வருவதாக சில திட்டங்கள் தீட்டப்பட்டன. உடனே அரசு ஊழியர் யூனியன்கள் ஒன்றிணைந்து ஒரு தர்ணா நடத்தினார்கள். அண்ணா சாலையில் ஊர்வலம் கூட நடந்ததாக நினைவு. அவர்களின் வேண்டுகோள் என்ன தெரியுமா? 'அரசு நிர்வாகம் கணிணிகளை கொண்டு வரக்கூடாது. அதனால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படும்'. அன்று தங்களுடைய comfort zone-ல் இருந்து விலக மறுத்த அரசு ஊழியர்கள் இன்று கணிணியின் உபயோகத்தை உணர்ந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கத்தான் செய்கிறார்கள்.

    கார்கள், அலைபேசிகள் வெளியில் தெரியும் விளைவுகள். அரசு நிர்வாகத்தில் transperency, இணையம் போன்ற ஊடக தொடர்பு சாதனங்களால் பரந்துபட்டிருக்கும் அறிவு வளர்ச்சி, இதன் தொடர்ச்சியான 'செழுமைப்பட்ட' மனித வளம், பல்வேறு நாடுகளும் இந்திய மனித வளத்தை உபயோகபடுத்தி கொள்ள முன்வரும் நிலை, சீரான supply-chain management, இதனால் நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும் பொருட்கள் இப்படி பலவகையும் இருக்கதான் செய்கின்றன. அட இவ்வளவு ஏன், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்திய பொருட்கள் அத்தனையும் தங்குதடையின்றி கிடைக்கின்றன இப்பொழுது. 70-களில் இந்தியாவில் பால் பவுடர் டின்களை பதுக்கு வைத்து வியாபாரம் செய்தது தெரியுமா உங்களுக்கு? production ceiling உண்டு. அதற்கு மேல் உற்பத்தி செய்ய லைசன்சு, பெர்மிட் என்ற ஏகப்பட்ட controls. இதில் வருத்தப்பட வேண்டிய விசயம் என்னவென்றால். இந்த கட்டுபாடுகள் எதற்கு என்று தெரியாமலேயே இதை மேலும் மேலும் அதிகப் படுத்தி கொண்டு வந்தார்கள்.

    உணவு, நீர் போன்றவகையிலும் பல்வேறு நன்மைகள் நடந்திருக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் National Dairy Corporation-ல் நடக்கும் உழவர் சந்தையை உதாரணமாக சொல்லலாம். உழவர்கள் நேரடியாக தங்கள் உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு வருகிறார்கள். தொழில்நுட்ப சாதனங்களின் உதவியோடு மிகப்பெரிய ஏலம் விடும் சபை இருக்கிறது (1500 மெட்ரிக் டன் கொள்ளளவு என்று நினைவு). விற்பனையாளர்கள் அங்கு ஏலத்தில் பொருட்களை எடுக்கலாம். வாய் வார்த்தையாகவோ, குழுக்கள் மூலமாகவோ விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. விவசாயிகளும், விற்பணையாளர்களும் நேரடியாக பங்கு பெறுகிறார்கள். அதிகாரிகளின் தலையீடு கிடையாது. இது நெதர்லாந்தின் உழவர் சந்தையை முன்மாதிரியாக வைத்து வடிவமைக்கப்பட்டது.

    புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்போது, சிலருக்கு வேலைமாற்றம் ஏறபடும். அதை 'வேலை இழப்பு' என்று அர்த்தப் படுத்தி கொள்ள முடியாது. வங்கித் துறையில் 10 வருடங்கள் முன்பாக இருந்த வேலை முறை இப்பொழுது இல்லை. ATM வந்து விட்டது எல்லா இடங்களிலும். அதனால் வங்கிகளில் manual tellers இல்லையா என்ன? இருக்கிறார்கள். இன்னும் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குகிறார்கள்.

    உற்பத்தி செய்பவர்களை வியாபாரியாக ஆக்குவது என்பது என்ன மாதிரியான வாதம் என்று தெரியவில்லை. உலகமயமாக்குதலின் ஒரு பகுதியாக outsourcing என்னும் strategy பல இடங்களில் கடைபிடிக்கபடுகின்றன. உதாரணத்திற்க்கு நான் ஒரு புத்தகம் எழுதினால் அதை பதிப்பிக்க, அதை சந்தைபடுத்த, அதைப் பற்றி மக்களிடம் கொண்டு செல்ல specially skilled மக்கள் கிடைக்கின்றனர். இதனால் நான் எனது புத்தகம் எழுதும் தொழிலை மட்டும் கவணித்து திறம்பட மேம்பட செய்ய முடிகின்றது.

    வயதான தந்தை, தனது மகனின் எல்லாவித முயற்சிகளையுமே ஒரு pessimistic கண்ணோட்டதில் பார்ப்பார். அப்படிதான் தோன்றுகிறது இதை எதிர்ப்பவர்களின் வாதமும்.

    இந்த மாதிரி நிறையவே பேசிக்கொண்டு போகலாம். நேரமின்மையால் தற்பொழுது விரிவாக விவாதம் செய்ய இயலவில்லை. சந்தர்ப்பம் ஏற்பட்டால் பின்னர் வருகின்றேன். மிக்க நன்றி!

    ReplyDelete
  27. முதலில் ஒன்றை தெளிவாகக் கூறிவிட்டு பின்னர் எனது உரையாடலைத் துவங்குகிறேன். "உலமயமாக்கல்" என்பதை கண்மூடித்தனமாக எதிர்ப்பது மற்றும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது இரண்டிலிருந்துமே நான் முரண்படுகிறேன்.

    வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி - இது யாருக்கான வளர்ச்சி?

    ஆஹா, எல்லாருடைய கைகளிலும் அலைபேசி அலைபாய்கிறது. ஆனால், இந்தியாவில் என்ன அலைபேசித் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது?

    நீங்களும் நானும், உரையாடிக்கொண்டிருக்கிறோம், கணினியில், நடுத்தர வர்க்கத்தினரெல்லாம் மடிக்கணினியில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் என்ன கணினித் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது?

    இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது முழுவதுமாக உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் எவை? அவற்றின் உலகத் தரம் மற்றும் அதனால் அம்மென்பொருள் நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் வரும் வருவாய் எவ்வளவு? உலக அளவில் இருக்கும் சில நிறுவனங்களுக்கான "project" களைப் பற்றிப் பேசவில்லை, இந்தியாவில் உருவாக்கப்பட்ட "softwares" மற்றும் "operating systems" என்னென்ன?


    ஆகச்சிறந்த ஜாகுவார் வந்துவிட்டது இந்தியாவிற்கு. எங்கள் தெருவிலிருந்து பக்கத்து தெருவிற்கு போகுமளவுக்கு விமானப்போக்குவரத்து பெருகிவிட்டது? இதனால், எங்கள் இளைஞர்களும் இளைஞிகளும் எத்தனை பேர் மேகக்கூட்டத்திற்கிடையிலேயே பணிபுரிகின்றனர் தெரியுமா? ஆஹா, அற்புதம்..

    ஆனால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் எவ்வளவு?
    வானூர்த்தி எந்திரங்கள் எங்கு வடிவமைக்கப்படுகின்றன, எங்கு தயாரிக்கப்படுகின்றன? அவற்றின் தொழில்நுட்பச் சூட்சுமங்களில் இந்தியா உலகத்தரத்தில் எந்த நிலையில் இருக்கிறது.

    மூன்றாம் உலக நாடுகள் அனைத்தையும், முழுக்க முழுக்க consumer society ஆக மாற்றி அவற்றையும் அம்மக்களையும் சிறிது சிறிதாக "innovation space" ல் இருந்து விலகியிருக்க வேண்டிய நிர்பந்தந்தை உருவாக்கியிருப்பது புலனாகவில்லையா? ஏனேனில் இங்கே விவாதிக்கப்படும் சார்புடைய வளர்ச்சி என்பது நமது தேவையினடிப்படையில் நாம் உருவாக்கிய வளர்ச்சியல்ல. நமக்கு திணிக்கப்பட்ட வளர்ச்சி.


    தமது தேவைக்கு மீறிய பொருள் உற்பத்தியையும் தொழில்நுட்பத்தையும் வளர்த்துக் கொண்டு அவற்றையே மூன்றாம் உலக நாடுகளின் தேவைகளாக மாற்றி பின்னர் அவற்றை அவர்களின் அத்தியாவசியமாக மாற்றிவிட்டு நிரந்தரமாகக் "கையேந்தி பவன்" நடத்துவது. இதுதான் மேற்குலகைப் பொருத்தவரையில் உலகமயமாக்கல்.

    உலகமயமாக்கல் பற்றி பேசும் போதெல்லாம் முன்னிறுத்தப்படுவது அலைபேசிகள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கணினிகள் மட்டுமே.

    அவை முன்னிறுத்தப்படுவதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று இந்தியாவில் பெரும்பான்மையான consumers நடுத்தர வர்க்கம் என்பதால். மேலும், அவற்றை அத்தியாவசியாமாக மாற்றிவிட்டால், அது இல்லாத ஒரு நிலையை கற்பனை செய்தால், இவ்வுலகமே நின்று போய்விடும் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுவது. இந்நடுக்கம் ஏற்படுத்தப்படுவதன் நோக்கமே புதியவற்றைப் பற்றிய சிந்தனை தோன்றுவது பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தினரின் தேவையினாலேயே. அவர்களை அச்சிந்தனையிலிருந்து பெரிதும் விலக்கிவிட்டால் பிறகு அவர்கள் கையேந்தி பவனின் நிரந்தரக் consumer.

    ஆனால், இந்நடுத்தர வர்க்கம் பயன்படுத்தும் கார்களின் கட்டுமானத்திற்கும், நகரப்பேருந்திற்கிணையாகப் பெருகியிருக்கும் வானூர்திகளுக்குமான கட்டுமான உலோகங்கள் எங்கிருந்து வருகின்றன.

    உதாரணமாக, அலுமினியம் தாதுக்களை வெட்டியெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்தாயிற்று.

    இயற்கை வளம்மிகுந்த மழைக்காடுகளையும் மலைகளில் சிலவற்றையும் ஏற்கனவே மற்குவியல்களாக மாற்றியாகிவிட்டது. அங்கிருந்த மக்கள் என்னவாயினர்? அவர்களுக்கெல்லாம் அத்தாதுச் சுரங்கங்களிலேயே பன்னாட்டு நிறுவனத்தினரால் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் இப்போது சுபிட்சமாக வாழ்கிறார்கள்.

    அதாவது, பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மக்கள் கூட்டத்தையே வாழவைத்துக் கொண்டிருந்த இயற்கை வளத்தைச் சுரண்டிவிட்டு ஒரு தலைமுறைக்கு மட்டும் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை தருவது.

    எப்படியோ வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்துவிட்டது. இல்லாவிட்டால் அவர்களெல்லாம் காடுகளின் முக்கத்தில் அமர்ந்து வெட்டிக்கதை பேசியிருப்பார்கள். அல்லது வேலைவாய்ப்பு நிறுவனத்திடமிருந்து மடல் வருகிறதா என்று எதிர்பார்த்து அமர்ந்து கொண்டே மல்லாந்து படுத்திருப்பார்கள்.

    நாங்கள் கையாலாகாதவர்கள் என்று இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவதற்கும் ஒரு பெருந்தன்மை வேண்டும்.

    ஒரு சமூகம் தன்னை வளர்த்துக் கொள்வதும், புதியவற்றைக் கண்டுபிடிப்பதும் பெரும்பாலும் தேவையினடிப்படையிலேயே நிகழும் ஒன்று.

    நம்மிடம் மனித வளம் மிகுந்திருந்தது, அதனால், நம் வீட்டுச் சாக்கடையைச் சுத்தம் செய்ய, துணிகளைத் துவைக்க என்று ஒவ்வொன்றிர்க்கும் ஒருவரை வைத்துக் கொள்ளமுடிந்தது, மேலும் அவன் அதற்காகத்தான் பிறந்தான் என்றும் சாதித்துக் கொள்ளமுடிந்தது. அதற்கான எந்திரங்கள் நமக்கு தேவைகளாக இருக்கவில்லை. ஆனால்,
    மேற்குலகிற்கு, இவற்றைச் செய்ய siemens களும், whirlpool களும் தேவைப்பட்டன. இப்போது, அவை நமக்கும் கிடைக்கின்றன, ஏன்?, அவை அங்கே அளவுக்கதிகாமகப் பெருக்கப்பட்டுவிட்டன.

    அதனால், உயிருள்ள ஒரு பொருளுக்கு பதிலாக, உயிரற்ற வேறோரு பணியாளனை வாங்கிக் கொள்ளமுடிகிறது. நமது அத்தியாவசியத் தேவையாக இல்லாத போது நுழைந்தவை, நமது அத்தியாவசியங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இதற்கு முன்னிருந்த அத்தியாவசிய அநாவசியப்பணியாளன், தற்போது முழுவதுமாக அநாவசியாமாகிப் போய்விட்டான். ஏனெனில், மாற்றம் ஒன்றுதான் மாறாதது, நாமெல்லாம் மாறிக்கொண்டேயிருக்க வேண்டும்.

    ஏனெனில், மடிக்கனினியில் road rash விளையாடாமல் போயிருந்தால், நமது குழந்தைகளுக்கெல்லாம், விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலைகளெல்லாம் உருவாகிவிடும் உலகமயத்தால் எல்லோர் கையிலும் கணினியில்லையென்றால்.


    //பல நாடுகளிலும் அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தொடங்கப்படும் நிறுவனங்கள் ஒரு குடையின் கீழ் செயல்படுவது. //

    "அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு" என்பதில் இருக்கும் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

    ஏனெனில், தொழிற்சாலைக் கழிவுநீரை ஆற்றில் கரைத்து பல உயிரனங்களைப் பலி கொடுத்தால் கூட இங்கே சட்டதிட்டங்கள் பாயாது. ஒரு சிறு கட்டச் செய்தியாக ஒருநாள் வெளியிடப்படும். ஆனால், அரசியல் நேர்மையின்மை என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல சுதேசித் தொழிற்சாலைகளுக்கும் இது சாதகமாகப் பொருந்தும் என்பது ஏற்புடையதே.

    ஆனால், இவ்வரசியல் நேர்மையின்மையினால் தான் அவை இந்தியா போன்ற ஆசிய நாடுகளைக் குறிவைக்கின்றன, என்பதையும் புறந்தள்ள முடியாது.

    உதாரணமாக
    1. சுற்றுச்சூழல் விதிகளை ஐரோப்பிய, அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு இணையாக இந்தியாவும் கடைபிடிக்கும்.

    2. மிகக்கடுமையாக குழந்தைத்
    தொழிலாளர்கள் நியமனத்துக்கெதிரான சட்டதிட்டங்களைக் கடைபிடிக்கும்.

    3. நமது தேசிய இயற்கை வளங்களை உலகமயமாக்கிப் பன்னாட்டு நிறுவங்கள் சுரண்டுவதற்கு அனுமதிக்க முடியாது.

    என்று இம்மூன்று அறிவிப்புகளை மூன்றாம் உலக நாடுகள் (இந்தியா மட்டுமாவது) செய்தால் போதும் அப்போதும் தெரிந்து போகும் ஆகச் சிறந்த வளர்ச்சிகளும் மாற்றங்களும் என்னவாகும் என்று.

    இன்னும் ஒரு மாததிற்கு நான் தற்காலிகமாக இறக்கயிருப்பதால் (உலகமயமாக்கப்பட்ட இக்கணினியுலகிலிருந்து விலகயிருப்பதால்) உரையாடலில் தொடர்ந்து பங்குகொள்ள முடியாது. தொடருங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. நீண்ட பின்னூட்டமிட்ட வெட்டி அனானிதான் மீண்டும்.

    உலகமயப்படுத்தப்பட்ட மாற்றத்தில் உழலுபவர்களுக்கு,

    வெட்டியாகப் பொழுது போகாமல் ஒருவர் இங்கே ஒரு academic discussion செய்திருக்கிறார் உங்களுக்கு அவகாசமிருந்தால் உங்கள் windows வழியே எட்டிப்பார்த்துவிட்டுப் போங்கள்.

    http://dailytamilmail.blogspot.com/2008/05/blog-post.html

    ReplyDelete
  29. //உதாரணமாக
    1. சுற்றுச்சூழல் விதிகளை ஐரோப்பிய, அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு இணையாக இந்தியாவும் கடைபிடிக்கும்.
    //

    ஏன் ஐரோப்பிய நாடுகள் மட்டும்? சீனா ஒரு சிறந்த முன்னுதாரணம்.

