Sunday, June 28, 2009

பூம் பூம் ஷக்கலக்க பைத்தியக்காரன்

பைத்தியக்காரன் பதிவைப் படித்ததும் சாரு ஒரு ஹிட்லரா என்ற கேள்வியெல்லாம் எனக்கு எழவில்லை. எதற்காக அந்தப் பதிவு என்றுதான் தோன்றியது.

அதற்காகச் சிலர் கேட்டது போல் முதல் பத்தியை நீக்கச் சொல்லப் போவதில்லை. அப்படிப் பார்த்தால் மொத்தப் பதிவுமே கிசுகிசுக்களின் அடிப்படையில் எழுதப் பட்டதுதான். யார் அலெக்ஸ், யார் விஷால் என்பதைத் தெரிந்து கொண்டதைத் தவிர அதில் பெரிதாக வேறொன்றுமில்லை.

அந்த முதல் பத்திகூட சிறுபத்திரிகை வட்டாரங்களில் கிசுகிசுவாக இருந்ததைத்தான் பைத்தியக்காரன் எழுதியிருக்கிறார். சாருவைப் பற்றிய சமீபத்திய வலையுலக (காமரூபக் கதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது வந்த) கிசுகிசுக்களை மட்டும் ஏன் விட்டுவிட்டாரோ தெரியவில்லை.

இதற்கு மாற்றாக நானும் மானாவரியாக கிசுகிசுக்களை அடுக்கிச் செல்லலாம். ஆனால் படிப்பவர்களுக்கு ஒன்றும் விளங்காது என்பதோடு நானும் பைத்தியக்காரன் செய்யும் தவறையே செய்தவனாவேன். அதனால், விபரங்களின் அடிப்படையில் மட்டும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சாரு படிப்பதேயில்லையாம். எப்படி ஐயா தெரியும் உங்களுக்கு? புதுமைப் பித்தன், நகுலன், ஜி நாகராஜனைக்கூட சாரு படித்தது இல்லையாம். அதற்கான ஆதாரங்கள் வேறு இருக்கிறதாம். பக்கம் பக்கமாய்க் கிசுகிசுக்களை எழுதித் தள்ளும் உங்கள் விரல்கள் ஏன் அப்படிப்பட்ட ஆதாரங்களை மட்டும் எழுதாமல், எழுத வைத்துவிடாதீர்கள் எனக் கெஞ்ச வைக்கிறது?

அவர் புதுமைப் பித்தனின் பல கதைகளை விரிவாக விமர்சித்து - கிட்டத்தட்ட 20 பக்கங்களுக்கு - கட்டுரை எழுதியிருக்கிறார். உடனே இலக்கு கால இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் ஜீரோ டிகிரி இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் என ஆரம்பித்து விடாதீர்கள். இந்தப் பிரஸ்தாபக் கட்டுரை வெளியாது 2002 இறுதியில். போலவே ப சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி பற்றி மார்ச் 2003ல் எழுதியிருக்கிறார்.

ஐரோப்பிய / லத்தீன் அமெரிக்க / அரேபிய எழுத்தாளர்களின் பெயர்களை (மட்டும்) சாரு உதிர்க்கிறாராம். மரியா வர்காஸ் யோசாவின் The Real Life of Alejandro Mayta, எல்ஃபிரெட் ஜெலனிக்கின் பியனோ டீச்சர், சார்லஸ் ப்யுகோவ்ஸ்க்கி, முகமது ஷூக்ரி பற்றியெல்லாம் விரிவாகவே சாரு எழுதியிருக்கிறார். இப்போது நான் கேட்கிறேன் - சாரு தமிழில்கூடப் படித்ததில்லை எனச் சொல்லும் நீங்கள் சாருவையே படித்ததில்லை என்று நான் சொல்ல முடியும்தானே?

அவருடைய வாசிப்பிற்கு அவரது எழுத்துகளே சாட்சி. அதை வைத்து நாம் உரையாடலாம். ஆனால் நீங்கள் அதையும் வேறு யாராவது எழுதிக் கொடுத்தது எனச் சொல்லிப் புறந்தள்ளிவிடக் கூடும். அதனாலேயே நான் அவரது ஆரம்ப கால எழுத்துகளை மேற்கோள் காட்டாமல் அவரது பிந்தைய - அதாவது 2002ற்குப் பிறகு எழுதிய விஷயங்களை மேலே எழுதியிருக்கிறேன். இல்லை, இவையும் வேறு யாராவது தவணை முறை நண்பர்கள் எழுதிக் கொடுப்பது என்று சொல்லிவிட்டால், தவணை முறையில் இல்லாமல் மொத்தமாகத் தீர்ந்தது விஷயம்.

சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் & ஜீரோ டிகிரி பிரேம் ரமேஷ் எழுதியதாம்! ஆபிதீன், எக்ஸிஸ்டென்ஷியலிசம் நாவலில் ஒரு பத்தி தான் எழுதியதாகச் சொன்னதிலிருந்து, இதுவரை எனக்குத் தெரிந்து அந்த நாவல்களுக்கு ஆறு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இது இப்போது வரைக்குமான கணக்குதான். நாளையேகூட இன்னும் சிலர் வந்து அந்நாவல்களை தாம்தான் எழுதினோம் என்று சொல்லக் கூடும். இதெல்லாம் என்னய்யா விவாதமா - இதெற்கெல்லாம் ஒருவனால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

(இடைவெட்டு : மாலதி மைத்ரி ஜீரோ டிகிரியை சாரு எழுதவில்லை எனச் சொல்லவில்லை. ஆனால் அந்நாவலை எடிட்டிங் செய்தது ரமேஷ்தான் என்று எழுதியிருக்கிறார். நாவலோ அல்லது கட்டுரையோ எழுதப்பட்டவுடன், அதற்கு எடிட்டிங் அவசியமாகிறது. அந்த எடிட்டிங் பணிக்குச் சிலர் உதவியிருக்கலாம். மேலை நாடுகளில் இது சர்வ சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக அந்தப் புத்தகத்தையே எழுதினது தான்தான் என்று சொன்னால் என்ன செய்ய?)

”ரோலான் பார்த் ரைட்டிங் டிகிரி ஜீரோ என்று எழுதியிருக்கிறார். அதனால் ஜீரோ டிகிரி என்று தலைப்பு வைத்தது சாருவாய் இருக்க முடியாது!” ஜீரோ டிகிரி எப்போது வந்தது? ரோலான் பார்த்தின் அந்தப் புத்தகம் வெளியானது 1953ல். தமிழிலேயே ஜீரோ டிகிரி வெளிவருவதற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே பார்த், தெரிதா, ஃபூக்கோ எல்லாம் அறிமுகமாகிவிட்டார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை பைத்தியக்காரன்.

சாருவுக்கும் பின் நவீனத்திற்குமான தொடர்ப்பு எத்தகையது என்பதை பிரேம் ரமேஷை விடுங்கள், நீங்கள் எழுதுங்கள். நான் எதிர்வினையாற்றுகிறேன். சும்மா சாருவுக்கு பின் நவீனம் தெரியாது, அமைப்பியல் தெரியாது என்பதெல்லாம் ஹம்பக்.

அவருடைய கட்டுரைகளை யார் எழுதிக் கொடுத்தார்கள், யார் பிழை திருத்தினார்கள் (எழுதறவனே பிழையையும் கொஞ்சம் திருத்திக் கொடுத்துடக் கூடாதா!) என அதே கிசுகிசு பாணியில் சொல்லிச் செல்கிறீர்கள். நீங்கள் பெயர் சொல்லாமல் சொல்லும் அவர்களே இதை ஒத்துக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

நீங்கள் பிரமிளுக்குச் சாரு எழுதிய குசு கடிதத்தையோ விமர்சன ஊழல்களில் பிரமிள் எழுதியதையோ சொல்வீர்களேயானால், பிரமிளைப் பற்றி சுந்தர ராமசாமி தொடங்கி அழகிய சிங்கர் வரை எழுதியிருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதும் யார் சொன்னது உண்மை, யார் சொன்னது பொய், எது புனைவு என்று ஒரு மயக்கம் ஏற்படலாம்! மட்டுமில்லாமல், எது உண்மை, எது பொய் என தீர்மானிக்க நாம் யார்?

