Wednesday, October 14, 2009

இலக்கடைதல்

எப்படி நடப்பது என்பது தெரிவதேயில்லை
ஓவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம்
குறுகிய தெருவில் எதிர்ப்படுபவருக்கு
விலகி வழிவிட்டால்
வேறொருவர் இடிக்கிறார்
அகன்ற சாலையில் விரையும் வாகனங்களின்
நடுவில் நடப்பது பயமாய் இருக்கிறது
மேடு பள்ளங்களைக் கையாள்வது
சாதாரணமாகவே கடினம் -
மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்
ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
தூரங்களுக்கேற்ற நடை வேகம்
முக்கியமென நண்பர் சொல்கிறார்
எப்படி நடந்து
எப்படி வீடடைவேனோ தெரியவில்லை

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/05/blog-post_30.html)

27 comments:

  1. நான் கூட நேற்று தி.நகர் ரங்கநாதன் தெருவில் நடந்தபோது ரொம்ப கஷ்டப்பட்டேன்.

    ReplyDelete
  2. ஒரு ஆட்டோ பிடிங்க தல, வீட்டுக்கு போயிரலாம்!

    ReplyDelete
  3. ilakkadaivathu pirassinaithan
    ilakkillaamal iruppathu?

    kavithai pitiththirukkirathu.

    ReplyDelete
  4. Welcome back. அப்டியே சுடசுட ஒரு ப்ரஷ் கவிதையும் போடுங்க

    ReplyDelete
  5. கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

    இலக்கென எதுவும் இல்லாததால் நடக்க நடக்கத் தொடரும் புதிர்ப்பாதைகளில் நடந்து கொண்டேயிருக்கிறேன். முடிவிலி தூரங்களைக் கடக்க எவ்வளவு வேகம் நடக்க வேண்டுமென தீர்மானிக்க இயலவில்லை

    ReplyDelete
  6. //எப்படி வீடடைவேனோ தெரியவில்லை//

    வீட்டையடைவேனோ :))

    ம்ம், உட்கருத்து புரிந்தது. இப்போதைக்கு அப்போதே எழுதி வைத்தீர்களா சுந்தர்ஜி..? :)

    ReplyDelete
  7. ரவிஷங்கர், தராசு, வால்பையன், மண்குதிரை, ராஜா, RVC, யாத்ரா, அம்பி... நன்றி.

    @ வால்பையன் - நல்ல ஐடியா :)

    @ அம்பி - வீட்டையடைவேன் என்பதைவிட வீடடைவேன் தான் இன்னும் effectiveஆக இருக்கிறது. வீடடைதல் என்பதற்கு வேறு அர்த்தங்களும் உண்டுதானே.

    ReplyDelete
  8. ’வீடுபேறு’ நோக்கிய நடை பயணம் அருமை ... ஆனால் நான் நடை என்பதை ’ஏதாவது ஒரு வாகனம்’ என்று வைத்துக் கொள்கிறேன் :) ... சிக்னல் தடைகள், வாகன வேகம் :)

    ReplyDelete
  9. நல்லா இருக்கு சுந்தரா.நிறைய எழுது.

    ReplyDelete
  10. என்றைக்கும் போல உங்களின் ஒற்றை சொல்லில் மொத்தக் கவிதையும் திருகும்
    அழகு மிக நன்றாக அமைந்திருக்கிறது இந்தக் கவிதையிலும்

    ReplyDelete
  11. ரொம்ப பொருத்தம்!

    ReplyDelete
  12. ரொம்ப நல்லா இருக்கு ஜ்யோவ். And welcome back.

    அனுஜன்யா

    ReplyDelete
  13. ஏற்கெனவே படிச்சதுதான்.

    ‘வீடடைதல்’ அப்பவும் லக்கி எ.பி.ன்னு சொல்லிட்டுப் போனார். இந்த தடவை அம்பி சொல்லிருக்கார். இந்த எ.பி. வாத்திங்க தொல்லை தாங்க முடியலப்பா :)

    //Nundhaa said...
    ’வீடுபேறு’ நோக்கிய நடை பயணம் //

    ஆன்ம விசாரம்லாம் அவுட் ஆஃப் த சிலபஸா நீங்க வச்சிட்டதுனால, நண்பர் வால்பையன் சொன்ன மாதிரி சீக்கிரம் ஆட்டோ பிடியுங்க :)

    ReplyDelete
  14. நான் மவுண்ட் ரோடை க்ராஸ் பண்ண முழிச்சது ஞாபகம் வருது....

    ReplyDelete
  15. ரோசா என்கிற‌ பெய‌ர் இனிமே யூதாஸ் காரியுத்து வ‌ரிசைல‌ இட‌ம் பெறும்னு நினைக்கேன். அந்த‌ப் பெருமையை அவ‌ர் வெட்க‌த்தோடு அவ‌மான‌த்தோடே சிலுவையாய் கால‌ம் பூராவும் சும‌க்க‌ணும்.கூட்டிக் கொண்டுப் போய் அடிப்ப‌து என்ப‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ வீர‌மான‌ செய‌ல்.. நேற்று சென்னைப் போய் விட்டு திரும்பும் போது ஆம்னியில் திரும‌லை ப‌ட‌ம் போட்டாங்க‌. அதுல‌ ம‌னோஜை முதுகுல‌ குத்த‌ வ‌ர்ற‌ப்ப‌ விஜ‌ய் சொல்லுவார்.. நெஞ்சுல‌ குத்தினாலும் குத்து... முதுகுல‌ குத்தி கோழையா ஆவாத‌னு..

    மேக்ப‌த்ங்கிற‌ நாட‌க‌த்துல‌ லேடி மேக்ப‌த் சொல்லுவார் : ஆல் த‌ ஃப்ர்பூம்ஸ் ஆப் அரேபியா வில் நாட் ஸ்வீட்ன‌ திஸ் லிட்டில் ஹேண்ட் என்பார் உள்ள‌ங்கை ர‌த்த‌க் க‌றையைப் பார்த்து.
    அது ரோசாவுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  16. @ நந்தா, நன்றி. இன்னொரு அர்த்தமும் வருகிறது என்பதால் உபயோகித்தேன். மற்றபடி வீடு பேறு அடையும் எண்ணமெல்லாம் இல்லை :)

    @ பா ராஜாராம், நேசமித்ரன், கவிக்கிழவன், கணேஷ், அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், அது சரி, தமயந்தி... நன்றி.

    @ ஸ்ரீதர் நாராயணன் - அதே :)

    @ தமயந்தி - வேறு பதிவிற்கு வர வேண்டிய பின்னூட்டம் :)

    @

    ReplyDelete
  17. தொடர்ச்சியாக நினைக்க வருவதை ஏனோ தவிர்க்கமுடியவில்ல....

    இல்லைதானே..?

    ReplyDelete
  18. நல்லாயிருக்கு குரு..

    ReplyDelete
  19. நல்லா இருக்கு ஜ்யோவ்.

    ReplyDelete
  20. welcome back and nice post, poem.

    MY heartiest Deepawali wishes to you, your family members and friends.

    ReplyDelete
  21. முரளிகண்ணன், கும்க்கி, அக்கிலீஸ், ரௌத்ரன், விநாயக முருகன், உழவன், குப்பன் யாஹூ... நன்றி.

    ReplyDelete