    //2. மிகக்கடுமையாக குழந்தைத்
    தொழிலாளர்கள் நியமனத்துக்கெதிரான சட்டதிட்டங்களைக் கடைபிடிக்கும்.//

    குழந்தை தொழிலாளர்களை exploit பண்ணுவது உள்ளூர் சிறு தொழிலதிபர்களே. பன்னாட்டு நிறுவனங்கள் நினைத்தால் கூட இந்த மாதிரி மனிதவள குளறுபடிகள் செய்ய முடியாது. Branding பாதிக்கபடும் என்ற பயம் இருக்கும்.

    //3. நமது தேசிய இயற்கை வளங்களை உலகமயமாக்கிப் பன்னாட்டு நிறுவங்கள் சுரண்டுவதற்கு அனுமதிக்க முடியாது.
    //

    இயற்கை வளத்தை சுரண்டுவது பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் என்பது என்ன வாதம்?

    மணல் குவாரி ஊழல்கள் செய்வது யார்? தோல் பதனீட்டு தொழிற்சாலைகள் கழிவுகளள ஆற்றில் கலக்கவிடுவது யார்? கூவத்தை கெடுத்தது யார்? உள்ளூர் தொழிலதிபர்களும் அதிகாரிகளும்தானே? இங்கிருக்கும் பல வைகுண்டராஜன்களை விட யுனிலீவர் நிறுவனத்திற்க்கு சுற்று சூழல் பற்றிய அக்கறை அதிகமாகவே இருக்கிறது. மிக அதிகமாகவே.

    இங்கு நான் மீண்டும் மீண்டும் சொல்வது, உலகமயமாக்களினால் உண்டாகும் புதிய வாய்ப்புககளை எல்லா அடுக்குகளிலும் பரவலாக்குவது முக்கியம்.

    உலகமயமாக்கலினால் சமச்சீரான வளர்ச்சியை பெறுதல் முடியாததல்ல.

    ReplyDelete
  30. நண்பர் ஸ்ரீதர் நாயாரணன், நன்றி. நீங்கள் குறிப்பிடும் கணிணி, அரசு ஊழியர், 1990களுக்கு முன்பிருந்த லைசன்ஸ் ராஜ், கர்நாடக உழவர் சந்தை போன்றவை இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பிற்கு நேரடி தொடர்பில்லாதவை என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.

    வேலை வாய்ப்பு தொடர்பாக உற்பத்தி x வியாபரம் சுட்டினேன்; உற்பத்தி செய்கையில் ஒப்பீட்டளவில் அதிக வேலை வாய்ப்புகள் இருக்குமென்ற பொருளில்.

    என்னங்க இது, கோகோ கோலா நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்றால் உள்ளூர் நிறுவனங்கள் தண்ணீர் மாசுபடுத்துவதில் இறங்கலையா என எதிர் கேள்வி கேட்டால் எப்படி.?

    நான் முன் வைத்திருக்கும் தீமைகள் நடக்குதா இல்லையா உலகமயமாக்கலால்.?

    ReplyDelete
  31. //என்னங்க இது, கோகோ கோலா நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்றால் உள்ளூர் நிறுவனங்கள் தண்ணீர் மாசுபடுத்துவதில் இறங்கலையா என எதிர் கேள்வி கேட்டால் எப்படி.?//

    உலமயமாக்களினாலா சுற்று சூழல் மாசுபடுகிறது? கோகோ கோலா வந்ததாலா கூவம் நதி கெட்டுப் போனது? தாமிரபரணியை தாரை வார்த்து கொடுத்ததாக குற்றஞ்சாட்டுகிறோமே, இந்தியர்களுக்கு சொந்தமான எத்தனை மினரல் வாட்டர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன?

    கோகோ கோலோவா, சுற்றுசூழல் மாசுகட்டுபாட்டு வாரியத்தை நடத்துகிறது?

    உலமயமாக்கல் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. அரசாங்கமும் அதிகாரிகளும் அவர்கள் கடமையை ஒழுங்காக செய்தால் இந்த வாய்ப்புகளினால பெரிதளவு முன்னேற்றம் உண்டுதான்.

    கார்களும், அலைபேசிகளும் மாதிரிதான் உழவர் சந்தைகளும். பரவலாக்கினால் பல்வேறு வகையில் வளர்ச்சி நிச்சயம்.

    ஒரு மாற்று பார்வையை வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எழுதினேன். மற்றபடி கண்மூடித்தனமான வாதமாக வைக்கும் எண்ணம் இல்லை. அவ்வாறு இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  32. May 23, 2008 2:49 AM அன்று பின்னூட்டமிட்ட அனானியின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

    ReplyDelete
  33. //அதாவது, பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மக்கள் கூட்டத்தையே வாழவைத்துக் கொண்டிருந்த இயற்கை வளத்தைச் சுரண்டிவிட்டு ஒரு தலைமுறைக்கு மட்டும் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை தருவது.//

    profound.

    ReplyDelete
  34. //ஒரு அடிப்படைவாதியின் தீவிரத்துடன் இக்கொள்கைகளை அவர் முன் வைக்கிறார். எதற்கெடுத்தாலும் உலகமயமாக்கல், தனியார்மயம், என்று பல இடங்களில் (சில சமயம் தேவையில்லாத இடங்களிலும் ) சொல்லி வருவதால், எதிர் வினை ஆற்றினேன்.

    ரத்த அழுத்தம் கூடுவது போல் இருந்தால் ஓடியே விடுவேன்/////

    No Sundar. Our views are not fundamentalistic. Only communists and religious fanatics can be called fundamentalists, in the sense they refuse to accept dissent and alternative views.

    We have plenty of laws regarding pollution control and environmental protection. all on paper. Due to our corrupt set up (includes govt, private and all other players), there is rampant abuse. But in more enlightened and responsible democracies which too participate in globalisation, there is very less such misuse and evasion of laws. (say like in Finland or Japan). Blaming globalisation for our corrupt ways is not correct.

    This LPG has indeed created millions of new jobs and huge tax revenue. otherwise there would be terrible unrest and chaos with a 1.1 billion population base.

    ///உலகமயமாக்கல் பற்றி பேசும் போதெல்லாம் முன்னிறுத்தப்படுவது அலைபேசிகள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கணினிகள் மட்டுமே.////

    No Annoy. they are the most visible elements. Do you know about clothing and garments, esp for the poor, when compared to 70s.
    Now price of dress is so cheap that a poor labourer can cloth himself/herself with his one day's wages. You haven't seen the kandhal clothes of the poor in 70s. Reliance (for all its crimes) revolutionised the clothing indsutry with its cheap polysters.
    and now more competition and better and cheaper products than ever before. ask old timers or see old films like Parasakthi..

    Pls comapre the standards and data in ALL fields like water pumps, pipes for agriculture, domestic and industry, etc. and what about this HUGE tax revenue that the govt gets thru all these new economic activities. Do you know about the infamous term 'Hindu rate of growth' of 60s and 70s ?

    Sunder,

    Can you suggest workable alternatives if you 'oppose' globalisation ? say, back to license raaj. a closed and protected economy and import substitution economic model with re-distributive tax regime ?
    or what other alternative. Can you be specific ? So far you had not refuted the data about tax revenue and total new employment generation and availability of new and cheap products and services.

    also see :

    http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

    (sorry for this english ; due to mu slow tamil typing speed)

    ReplyDelete
  35. சுந்தர்,

    இங்கே உலகமயமாக்கலுக்கு ஆதரவு ஜல்லி அடிக்கும் இதேக் கூட்டம்தான் ஈரான்-இந்தியா எரிவாயுக் குழாய் திட்டத்தை எதிர்க்கும். ஆகவே உலகமயமாக்கல் என்பது அமெரிக்க/ஐரோப்பிய மயமாக்கல் என்றிருக்கும் வரைதான் இவர்களது ஆதரவு ஜல்லி எல்லாம். அன்னிய முதலீட்டை ஆதரிப்பது அவர்களது நிலைப்பாடு அல்ல. அன்னிய முதலீடு அமெரிக்கா/ஐரோப்பாவிலிருந்து வந்தால் மட்டும்தான் ஆதரவு என்பதுதான் இவர்கள் நிலைப்பாடு.

    ReplyDelete
  36. அதியமான், நீங்கள் கொடுத்த தொடுப்பைப் படிக்கப் போய், உங்களுடைய இந்தப் பதிவைப் படித்தேன் :

    http://athiyaman.blogspot.com/2007/05/question-about-economic-polices-in.html

    மனதிற்கு மிகச் சங்கடமாயிருக்கிறது. ஒரு மிகப் பெரிய மனிதக் கூட்டத்தின் துயரைக் கூட உங்களால் இப்படித் திசை திருப்ப முடியுமெனில், என்ன சொல்ல.? இனி உங்களுடன் பேசிப் பயனில்லை.

    நான் இதை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  37. அதியமான் அப்பதிவில் கேட்டது:
    //There is very little data available about the
    business profits and losses of Union Carbide India
    Ltd and its Bhopal plant. Declining sales and
    profits were reported. Was the plant under
    utilised ? Suppose if exit and labour policy
    in India were similar to USA in 1984, could the
    tragedy been prevented ? Was UCIL unable to close
    or sell its assets or wind up its unviable
    operations in India due to legal and economic
    polices followed in 1980s ?

    Was the Bhopal plant making losses and unviable,
    but forced to operate due to polices of government ?
    Was UCIL prevented from closing or liquaditing
    or selling its assets by socialistic polices of
    govt of India at that time (before 1984)?//

    உங்கள் எதிர்வினை, இப்பதிவில்:
    //மனதிற்கு மிகச் சங்கடமாயிருக்கிறது. ஒரு மிகப் பெரிய மனிதக் கூட்டத்தின் துயரைக் கூட உங்களால் இப்படித் திசை திருப்ப முடியுமெனில், என்ன சொல்ல.?//
    இதில் என்ன சங்கடம் வரமுடியும்? அதியமான் கேட்ட கேள்விகளில் என்ன தவறு கண்டீர்கள்? போபால் நிகழ்ச்சி நடந்தபோது பலர் இது பற்றி எழுதினர். அத்தனை நாட்கள் பாதுகாப்பு எல்லாவற்றையும் ஆண்டுதோறும் அவதானித்து சான்றிதழ் தர நியமிக்கப்பட்ட மத்தியப் பிரதேச அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. யூனியன் கார்பைட் மேல் வழக்கு தொடர்ந்தது நியாயமே. அதே சமயம் மத்தியப் பிரதேச அரசும் யூனியன் கார்பைடுக்கு பக்கத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியிருக்கும். அதை செய்யவில்லையே. இது ஊழல் இல்லாது வேறு என்ன?

    அதியமானின் அதே பதிவில் வந்த ஒரே பின்னூட்டத்தையும் பார்த்து விடுங்கள். போலீஸ் அதிகாரி கேள்விகளிலிருந்து எப்படி ஜகா வாங்கினார் என்பதையும் பாருங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. சுந்தர் நல்லதொரு பயனுளள் விவாதத்தை முன்னெடுத்துள்ளீர்கள். குறிப்பகா உங்களது வாதம் அணாணியின் வாதங்கள் இதில் பயனுள்ள பல தகவலைத் தருகின்றன..

    முக்கியமாக உலகமயமாக்கல் ஏற்படுத்தும் பண்பாட்டு விளைவுகள் பற்றி யாருமே பேசவேயில்லையே. அதுவும் இதனுடன் இனைத்துப் பேசப்பட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  39. நன்றி, கிருத்திகா.

    நன்றி, அனானி. நீங்கள் சில முக்கியமான புள்ளிகளைத் தொட்டிருக்கிறீர்கள்.

    நன்றி, வாய்ஸ் ஆன் விங்ஸ். உங்கள் பார்வைகளை வழிமொழிகிறேன்.

    நன்றி, உறையூர்க்காரன்.

    நன்றி, ஜமாலன்.

    ReplyDelete
  40. டோண்டு ராகவன்,

    மாபெரும் மக்கள் அழிவைக் கூட லாப நட்ட விவகாரம் / லைசன்ஸ் ராஜ் / ஊழல் எனச் சுருக்கும் அவரது பார்வையே என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது - அப்படிப் பட்ட ஒரு முடிவுக்கு வருவதற்கு எந்த முகாந்திரமுமில்லை; யூனியன் கார்பைட் சொல்லாததைக் கூட அதியமான் ‘கண்டுபிடித்து'க் கேட்கிறார். இதிலிருந்தே அவர் யூனியன் கார்பைட் சார்ப்பாகவே இருக்கிறார் என்பது தெரியவில்லையா.?

    (வாசகர்கள் அப்பதிவைப் படித்து ஒரு முடிவுக்கு வரக் கேட்டுக் கொள்கிறேன்).

    ஆனால் நீங்கள் இதில் ஒன்றும் தவறில்லை என்பதில் ஆச்சரியமில்லை :) உங்களிடமும் பேச ஒன்றுமில்லை. நீங்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பீர்கள் என்பது புரிகிறது.

    நன்றி.

    ReplyDelete
  41. சுந்தர்,

    போபாலில் நடந்த கொடிமையின் மூலக் காரணாத்தை அறிய எனது தேடலின் விளைவான‌ ஒரு மடலே அது. யூனியன் கார்பைட் நிறுவந்த்தின் தவறுகளை (மாபேரும் தவறுகள் அவை) நியாப்படுத்த முயற்ச்சிக்கவில்லை. தவறு நம் அரசின் மீதும் அபோதிருந்த கட்டுபாடுகளும் காரணிகளா என்று ஆராய முற்பட்டேன். உண்மையை தேடுவது அடிப்படையான‌ ஆய்வுகளுக்கு வழிவ‌குகும்தானே ? அந்த சுட்டியில் வ‌ந்த ஒரே எதிர்வினையையும் படிக்கவும். நஸ்ட்டதில் இயங்கும் தொழிற்சாலைகளை இங்கு முட பல பத்தாண்டுகள் ஆகின்றன. No rational exit policy for industires. see the conditions of Binny, Stad motors, Mumbai mills, where there is opaque corruption and creditors and workers are denied their dues for decades, etc..
    அதை பற்றிய விவாதம்...

    ////சுந்தர் நல்லதொரு பயனுளள் விவாதத்தை முன்னெடுத்துள்ளீர்கள். குறிப்பகா உங்களது வாதம் அணாணியின் வாதங்கள் இதில் பயனுள்ள பல தகவலைத் தருகின்றன..

    முக்கியமாக உலகமயமாக்கல் ஏற்படுத்தும் பண்பாட்டு விளைவுகள் பற்றி யாருமே பேசவேயில்லையே. அதுவும் இதனுடன் இனைத்துப் பேசப்பட வேண்டிய ஒன்று.//////

    ஜ‌மால‌ன்,

    அடிப்ப‌டை ஜ‌ன‌னாய‌க‌ம், அடிப்ப‌டை உரிமைக‌ள், பெண் உரிமைக‌ள், ம‌த‌சாற்ப‌ற்ற அர‌சு ம‌ட்டும் ச‌ட்ட‌ங்க‌ள், பாராளும‌ன்ற‌ ஜ‌ன‌னாய‌க‌ம், ப‌த்திரிக்கை சுத‌ந்திர‌ம், போன்ற‌வை கூட‌ உல‌க‌ ம‌ய‌காக்க‌லின் ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ங்க‌ளில் அய்ரோப்பாவிலிருந்து ப‌ர‌விய‌வைதாம். இது போன்ற‌ ம‌திப்பீடுக‌ளை ப‌ற்றி பேச‌லாமே ?

    ReplyDelete
  42. //உறையூர்காரன் said...
    சுந்தர்,

    இங்கே உலகமயமாக்கலுக்கு ஆதரவு ஜல்லி அடிக்கும் இதேக் கூட்டம்தான் ஈரான்-இந்தியா எரிவாயுக் குழாய் திட்டத்தை எதிர்க்கும். ஆகவே உலகமயமாக்கல் என்பது அமெரிக்க/ஐரோப்பிய மயமாக்கல் என்றிருக்கும் வரைதான் இவர்களது ஆதரவு ஜல்லி எல்லாம். அன்னிய முதலீட்டை ஆதரிப்பது அவர்களது நிலைப்பாடு அல்ல. அன்னிய முதலீடு அமெரிக்கா/ஐரோப்பாவிலிருந்து வந்தால் மட்டும்தான் ஆதரவு என்பதுதான் இவர்கள் நிலைப்பாடு.///

    Very very wrong arguments. How do you say, we oppose Hyndai company and other Korean, Japanese and companies from S.America, Russia,etc ?
    Gross genralisations and .....

    ReplyDelete
  43. நண்பர் அதியமானுக்கு..

    நான் இந்த ஆட்டத்திற்கு வரல .. :)

    பொதுவாக இந்த விவாதத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது. உலகமயமாக்கல் என்பது ஒரு கருத்தாக்கம். அதுவும், ஐரோப்பியமமயாதல் அல்லது அமேரிக்கமயமாதல் என்பதும் வேறுவேறு. நான் நீளக்கால்சராய் அணிகிறேன் என்பது உலகமயமாதல் கிடையாது என்பது புரிந்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் அலைபேசியோ இணையமோ அதன் ஒரு விளைவுதான். சீனியர் புஸ் அல்லது ரீகன் சரியாக நினைவில் இல்லை இவர்களில் ஒருவர்தான் முதன் முதலாக புதிய உலக ஒழுங்கு (new world order) மற்றும் உலகக் கிராமம் (global village) பற்றிப் பேசத் துவங்கினார்கள். அப்புறம் டங்கல் திட்டம், காட் ஒப்பந்தம், WTO என அது விரிந்தது. 1980-90 களில் பேச்சுக் களத்தில் இறக்கப்பட்ட இவைகள் பல நடைமுறை மாநாடுகள் திருத்தங்கள் போராட்டங்கள் வழியாக இன்று உலகமயமாதல் என்கிற கருத்து நிலையை அடைந்துள்ளது. அதனால் கொலம்பஸ் வந்த காலங்களிலிருந்த இதனை கணக்கிட முடியாது.

    அப்புறம் முதலாளியம் என்பதே ஒரு உலகத்தன்மை கொண்டதுதான். காரணம் சரக்கு உற்பத்தி மற்றும் சந்தையின் தேவை. பிரச்சனை உலயமயமாதல் என்பது நுகர்வுப் பண்பாட்டுடன் பிணைக்கப்பட்டு தெசிய உற்பத்திக்கு ஒரு சவலாக மாறி உள்ளது. தேசிய முதலாளிகள் உலக முதலாளிகளாக மாறியதைப் போலவே தேசிய ஏழைகள் உலக ஏழைகளாக மாற்றப் படுகிறார்கள். அடிப்படையில் வளர்ச்சிகள் என்பதன் பிண்ணனி இதுதான். சரி இந்த வாய்ப்பு வசதிகள் இல்லாவிட்டால் இறந்துவிடுவோமா என்றால். இன்றைக்கு இறந்துதான் போவோம். காரணம் அதுதான் உலகமயமாதலின் வெற்றி. மனிதர்கள நுகர்விற்காக மட்டுமே உயர்வாழ வைக்க விரும்புகிறது உலகமயமாதலும் அதன் பின் உள்ள பண்ணாட்டு மூலதனம் மற்றும் முதலாளிகள்.

    டாட்டா உலக நிறுவனத்தை வாங்கி அந்த நாட்டுத் தொழிலாளியைச் சுரண்டுவது என்பது பேரளவில் தேசப்பற்றாகவோ அல்லது தேசியவெறியாகவோதான் இருக்கமே ஒழிய அதனால் “வயிற்றிற்கு சோரிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்” என்கிற பாரதியின் கனவை கானுபவர் எண்ணிக்கைதான் அதிகமாகும். அமர்த்தியா சென் சொல்வதுபோல “மூன்றாம் உலக நாடுகளில் மனிதனின் திறமையை வளர்ப்பதற்கானதாக இருக்க வேண்டுமே ஒழிய நாட்டின் தேசிய வருமானத்தை அதிகப்படுத்தவதால் பயனில்லை.“ தேசிய வருமானம் என்பது அடிப்படை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியருக்கிறதா? என்பதை ஆராய வேண்டும்.

    1990-ற்குப் பிறகான உலகம் பற்றியததாக உலகமயமாக்கலின் விளைவுகள் கணக்கிடப் படவேண்டும். உலகமயமாதலின் மிகப்பெரும் கேடே அது மேலிருந்து திணிக்கப்படுகிறது. உள்ளுர் முதலாளிகளை உலக முதலாளிகளாக்குகிறது. உள்ளுர் மனிதனில் ஒரு மேட்டடிமையினரை உலக மணிதர்களாக ஆக்கி உள்ளது. உண்மையில் உயகமயமாதல் என்பது கீழிருந்த உருவாகி வளரவேண்டும். உலக மனிதனாக ஒரு தனிமனிதனின் உணர்வு மாற வேண்டும். உலக மனிதனின் துயர்களை தனதானதாக உணரவேண்டும். இன்றைய உலகமயமாதல் என்பது அடிப்படையில ஒரு நுகர்வு வெறிதான். நண்டு கதையாக சக நண்டின் காலை இழுத்தவிட்டு கரையேறத்துடிக்கும் வெறிதான் கட்டப்பட்டள்ளது.

    உலகமயமாதலில் சில சாதகங்கள் உண்டு, ஆனால் பல பாதகங்கள் உள்ளன. தேச அரசை ஒழிப்பதற்கான அதன் பார்வை சாதகமானது. அதேசமயம் உலக அரசை உருவாக்கும் அதன் கனவு பாதகமானது. தனித்த இனங்களை ஒழித்து ஒரு குறிப்பிட இனத்தை மட்டுமே வழிபடும் மணொபாவத்தையே உலகமயமாக்கல் நிகழ்த்தி உள்ளது. உடனே 1990-களுக்கு முன்பு இந்த மனநிலை இல்லையா என்று கேட்க வேண்டாம். அந்த மனநிலை கனவு. இந்த மனநிலை யதார்த்தம். அன்று ஒரு போன் என்பது கனவு. இன்று எல்லோருக்கும் யதார்த்தம். பிரச்சனை உலகமயமாக்கல் என்பது ஒரு திரும்பமுடியாத பாதை. ஒன்வே டிராபிக் மாதிரி. அதுதான் அதன் பலமும் பலவீனமும். அதனை திருப்ப முடியாதுதானே தவிர ஓரளவு கட்டுப்படுத்தலாம். தொடர விவாதங்கள் போராட்டங்கள் மூலம்.

    விரிவாக எழதவோ உங்களுடன் விவாதிக்கவோ எனக்கு தரவுகள் மற்றும் திறமை குறைவு என்பதால் இத்துடன் எனது ஆட்டத்தை பவுலாக்கி வெளியேறுகிறேன்.. :)

    GLOBALIZATION: WONDER LAND OR WASTE LAND? என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும். அதுவரை இருப்போமா? என்பது ஒரு விடையில்லாத கேள்விதான்....:)

    உலகமயமாகிவரும் உணவப் பஞ்சத்தை இங்கு படியுங்கள்.
    http://www.keetru.com/literature/essays/thiruvudaiyaan.php

    நன்றி.

    ReplyDelete
  44. //மாபெரும் மக்கள் அழிவைக் கூட லாப நட்ட விவகாரம் / லைசன்ஸ் ராஜ் / ஊழல் எனச் சுருக்கும் அவரது பார்வையே என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது - அப்படிப் பட்ட ஒரு முடிவுக்கு வருவதற்கு எந்த முகாந்திரமுமில்லை; யூனியன் கார்பைட் சொல்லாததைக் கூட அதியமான் ‘கண்டுபிடித்து' கேட்கிறார். இதிலிருந்தே அவர் யூனியன் கார்பைட் சார்ப்பாகவே இருக்கிறார் என்பது தெரியவில்லையா.?//
    எப்படி சார், இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பீங்களா? யூனியன் கார்பைடின் செயலை யார் நியாயப்படுத்தியது? பாதுகாப்பு குறித்து அரசு நியமித்த ஆய்வாளர்கள் அவ்வளவு ஆண்டுகள் என்ன கழற்றிக் கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியை ஏன் யூனியன் கார்பைடுக்கு சாதகமானது போல பார்க்கிறீர்கள்? திசம்பர் 1984-ல் நான் தில்லியில் இருந்தேன். போப்பாலில் நடந்த விஷயங்கள் அப்போது பேப்பர்களில் நன்றாகவே கவர் செய்யப்பட்டிருந்தன. அதியமான் எழுப்பிய கேள்விகளும் இருந்தன. அச்சமயம் நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சி பற்றிய உங்கள் புரிதல் பிற்காலத்தில் வந்த கட்டுரைகளை படித்துத்தான் பெரும்பாலும் வந்திருக்கும்.