சரி, சாருதான் இறந்த பிறகு பிரமிளையும் சுஜாதாவையும் பாராட்டுகிறார். ஜெயமோகன் என்ன செய்கிறார்? கமலாதாஸ் இறந்தவுடன் அவர் குரூபி, தன்னுடைய நிறைவேறாத காமத்தினால்தான் (பச்சையாகச் சொன்னால் படுக்க அலைந்தார் என எழுதியிருந்தார்!) எழுதினார் எனச் சொன்ன போது எங்கே போயிருந்தீர்கள். அப்போது உங்கள் அறச் சீற்றத்தை இப்படித்தான் காட்டினீர்களா?

விஷ்ணுபுரம்தான் முதலில் ஃபிரெஞ்சிற்குப் போக வேண்டுமாம்! உங்கள் மனச் சாய்வு தெளிவாகவே தெரிகிறது பைத்தியக்காரன். இப்போது சொல்கிறேன், பின் தொடரும் நிழலின் குரலைக்கூட ஒரு முறை கஷ்டப்பட்டு படித்து விட்டேன், ஆனால் விஷ்ணுபுரத்தை இவ்வளவு வருடங்களில் என்னால் 5 பக்கங்களுக்கு மேல் வாசிக்கவே முடியவில்லை! அவரது தலையணை புத்தகங்களின்மேல் ஒரு ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது.

அடுத்த கண்டுபிடிப்பு : ஜீரோ டிகிரி ஐரோப்பிய வடிவ பாணி நாவலாம், அதனால் ஃபிரென்சில் மொழிபெயர்த்தால் செல்லுபடியாகாதாம்! நாளையே நாவல் என்கிற வடிவமே மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதானே, அதனால் ஆங்கிலம், ஃபிரெஞ்சில் மொழிபெயர்க்கவே வேண்டாம் என்றுகூட நீங்கள் சொல்லக் கூடும் - அதற்குள் உங்கள் விருப்பப்படி விஷ்ணுபுரம் நாவலை ஃபிரெஞ்சில் மொழிபெயர்த்து விடட்டும்.

உங்களுக்கு ராசலீலாவில், ஜீரோ டிகிரியைப் போன்ற அடர்த்தியோ கட்டுடைப்போ தெரியவில்லை. அது உங்கள் அபிப்ராயம். ஆனால் எனக்கு ராசலீலா அவரது முந்தைய ஆக்கங்களை விட அதிகமாகப் பிடித்திருக்கிறது. இதெல்லாம் தனிப்பட்ட நபர்களின் கருத்து என்பதற்குமேல் ஒன்றுமில்லை. உடனேயே ஜீரோ டிகிரிவரை மற்றவர்கள் எழுதிக் கொடுத்தார்கள், பிறகு இந்த நிலைமை என்று சொன்னால் எப்படி?

சாரு எவ்வளவு மோசமானவர் என்பதைக் காட்ட நீங்கள் ஜீரோ டிகிரிக்குப் பிரச்சனை வந்தபோது ஜெமோதான் ஆதரித்தார் என்கிறீர்கள். இது என்னய்யா புதுக்கதை என்றால் ஜீரோ டிகிரி நாவலின் ஒரு பதிப்பில் வெளியான ஜெமோவின் 5 வரிக் கடிதமாம்! அந்தப் பதிப்பில் அவரது கடிதம் மட்டுமா வந்தது? பலர் அந்நாவலைப் பாராட்ட ஜெமோ செய்திருந்தது கோஷ்டி கானமாகத்தான் தெரிகிறது எனக்கு.

எழுத்தாளன் என்பவன் தன் புத்தகங்களை வெளியிட பல பதிப்பகங்களை அணுகுவது ஒன்றும் குற்றமல்ல. ஆனால் தன்னுடைய புத்தகங்களை வெளியிடாததால், தமிழினி வசந்தகுமாரை எங்கே குறிவைத்துத் தாக்கினார் சாரு? தமிழினியில் புத்தகங்கள் எழுதுவதால் ஜெமோ உயிர்மையை எதிர்க்கிறார் என்று எழுதினால் அது தமிழினியைத் தாக்குவதா? பண்பாட்டைப் பேசுதல் என்ற கட்டுரையில் மற்ற எல்லாப் பத்திரிகைகளையும் மட்டம் தட்டி தமிழினி, வார்த்தை போன்றவற்றை ஜெமோ தூக்கிப் பிடித்ததற்கான எதிர்வினை அது. மனதாரச் சொல்லுங்கள், உங்களுக்கு அந்தக் கட்டுரை ஏற்புடையதுதானா?

