Tuesday, January 20, 2009

எழவு கொட்டுதல்

ஈராக்கில் செய்தது போல் விமானத்தில் இருந்து குண்டு வீசும் காட்சிகளை தொலைக்காட்சியில் அழகாகக் காட்ட முடியுமா? நொறுக்குத் தீனியுடன் பொழுதுபோக்க ஏங்கித் தவிக்கிறார்கள் பிள்ளைகள்.

(வேறு)

குப்பல் குப்பலாக
நாற்காலிகளும் படுக்கைகளும் வாகனங்களும்
வடிவை இழந்துவிட்ட டயர் டியூப்களும்
இடிபாடுகளுக்கிடையில் நின்று கொண்டிருக்கின்றது தெரு
காலியான (ஜன்னலாக இருந்திருக்கக்கூடிய) ஓட்டை வழியாக
எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
பயக்கண்களுடன் சிறுமி
எண்ணிக்கையின் துல்லியம்
தகர்க்கப்பட்ட பங்கர்கள்
பக்காவாகத் தயாரிக்கப்பட்ட பட்டியல்கள்
உணவிற்கும் மருந்திற்கும்
அலைக்கழியும் மக்கள் கூட்டம்

(இதுவும் வேறு)

அறிக்கை
தீர்மானம்
சந்திப்பு
மேலும் அறிக்கைகள்
மேலும் தீர்மானங்கள்
மேலும் சந்திப்புகள்
ஒன்றிரண்டு கவிதைகள்

19 comments:

  1. எழவு கொட்டுதல் இது ரொம்ப பொருத்தமா இருக்கு

    ReplyDelete
  2. போர்பற்றிய ஒரு விஸ்வாவா கவிதை ஞாபகத்துக்கு வந்ததனாலே ஒரு reference - http://thaaragai.wordpress.com/2006/05/11/wislawa/

    ReplyDelete
  3. மிக மிகப் பொருத்தமான தலைப்புடன் வருத்தம் தோய்ந்த வார்த்தைகள்

    சிறப்பு

    அன்பு நித்யன்

    ReplyDelete
  4. நிதர்சனமான உண்மை சுந்தர்!

    ReplyDelete
  5. போரைப் பற்றியோ அதன் வலிகளைப் பற்றியோ உணராத பாதுகாப்பான வெளியில் நீங்கள் கூறுவது போல் எல்லாமே செய்தியும் அறிக்கையும் கவிதையும்தான். நல்ல தலைப்பு +கவிதை.

    ReplyDelete
  6. //அறிக்கை
    தீர்மானம்
    சந்திப்பு
    மேலும் அறிக்கைகள்
    மேலும் தீர்மானங்கள்
    மேலும் சந்திப்புகள்
    ஒன்றிரண்டு கவிதைகள்//

    இயலாமை
    ஆற்றாமை
    போதாமை
    போதைமை
    :(

    ReplyDelete
  7. அருமையான, அவசியமான கவிதை.உத்தி நன்றாக உள்ளது.( கௌதம சித்தார்த்தனின் சிறுகதை ஒன்றை தேடிப் படித்தேன்.உங்களின் அறிமுகத்தால். பெருமாயி. அதில்கூட இந்தமாதிரி உத்தி கையாளப்பட்டிருக்கிறது)

    ReplyDelete
  8. இயலாமையின் வெளிப்பாடு...

    யாரை நோவது?

    ReplyDelete
  9. கென், கார்க்கி, நர்சிம், இரா சுந்தரேஸ்வரன், நித்யகுமாரன், தமிழன் - கறுப்பி, அதிஷா விக்னேஷ்வரன், ஜோதிபாரதி, RVC, வால்பையன், முத்துவேல், நானானி... நன்றி.

    ReplyDelete
  10. பின் நவீனத்துமா?

    தலைப்பு கண பொருத்தம்.

    ReplyDelete
  11. நிதர்சனமான கவிதை.. அதிலும் கடைசி பகுதி கவிதை ரொம்பவே நல்லாருக்கு!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete