எப்படி நடப்பது என்பது தெரிவதேயில்லை
ஓவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம்
குறுகிய தெருவில் எதிர்ப்படுபவருக்கு
விலகி வழிவிட்டால்
வேறொருவர் இடிக்கிறார்
அகன்ற சாலையில் விரையும் வாகனங்களின்
நடுவில் நடப்பது பயமாய் இருக்கிறது
மேடு பள்ளங்களைக் கையாள்வது
சாதாரணமாகவே கடினம் -
மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்
ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
தூரங்களுக்கேற்ற நடை வேகம்
முக்கியமென நண்பர் சொல்கிறார்
எப்படி நடந்து
எப்படி வீடடைவேனோ தெரியவில்லை
கார்காலக் குறிப்புகள் - 60
1 day ago
15 comments:
அருமை.. அருமை.. கடைசி வாக்கியத்தில் மட்டுமே சொற்பிழை இருப்பது போல இருக்கிறது திருத்தவும்!
நல்லாயிருக்கு அதுவும் இறுதி வரிகள் இரண்டும்.
//எப்படி நடந்து
எப்படி வீடடைவேனோ தெரியவில்லை//
ஒரு நாயை கல்ல கொண்டு எரிஞ்சா அது வீட்ல கொண்டு போய் விட்ருது
வால்பையன்
"ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
தூரங்களுக்கேற்ற நடை வேகம்"
நடப்பது எனும் வினைச்சொல்லை மீறி யோசிக்க வைக்கும் வரிகள் வாழ்த்துக்கள் சுந்தர்.
நன்றி, லக்கிலுக். எனக்குச் சொற்பிழை எதுவும் தெரியவில்லையே.!
நன்றி, மாதங்கி.
நன்றி வால்பையன். உங்க ஐடியா அவனுக்குத் தெரியாம போயிடுச்சே :)
நன்றி, கிருத்திகா.
வழக்கம் போல சிறப்பான கவிதை
நன்றாக இருக்கிறது, குறிப்பாக கடைசி வரிகள்...
வாழ்த்துகள்
Advance apologies to propose a little enhanced(from my point of view, ofcourse):
எப்படி நடப்பது என்பது தெரிவதேயில்லை
ஓவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம்
குறுகிய தெருவில் எதிர்ப்படுபவருக்கு
விலகி வழிவிட்டால்
வேறொருவர் இடிக்கிறார்
அகன்ற சாலையில் விரையும் வாகனங்களின்
நடுவில் நடப்பது பயமாய் இருக்கிறது
மேடு பள்ளங்களைக் கையாள்வது
சாதாரணமாகவே கடினம் -
மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்
ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
தூரங்களுக்கேற்ற நடை வேகம்
முக்கியம்
//எப்படி நடந்து
எப்படி வீடடைவேனோ தெரியவில்லை//
nice lines sundar
அனானி, உங்கள் விருப்பப் படி கவிதையை மாற்றி எழுதலாம். படைப்பு உன்னதம் என்றெல்லாம் இல்லாமல் இதை ஒரு விளையாட்டாக நிகழ்த்திப் பார்க்கலாம்.
ஆனால் உங்களுடைய enhanced version இக்கவிதைக்கு ஒவ்வாத இறுக்கத் தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது :)
நன்றி, முரளி கண்ணன்.
நன்றி, உமாபதி.
நன்றி, RVC.
நன்றாக இருக்கிறது.
நன்றி, சுகுணா திவாகர்.
ஒரு பைக் வாங்கிக்க வேண்டியதுதான?
ரொம்ப நடக்கிறீங்கனு நினைக்கிறேன்,
கவிதை நல்லாருக்கு..
நன்றி, அதிஷா.
Post a Comment