இரண்டாம் வகுப்பு டீச்சராக மாறி யாமம் வாசித்திருக்கிறீர்களா, அழகிய பெரியவன் வாசித்திருக்கிறீர்களா, அதிலிருந்து நான்கு வரிகளை மனப்பாடமாக ஒப்பியுங்கள் என்று கையில் பிரம்பெடுக்காதீர்கள். அசிங்கமாயிருக்கிறது.

மற்றபடி ஒரு புத்தகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் பெரிய தவறே இல்லை - இப்படி எவ்வளவு புத்தகங்களைப் பற்றி, எவ்வளவு சினிமாக்களைப் பற்றி வந்திருக்கிறது. என்னவோ தமிழ்கூறும் நல்லுலகமே சாரு சொல்லிவிட்டால் படிக்காமல் விட்டுவிடப் போகிறதா என்ன? அதற்கான எதிர்வினையையும் நாகார்ஜூனன் செய்துவிட்டார். எனக்கென்னவோ நீங்கள் அதற்காக உங்கள் பதிவை எழுதியது போல் தெரியவில்லை.

அமர்நாத்திற்கான பதிலில் பின் குறிப்பாக சாரு எழுதியது எனக்கு ஏற்புடையதா என்பது வேறு விஷயம். ஆனால் அவராவது பதில் சொல்ல வாய்ப்பிருக்கும் மனிதரைப் பற்றி எழுதுகிறார். ஆனால் ஜெமோ அந்த வாய்ப்பில்லாத இறந்து போனவர்களைப் பற்றி அவதூறு செய்கிறார். நீங்கள் ஜெமோவை விட்டுவிட்டு சாருவிற்கு மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்வினை செய்கிறீர்கள். உங்களின் இந்தத் தேர்வுதான் என்னை உறுத்துகிறது. இன்னொன்று, சிறுபத்திரிகைக்காரர்கள் என்றாலே சண்டை (மட்டுமே) போடுபவர்கள் என்பதாகச் சிலர் கட்டமைக்க முயல்கிறார்கள். மணிக்கொடி, கிராம ஊழியன், எழுத்து காலம் முதற்கொண்டு, படிகள், பரிமாணம், கசடதபற, பிரக்ஞை, மீட்சி, கல்குதிரை, நிறப்பிரிகை ஈறாக தமிழில் பல விஷயங்கள் சாத்தியமானது சிறுபத்திரிகைகளால்தான் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். அதற்கு உங்களின் இந்தப் பதிவும் துணை போவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

39 comments:

  1. போயி புள்ள குட்டிங்கள படிக்க வைக்கற வழிய பாருங்கப்பா..........

    ReplyDelete
  2. பைத்தியக்காரனும், நீங்களும் சொல்லிவைத்தது போல பரிணாமம் என்று எழுதியிருக்கிறீர்கள். அந்த காலாண்டிதழ் பெயர் பரிமாணம். கோவையிலிருந்து வெளிவந்தது.

    ReplyDelete
  3. I think you (you and paithiakaran) are very good in argument. When I read paithikaran's blog I think he is right. Now I think you are right. So who is right and who is wrong.

    It is better to go with Albert Kamew's (may be spelling mistake in his name) existenlism.

    Take it as it is and live what your are.

    Subu

    ReplyDelete
  4. I forgot to add this in my previous comment.

    "Sabash sariana potti""

    Subu

    ReplyDelete
  5. // Anonymous said...

    போயி புள்ள குட்டிங்கள படிக்க வைக்கற வழிய பாருங்கப்பா..........//

    :)))))))))))

    சும்மா நாட்டு நெலம தெரிஞ்சுக்கறதுக்காக இந்த பின் தொடரும் பின்னூட்ட மொழிதல்!