    முக்கியமாக யூனியன் கார்பைடின் தலைவர் ஆண்டர்ஸனை வேண்டுமென்றே தப்பிக்க விட்டது ராஜீவ் காந்தியின் அரசு. அது தெரியுமா உங்களுக்கு? யூனியன் கார்பைடிடமிருந்து பெற்ற நஷ்ட ஈட்டை இடைத்தரகர்கள் எப்படி பங்கு போட்டுக் கொண்டனர் என்பதை அறிவீர்களா? எல்லாவற்றுக்கும் காரணமே முக்கியமாக மத்தியப் பிரதேச அரசையும் கூண்டில் நிறுத்தாததே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  45. டோண்டு ராகவன்,

    /யூனியன் கார்பைடின் செயலை யார் நியாயப்படுத்தியது? பாதுகாப்பு குறித்து அரசு நியமித்த ஆய்வாளர்கள் அவ்வளவு ஆண்டுகள் என்ன கழற்றிக் கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியை ஏன் யூனியன் கார்பைடுக்கு சாதகமானது போல பார்க்கிறீர்கள்? /

    அதியமான் பதிவை மறுபடியும் படித்துப் பாருங்கள். அவர் இக்கேள்விகளை எழுப்பவேயில்லை.! அவர் கேட்டிருப்பதெல்லாம் அமெரிக்கா போல exit policy இருந்திருந்தால் இந்தத் துயர் தவிர்க்கப் பட்டிருக்குமா என்பதே. நீங்கள் ஏன் அவர் கேட்காததை எல்லாம் கேட்டதாகச் சொல்கிறீர்கள் எனப் புரிகிறது :)

    /திசம்பர் 1984-ல் நான் தில்லியில் இருந்தேன். போப்பாலில் நடந்த விஷயங்கள் அப்போது பேப்பர்களில் நன்றாகவே கவர் செய்யப்பட்டிருந்தன. அதியமான் எழுப்பிய கேள்விகளும் இருந்தன/

    இல்லை, அவர் இப்பதிவில் எழுப்பியிருக்கும் கேள்விகள் கேட்கப் படவில்லை. அவரே விவரங்கள் தெரியவில்லை, அதனால் தான் கேட்கிறேன் என்கிறார் தன் பதிவில்.

    ReplyDelete
  46. //இல்லை, அவர் இப்பதிவில் எழுப்பியிருக்கும் கேள்விகள் கேட்கப் படவில்லை. அவரே விவரங்கள் தெரியவில்லை, அதனால் தான் கேட்கிறேன் என்கிறார் தன் பதிவில்.//
    அதியமானுக்கு வேண்டுமானால் அக்கேள்விகள் ஏற்கனவே எழுப்பப்பட்டவை என்பது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நான் கூறுகிறேன். அவை அப்போதே எழுப்பப்பட்டன, வேறு ரூபங்களில். அந்த தொழிற்சாலையை எப்போதோ மூடியிருக்க வேண்டும், அதை மூட விடவில்லை. அதன் மராமத்து பணிகளை அரசு இன்ஸ்பெக்டர்கள் யூனியன் கார்பைடிடம் வலியுறுத்தி செய்ய வைத்திருக்க வேண்டும். அவர்கள் மாமூல் வாங்கிக் கொண்டு தூங்குவதில் குறியாக இருந்து விட்டனர்.

    ஓட முடியாத தொழிற்சாலையில் மராமத்துக்காக செலவழிக்க யூனியன் கார்பைடுக்கு மனம் இல்லை. அவ்வளவுதான் நடந்தது. இந்த அழகில் ஆண்டர்ஸனை வேறு தப்பிக்க விட்டனர். அப்படியே வாங்கிய நட்ட ஈட்டுத் தொகை சரியாக செலவழிக்கப்பட்டதா என்று பார்த்தால் அதிலும் பல சுருட்டல்கள்.

    ஆண்டர்சன் கூடவே மத்திய பிரதேச அரசையும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்திருக்க வேண்டும் என்பதை நான் அக்காலக் கட்டத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆக, நான் கூறுவது நேரடி அனுபவம்.

    அது இருக்கட்டும், பதிவின் முக்கிய விஷயத்துக்கு வாருங்கள். போப்பாலை உபயோகித்து, ரத்த அழுத்தம் கூடுவது போல் இருந்தால் ஓடியே விடுவதாக எண்ணம் இருந்தால் அப்படியே ஆகட்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  47. டோண்டு ராகவன்,

    அதியமான் ஆய்வாளர்கள் பற்றி எழுதியிருக்கிறார் என்றீர்கள் முதலில். இல்லை, மறுபடியும் படித்துப் பாருங்கள் என்றேன். ஆம் எழுதியிருக்கிறார் என்றோ அல்லது நீங்கள் சொல்லியிருப்பது சரிதான், அவர் அது பற்றி எழுதவில்லை என்றோ சொல்லாமல், வேறு விஷயங்களுக்குச் செல்கிறீர்கள்.

    இம்மாதிரி விவாதம் செய்தால், நிஜமாகவே ரத்த அழுத்தம் கூடத்தான் செய்யும் போல :)

    உலகமயமாக்கல் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு முதலிலேயே பதில் சொல்லிவிட்டேன். மற்ற சிலரும் சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  48. //Very very wrong arguments. How do you say, we oppose Hyndai company and other Korean, Japanese and companies from S.America, Russia,etc ?
    Gross genralisations and .....//

    My question was about India -Iran Gas Pipeline. You did not answer to that question. Instead of you are bringing American Allies (South Korea, Japanese etc). Tell me onething if Hyundai was a North Korean company instead of South Korea would you be still support it?.

    ReplyDelete
  49. கேள்விகளும், துணைக் கேள்விகளுமாக சென்று கொண்டிருக்கும் இந்த விவாதத்தில் 'க்ளிஷே'யான வாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தோமானால், சில முக்கியமான கருத்துகள் தெரிகின்றன.

    //பிரச்சனை உலயமயமாதல் என்பது நுகர்வுப் பண்பாட்டுடன் பிணைக்கப்பட்டு தெசிய உற்பத்திக்கு ஒரு சவலாக மாறி உள்ளது.//

    நுகர்வு கலாச்சாரமும், தேசிய உற்பத்தியையும் பற்றி விவாதம் செய்தால் இந்த வாதம் பயனுள்ளதாக இருக்கும். உலகமயமாக்கல் நுகர்வு கலாச்சாரம் மட்டும் சார்ந்ததில்லை என்பதை இதை எதிர்க்கிறவர்கள் உணரவேண்டும்.

    உலகமயமாக்கலும், தேசிய உற்பத்தியும் இரண்டும் ஒன்றை ஒன்று compliment செய்கின்றன. Substitute செய்யவில்லை.

    அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் இம்மூன்றும் இணைந்து உலகமயமாக்கலினால் கிடைக்கின்ற தொழில்நுட்ப வாய்ப்புகளை கொண்டு உற்பத்தி திறனை கூட்டுவதின் மூலம் தேசிய உற்பத்தி திறனை பன்மடங்கு அதிகரிக்க முடியும். குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதற்க்கும் வெட்ட வெளியில் குதிரை ஓட்டுவதற்க்கும் வித்தியாசம் உள்ளது.

    //உலக மனிதனாக ஒரு தனிமனிதனின் உணர்வு மாற வேண்டும். //

    இது எப்பொழுது சாத்தியமாகும்?
    உலக வர்த்தகம் தங்குதடையின்றி நடக்கும்பொழுது நாம் எல்லாரும் அந்த எண்ணத்தை அடைவோமோ என்னவோ. ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஒரு சிறந்த உதாரணம். WTO - உலக வர்த்தகத்தில் உள்ள தடைகளை களையும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. நாம் உள்ளூர் வர்த்தக தடைகளை களைய வேண்டும். இதனால் சீனப் பொருட்களின் இறக்குமதி உள்ளூர் பொருட்களின் உற்பத்தியை அழிக்காமல் பாதுகாக்கலாம். நுகர்வாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தி தருகிறீர்கள்.

    போட்டியை கண்டு பயப்படாமல் சிறப்பான் செயல்பாடுகளை கொண்டு போட்டியை வெல்லலாமே.

