Friday, January 23, 2009

வட்டங்கள்

வட்டம்
எங்கும் வட்டம்
சிறிதாய் பெரிதாய்
சிரித்துக் கொண்டு
உம்மென்று
ஊரெங்கும் வட்டங்கள்
ஒரு வட்டத்துள் இருப்பவன்
இன்னொரு வட்டத்தைப் பழிக்கலாம்
கோபம் கொண்டு தன்
வட்டத்தையும் பழிக்கலாம்
பரவாயில்லை
ஆனால் ஒன்று
வட்டத்தை அழித்தால்
வருவதும் வட்டமே அன்றி
வேறில்லை

(கவிதா சரண் - ஜூன் 1992ல் வெளியானது)

11 comments:

  1. நல்லா இருக்கு சுந்தர்.

    ReplyDelete
  2. கிணற்றுத் தவளை என்று சொல்வார்கள்.. வட்டத்திற்குள் இருப்பவன் அதற்குள்ளேயே சுழலுவான்.. இன்னொரு வட்டத்தைப் பழிப்பான்.. ஏன், தன் வட்டத்தைக் கூட அழிப்பான்.... நல்ல கவிதை சுந்தர்..

    வட்டத்தை விரிவுபடுத்துவது அறிவின் வேலை, அதைக் குறுக்குவதும் கூட.. இல்லையா?

    நல்ல கவிதை.. பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. ஆனால் ஒன்று
    வட்டத்தை அழித்தால்
    வருவதும் வட்டமே அன்றி
    வேறில்லை//

    நல்ல வட்டம்!!!

    வருக நட்பு வட்டத்துக்குள்!!!

    தேவா..........

    ReplyDelete
  4. எனக்கு எல்லாமெ வட்டவட்டமா தெரியுது!

    ReplyDelete
  5. நல்லா இருக்கு கவிதை.

    //ஒரு வட்டத்துள் இருப்பவன்
    இன்னொரு வட்டத்தைப் பழிக்கலாம்//

    என்னை பார்த்தால் பைத்தியகாரன்
    போல் இருக்கின்றதா
    எனக்கும் தான்

    என்று யாரோ சொன்ன ஒரு கவிதை நினைவுக்கு வருது.

    ReplyDelete
  6. //வட்டத்தை அழித்தால்
    வருவதும் வட்டமே அன்றி
    வேறில்லை//

    அருமையான வரிகள் ...வட்டத்துக்குள் வட்டம் நல்லா இருக்கு ...வட்டத்துக்குள் வட்டம் இருந்தால் மட்டுமே பொருந்திப் போக முடியும்.இல்லா விட்டால் தனியாகத் தெரியும்.வட்டத்துக்குள் முக்கோணம் இருப்பின் அது முழுமையில்லாமலே முற்றுப் பெற்று விடும்.வட்டத்துக்குள் சதுரம் இருப்பின் அது l நான்கு கோணங்களில் வடிவிழந்து போகலாம் . அறுகோணம் இருப்பின் துண்டு துண்டாய் வட்டம் தன்னை இழந்து அலங்கோலமாகி விடவும் வாய்ப்பிருக்கிறது.வட்டத்துக்குள் இன்னொரு வட்டம் என்பதே வடிவிழக்காமல் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே வழி. ஐயோ ...முடியலை ...கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  7. கவிதை நல்லா வந்துருக்குங்க சுந்தர்..!

    ReplyDelete
  8. நல்லா இருக்கு :)

    ReplyDelete
  9. வட்டங்கள், அதிகாரத்தின் territory..

    அட்டகாசம் சுந்தர் சார்..

    ReplyDelete
  10. ரவிஷங்கர், ஆதவா, தேவன்மயம், வால்பையன், நாடோடி இலக்கியன், மின்னல், மிஸஸ் டவுட், மதன், RVC, சரவணகுமார்... நன்றி.

    ReplyDelete