    ReplyDelete
  6. Hi

    Instead of blaming each others, finding fault on others lets all work united and produce great results and do useful contributuions to Tamil language.

    If they (Chaaru & Jeyamohan) dont have broad mind I think there is no point of reading them. It shows that they have not grown at all.

    ReplyDelete
  7. இந்த காமேடி பீசுங்க தொல்லை தாங்க முடியலைப்பா

    ReplyDelete
  8. பைத்தியக்காரனின் கிசுகிசு பாணி ( வனவாசம் டைப் ) கட்டுரைக்கு சரியான பதிலடி.

    சாரு வாழ்க

    ஜெய் ஹோ

    ReplyDelete
  9. A,B,C,D
    E,F
    G
    H,
    I,J,K,L,M,N,O,P,
    Q,R,S,T,U,V,W,X,Y,Z.......

    1234567890

    ReplyDelete
  10. சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து, பொருத்திருந்து பார்க்கிறேன்--வாஹே குரு

    ReplyDelete
  11. இவிங்க சேற்றை வாரி தூத்தி கொள்வதில் அரசியல்வியாதியையும், நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் போல இருக்கு........ நேத்து ஒருத்தர் ஊக்க படுத்தின விதைத்த பார்த்து, ஆஹா நாமளும் எதாவது எழுதி கிழிக்கனும்ன்னு வந்தா, இனிமேல் இந்த பக்கம் வரவே கூடதுங்கற அளவுக்கு.......அட போங்க.

    என்னை மாதிரி பதிவு படிக்க மட்டும் வருபவர்கள் இங்க ஏராளம். எதோ நீங்க எல்லாம் நல்ல எழுதறிங்க என்ற ஆசையில் படிப்பதர்க்காகவே வரும் ரசிகர்கள் நாங்க...........நீங்கெல்லாம் இப்படி பகிரங்கமா அடித்து கொள்ளவதை பார்த்தால், எங்களுக்கெல்லாம் சலிப்புதாங்க வருது......சீக்கிரம் எங்களை blog பக்கமே வராம அடித்து துரத்தி விடுவீங்க போல இருக்கு.........."சாரு vs ஜெமோ" போயி இப்போ "பைத்தியக்காரன் vs சுந்தர்" நாளை பைத்தியகரனுக்கு பின்னால் ஒரு குரூப், சுந்தர் பின்னல் ஒரு க்ரூப் என்று ரௌண்டு கட்டி அடிபின்ன போறீங்க...........நல்ல ஒற்றுமை போங்க........(பெரிய வியப்பு ஒன்னும் இல்ல, நாமெல்லாம் தமிழனுங்க தானா இப்படி தான் இருப்போம்)

    இதை ரிலீஸ் பன்னுவிங்கள இல்லையான்னு எனக்கு தெரியல, அத பத்தி எனக்கு கவலயும் இல்ல......எதோ சொல்லனும்ம்னு தோணிச்சோ, தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    பெயர் சொல்ல விருப்பம் இல்லாமல்.....

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய பைத்தியக்காரன் & சுந்தர்ஜி...

    இரண்டு பேருமே உங்களைப் பொறுத்தவரை அவரவர் நாயகர்கள் சிறந்தவர்கள் என்ற மனநிலையிலேயே இருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. சிற்றிதழ்கள் குறித்தோ அல்லது தமிழ் இலக்கிய உலகம் குறித்தோ என் அறிவு மிகவும் குறைவு என்பது உங்கள் இருவருக்குமே நன்றாகத் தெரியும்.

    விஷ்ணுபுரத்தை மொழிபெயர்த்த பின்னால்தான் ஜீரோ டிகிரியை மொழிபெயர்க்க வேண்டும் என்ற பைத்தியக்காரனின் கருத்தை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். கமலஹாசன் தனது தசாவதாரத்தை ஹிந்தியில் வெளியிடும் முன்னர் தமிழில் அதைவிட சிறந்த படங்கள் என்னென்ன வந்திருக்கிறதோ அதை எல்லாம் ஹிந்திக்கு மொழிமாற்றம் செய்தபின்னர்தான் தசாவதாரத்தை ஹிந்தியில் வெளியிட வேண்டும் என்று சொல்வது எந்த அளவுக்கு தவறானதோ அதே அளவுக்கு உங்களின் கருத்தும் தவறானது என்பது என் எண்ணம்.

    //
    அமர்நாத்திற்கான பதிலில் பின் குறிப்பாக சாரு எழுதியது எனக்கு ஏற்புடையதா என்பது வேறு விஷயம்.
    //
    ஏன் சுந்தர்ஜி வசதியாக இதை மட்டும் கண்டிக்க மாட்டேன் என்கிறீர்கள்? சாரு எழுதிய அந்த வரிகள் மனிதத்தன்மை உடைய யாருக்குமே ஏற்புடையதாக இருக்காது. அதை பைத்தியக்காரன் சுட்டியவுடன், "ஏன் ஜெ.மோ கமலாதாஸை திட்டவில்லையா?" என்று கேட்பது ஒரு சராசரி அரசியல்வாதியை ஒத்த செயலாகவேத் தோன்றுகிறது.

    இந்த இரண்டு பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருக்கும் பெரும்பாலானோரிடமும் உங்கள் இருவரிடமும் இருப்பது போன்ற ஒரு சார்பு நிலை தெளிவாகவே வெளிப்படுகிறது.

    மொத்தத்தில் இந்த கருத்துப் பரிமாற்றங்களில் நான் உணர்வது ஒன்றே ஒன்றுதான். திரையில் தெரியும் பிம்பம்தான் நிஜ ரஜினி என்று நினைத்து அவரைத் தொடரும் ரசிக கண்மணிகள் (உங்கள் மொழியிலேயே சொன்னால் விசிலடிச்சான் குஞ்சுகள்) மற்றும் தன் தலைவன் எவ்வளவு தவறு செய்தாலும் அதற்கு சப்பைக்கட்டு கட்டும் அரசியல் கட்சித் தொண்டர்கள், இவர்களை ஒத்த அடிமைப்பட்டவர்கள் மனநிலையிலேயே தீவிர இலக்கிய வாசகர்களும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

    நீங்கள் இருவருமே என்னைத் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்பதாலேயே இதை வெளிப்படையாக சொல்கிறேன்.

    ReplyDelete
  13. /பைத்தியக்காரனும், நீங்களும் சொல்லிவைத்தது போல பரிணாமம் என்று எழுதியிருக்கிறீர்கள். அந்த காலாண்டிதழ் பெயர் பரிமாணம். கோவையிலிருந்து வெளிவந்தது./

    சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே. பிழையைத் திருத்தி விட்டேன்.

    ReplyDelete
  14. I endorse your views Yaaro. I think, this is also a form of discouraging new entrants to Tamil reading&writing.

    ReplyDelete
  15. நடத்துங்க.. நடத்துங்க..

    அவர் நாகார்ஜூனனுக்கு ஆதரவு.

    நீங்க சாருவுக்கு ஆதரவு..

    ஜெயமோகனுக்குத்தான் யாருன்னு தெரியலை..!

    ReplyDelete
  16. இந்த ஆசாமிகள் மீது ஏன் வெல்பெக்கின் மூத்திரத்தை யாரவது தெளிக்கக் கூடாது?
    முதலில் இந்த அரைவேக்காட்டு பதிவர்களை unsubscribe செய்தாகவேண்டும் readerஇல். பதிவுக்கு நன்றி சுந்தர். :)

    ReplyDelete
  17. I am sure you guys are talent enough to be yourselves. It is kind of a fashion statement to support Charu or any other... you don't require idols...be yourselves and concentrate on your good work...the same comment is for paitiya karan aswell...