    //உலகமயமாகிவரும் உணவப் பஞ்சத்தை இங்கு படியுங்கள்//

    படித்தேன். உணவுப் பஞ்சத்திற்க்கும் உலகமயமாக்கலும் முடிச்சு போட முயன்றிருக்கிறார்கள். ஆனால் சில திரிக்கப்பட்ட வாதங்களால் அந்த கட்டுரை தனது நம்பகத்தன்மைஅயிஅ இழக்கிறது. உதாரணமாக -

    //ஜான் பால்சன் என்ற ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜர் கடந்த ஒரு வருடத்தில் இந்தமாதிரி உணவுப் பொருட்களின் Futures மூலம் சம்பாதித்தது 3.7 பில்லியன் அமெரிக்க டாலர். //

    இது மிகவும் தவறான ஒரு செய்தி. ஜான் பால்சனின் வெற்றியைப் பற்றிய இந்த முழுமையான கட்டுரையை படித்துப் பாருங்கள்.

    http://online.wsj.com/public/article/SB120036645057290423.html

    அவருடைய projects எதிலும் அவர் futures-ல் முதலீடு செய்யவேயில்லை.

    அமெரிக்க வீட்டுக் கடன் குழப்பங்கள் ஒரு chaos theory-னால் எற்பட்ட பக்க விளைவு. அந்த குழப்பத்தில் ஜானின் தூண்டிலில் சிக்கியது பெரிய திமிங்கிலம்தான். மற்றபடி அவர் உணவு பண்டங்களின் வர்த்தகத்தில் முதலீடு செய்ததாக எங்கும் காணக் கிடைக்கவில்லை.

    Fossil fuel அருகி வரும் வேளையில் bio fuel-ன் தேவை அதிகரிக்கத்தான் செய்கிறது. உலகமயமாக்கலினால் மட்டும் எரிபொருள் சேமிப்பு கூடவா போகிறது?

    மெக்ஸிகோவின் உணவுப் பஞ்சம் மிகவும் வருந்ததக்க நிகழ்வுதான். ஆனால் இதனால் சோளத்தின் உற்பத்தி பெருகுவதற்க்கும் வாய்ப்புகள் அதிகம்.

    நாம் கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடாது. கண்களை திறந்து வெளிச்சம் பார்க்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  50. உறையூர்க்காரரே,

    உங்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதற்காக Risc factors பார்க்காமல் யாருக்கு வேண்டுமானாலும் கடன் கொடுப்பீர்களா?

    IPI (India Pakistan Iran Gas Pipeline) project-ன் சாதக பாதக அம்சங்களை பொறுத்தே அதனை இந்தியா அமல்படுத்த வேண்டும். வெறும் ஈரான் - அமெரிக்க வெளியுறவை வைத்து கொண்டு மட்டும் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.

    Hyundai இந்தியாவில் அமைத்திருக்கு தொழிற்சாலைக்கும், மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்படுத்த வேண்டிய ஒரு Gas Pipeline-க்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

    நீங்கள் விருப்பபட்டால் இந்த செய்தியை படித்துப் பார்க்கலாம்.

    http://www.thehindubusinessline.com/2005/09/20/stories/2005092002410900.htm

    The above news may not be a sufficient info for the risk factors involved in this project, but it will help to put some of the objectives in perspective.

    ReplyDelete
  51. சுந்தர் ... இது இன்னாத்துக்கு ;)

    ReplyDelete
  52. ////டாட்டா உலக நிறுவனத்தை வாங்கி அந்த நாட்டுத் தொழிலாளியைச் சுரண்டுவது என்பது பேரளவில் தேசப்பற்றாகவோ அல்லது தேசியவெறியாகவோதான் /////

    தோழர் ஜமாலன்,

    வழக்கம் போல 'சுரண்டல்' இல் முடியும் சராசரி இடதுசாரி வாததிற்கு வந்துட்டீங்க.
    உபரி மதிப்பு மற்றும் சுரண்டல் என்பது விஞ்சானபூர்வமாக மறுக்கப்பட்டுவிட்டது.

    பார்க்க :
    http://athiyaman.blogspot.com/2007/12/surplus-value-theory.html

    எனினும் ஒரு பழைய பழமொழி :

    In capitalism, man exploits man. In communisim it is reverse !!

    Pls see this important link :

    Museum of Communism FAQ :

    http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm#part1

    சுர‌ண்ட‌லோ அல்ல‌து வேறு என்ன‌ பெயரோ, ந‌ல்ல‌ ச‌ம்ப‌ள‌த்தில் ந‌ல்ல‌ வேலை கிடைத்தால் எங்கும் செல்ல‌ ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் த‌யாராக் இருக்கும் இந்த‌ கால‌த்தில், வேலை வாய்ப்புக‌ளை மிக‌ அதிக‌ம் உருவாக்கும் தொழில்முனைவோர்க‌ள் தாம் உல‌கை முன்றேற்ற‌ பாதையில் மாற்றி அமைக்கும் முன்னோடிக‌ள் என்ப‌தே எம‌து க‌ருத்து.

    ReplyDelete
  53. பொதுவில், இது போன்ற விவாதங்களில் இணையச் சுட்டி தருவதை முடிந்த வரை குறைவாக வைத்துக் கொள்வது நல்லது. Both for globalization and anti globalization thousands and thousands of pages are available in the net. ஒருவர் ஒன்றைச் சுட்டினால், வேறொருவர் இன்னொன்றைச் சுட்டலாம்.

    சரி...

    பதிவை திறப்பதற்கே சிரமப் படும் அளவிற்குப் பெரிதாகி விட்டது பதிவு. இதை இனி, வேறொரு இடத்தில் தொடர்வோம்.

    பங்கு பெற்ற அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  54. ஒரே வாரத்தில் உயிர்த்துவரும் வாய்ப்பு கிடைத்தது. சரி இங்கே எதோ கிறுக்கி வைத்தோமே அதர்க்கான எதிர்வினைகள் எப்படியிருக்கென்று பார்க்கலாம் என்று வந்தேன்.

    //பதிவை திறப்பதற்கே சிரமப் படும் அளவிற்குப் பெரிதாகி விட்டது பதிவு. இதை இனி, வேறொரு இடத்தில் தொடர்வோம்.

    பங்கு பெற்ற அனைவருக்கும் என் நன்றிகள்.//

    சரி மீண்டும் வேறொரு புள்ளியில் இணைந்து சந்திப்போம்..
    நன்றி..
    May 23, 2008 2:49 AM - அதே அனானி..

    ReplyDelete
  55. தனியார்மயம்,தாரளமயம்,உலக்மயம்

    நம் நாட்டை வழமாக்க வந்துள்ள காமதேனு,கற்பகத்தரு, ,பறக்கும் கம்பளம் என ஒரு பிரிவினரும்

    இல்லை பனக்காரர்களை கொழுத்த பணக்காரார்களாய் மாற்றும் கண்கட்டிவித்தை,ஏழை எளியோரை வறுமையின் கோரப் பிடிக்குள் தள்ளி
    அவர்களை நசுக்கவரும் நச்சு அரக்கனின்
    தேர்,யானை,குதிரைப் படை எனவும்

    கருத்து சமர் புரிந்து

    பிற பதிவுலகநண்பர்களுக்கு பல செய்திகளை,விபரங்களுடன் அளித்த அனத்து பதிவாளர்களுக்கும் நன்றி

    திருவிளையாடல் திரைப் படத்தில் பாண்டிய மன்னன், தருமிக்கு பரிசு வழங்க பாட்டெழுதி கொடுத்த சிவனுக்கும் அதை தடுக்கும் நக்கீரனுடன் விவாதம் கோபமாக மாரும் போது
    சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது

    பதிவர்களுக்குள் போட்டி இருக்கலாம்
    ஆனால் .............

    ReplyDelete
  56. //அதியமான் ஆய்வாளர்கள் பற்றி எழுதியிருக்கிறார் என்றீர்கள் முதலில். இல்லை, மறுபடியும் படித்துப் பாருங்கள் என்றேன். ஆம் எழுதியிருக்கிறார் என்றோ அல்லது நீங்கள் சொல்லியிருப்பது சரிதான், அவர் அது பற்றி எழுதவில்லை என்றோ சொல்லாமல், வேறு விஷயங்களுக்குச் செல்கிறீர்கள்.//

    அதியமான் கேட்ட கேள்விகளை முன்னாலேயே பலர் கேட்டது அவருக்கு தெரியுமா இல்லையா என்பது இங்கு பிரச்சினையில்லை. கேட்டார்கள் என்பது உண்மை என்பதை எனது first hand தகவல்படி சொல்கிறேன். நீங்கள் அவற்றை அக்காலக் கட்டத்தில் (1984-85) படித்திருக்கும் வாய்ப்பே இல்லை, ஏனெனில் உங்களுகு அச்சமயம் 6 அல்லது 7 வயதாக இருந்திருக்கும். நான் அவற்றை நேரடியாக அவை வெளியானபோதே படித்தவன், அது பற்றி கேள்வியும் கேட்டவன். அதைத்தான் நான் கூறினேன். அதியமானும் அக்கேள்வியை பிற்காலத்தில் கேட்டார் என்பது அவரது அறிவு கூர்மையைக் காட்டுகிறது.

    Easy exit பாலிசி அமுலில் இருந்திருந்தால் போப்பால் தொழிற்சாலை எப்போதோ மூடப்பட்டிருக்கும். அது அக்கால அரசின் தவறான கொள்கைகளால் செயற்கையாக நடத்தப்பட்டது. அம்மாதிரி இடங்களில் பாதுகாப்பு விஷயங்களில் அசட்டை ஏற்படுவது பலமுறை நடந்துள்ளன.

    மறுபடியும் கூறுகிறேன், உலகமயமாக்கல் பற்றிய விவாதத்தில் போப்பாலை இழுத்தது நீங்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  57. புதிய பொருளாதரக் கொள்கைகளின்
    அருளால் கிடைக்கும் குறிப்பிட்ட 10-20 % பலன்களைவிட 80-90 % கெடுதலுடன் கூடிய பாதிப்புகளே அதிகம்.

    இதற்கு ரத்தினக் கம்பளம்,விரித்து மலர் தூவி, தாரை தப்பட்டைகளுடன் மகிழ்ச்சி கொள்வோருக்கு இந்தியாவில் மிகக் குறைந்த தினக் கூலியுடன் வயிற்றுப் பசியுடன் போராடும் 60 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளிய சகோதரர் களை பற்றி
    கவலை இல்லை என எண்ணும் போது
    மனம் வலிக்கிறது சார்.

    கேட்டால் அவன் தலை விதி, பிறரை ஏமாற்றத் தெரியாத சோணகிரி,புழைக்கத் தெரியாத
    கோமாளி,சொந்த மக்களிடமே வனப்பாகப் பேசி அவரது உழைப்பையும்,ஊதியத்தையும் அட்டை
    போல் உறிஞ்சும் திறமை இல்லா கபோதிகள்,முகமூடி
    போடாமல் இயற்கை வழங்களான மணல் ,படிகப் பாறைகள்,உயிர்த் திராவாகமான தண்ணீர்,பங்குச் சந்தை,ஆன் லயன் வர்த்தகம் ஆகியவற்றில்
    செப்படி வித்தைகள் செய்து பொருள் குவிக்கத் தெரியாத குணக்கேடர்கள்

    இப்படி சொல்கிறார்களே.

    புரட்சிகவி பாரதிதாசன் உலகப்பன் பாடல் தான் இவர்களுக்கு பதில் mr.ஜ்யோவ்ராம் சுந்தர் சார்

    ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராய் ஆகும் நாள் வெகு சமிபத்தில் உள்ளது.

    பனவீக்கமும்,கச்சாஎண்ணெய் விலையுர்வும்,உனவுப் பொருள்களின் செயற்கை பற்றாக் குறையும்,உலக வெப்பமயாமாகாலல் உள்ள ஏற்படப் போகும் இயற்கை பேரழிவுகள்,மரபுணு மாற்றிய விதைகளின் புண்ணியத்தால் உண்டான விவசா வருமான் இழ்ப்புக்கள்,உலக போலிஸ் அமெரிக்கவின் கோபதாபங்கள், அண்டைநாடான சினாவின் பொறாமை சித்து விலையாட்டுகள்

    ஆகியவற்ரால் ஏற்படப் போகும்

    பொருளாதாரப்
    1புயல்
    2சூறாவளி
    3ஆழிப்பேரலை
    4பெரும் பூமிஅதிர்வு
    5கடல் மட்டம் உயர்வு

    எல்லோரும் என்ன கதைக்கு ஆகப் போகிறமோ தெரியவில்லை என சமுக ஆர்வலளர்கள் கூறுவது இவர்கள் காதுக்கு எப்போதுதான் கேட்குமோ சார்
    பொது நீதி:

    தனியார் மயம்,தராளமயம்,உலகமயம்

    ஒரு மாய வலைப் பின்னல்
    ஒரு மயக்கும் மோகினி
    ஒரு நச்சுப் பொய்கை
    ஒரு படு பாதாளம்
    ஒரு மொதுவாகக் கொல்லும் விஷம்
    ஒரு பயங்கர முழுங்கும் பூதம்
    ஒரு வழிப்பறி கொள்ளையன்
    ஒரு இரக்கமிலா அரக்கன்
    ஒரு மனிதாபிமான் உணர்வற்ற உக்கிரம்
    ஒரு சுயநலப் பேய்
    இப்படி சொல்லி கொண்டே போகலாம்

    ReplyDelete
  58. ///இந்தியாவில் மிகக் குறைந்த தினக் கூலியுடன் வயிற்றுப் பசியுடன் போராடும் 60 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளிய சகோதரர் களை பற்றி
    கவலை இல்லை என எண்ணும் போது மனம் வலிக்கிறது சார்./////

    இல்லை அனானி,

    எங்களுக்கும் மனித நேயம், அறச்சீற்றம், வறுமை ஒழிய வேண்டும் என்ற நோக்கங்கள் உண்டு. வழிமுறைகள்தான் வேறு.

    மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல்தான் உள்ளது உமது வார்த்தை விளையாட்டு. உலகமயமாக்கல், தாரளாமயமாக்கல் இந்த 17 ஆண்டுகளில் செய்யாமல், பழைய பாணியிலேயே தொடர்ந்திருந்தால், இன்று நிலைமை இன்னும் மோசமாகியிருக்குமா அல்லது மேம்பட்டிருக்குமா ?

    வ‌றுமைக்கு, மிக அதிக‌ ஜனத்தொகை பெருக்கம், ஊழல்கள், மானியங்களை இடையில் இருப்போர் மற்றும் தரக்ர்கள் திருடுதல், பருவ‌ மழை பொய்தல், மற்றும் பல காரணிகள் உண்டு.

    தாரளமயமாககிலினால் புதிதாக‌ உருவான வேலை வாய்புகளில் நிகர எண்ணிக்கை,
    அரசுகளில் வரி வசூல் அதிகமானது எத்தனை சதவீதம், புதிய பொருட்க்கள், மலிவாக கிடைப்பது போன்றவற்றை உணார்ச்சி வசப்படாமல் ஆராயவும். செல்போன்கள் ஏழை தொழிலாளர்களின் வாழ்வை எப்படி மாற்றியுள்ளது எனபதை பார்க்கவும். மாதம் 50 ரூபாய் மட்டும் செலுத்து (ஆயுட்கால பீரி பெய்ட் திட்டம்), இன்கம்மிங் மட்டும் உபயோகப் படுத்தும் பல லச்சக்கணக்கான வாகன் ஓட்டுனர்கள், எலெக்ட்ரீசியன்கள்,
    பிளம்பர்கள், ஏன் விவசாய மற்றும் கட்டிட தொழிலாளிகள் (அவர்களுக்கு தினமும் ஒர் இடத்தில் வேலை மாறுவதால், புதிய வேலைவாய்ப்புகள் பற்றி உடனடி தகவல் பெற ஒரு அருமையான வாய்ப்பு)

    விவ‌சாய‌த்திற்க்கு இன்று 60,000 கோடி நிதி ஒதுக்க‌ வேண்டுமானால் அத‌ற்கு முத‌லில்
    ஆர‌சிட‌ம் நிதி (அதாவ‌து வ‌ரி வ‌சூல்) வேண்டும். 1950 முத‌ல் இன்று வ‌ரை அர‌சின் ஆண்டு நிதி வ‌சூல் தொகைக‌ளை க‌ண‌க்கீடுங்க‌ளேன். 1991 முத‌ல் எத்த‌னை ம‌ட‌ங்கு அதிக‌ரித்துள்ள‌து என்று பாருங்க‌ள்.அன்னிய செலவாணி இல்லாமல் நாம் 1991 திவால் நிலைமைக்குத் தள்ளபட்ட நிலைமையில் இருந்து மீண்டு வர மாற்று வழி இருந்தால் கூறுங்களேன்.

    பார்க்க :
    1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?
    http://nellikkani.blogspot.com/2008/05/1991.html

    ச‌ரி, இதெல்லாம் த‌வ‌று என்னால் மாற்று வ‌ழி கூறுங்க‌ளேன். சும்மா வார்த்தை விளையாட்டு....

    ReplyDelete