    ReplyDelete
  18. இதில் என்ன பிழை உள்ளது முடிந்தால் சொல்லுங்கள்

    1'நான் கடவுள்' படத்தை குரோசாவின் படத்துடன் ஒப்பிட்டு, வாய்ப்பு கேட்டு பாலாவுக்கு தூது அனுப்பிய போதும் சரி, நானொரு படத்தை இயக்கினால் அதற்கு ஜெயமோகன்தான் வசனம் என ஆனந்தக் கூத்தாடிய போதும் சரி, பிறகு அலெக்ஸ் சொன்னான் 'நான் கடவுள்' படத்தில் ஹிட்லர் தெரிகிறார் என்று. அதை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன் என வருத்தப்பட்டபோதும் சரி, இப்போது அந்தப் படத்துக்கு ஜெயமோகன் எழுதிய வசனத்தை பாலா பயன்படுத்தவேயில்லை. எழுதியது முழுக்க பாலாதான் என எனக்கு தெரியாதா என்ன என தொடை தட்டியபோதும் சரி, முரண்பாடுகளின் மொத்த உருவமே சாரு என ஒதுக்கித்தள்ள முடிந்தது
    2அந்தப் பிரசுரத்தில், நீங்கள் நாகார்ஜுனன் வீட்டுக்கு சென்றதையும், அவர் சொல்லாமல் கொள்ளாமல் ஏன் வந்தீர்கள் என கேட்டதையும், இத்யாதி, இத்யாதியையும் விவரித்தீர்கள். அதாவது தனிப்பட்ட இருவருக்குள் நடந்ததை, அவர் வீட்டுக்கு நீங்கள் சென்று நடந்துக் கொண்டதை எழுதி புலம்பினீர்கள். ஆனால், இதே காரியத்தை 'உயிர்மெய்'யில் யுவன் செய்ததும், டினோசர், அது இதுவென்று மீசையை முறுக்கினீர்கள்.

    3உங்கள் நாய்க்கு ஏசி இல்லை என நீங்கள் குமுறி குமுறி அழுதபோது, சிங்கள அரசை ஆதரித்த நோம் சாம்ஸ்கிக்கு எதிரான கையெழுத்து வேட்டையில் நாகார்ஜுனன் இறங்கியிருந்தார்


    மற்றது எல்லாம் புலம்பல் ஆனா மேலே கூறியவை எல்லாம் உண்மை
    இல்லையா,

    நீங்கள் ஏன் கண்ணை மூடிக்கொண்டு சாருவிற்கு ஜால்ரா அடிக்கிறீர்கள்

    ReplyDelete
  19. இரண்டாம் வகுப்பு டீச்சராக மாறி யாமம் வாசித்திருக்கிறீர்களா, அழகிய பெரியவன் வாசித்திருக்கிறீர்களா, அதிலிருந்து நான்கு வரிகளை மனப்பாடமாக ஒப்பியுங்கள் என்று கையில் பிரம்பெடுக்காதீர்கள். அசிங்கமாயிருக்கிறது. //

    ஓஹோ!

    எங்கூர்ல ஒரு பழமொழி இருக்கு ஓய்! "யோக்கியன் வாரான்...சொம்ப எடுத்து உள்ள வை"ன்னு...

    ReplyDelete
  20. அற்புதம்.
    ஆனால் இந்த விவாதங்களே தொடருமானால்
    வெறுப்படைந்துவிடும்.
    பை.காரனின் அந்த பதிவு தேவையற்றது.
    சாரு-ஜெ.மோ குதறல்களையெல்லாம் லூஸில் விடவேண்டும். தானாகவே சரியாய்டும். அதைப்போய் பெரிதுபடுத்திக்கொண்டு..
    -விபின்

    ReplyDelete
  21. //மொத்தத்தில் இந்த கருத்துப் பரிமாற்றங்களில் நான் உணர்வது ஒன்றே ஒன்றுதான். திரையில் தெரியும் பிம்பம்தான் நிஜ ரஜினி என்று நினைத்து அவரைத் தொடரும் ரசிக கண்மணிகள் (உங்கள் மொழியிலேயே சொன்னால் விசிலடிச்சான் குஞ்சுகள்) மற்றும் தன் தலைவன் எவ்வளவு தவறு செய்தாலும் அதற்கு சப்பைக்கட்டு கட்டும் அரசியல் கட்சித் தொண்டர்கள், இவர்களை ஒத்த அடிமைப்பட்டவர்கள் மனநிலையிலேயே தீவிர இலக்கிய வாசகர்களும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.ஆனால் இந்த விவாதங்களே தொடருமானால்
    வெறுப்படைந்துவிடும்.
    பை.காரனின் அந்த பதிவு தேவையற்றது.
    சாரு-ஜெ.மோ குதறல்களையெல்லாம் லூஸில் விடவேண்டும். தானாகவே சரியாய்டும். அதைப்போய் பெரிதுபடுத்திக்கொண்டு..// this is my stand.

    ReplyDelete
  22. வாழ்க ஜ்யோவ்ராம். வாழ்க சாரு :-)

    வாழ்க பைத்தியக்காரன். வாழ்க உத்தமத்தமிழ்!

    (பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெறுவதற்காக இப்பின்னூட்டம். என்ன பின்னூட்டம் போடுவது என்பது தெரியாததால் வாழ்க கோஷம்)

    ReplyDelete
  23. Charu lacks in "proper perspective" in assessing things.Childish assessments.

    When he(Baba deciple) wants to "Just Ignore him" but he "just took care" of him full page with nasty comment in the end.

    ReplyDelete
  24. சுந்தர்,

    உங்களின் மனச்சாய்வையும் இந்தப் பதிவிலிருந்தே பல வரிகளை எடுத்துப் போட்டு நிறுவ முடியும். ஆனால் அலுப்பாயிருக்கிறது. எப்படித்தான் வெ.சா., பிரமிள் போன்ற பெரிசுகள் அந்தக் காலத்தில் இது போன்ற சண்டைகளுக்காக பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளினார்களோ, தெரியவி்ல்லை. :-)

    கடைசியில் 'எல்லாம் மாயை' என்று அய்யனார் சொல்லியதுதான் சரியாகப் போய்விடும் போலிருக்கிறது. :-)

    ReplyDelete
  25. சு.க.

    தமாஷான பின்னூட்டம் :-)

    ReplyDelete
  26. சாரு படிப்பதேயில்லையாம். எப்படி ஐயா தெரியும் உங்களுக்கு? புதுமைப் பித்தன், நகுலன், ஜி நாகராஜனைக்கூட சாரு படித்தது இல்லையாம். அதற்கான ஆதாரங்கள் வேறு இருக்கிறதாம். பக்கம் பக்கமாய்க் கிசுகிசுக்களை எழுதித் தள்ளும் உங்கள் விரல்கள் ஏன் அப்படிப்பட்ட ஆதாரங்களை மட்டும் எழுதாமல், எழுத வைத்துவிடாதீர்கள் எனக் கெஞ்ச வைக்கிறது?//

    நல்லா சொன்னீங்க.

    ReplyDelete
  27. சாருவிடம் தீட்சை வாங்கிய அடுத்த பீடாதிபதி லக்கி லுக்கையும் சின்ன பீடாதிபதி அதிஷாவையும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  28. Two guys must be very happy after Sundar and P.kaaran's posts. They are none other than Charu & Jeyamohan.

    ReplyDelete
  29. கமெண்ட்ஸ்@http://rajpaarvai.blogspot.com/

    ReplyDelete
  30. இங்க என்ன பாஸூ நடக்குது?

    ReplyDelete
  31. இந்தத் தலைப்பு ரெண்டு நாளா டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருந்தது. அட.. இதுவும் சாரு எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்புதானே என்று இப்போதுதான் ஃப்ளாஷ் அடித்தது. அமைப்பியல் வாதமோ எதுவோ ஒரு கந்தாயத்தை நக்கல் அடித்து எழுதிய கட்டுரை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  32. வெண்பூ,
    இவ்ளோநாளா எங்க ஒளிச்சு வச்சிருந்திங்க!

    ReplyDelete
  33. //
    வெண்பூ,
    இவ்ளோநாளா எங்க ஒளிச்சு வச்சிருந்திங்க!
    //

    வால், நான் பொது இடத்துல எதுவும் காட்டுறதில்ல, எப்பவுமே ஒளிச்சிதான் வெப்பேன்.. ஐ மீன்.. என்னோட அறிவை.. ஹி..ஹி..

    ReplyDelete
  34. Jemo vum Charuvum ippa daily Teakadaiyila thanni adikkiRanggaLam.. You aare all wasting you time here...

    ReplyDelete